- எஸ்.அகஸ்தியர் அவர்களின் சிந்தனையை நிறுத்திய 25ஆவது வருட நினைவு தினத்தையொட்டி (29.08.1926 – 08.12.1995) அம்பலவாணர் சிவராசா எழுதிய கட்டுரையைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பு வைத்துள்ளார்  அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம். அவருக்கு நன்றி. - பதிவுகள் -


- எழுத்தாளர் அகஸ்தியர் -கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்துää சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறுகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே. எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்கு முறைகளையும். ஒடுக்கு முறைகளையும். சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டியது என்றும். தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக்கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும். மக்களிடமிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினார்.

தமிழ் இலக்கிய உலகில் வியத்தகு சாதனைகளைச் செய்துள்ள இவ்வெழுத்தாளரின் படைப்புகளைப் பட்டியல் போட்டுக்காட்டுவது எனது நோக்கமல்ல. ஆயினும் முந்நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும்ää ஒன்பது நாவல்களையும். எட்டுக் குறுநாவல்களையும். பத்துக்கு மேற்பட்ட உணர்வூற்றுச் சித்திரங்களையும் இலக்கிய உலகுக்கு ஆக்கித் தந்த இந்த எழுத்தாளர் அவற்றினூடாக மக்களுக்கு என்ன சொல்ல முற்பட்டார் என்பதே முக்கியமாகும். ஆதனைவிட அவற்றை எவ்வாறு சொன்னார் என்பதே மிக முக்கியமானதாகும். இவரது படைப்புக்களின் உள்ளடக்கம் சாதாரணமான மக்களது. குறிப்பாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கைப் பிரச்சனைகளையும். மன அவசங்களையும் பிரதிபலிப்பனவாகவும்ää அவற்றுக்கான தீர்வுகளைக் காட்டுவனவாகவும் அமைந்தன. அவை சொல்லப்பட்ட விதமே அவரை ஒரு தலைசிறந்த இலக்கிய சிருஷ்டிகர்த்தா ஆக்கியது. அகஸ்தியர் தான் வாழ்கின்ற காலப் பகுதியின் சமூக. பொருளாதார. அரசியல் பிரச்சினைகளை அவற்றுக்குரிய பகைப் புலங்களை மையமாகக் கொண்டு மிக நுணுக்கமாகச் சித்தரிப்பதில் வெற்றி கண்டவர். களத்திற்கேற்ப உரைநடையைக் கையாள்வதிலும். பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியை ஒலி வடிவத்தில் யதார்த்த பூர்வமாக வளர்ப்பதிலும். குறிப்பாக யாழ்;பாணத்தின் பல்வேறு கிராமங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினுடாக வெளிக்கொணர்வதில் மிகவும் வல்லவர்.

அதுபோன்று மலையகப் பிரதேசங்களில் பயின்றுவரும் பேச்சு வழக்கினைக் iகாயள்வதிலும் தனித் திறமை கொண்டவர். அகஸ்தியர் தான் வாழ்ந்த காலப்பகுதியில் அவதானித்த சூழ்நிலைகளையும். பிரச்சினைகளையும் மிகவும் துல்லியமாகத் தனது படைப்புக்களில் வெளிக் கொணர்ந்;துள்ளார். இதனால் இவரது படைப்புகள் காலத்தை வெல்லும் வெற்றிகரமாகின்றன.

அகஸ்தியரின் சிருஷ்டி இலக்கியங்களை நெருங்கி நின்று பார்க்கும் ஒருவர் ஈழத்தின் சமகால தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனியானதொரு இடமுண்டு என்பதைக் கண்டுகொள்வர். பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சைக்கான பாடத் திட்டத்தில் ஜெகநாதன். நீலபத்மநாதன் போன்ற எழுத்தாளர்களது நாவல்களோடு அகஸ்தியரின் நூல்களும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகளுள் ஒன்றான ‘வட்டி’ என்பது ருஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

தான் சொல்ல வருகின்ற கருத்தை அழுத்திச் சொல்வதற்கு குறு நாவல்கள் நல்ல ஊடகமாக உதவுp செய்தன என்பதையும் சிறு கதைகளில் இவற்றைச் சொல்வது சிரமமாயினும் சிறுகதைகளில் அவற்றைச் சொல்வதிலும் தான் வெற்றி கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அகஸ்தியர் சிறுகதைகளின் ஊடாகத்தான் ஒரு எழுத்தாளரின் திறமை வெளிப்படுவதற்கு இடமுண்டு என்றும் தெரிவித்தார். படைப்பிலக்கியத் துறையில் இவ்வளவ தூரம் வெற்றி காண்பதற்கு யார் உதவினர் என வினவியபோது தனது வாசகர்களான சாதாரண மக்களே தன்னைச் சரியாக இனங்கண்டு கொண்டார்கள் என மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். அதே வேளையில் உணர்வூற்றும் சித்திரம் என்ற புதிய இலக்கிய பரிசோதனையை மேற்கொண்டு வெற்றி கண்டவர். இது தமிழிலக்கியத்தில் ஒரு புதிய வடிவமாகும்.

அடுத்து சிருஷ்டி இலக்கியங்களில் அரசியல் பிரச்சாரம் எந்தளவுக்கு எவ்வாறு இடம் பெறலாம் என்ற விடயத்தை எடுத்துக்கொண்டோம். அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை என்ற கருத்தினைக் கொண்டுள்ள அகஸ்தியர், அவை நாசூக்காக, கலாபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றார். மார்க்சிம் கார்க்கி, மாஜாகோஸ்கி, பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரில் மதிப்பு வைத்திருக்கும் அகஸ்தியர் தனது காலத்து எழுத்தாளர்களான டானியல், கணேசலிங்கன். இளங்கீரன். டொமினிக் ஜீவா. எஸ்.பொ. முருகையன், நீர்வைää சில்லையூர் போன்றோரை ஈழத்திலும் அழகிரிசாமி, ரகுநாதன், செல்லப்பா, ஜானகிராமன், ஜெயகாந்தன், சு.நா.சு என்போரைத் தமிழ் நாட்டிலும் சிறந்த எழுத்தாளராகக் கொள்கிறார்.

இலக்கியம் படைத்ததின் பயனாக அவர் பெற்ற ஆத்ம திருப்தி எது எனக் கேட்டபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அத்தகைய ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார். ‘நீ’ என்ற தனது உணர்வூற்றுச் சித்திரம் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதனை வாசித்த ஜெயினுலாப்தீன் என்ற துறைமுகத் தொழிலாளி கொழும்பில் தான் அப்போது குடியிருந்த அறையைத் தேடி வந்து தன்னைப் பாராட்டியதைத் தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் சொன்னார். ஒரு அரசாங்க ஊழியராகக் கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற அகஸ்தியர், தொடர்ந்தும் கலை இரலக்கிய முயற்சிகளில் வேகமாக ஈடுபட இருப்பதாக உற்சாகத்தோடு சொன்னார்.

அகஸ்தியரின் படைப்புகள் இன்னும் நூலுருப் பெறாதிருப்பது தமிழுலகத்துக்கு ஒரு இழப்பாகும். உடனடியாக முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிடத்தக்க ஆக்கங்கள் இவரிடமுண்டு. அவை வெளிவராத வரை இவரது இலக்கிய ஆளுமையை மதிப்பிடுவதும் எடைபோடுவதும் இயலாத காரியமாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R