- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களைப் பதிவுகள் வாசகர்கள் நன்கறிவர். இவரது பல கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் பல 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளன. 'தடாகம் கலை இலக்கிய வட்ட'த்தை நிறுவி அதன் மூலம் 'கலாசூரி' விருது வழங்கி எழுத்தாளர்கள் பலரை இவர் கெளரவித்துள்ளார். அவை பற்றிய தகவல்கள் 'பதிவுக'ளில் வெளியாகியுள்ளன.  இவரது மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் மற்றும் 'ஞானம்' ஞானசேகரன் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும்  பங்குகொள்கின்றது. அவர் நினைவாக அவரது கவிதைகள் சிலவற்றையும், அவரது 'தடாகம் கலை இலக்கிய வட்ட' நிகழ்வுகள் பற்றிய அறிவுப்புகள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்:

1. நொடிக்கு நொடி

எப்படியும்
வாழ நேரிடுகிறது
வாழ்க்கை

மண்ணில்
மரணமே உண்மை
வாழ்க்கையோ பொய்.

மகிழ்ச்சியாய் வாழலாமென்றால்
வாழ் நாளோ
இரவு பகலைப் போல.

இருள் வெளிச்சம் போல்
நிரந்தரமற்ற
மாற்றங்கள்.

அல்லாஹ்வுக்கு
இல்லை
வேற்றுமை

மனிதர்கள் தாம்
நொடிக்கு நொடி
பச்சோந்தியாய் மாறிப் போகிறார்கள்.

எங்கும்
எல்லாரிடத்தும்
பேராசையின் ஆதிக்கம்.

நிம்மதி யின்றி
இல்லை எதுவும்
வாழ்வு .

வாழ்வதற்கு,மரணிப்பதற்கு
மனிதனுக்கு
வயது தேவையில்லை
உத்தரவு அற்ற வாழ்க்கையோடு  
இம் மனிதம்.

மரணத்தை நினைத்து
வாழ வாய்கின்றது
இவ் வாழ்வு....!

- பதிவுகள் ஜூன 2014


2. முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை ...!

தொடரும் கடல் அலை போல்
நிறைகின்ற உறவு
இந்த மீனவர்களுடையது..!

கடலினுள்  தோணி பயனிக்கையிலும்
சவலின் துணிவு
விசிறித்தரும் சிறகு
இயந்திரமொன்றின் பரிமாற்றம்

இவை,
மீன்களை பிடித்துக்  குவித்த எண்ணிக்கையினும்
அலைகளை முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை அதிகம்

பணத்தின் மதிப்பை விட
இதயங்களின் இழப்புக்கள் அதிகம்..!

பணம் ,பிணம்
இரண்டுமே சரித்திரமாகும்
தரித்திரம் ஒன்று இல்லாத வரையில்

இன்று காலையில் சிக்கிய
வலையில் சடலமொன்று
ஒரு உயிரை மாட்டிக் கொள்ள ,
தண்ணீருடன் தனனிறகை அடித்துக் கொன்டது
திமிங்கிலமொன்று ..!

இறக்கும் வரை கடற் தொழிலை நம்பியிருக்கும்
மீனவர்களின் முன்னால்
கடலோ இறை கொடுக்கும்
அருட் கொடையாய் தவமிருக்கின்றன !

வாழ்விலும் ,சாவிலும்
குறையாமல் தான் கொடுக்கின்றன
மனிதர்கள் தான்எதையும் நிறைவாக பார்ப்பதில்லை  .

- பதிவுகள் ஏப்ரில் 2014


3. விட்டுச் சென்ற தாயை
தொட்டுச் செல்லும் வரிகள்..!


விட்டுச் சென்ற தாயை
தொட்டுச் செல்லும் வரிகள்..!

ஜனவரி
புதிய ஆண்டு

மக்கள் மனதில்
மகிழ்சசி கொண்டிருக்க ,

அன்று ஏனோ

காலை நேரம் இருளாகவே
மங்கிக் கொண்டிருந்தது

துயரத்தோடு -
விடிந்து கொண்டிருந்தது ..!

அதி காலை நேரத்து
காக்கை கூட்டங்கள்
கூடிக் கூடிக்
கரைந்து கொண்டிருந்தன

சொல்லமுடியாத சோகமொன்றினை
கூடிக் கூடி-
வீட்டின் கூரையில்
பேசிக் கொண்டிருந்தன ...!

முகத்தில் விழுந்த
மழைத்துளிகள்  கூட ,
கண்ணீர்த் துளிகளோடு
சங்கமித்துக் கொண்டிருதது!

