யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன.

பள்ளிப்படிப்பு காரணமாக பள்ளிக்குக் கிட்டவாக புதிதாக ஒரு காணி வாங்கி ஆசையாசையாய் நாங்கள் ஒரு கல்வீடு கட்டிக் குடிபுகுந்தோம். எனது அறை யன்னலுக்குள்ளால் அப்படித்தான் பள்ளிப்பருவத்தில் அதிகாலை நேரத்தில் செவ்வானத்தையும்,
ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து ஒன்றாகக் கலக்கும் கருமேகக் கூட்டங்களையும், அணிலாடும் முன்றல்களையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.

அடுத்த வீட்டு மாமரமும் அதில் குலைகுலையாய் காய்த்துத் தொங்கும் மாங்காய்களும், அவற்றை ருசி பார்க்கக் கொப்புகள் தாவும் அணில்களும், குருவிகளும் அவ்வப்போது யன்னலுக்கால் கண்ணில் பட்டுத் தெறிப்பதுண்டு. இந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், ‘மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை’ என்ற ஒளவையாரின் பாடல் அடிக்கடி ஞாபகம் வரும். சுதந்திரமாய்க் கீச்சுக்குரலிசைக்கும் பறவைகளின் இருப்பிடமாய் அந்த மாமரம் இருந்தது.

இதைவிட பக்கத்து வீட்டுக் காணியில் மாமரத்திற்குச் சற்றுத் தள்ளி உள்ள குடிசையில் ஒரு குடும்பம் குடியிருப்பதையும் இந்த யன்னலுக்குள்ளால்தான் முதன் முதலில் பார்த்தேன். இயற்கையை ரசித்த எனக்கு அங்கு தினமும் பார்க்கும் காட்சிகள்  வித்தியாசமாக இருந்தன. நடுத்தர வயதுடைய கணவன், மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள், அவர்களின் உருவத்தை வைத்து வயது எட்டு, பத்து, பன்னிரண்டாய் இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது.

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.

வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.

'எவ்வளவு?' ஆங்கிலத்திலேயே கேட்டாள்.

வித்தியாவும் சொன்னாள்.'120 பவுண்ட்'

விலை அதிகம் என்றாள்.

'இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்...'

வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.

'இது 10 ரூபாயும் பெறாது'

வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்' செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்'.

'பகிடி விடாதையும்...யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்'

கோபத்தை அடக்கிக்கொண்டு' என்ன சொல்ல வாறியள்?' கேட்டாள் வித்தியா.

'எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்'. வந்தவள்தான் கேட்டாள்.

காலைச் சூரியன் பொட்டெனச்சுடுகிற இலையிடுக்கில் மாமரத்து நிழலில் பெண்கள் பண்பாயோடு குந்திவிட்டனர். மௌலானாவின் மன்சிலுக்கு வருகிற பெண்களுக்கு தாயத்தும் ஓதிய தண்ணீர் பிடிக்க கலனும் விற்கவென மன்சிலை ஒட்டிய செய்யதுவின் கடைச் சாம்புராணி, மன்சிலின் பெரிய கிணற்றடிக்கு பின்னால் செத்துக்கிடந்த பூனை நெடியிடம் தோற்றுப் போயிருந்தது. லெவ்வை கிணற்றுக்கு கிழக்கால் பாத்தி பிடித்து மரவள்ளிக்கிழங்கை செவ்வென நட்டியிருந்த வரிசை இடையில் பூனையை புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார். லெவ்வை தான் மன்சிலின் பேஷ் இமாம். தொழுவிப்பது, ஓதுவிப்பது, மையத்து வீடு, கத்தம்பாத்திஹா கோழி அறுக்க தக்பீர் சொல்லுவதென மாதம் ஐயாயிரம் தேத்திக் கொண்டிருந்தார். மௌலானா வரும் மாதங்களில் சதகா மட்டும் பத்து பதினையாயிரம் தேறும். பார்க்க தடித்த தேகம். பெனியன் இறக்கிய பச்சைவாரில் மண்ணடி நண்டு மார்க் சாரன் பிடிபட்டிருக்கும். தங்க முலாம் கைக்கடிகாரமும் அதை மூடும் கைரோமங்களுமென திடும் என்று இருப்பார். நெற்றியில் தொழுகை வடுவும் முகத்தில் தோய்ந்த கறார் பாவமுமாக மஜ்லிஸை துவக்கினாலே எல்லோரும் கமுக்கமாக பாத்திஹா ஓதத் தொடங்கிவிடுவர்.

