கடந்த சனிக்கிழமை 14.12.2020 அன்று   'டொராண்டோ'வில் நடைபெற்ற நூல் வெளியீட்டுக் காட்சியிது. 'புதினம்போட்டோஸ்.காம்' வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் சாமி அப்பாத்துரையின் நூல் வெளியீட்டு விழா.

இந்தப் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். இதிலுள்ளவர்கள் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்விதம் முகமூடி (Face Mask) அணிந்திருக்கின்றார்கள் என்பதை. எத்தனைபேர் 'முகமூடி'கள் அணிந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனியுங்கள். அருகருகில் நெருங்கி நின்று எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுகின்றார்கள் என்பதையும் அவதானியுங்கள்.  நான் நினைக்கின்றேன் இவர்கள் 'ட்ரம்பின்' ஆதரவாளர்களென்று.. :-) இன்று ஓண்டாரியோவில் கோவிட் - 18 இனால் பாதிக்கப்பட்டவர்கள் 1600ற்கும் மேல். 'டொரோண்டோ' , 'பீல்' ஆகிய பிரதேசங்கள் 'லொக் டவுனி'லிருக்கும் சமயத்தில் இவர்கள் இவ்விதம் காட்சியளிக்கின்றார்கள்.

சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே இவ்வாறிருந்தால்... ????

உண்மையில் எம்மவர்கள் பலருக்கு எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுவது, முகமூடி அணிவது என்பது பற்றிச் சரியாகத் தெரியாதென்று நினைக்கின்றேன்.
முகநூல் எதிர்வினைகள் சில:
Rajaji Rajagopalan: நம்மவர்களில் பலர் "ட்ரம்ப் அனுதாபிகள்". அவ்வளவே.

Rathan Ragu: ஊடகவியலாளர்களுக்கே சமூகம் பற்றிய அக்கறையில்லாத போது , பொது மக்களிடம் எதிர்பார்க்கமுடியாது.

Rajaji Rajagopalan: Rathan Ragu இவர்கள் ஊடகவியலாளர்களா? Oh Scarborough based. So it is fine.

Alex Varma: True, Giritharan Navaratnam. Very difficult to go Srilankan grocery stores & all...… Customers & the owners... no one following the regulations...
ஏ. பகலவன்: எவ்வளவுதான் படித்திருந்தாலும், எவ்வளவுதான் பொருளிலிருந்தும் அங்கீகாரத்திற்காக அலையும் அரசியல் அநாதைகள் ஈழத்தமிழர்கள்.

Ananth Eswaran: குறைந்த பட்சம் பொது வெளியில் pose கொடுக்கும் போதாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேணாமோ ?
Veluppillai Thangavelu: ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கல்லடி என் பெண்ணே!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R