தாயே ...,
உனது பிரிவினால்
உயிரின் சுவாசங்களை
இழந்து போகும் மூச்சுக்களாய்
நான்

உயிர் தந்த உறவே ..,
என்னை -
மண்ணின் மேலே
வாழவைத்து விட்டு
நீ -
மட்டும்
மண்ணோடு மண்ணாகிவிட்டாய் ..!

எங்களை
சிரித்துப் பேசி மகிழ வைத்த
உங்களால்-
அழவைக்கவும் முடியும்
தேடி அலையவும் முடியுமென்பதை
அறிந்து கொண்டேன் ..!
புரிந்து கொண்டேன்..!!

கண்ணால் காண முடியாத
வாயால் பேசமுடியாத
காதால் கேட்கமுடியாத
ஏன்
உடம்பைக் கூட தொட்டுப் பார்க்கமுடியாத
பெரும் ஆழத்தில்
கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் !

என்னுள்ளம் மட்டும்
மறக்க முடியாத மரணவலியில்
தீர்க்க இயலாத துயரத்தில் துடிக்கின்றது

என் தாயே
கசியும் உள்ளத்தோடு ,
மாறாத நினைவுகளோடு
உங்களுக்காய் பிராத்திக்கின்றேன்

அல்லாஹ்வே
என் தாய்க்கு
ஜன்னத்துல் பிர்தௌஸ்யெனும்
சுவர்க்கத்தை கொடுப்பாயாக !

ஆமீன்


4.  மடி தேடும் கரு ...!

சிந்தனைக் கருவிலுள்ள
எழுத்துப்  பிறப்புகள் -
உன் மடி
தேடுகின்றன ...!.

பேனா முனையில்
அலங்கரிக்கப்பட்டுள்ள
கூர்(மை)த் துளிகள் ,
உன் பெயரையே
எழுதுகின்றன ...!

மாறும் உலக மாற்றத்தில்
மாறாத ஓசையாய்  -
ஓலமிட்டுக் கொண்டிருக்கும் ...,
கடல் கீதங்களும்
அலை இன்னிசைகளும்
உன்னை -
போற்றிப் புகழ்கின்றன ..!

சங்கிலித் தொடராய் நீண்டு செல்லும்
அடம்பன் கொடிகளும் ,
வீடு கட்டி
உடைத்து மகிழும்
சின்னஞ் சிறுசுகளின் சந்தோஷங்கழும்

மீன்களைப் பாதுகாக்கும்
வாடிக் குடிசைகளின்
ஐஸ் கட்டிகளும் ,

கருவாட்டு நாற்றங்களும்
தோனில்
படகு
வலை
இன்னும் பல
இத்தியாதிகளும்
என் கற்பனைக்கு
பல நூறு  கரு கொடுக்கும் ..!

அதில் -
உன் நினைவுகளே
கரையை தொடும் அலையாய்
மனத் தரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன ,

உன் -
தூய்மையான பாசம்
விரும்பி நேசிக்கும்
என்-
சுவாச மூச்சு
உடல் உறுப்புக்களில்
உயிர் கொடுத்து
வாழ வைப்பது போல்

உயிருக்கு உயிரானவளே .....,

உண்மையாக நான்
கவிதா வானில்
சிறு மழைத் துளிதான்
சொல்லப் போனால்
கடுகு போல் சிறிதானவளல்ல
நான்,
உன் நாவின் ருசியில்
காரமானவள்
உப்பு
புளிப்பு
உரைப்பு சேர்ந்தது போல் ..!

கவிதா உலகில்
கோடிக் குழாய்கள்
தாகத்தை தீர்க்க ...
நீர் கொடுக்க..
.
நீர்விழ்ச்சியல்ல....,
நான் ,
உன் அன்புக் கிணற்றினுள்
உற்றெடுக்கும் வற்றாத ஊற்று ...!

முக நூலின்
விலாசத்துக்கு -ஒரு
ஆத்மதிருப்தியை
கற்றுத் தந்தவளே ....

இன்று
எல்லோரது நட்பு றவுகளையும்
என் -மனம்
அனைத்துக் கொள்ளும் !
நீ -
நாட்டி வைத்துள்ள
நட்புச் செடிகளில்
என்-
மனதின் வாசங்கள்
கலந்துள்ளமையால் ..!

நீ -
இதழ் விரித்துள்ள
நடப்பு (பூ)க்கு
என் -
இதயத் துடிப்பால
உயிர் வாசத்தினைக் கொடுக்கின்றேன் ..!

