முனைவர் மைதிலி தயாநிதி

உலகத் தமிழ்ச் சங்கத்தின் (மதுரை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி இணையவழி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினைப் பார்க்கும் & கேட்கும் சந்தர்ப்பமேற்பட்டது.  அதில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுரையினை முனைவர் மைதிலி தயாநிதி அவர்கள் ஆற்றியிருந்தார். அதற்காக அவருக்கென் பாராட்டுகள்.

மிகவும் விரிவானதொரு தேடலை அவர் இவ்வாய்வுக் கட்டுரையினை எழுதுவதற்காகச் செய்துள்ளார் என்பதை  அவரது உரை புலப்படுத்தியது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குச் சிறுகதை மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், அவர்களது முக்கியமான சிறுகதைகள் பற்றி உதாரணங்களுடன் குறிப்பிட்டார். அவரது ஆய்வுரை சிறப்புடனும், உணர்வு பூர்வமாகவுமிருந்தது.

அவரது உரையில் அவர் குறிப்பிட்ட இலக்கியத்தில் வட்டாரத் தமிழ் வழக்கு என்னும் விடயமும், இலக்கியப்பிரதிகளைத் தரப்படுத்தல் என்னும் விடயமும்   மிகுந்த கவனத்தைப்பெற்றிருந்ததை, அவரது உரையினைத் தொடர்ந்து  இடம் பெற்ற பங்குபற்றியவர்கள் மத்தியில் இடம்பெற்ற எதிர்வினைகள் புலப்படுத்தின. இவை பற்றிய எனது கருத்துகளைப் பின்னர் தனியாகப் பதிவு செய்வேன்.

நிகழ்வில் பேராசியர் இ.பாலசுந்தரம், எழுத்தாளர் முருகபூபதி, தர்மகுலசிங்கம் , பேராசிரியர் முருகதாஸ், நா.பத்மநாப் ஐயர், நடேசன்,  உட்படக் கலை, இலக்கியவாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழகத்திலிருதும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.  மைதிலி தயாநிதியின் உரையினைத் தொடர்ந்து இடம் பெற்ற கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்றது.

முனைவர்  மைதிலி தயாநிதி தமது உரையினை ஆய்வுக்கட்டுரையாக ஊடகங்களுக்குக் 'கனடாத் தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் தலைப்பில்  அனுப்பி வைப்பதும் பயன்மிக்கதாக அமையும். அத்துடன் இத்துறையில் ஆய்வினை விரிவுபடுத்தித் தனியோர் ஆய்வு  நூலாகவும் அவர் எழுதலாம். இதுபோல் ஏனைய நாடுகளில் வசிக்கும்  தமிழர்களும் தமது  நாட்டுத்  தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய ஆய்வுகளைச் செய்வதும் அவசியம். முனைவர் மைதிலி தயாநிதி அவர்களின் உரையினையும் , அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற கருத்துப்பரிமாறல்களையும் கேட்பதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=8Soulhq9V2M


கருத்தரங்கில் பங்கு பற்றியவர்கள்:


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R