பேராசிரியர் பசுபதி அவர்கள் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -

பேராசிரியர் பசுபதி அவர்களை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர் என் முகநூல் நண்பர்களிலொருவர். அவ்வப்போது என் பதிவுகளுக்கும் வந்து கருத்துகளை, தகவல்களைத் தெரிவிப்பார். நானும் அவரது வலைப்பதிவான , 'பார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் 'பதிபசுகள்' தளத்தை அவ்வப்போது மேய்வதுண்டு. அவற்றிலிருந்து எனக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள், அவர்கள்தம் படைப்புகள் பற்றிய விபரங்களை என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அண்மையில் கூட எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' ஓவியங்கள் சிலவற்றை , சுதேசமித்திரனில் வெளியானவை, கீழுள்ளவாறு பகிர்ந்திருக்கின்றேன்.
- தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவலான 'மோகமுள்' 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அத்தொடரில் வெளியான ஓவியங்கள் சிலவற்றைப் பேராசிரியர் பசுபதி அவர்கள் தனது வலைப்பதிவான 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் பதிவுசெய்துள்ளார். அவற்றை இங்கு நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 'பசுபதிவுகள' வலைப்பதிவு - https://s-pasupathy.blogspot.com -



லம்பெயர்ந்தோர் படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன. இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும் இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல் சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.
இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.




ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்ஞாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது.

வாடாத மல்லிகையாய் வாணி அம்மா

நான் காலையில் கண்விழித்தேன் _
“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது. நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