உயிரின் உயிரே

இந்த -
போலி உறவுகளும்
சாதி வெறிகளும்
மனச் செடியில்
வளர்வதை தடுத்துவிடு
என் -வாட்டத்துக்கு
செழிப்பை காட்டி விடு ..!

சர்வேதேச உறவுகளும்
சிந்திக்கட்டும் -இந்த
சாக்கடை நாற்றங்களை

என் -
ஆற்றல் மிகு மூளைக்குள்
ஒட்டியிருக்கும் இந்த
சிந்தனைத்துளிகளை
அல்லாஹ் நீயே
பேணகளுக்கு குருதித் துளியாக
மாற்றி விடு ..!

அப்போது தான் ..

நம் -
மானிட தலைகளின் புற்றிலிருக்கும்
போலி உறவுகளின்
எச்சங்கள் மாறும்
நிம்மதி பிறக்கும் !

தீயவற்றை அகற்றி
நல்லவற்றைகாண்போம் ..!
நன்மையானவற்றைப் பெறுவோம் !

- பதிவுகள் ஜனவரி 2014 -


5. தடாகம் கலை இலக்கிய வட்டம் (கவினுறு கலைகள் வளர்ப்போம் ) கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா! -  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

சர்வதேச மட்டத்தில்மாதா மாதம் தவறாது நடத்தி வரும் போட்டி இது இம் மாதம் (ஜூலை )மாதம் நடாத்தப்படுகின்ற கவிதைப் போட்டிக்கு கவிதை ஆர்வம் உள்ளோர்களிடம் இருந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றோம் தரமான ஒரு கவிதை தெரிவு செய்யப் பட்டு அதற்க்கு (கவிஅருவி )சான்றிதழும் ஒரு சிறப்புக் கவிதை தெரிவு செய்யப் பட்டுஅதற்கு (கவித்தீபம் )சான்றிதழும் வழங்கி வருகின்றோம் இன்னும் வெற்றி பெற்பவர்களுக்கு  சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுவருகின்றது. ஏற்கனவே  நாம் நடத்திய கவிதைப் போட்டியில்  இந்தியாவைச் சேர்ந்த மலிக்காபாரூக்  ,கவியன்பன் கலாம் , முத்துப் பாலகன் ,ஆயிசா பாரூக் சைலஜா ராகவன் ஆகியோர்களும் இலங்கையை சேர்ந்த   ராஜ கவி ராகில்  கலைமகன் பைரூஸ்  கலா நெஞ்சன்  சாஜஹான் போன்றோ வெற்றி பெற்று சான்றிதழ்களும் பெற்று உள்ளார்கள் போட்டிக்கு வரும் 03 கவிதைகள் தெரிவு  செய்யப் பட்டு ஆண்டின் இறுதி மாதத்தில் தடாகம் அமைப்பினால் கவிதை நூலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது எனவே கவிதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் 30/07/2013 செவ்வாய்கிழமைக்கு முன்னர் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம் சாதி மதம் சார்பான கவிதைகளை அனுப்ப வேண்டாம் கவிதைகள் எதுவானாலும் சரியே ( தலைப்பு இல்லை )விரும்பிய தலைப்பில் எழுதி அனுப்பலாம்  உங்களது கவிதைகள் வந்து சேர வேண்டிய ஜிமெயில் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- பதிவுகள் 17 ஜூலை 2013


6. இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா சுவாசிக்கப்படும் நிகழ்வுகள்.  -  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

இடம் - கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ( சங்கரப் பிள்ளை மண்டபம் )
திகதி - 13.05.2012
நேரம் -காலை 09.30 மணி
மதிப்போர்கள் வரலாம் எங்களை மகிழ்வித்துச் செல்லலாம். அழைப்பது 'தடாகம்'' கலை இலக்கிய வட்டம்.

தலைமை - சகோதரி சாந்தி சச்சிதானந்தம் ( பிரதம நிறை வேற்றுஅலுவலர் விழுது மேம்பாட்டு மையம் )
கௌரவ அதிதி - ரிசாத் பதியுதீன் (வர்த்தக வணிபத்துறை அமைச்சர் ) அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் )