காலையில் எட்டு மணிக்கெல்லாம் மௌலானா மருந்து கொடுக்க வருவார். பாய் விரித்த மன்சிலின் வெளிப்பள்ளியில் வெள்ளை விரித்த தலையணைப் பஞ்சில் முஸல்லாவைக் கிடத்தி பானா வடிவில் விரிப்பு போடப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான பச்சை முசல்லாவுக்கு நடுவில் கொஞ்சம் உயரமான தலையணைக்கு மேல் சிவப்பு காஷ்மீர் முசல்லாவிலேதான் மௌலானா உட்காருவார். தீர்க்க முடியாத நோய்களை, மனநிலை பிறழ்ந்த பெண்களை, விசம் கொட்டுண்டு வீங்கிய பிள்ளைகளை, சைத்தான் பிடித்த குமருகளை தவிர அவசரத்திற்கு வேறு யாரும் மௌலானா வை தரிசிக்க முடியாது. வரிசையில் நான்கு நான்காக பெண்களும் இரண்டு இரண்டாக ஆண்களும் இருக்கவேண்டும். ஊரின் பெரிய பள்ளிகளின் மரைக்காயர்களோ பட்டினசபை மெம்பர்களோ யாராகினும் வரிசையிலே நிற்கவேண்டும்.

சும்மா இருந்திருக்கலாம். இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள். எதிர்பார்க்கவில்லை. காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன் .கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது. ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது. நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள், புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா... வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல... படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.

'என்னப்பா...இண்டைக்குத் தேத்தண்ணி இல்லையோ?'

பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.

-'நீங்க ரீமாஸ்டர் தானே..போடுங்கோவன்' என்று சொன்னது மாதிரி

இருந்தது.அவள் சொல்லவில்லை.எண்டைக்கெண்டாலும் சொல்லலாம்.படியில் படுத்திருந்த பூனையும் எழுந்து என்னுடன் வந்தது.அதற்கு சாப்பாட்டைப்போட்டுவிட்டு தேநீர் தயாரிக்கத்தொடங்கினேன்.முந்தி அம்மா குசினிக்குள் வரவிடமாட்டாள்...தானே சமைக்கவேண்டும்..தானே தரவேண்டும்..என்று நினைப்பாள்.அப்பாவும் கண்டிப்பென்றாலும் வேலை ஒண்டும் செய்யவிடமாட்டார்..

'போய் படிக்கிற வேலையைப்பார்' என்பார்.

- தாயகம் (கனடா) பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 'கணங்களும், குணங்களும்' என்னும் பெயரில் வெளியான சிறு நாவலே அவ்விதம் எழுதிய முதற் படைப்பு. அதன் பின்னர் சிறுகதைகள் சில (ஒரு விடிவும், ஒரு முடிவும், பொற்கூண்டுக்கிளிகள், ஒட்டகங்கள், மழையில் சில மனிதர்கள், இன்னுமொரு கதை) மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தன. இங்குள்ள 'பொற்கூண்டுக்கிளிகள்' கனடாவில் வசிக்கும் முதியவர்களின் வாழ்வு பற்றியது. இதுவரையில் வெளியான எனது தொகுப்புகள் எவற்றிலும் வெளிவரவில்லை. இச்சிறுகதை தாயகம் பத்திரிகையாக தொடங்கிய காலகட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் வெளியானது. சில திருத்தங்களுடன் இங்கு மீண்டும் வெளியாகின்றது.  -


மகன் ராம்குமார், மருமகள் தமயந்தி, மகள் வதனா எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் மாலையில்தான் வருவார்கள்.  ராஜதுரையார் அது மட்டும் அப்பார்ட்மெண்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் செல்லம்மா மட்டும் இருப்பாளென்றால் அவருக்குத்தான் எவ்வளவு துணையாக இருக்கும். ம்... மகராசி நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டா..

'இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் .. உவங்கள்  ஆமிக்காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப்பதற்கு.. இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும்.

என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம் , உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....

இங்கு இவருக்கு என்ன குறை?

