ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள். வாசிப்பு என்பது கல்வித் தேவைகளுக்காகவும், அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் இங்கு நிகழ்கின்றது.

இங்கு பொதுவான வாசகர்கள் பற்றிய மதிப்பீடு இரண்டாவது “விரிந்த அறிவுத்தேடலுக்கான” வாசிப்பு என்ற பரப்புக்குள் அடங்குகின்றது. பொழுது போக்குக்காகவும், தம்மைச்சுற்றி உலகில் நடந்தேறும் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் அறிந்து கொள்வதற்காகவும், புரியாதவற்றைப் புரிந்து தெளிவுபெறவும் ஒருவருக்கு ஆழமான வாசிப்புத் தேவைப்படுகின்றது. பொது அறிவு- கேள்வி பதில் புத்தகத்தை எடுத்து வாசித்ததும் பொது அறிவு எமக்கு வந்துசேர்ந்து விடுகின்றது என்று இன்றுவரை நம்பிக்கொள்கின்றோம். அதனால் தான் இன்று புத்தக விற்பனை நிலையங்களில் சிறியதும் பெரியதுமாக இரண்டு வரிகளில் பதில் தரும் பொது அறிவுக் களஞ்சியங்களும் பொது அறிவுப் பெட்டகங்களும் வாசகருக்குத் தயாராகக் காத்திருக்கின்றன. ஒரு பரீட்சைத் தேவைக்கு வேண்டுமானால் இந்தப் பொது அறிவு நூல்கள் ஓரளவு தகவல்களை வழங்கலாம். ஆனால் ஆழ்ந்த அகன்ற வாசிப்பே ஒருவரை தன்னைச் சார்ந்த சமூகத்தையும், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் கூர்ந்து அவதானித்துப் புரிந்துகொள்ள உதவுகின்றது. அதற்கான தேவையையும், ஆர்வத்தையும் வளர்த்தெடுப்பதே எம்முன்னுள்ள சமூகக் கடமையாகும்.

தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலோரின் ஆர்வம் கல்வித் தேவைகளுக்கான வாசிப்புடன் நின்றுவிடுகின்றது . அதற்கப்பால் ஏற்படும் வாசிப்பு நிலை ஒருவனுக்கு சிறுபராயத்திலேயே அவனது பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுக்கப்பட்டு விடுகின்றது. பாடசாலைக் கல்வி முறையும், அதற்கப்பால்  தொடரும் டியுஷன் கல்வித் திட்டங்களும் அவர்களை பாடக்குறிப்புகளை மட்டும்(ழேவநள) நம்பிய மாணவர் சமூகமாக வளர்த்தெடுக்கிறது. இந்நிலை பல்கலைக்கழகங்கள் வரையும் பரவியுள்ளதை இன்று காணக்கிடைக்கும் சில நூல்கள் எமக்குக் காட்டுகின்றன.

விதிவிலக்கான ஒருசிலரே நல்ல வாசகர்களாக மிளிர்கின்றனர். அதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கியமாகத் துணைநின்றிருக்கிறார்கள். எமது ஈழத்துப் படைப்பாளிகளில் பலர் ஆசிரியர்களாக இருந்தும் கல்விச்சாலைகளில் நூலகங்கள் நலிந்து கிடக்கின்றன. நூல்கள் அலுமாரிகளில் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. சாவி தலைமை ஆசிரியரிடம் அடைக்கலமாகிவிடுகின்றது. தான் ஓய்வுபெற்றுப் போகும் வரை அதிபரும் புத்தகங்களைப் பூதம் காத்த புதையல் போலப் பாதுகாத்து புதிய அதிபரிடம் கையளிக்கின்றார். தனது ஓய்வூதியம் தாமதமாகக்கூடாதென்ற கவலை அவருக்கு. இதுதான் காலாதிகாலமான நடைமுறை. இன்றைய ஈழத்துத் தமிழ்ப்பாடசாலைகளில் திறந்த வாசிப்புமுறையுள்ள பாடசாலைகளை விரல்விட்டு எண்ணலாம். பாடசாலைகளில் நூலகத்தின் நூற்றொகை என்பது நிலையான சொத்துகளாகக் (Fixed assets) கணிப்பிடும் முறை நீங்கி அவை அழியும் நுகர்பொருட்களாகக் (consumable) கணிப்பிடும் வகையில் நூலக விதிமுறைகள் தளர்த்தப்படவேண்டும். அப்பொழுது தான் அதிபரின் பொறுப்பில் பாதுகாக்கப்படும் நூலகச் சாவிக்கொத்து, நூலகரிடம் கைமாறும் நிலை உருவாகும். பாடசாலைகளில் நூல்கள் பாவனைக்கு விடப்பட்டு காலக்கிரமத்தில்  பழுதடைந்து பெறுமானத் தேய்வுகண்டால், புதிய நூல்விற்பனைக்கான சந்தை வாய்ப்பினையும் அது விரிவுபடுத்தும். இறைத்த கிணறே ஊறும் என்பது மூத்தோர் பொன் மொழியல்லவா?

ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.எம்மிடையே வாழும் தமிழ் பாடசாலை ஆசிரியர்களில்;  எத்தனைபேர் பொதுவாசிப்பில் அக்கறையுடன் ஈடுபடுகின்றார்கள் என்பதை இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் டீஆஐஊர்  புத்தகச் சந்தைகளில்  அவர்கள் தமது நூலகங்களுக்காக வாங்கும் பொது வாசிப்பு நூல்களின் எண்ணிக்கையிலிருந்து மதிப்பிடலாம்.  இதை எமது தமிழ்ப் பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் அறியாமலில்லை. பாடம்சார்ந்த துறைகளுக்கு அப்பால் செல்ல அவர்களது கைகள் கூசுவதை அத்தகையதொரு நூற்சந்தையில் நேரில் கண்டவன் நான். இது வருத்தத்துக்குரியது. கல்வித் தேவைகளுக்கு அப்பாலும் வாசிப்பு விரியவேண்டும் என்று ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் நினைத்தால்- அதற்கான வாய்ப்புகளை அவர்கள் தமது பிள்ளைகளுக்கு வழங்கினால் எமது வாசிப்பு நிலை அதிசயிக்கத்தக்க அளவில் மாறும். வரையறுக்கப்பட்ட நிதி வசதி என்பது இரண்டாம் பட்சமே. பதிப்பாளர்கள் மறைமுகமாக வழங்கும் கொமிஷன்களும்  (லஞ்சம் என்றும் சொல்லலாம்) நியாயமானதும் ஆரோக்கியமானதும் நேர்மையானதுமான நூல்கொள்வனவுகளைக் கல்வி நிறுவன நூலகங்கள் மேற்கொள்ளத் தடையாக உள்ளன.

படைப்பாளிகளும், பதிப்பாளர்களும் சிறுவர் நூல்கள் என்றால் கற்பனைவளம்மிக்க சிறுவர் பாடல்களும், சிறுவர் கதைகளும் தான் என்ற மாயையிலிருந்தும் இன்று விடுபடவேண்டும். அறிவியல்சார்ந்த படைப்புகளை அவர்கள் சிறுவர்களுக்காகப் படைக்க வேண்டும். ஈராக் யுத்தம் பற்றி  அல்லது இலங்கையின் ஆர்தர் சீ கிளார்க்கின் வாழ்வும் பணியும் பற்றி ஒரு சிறுவனுக்கு விளங்கக்கூடியவகையில்  படங்களுடன் அழகாக ஒரு நூலை ஆராய்ந்து எழுதவேண்டும் என்று எமது எழுத்தாளர்கள் என்று தீர்மானிக்கிறார்களோ அன்றுதான் எமது வாசிப்புத்திறன் சர்வதேசத் தரத்தை எட்டும். 