சிறப்பு அதிதிகள்
கௌரவ கலாநிதி சிராஸ் மீராசாஹிப் (கல்முனை மாநகர முதல்வர் )
கௌரவ சிவகீர்த்தா பிரபாகரன் (மாநகரமுதல்வர் மட்டக்களப்பு )
கௌரவ -ஏ.எல் நூறுல் மைமூனா (இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி
உயர் நீதி மன்றம் ) ( இலங்கையின் முதலாவதுபெண் நீதிபதி )
கௌரவ எஸ் . நிஜாமுதீன் சட்டத்தரணி (முன்னாள் பிரதி அமைச்சர் )
புரவலர் ஹாஸிம் உமர் (கலைஉள்ளங்களின் சுவாசம்)
கௌரவ வை .எல் .எஸ் .ஹமீட்(செயலாளர் நாயகம் )
அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
காவிய நாயகன் அல் ஹாஜ் ஜின்னாஹ் சரிப்புதீன்
என்..எம் .அமீன் (தலைவர் முஸ்லிம் மீடியா ,பிரதம் ஆசரியர் -நவமணி )

அழைத்தவர்களை அன்போடு பார்க்கும் கண

அறிவிப்பாளர் சூரியன் எப் . எம் .வானொலி ரிம்சாத்
(தடாகம் கலை இலக்கிய வட்டம்)

தடாகமும் விழாவும்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
(அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய வட்டம்..)

கலாஜோதி - கல்முனை சுல்பிகா சரீப் (ஊடகவியாளர் )
( தடாகம் கலை இலக்கிய வட்டம்)
வார்த்தைகளின் மூன்று துளிகள்

கலாநிதி - துரை மனோகரன் (பேராதனை வளாகம் )
மேமன் கவி
கவிதாயினி மஸீதா - புன்னியாமீன் பிரபல எழுத்தாளர்
( தடாகம் கலை இலக்கிய வட்டம்)
புர்கான் பீ இப்திக்கார் (இலங்கை வானொலி )
வி .எஸ்.சிவகரன் (மன்னார் தமிழ் சங்கம் , செயலாளர் )
சந்திர காந்தன் சண்முகம் (இலங்கை வானொலி)

நேத்ரா புகழ்தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமையில்
கானக் குயிலுக்கு கவிதைக் குரல்கள்
பாவரசு பதியத்தலாவ பாரூக் ( ஆலோசகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்)
சர்வதேச புகழ் கவிஞர் நஜுமுல் ஹுசைன்
சந்தக் கவிமணி கிண்ணியா -ஏ . அமீர் அலி
கவிஞர் - ஏ .எம் . தாஜ் ( இலங்கை வானொலி , நேத்ரா தொலைகாட்சி )
கவிஞர் - எஸ் .ஜனூஸ் (இலங்கை வானொலி)
கவிஞர் - வெளிமடை மகாலிங்கம்
கவிஞர் - வெலிகம கலைமகன் பைரூஸ்
கவிஞர் - கலாநெஞ்சன் சாஜஹான் - நீர் கொழும்பு
கவிதாயினி - லுணுகலை ஸ்ரீ
கவிதாயினி - சுகைதா ஏ.கரீம்
கவிதாயினி - ஷைலு பொன்னம்பலம் கொழும்பு

தடாகத்தின் கௌரவம் பெரும் தாமரைகள்

1கௌரவ -ஏ.எல். நூறுல் மைமூனா
(இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி
உயர் நீதி மன்றம் ))
2இசைக் கோகிலம் .நூர்ஜஹான் மர்சூக் ( பிரபல பாடகர் )
3கலாஜோதி கல்முனை சுல்பிகா சரீப் (ஊடகவியாளர் )
4கவிதாயினி மஸீதா புன்னியாமீன் (பிரபல எழுத்தாளர் )
5கலாபூசனம் நூறுல் ஐயின் நஜ்முல் ஹு சைன்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி )
6 நெய் ரஹீம் சஹீத் (இலங்கைவானொலி கலைஞர்)
7சாந்தி சச்சிதானந்தம்( பிரதம நிறைவேற்று அலுவலர்
விழுது ஆற்றல் மேம் பாட்டு மையம்)

7சகோதரி ஜரீனா முஸ்தபா (பிரபலநாவல் எழுத்தாளர் )
8 கவிதாயினி பாயிசா அலி
9 கவிதாயினி பாயிசா கைஸ்