அன்பான பிள்ளைகள், பண்பான மருமகள், வேளை வேளைக்குச் சாப்பாடு, எல்லாமே இலகுவான வகையில் செய்யும்படியான வசதிகள்..வருத்தமென்றால் 'ஓகிப்' இருக்கிறது. .. டாக்டர் இருக்கிறார்... டி.வி.யைத்திருப்பினால் வகை வகையான நிகழ்ச்சிகள்.. அடிக்கடி உடனுக்குடன் ஊர்ப்புதினங்களை அறியத்தமிழ்ப் பத்திரிகைகள்.. தொலைபேசிச் செய்திகள்....

டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது.  நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .

"என்ன இந்த நேரத்தில என்று"  மணிக்கூட்டை பார்க்காமலே சகுந்தலா கேட்க , " என்னக்கா  !   இஞ்ச  இப்ப ஒன்பது மணியாப் போச்சுது  உங்க  இன்னமும்  விடியேல்லையோ ? "என்றாள்.

அப்பதான்  சகுந்தலா 'லைற்'றை போட்டு நேரத்தைப் பார்த்தாள்  அதிகாலை ஐந்து மணியை அது காட்டியது .

டென்மார்க்கில் கோடை காலங்களில்  இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவு போலவும் இருக்கும். கோடை காலங்களில் இரவு ஒன்பது பத்து மணிக்கே சூரியன் வானில்  தெரியும். பனி காலங்களில்  விடிந்தாலும்  இராவகத் தான்  இருக்கும் .  

அப்படி ஒரு பனிக்காலம் தான் டென்மாக்கில் இப்போ ....  

வேலை வெட்டிக்கு போகாததினால் இரவிரவா  நாடகத் தொடரும் ...  பேஸ்புக்கு மாக ...  மேஞ்சு போட்டு  படுக்க சமமாகிப்  போகும்.  பேந்து  விடிய விடிய படுத்துக் கிடப்பாள் சகுந்தலா . இப்ப அவள்  வேலை இல்லாமல் வீட்டோடு தான் . டென்மாக்கில் வீட்டோடு இருந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும்.  அவள் வந்து கொஞ்சக்காலமாக  வேலை செய்தவள். செய்து கொண்டிருக்கேக்க நாரியை பிடிச்சுப் போட்டுது என்று,  ஒரு நாள் வேலைத் தளத்தில  விழுந்தவள்  தான்  எழும்பவேயில்லை. மனைவியை அம்புலன்சில ...   ஹோல்பேக் வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக அறிவித்தல் வர துடிச்சுப் போன கணவன் சிவசாமி அலறியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு போனபோது, அரை மயக்கமாக கிடந்த  சகுந்தலா   கணவனின் குரல் கேட்டவுடன்  கடைக் கண்ணை திறந்து  கண்ணடித்தாள்.  அப்போதான் சிவசாமிக்கு நிம்மதியாக இருந்தது .

சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.

உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள்.

கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள் ஜில்லிட்டன. கைகளை ஜக்கற் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு நடக்கலாமென்றாலும் முடியவில்லை, குவிந்திருந்த பனிக்குள் புதைந்துகொண்டிருந்த காலடிகளை மேலெடுப்பதற்குப் பெரிதாகப் பிரயத்தனம் வேறு செய்யவேண்டியிருந்தது. விழுந்துபோய்விடுவேனோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது. ஜக்கற்றுக்குள் கைகளை வைப்பதும் எடுப்பதுமாக, பார்த்துப் பார்த்து அடி மேல் அடி வைத்து அவள் மெதுவாக நடந்தாள்.

எதிர்திசையில் வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, அவளின் முகத்திலும் பனியை வீசி அழகுபார்த்தது. பார்வைப்புலத்தை மங்கலாக்கிக் கொண்டிருந்த நீர்த்திவலைகளுடன் போராடிக்கொண்டிருந்தவளைக் கடந்துசென்ற பெரிய வான் ஒன்று குவிந்திருந்த பனியை அவளின்மீதும் வீசியிறைத்து அகன்றது.

வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஒஷாவோ ஆஸ்பத்திரியின் அந்தப் புற்றுநோய்ப் பிரிவை அடைவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. மூக்கால் தண்ணீர் ஓடியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத  பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில்  ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால்  கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R