இன்று இலங்கையில் சுழழஅ வழ சநயன திட்டத்தின் கீழ் தமிழ்ப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் நூல்களின் தலைப்புகளையும் பாடத்துறையையும் மேலோட்டமாகப் பார்த்தாலே இளையோர் அறிவியல்நூல்களுக்கு நாம் வழங்கும் முக்கியத்துவம் புரியும். இன்று வளரும் சிறுவனே நாளைய வளர்ந்த வாசகன். பறக்கத்துடிக்கும் பறவையின் சிறகுகளைக் கத்தரித்துவிட்டு அது பறக்கவில்லையே என்று வருத்தப்படும் சமூகக்கோளாறு மாறவேண்டும். எமது கவனம் ஒட்டுமொத்தமாக சிறுவர்களைப் பரந்த வாசிப்புக்கு இட்டுச்செல்லும் வழிமுறைகள் பற்றிச் சிந்தித்தால் இந்தத் தலைமுறையிலேயே விடிவைக் காணலாம். பாடசாலைகளும் ஆசிரியர்களும் கல்வித்துறையும்தான் இதனைச் செய்யவேண்டும் என்ற வழமையான “மற்றவர் செய்யட்டும் நாம் வேடிக்கை பார்ப்போம்” என்ற போக்கை விட்டு- ஒவ்வொருவரும் தமது பங்கை செயல்படுத்தவேண்டும். மேலைத்தேயங்களில் கோடி கோடியாக அதில்தான் கொட்டுகிறார்கள். பாடசாலை நூலகங்களுக்கு அப்பால் வகுப்பறை நூலகங்கள் செழிப்புடன் செயற்படுகின்றன. அவற்றின் பொறுப்பை பெற்றோரும் வகுப்பாசிரியர்களுமே பெரும்பாலும் ஏற்கிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Room to read  என்ற இலங்கைத் திட்டம். அதையும் நாங்கள் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதே எனது கருத்து.
எமது எழுத்தாளர்களைப் பற்றியும் எனக்கு ஒரு கசப்பான அபிப்பிராயம் உள்ளது. தனது நூல்களைத்தவிர அடுத்தவரின் நூல்களையும் வாங்கிப்படிக்கும் படைப்பாளிகளை எம்மிடையே விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம். எத்தனை குழுக்கள்,  எத்தனை பிரிவுகள்? இந்நிலை ஈழுத்தில் மாத்திரமல்ல. புலம்பெயர்ந்து நாம் வாழும் மண்ணிலும்தான் தொடர்கின்றது. காழ்ப்புணர்வற்ற தமது பரந்த வாசிப்பை எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மேற்கொள்ளும்போது புத்தகக் கலாச்சாரம் செழுமையடையும்.
நூலகத்துறையில் ஒரு பொன்மொழியுண்டு. “நூலகங்களை நாடி வாசகர் வராவிட்டால் வாசகரை நாடி நூல்கள் சென்றடைய வேண்டும்”- இது  நூலகவியலின் தந்தை என்று உலகமே வர்ணிக்கும் நம்மவரான எஸ். ஆர். இரங்கநாதன் சொன்னது. இந்தக் கருத்தே பதிப்பகங்களுக்கும் பொருந்தும். தமது பதிப்புக்களை நாடி மக்கள் வராவிட்டால், அவர்களை நாடி ஏன் பதிப்பகங்கள் செல்லக்கூடாது. சிறிய அளவில் நடமாடும் நூற்சந்தைகளை ஏன் இலங்கையில் தொடர்ந்து நடத்தக்கூடாது. பாடசாலைகளும், சனசமூக நிலையங்களும், பொது நூலகங்களும் இது பற்றிச் சிந்திக்கவேண்டும்.

இன்று லண்டனில் அதைத்தான் நான் செய்துவருகின்றேன். ஈழத்து தமிழ் நூல்களின் சந்தை வாய்ப்பினை லண்டனிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் விரிவுபடுத்தும் தனிநபர் முயற்சியாகவே இதனை மேற்கொள்கின்றேன். ஒரு மண்டபத்தை ஒழுங்குசெய்து தரவேண்டியது மட்டுமே அவர்களின் பொறுப்பு. ஊடகங்கள் போதிய விளம்பரங்களை வழங்குகின்றன. என்னளவில் ஓரளவு வெற்றியளித்துள்ள இந்த முயற்சி, அண்மைக்கால ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றி அறிய வாய்ப்பில்லாதிருக்கும் புகலிடத்தில் வாழும் எம்மவரிடையே அவற்றை எடுத்துச் சென்று காட்டி, அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி பெரும்பாலும் இலங்கை விலையிலேயே (இறக்குமதிச் செலவையும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுவதால் இலங்கை விலையை விட ஓரிரு பவுண்கள் விலை அதிகமாயிருக்கும்) அவர்களிடம் சேர்ப்பிக்கும் எளிமையான முயற்சி. பல நண்பர்கள் இன்று தொண்டர்களாக என்னுடன் இணைந்து எனது பழுவைக் குறைக்கவும் முன்வந்திருக்கிறார்கள். இது ஈழத்துத் தமிழ் பதிப்புலகம் பற்றிய புதியதொரு நம்பிக்கை ஒளிக்கீற்றை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.ஆக்க இலக்கியம் தவிர்ந்த பல ஆய்வு நூல்களை குமரன் பதிப்பகமும் சேமமடு பதிப்பகமும் சில தனியார் அமைப்புகளும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் ஆய்வுநூல்கள் பரந்த அளவில் எடுத்துச் செல்லப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கான முறையான சர்வதேச விநியோகத்திட்டம் எதுவும் எமது பதிப்பாளர்களிடம் இல்லை. அதனைச் செய்யவேண்டிய பொறுப்பு எழுதுபவரின் தலையிலேயே கட்டிவிடப்படுகின்றது. பாவம், புத்திஜீவிகளான அவர்களால் வியாபாரச் சிந்தனையை தமக்குள் வளர்த்துக்கொள்ள முடியாதுள்ளது. ஒருவெளியீட்டு விழாவுடன் திருப்திகொண்ட விடுகிறார்கள். லண்டனிலிருந்து கடிதம் எழுதி ஒரு பிரதியைக் கேட்டால்கூட பதில் எழுதவோ, தொடர்புகொள்ளவோகூட அவர்கள் அக்கறைப்படுவதில்லை. இத்தகைய நிலையில் நூல்விநியோகத்திட்டம் பற்றி சிந்தித்து அதனைச் செய்யவெண்டியது பதிப்பகங்களே. முன்னர் ஒரு தடவை பூபாலசிங்கம் பதிப்பகத்தின் மூலம் இத்தகையதொரு கூட்டு விநியோகத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிகின்றேன். அது ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை நாம் ஆராயவேண்டும். அதன் காரணிகளைக் கண்டறிந்து அதனை வெற்றிகொள்ளத்தக்க மற்றொரு தொடர் முயற்சியை பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மேற்கொள்ளவேண்டும்.