10என்.எம் .அமீன் ( தலைவர் முஸ்லீம் மீடியா , பிரதம் ஆசிரியார் நவமணி )
11பாவரசு பதியத்தளாவ பாறுக் (இரு மொழிக் கவிஞர் )
( ஆலோசகர்- தடாகம் கலை இலக்கிய வட்டம்)
12 கவிஞர் டாக்டர் .தாசிம் அஹ்மத்
13அஸ்ரப் சிஹாப்தீன் (பிரபல அறிவிப்பாளர் ) யாத்ரா ஆசிரியர்
14கவி ஊற்று மேமன் கவி
15 எம் .டீ .எம் . நௌபல் (பிரதேச செயலாளர் -எழுத்தாளர் கல்முனை )
16அப்துல் லத்தீப் ஜின்னா (பிர பல சமூக சேவையாளர் )
17தமிழ் மணி - கணபதிப்பிள்ளை வரதராஜன்
(ஆசிரியர் ஆலோசகர் தமிழ் மொழி ) கல்முனை
18 சபாபதி தில்லை நாதன் (சமூக தீபம் )
19சமூக ஜோதி - டாக்டர் எம் .கே .சகுதுல்லா
19பொறியலாளர் சுப்ரமணியம் புண்ணிய சீலன்
(கொழும்பு தமிழ் சங்க ஆயுட் கால அங்கத்துவர் )
20கவிஞர் எஸ் .எம் . சதாத் (குற்றத் தடுப்பு புலனாய்வு பொறுப்பதிகாரி )
21நாகூர் கனி காதர் முஹிதின் பாச்சா ( எழுத்தாளர்,மதுரை இந்தியா )
22இளங் கவிஞர் பி .அமல் ராஜ்
23எம் .எப் .ரிபாஸ் ஊ டகவியாளர்
24சி .நடராஜ சிவம் (சூ ரியன் எப். எம் .ஆலோசகர்)
25எம் . எஸ் கிருபா (முகாமையாளர் .வசந்தம் எப்.எம் .)
26எம் .எஸ். சியா உல் ஹசன்
(தயாரிப்பு .முகாமையாளர் சக்தி தொலைக் காட்சி )
27சத்தார் ஜெமில் (நிறைவேற்று அதிகாரி
-அலை எப் .எம் டான் தொலைக் காட்சி)
28கந்தையா லங்கேஸ்வர சுதன்(நிகழ்ச்சி பொறுப்பதிகாரி
( அலை எப் .எம் டான் தொலைக் காட்சி)
29எம் . எப் ரிபாஸ் (ஊ ட கவியாளர் )
30கவிஞர் ஏ .எம் . தாஜ் (இலங்கை வானொலி , தொலைக்காட்ச்சி )
31புரவரர் காஸீம் உமர் (புத்தக பூங்கா )
32கலாஜோதி .மௌலவி காத்தான்குடி பௌஸ் (பண்ணுல்லாசிரியர் )
33கலைத்தீபம் உடப்பூர் வீர சொக்கன்
34கவிஞர் சிராஜுதீன் சம்சுதீன்
35கவிஞர் வெளிமடை மகாலிங்கம்
36டாக்டர் எஸ் .எம் தொஹதார்

நன்றித் தூறல்களின் துளிகள்
கலைத் தீபம் .சுகைதா கரீம்( தலைவி தடாகம் கலை இலக்கிய வட்டம்..)

நிகழ்ச்சி நெறியாள்கை

ஏ .எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

( மிகச் சரியாக காலை 09 .30 மணிக்கு தங்கள் இருக்கையில் வந்தமருமாறு வேண்டப்படுகின்றீர்கள்)

தயவு செய்து போட்டிக்காக கவிதைகள் அனுப்பவர்கள் யாராக இருந்தாலும் தமது அறிமுகம் முகவரி புகைப்படம் தொடர்பு இலக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக அனுப்பி வைக்கமாறு அன்போடு வேண்டுகின்றோம் நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அமைப்பாளர் , தடாகம் கலை இலக்கியகல்வி கலாசார சமூக அபிருத்தி சர்வதேச அமைப்பு ./  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- பதிவுகள் 12 மே 2012


7. தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்” விருது வழங்கும் நிகழ்வு!. -  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் 26.06.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவான “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்” -  கலை, இலக்கிய துறையில்  சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை  கௌரவிக்கும் நிகழ்வு -  அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால்  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் 'அகஸ்தியர்'  விருதுதினையும், 'கலைத்தீபம்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட   கவிஞர் யாழ் அஸீம், மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் மன்னார் அமுதன், 'தமிழ் தென்றல்' அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோரை படத்தில் காணலாம்.

- பதிவுகள் 3 ஜூலை 2011 -


பதிவுகள் இணைய இதழில் வெளியான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி படைப்புகளைக் பின்வரும் இணைய இணைப்பில் வாசிக்கலாம்: https://www.geotamil.com/index.php?searchword=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE&searchphrase=all&Itemid=17&option=com_search&limitstart=40

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R