புதிதாக ஒரு நூல் வெளிவந்ததும் அது பற்றி அறிமுகத்தையும், விமர்சனத்தையும் பத்திரிகைகளிலும் சிறு சஞ்சிகைகளிலும் பிரசுரித்துவிடுவதால் மாத்திரம் அந்த நூலைத் தேடிச் சென்று வாங்கும் அளவுக்கு எமது வாசகர் சமூகம் உத்வேகம் பெறவில்லை என்ற யதார்த்தத்தை  நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். வாசகர்களிடம் நூல்களைக் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளாக இன்று இருப்பது பதிப்பாளர்களின் புத்தக விலைப்பட்டியல்களும், பதிப்பாளர்களின் சஞ்சிகை விளம்பரங்களுமே. இதற்கப்பால் நூல்களை விநியோகிப்பது தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு கலந்துரையாடலையாவது பதிப்பகங்கள் ஒற்றுமையுடன் அறிவுஜீவிகளுடன் இணைந்து மேற்கொள்ளவேண்டும்.

தமது சந்தை வாய்ப்பை உலகெங்கும் புலம்பெயர்ந்துள்ள எம்மவரிடையே உருவாக்க நியாயமான விலையில் அவர்களிடம் நூல்களைக் கொண்டுசேர்க்க தனிநபர்களின் உதவும் கரங்களைப் பற்றிப் பிடிக்கவேண்டும். லாபத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு புலம்பெயர் தமிழர்களை நோக்கி நீழும் வர்த்தகக் கரங்கள், தவறான கரங்களையும் பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. புலம்பெயர் தமிழர்களின் அறிவியல் தேவை மற்றும் ஆர்வத்துக்கு தீனியாக அமையும் நூல்களை வெளியிடும் முயற்சிகளிலும் பதிப்பாளர்கள் இறங்கவேண்டும். குறிப்பாக ஈழத்தவரின் சமூக அரசியல், கலாச்சார, பிரதேச வரலாற்று மூலங்களை அடியொற்றிய தேடல் இன்று புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு. அதற்கு ஏற்ப வெளிவரும் நூல்களையே அங்கு  வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்தத் தேவையை நிவர்த்திசெய்வது ஈழத்து பதிப்பகங்களினதும், படைப்பாளிகளினதும் கடமையாகும்.

இன்று மணிமேகலைப்பிரசுரமும், காலச்சுவடு பதிப்பகமும், புதிதாக முளைத்திருக்கும் தமிழகத்தின் கிழக்கு பதிப்பகம், வடலி பதிப்பகம் போன்றவையும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை நோக்கித் தமது சந்தை வாய்ப்பை வலுப்படுத்திவரும் வேளையில் ஈழத்தின் பதிப்பாளர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற சாமான்யனின் கேள்விக்கு அவர்களிடமிருந்து நல்லதொரு பதிலை ஈழத்துத் தமிழ்ப்பதிப்புலகம் இன்று எதிர்பார்த்திருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
(18.3.2012)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R