கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
தகவல் தொடர்பியல் (Communication) என்பது செய்திகள், கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அல்லது ஒரு குழுவிற்குப் பரிமாறிக்கொள்ளும் முறையாகும். இது வாய்மொழி, எழுத்து, சைகை மற்றும் மின்னணு ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, இணையம்) வழியாக நடைபெறுகிறது. சமூக உறவுகள், மேலாண்மை மற்றும் சமூக மாற்றத்திற்குத் தகவல் தொடர்பு அடிப்படையாக அமைகிறது.
முன்பு மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பு தகவல்களைப் பரிமாற சைகையால் பேசினர். பின்பு ஒலி எழுப்பி தன் மனதில் இருந்த செய்திகளைத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்பே சொற்களைப் பயன்படுத்தி பேசத் தொடங்கினர். கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் தகவல் தொடர்பியல்
சைகையால் தகவல் கூறல், ஒற்றர், தூதர், தானே உணர்தல், முரசறைந்து தெரிவித்தல், திருமண செய்தியை முரசறைந்து தெரிவித்தல், சில சப்தத்தின் ஒலியால் அறிதல், இசை கருவிகளின் ஒலி மன்னர் வருகை, மங்கல ஆரவாரம், வில் நாண் ஒலி, அணிவகுத்து வருவதை உணர்த்தும் சத்தம், உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன், குரலால் தகவல் அறிதல், தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல், தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல், ஒலியும் வாசனையும் தகவல் அறிவித்தன, தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன், தானே செய்தியைக் கூறல், தகவல்களை அறிந்து வைத்திருத்தல், அரசனானதை அறிவித்தல், இராவணன் -அனுமன் அறிமுகம், அங்கதன் -கும்பகர்ணன் அறிமுகம், ஆரவார ஒலியால் தகவலை அறிதல், ஆரவார ஒலியால் ஆனந்தத்தை அறிவித்தல், தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல், அன்புடையோர் தந்த தகவல், பொருட்களைப் பார்த்து அவர்களுடையது தான் என்ற தகவலை அறிதல், வீடணன் கூற இராமன் தகவல் அறிதல், கண்களால் தூது -புன்னகையே தகவல், ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல், அயோமுகியின் அலறல்.




இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மெய்யியல் (தத்துவ) வரலாற்றில், இம்மானுவேல் லெவினாஸ் (Emmanuel Levinas) நிகழ்த்திய சிந்தனைப் புரட்சி தனித்துவமானது. பிளேட்டோ முதல் மார்ட்டின் ஹைடெக்கர் வரையிலான மேற்கத்திய மெய்யியல் மரபானது ‘இருப்பியல்’ (Ontology) மற்றும் ‘அறிவுக்கோட்பாடு’ (Epistemology) ஆகியவற்றுக்கே முதலிடம் வழங்கியது. ஆனால், லெவினாஸ் இந்த மரபை முற்றாக நிராகரித்து, அறவியலை (Ethics) ஒட்டுமொத்த மெய்யியலின் “முதன்மைத் மெய்யியல்” (First Philosophy) ஆகப் பிரகடனப்படுத்தினார். சுயத்தின் (Self) மேலாதிக்கத்தை உடைத்து, ‘அயலான்’ (The Other) மற்றும் ‘எல்லையற்ற பொறுப்புணர்வை’ (Infinite Responsibility) மையமாகக் கொண்ட ஒரு புதிய மனிதநேயத்தை அவர் முன்வைத்தார். இக்கட்டுரை, லெவினாஸின் மெய்யியல் பின்னணி, அவரது முக்கியக் கருத்தாக்கங்கள் மற்றும் மேற்கத்திய தத்துவத்துடனான அவரது உரையாடலை ஆராய்கிறது.

அஜர்பைஜான், ஆர்மேனியா, ஜோர்ஜியா ஆகிய மூன்று சிறிய நாடுகளும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் காக்கசஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ளன. வரலாற்றில் இவை அருகிலிருந்த பெரிய பேரரசுகளான பாரசீகம், ஒட்டோமான் துருக்கி, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. கடந்த நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தின் கீழும் இருந்தன. கிழக்கையும் மேற்கையும் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில்க் பாதையில் அமைந்திருந்ததால், இப்பகுதி எப்போதும் பெரிய பேரரசுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.



வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் (Vel Tech Ranga Sanku Arts College) 24-வது பட்டமளிப்பு விழா. ஆகஸ்ட் 22, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள வேல் டாக்டர் ஆர்.ஆர் மற்றும் டாக்டர் எஸ்.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் அ.வீ.க. சாந்தி வரவேற்புரை ஆற்றியதுடன், கல்லூரியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
ஈழத்து இலக்கிய உலகில் கிராமிய வாழ்வியலையும் புலம்பெயர் அனுபவங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் இயல்பான மொழியில் பதிவு செய்து வரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன். அவரது காவோலை சிறுகதைத் தொகுப்பு, வெறும் கதைகளைச் சொல்லும் படைப்பாக மட்டுமன்றி, சமூக மாற்றங்களின் தாக்கத்தால் சிதைந்து வரும் உறவுகள், முதுமையின் தனிமை, புலம்பெயர்வின் உளவியல், மற்றும் தமிழரின் கிராமிய வாழ்க்கையின் நுணுக்கங்களை ஆழமாகப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.

இருட்ட தொடங்கி விட்டது. டீ நகர் பஸ் ஸ்டான்டில், இறங்கி, மறைவாக, சற்று இருட்டில் ஓரமாய், நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி விசாரித்த போது, அது பாண்டி பஸார் செல்லாது என்று தெரிவித்தார்கள். பனகல் பார்க் வரை செல்லலாம். பெட்ரோல் பங்குடன் நீங்கள் இறங்கி நடக்கலாம் என்று அறிவுரையும் வழங்கினார்கள். மீண்டும் பஸ் ஸ்டேன்டை நோக்கி ஓடினேன். மூச்சு வாங்கியது. ஒரு பஸ் கிளம்பி சென்றது. இன்னுமொரு பஸ் நிறுத்தப்பட்டது. ட்ரைவரும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக இறங்கி கொண்டிருந்தனர். ‘உட்காரு’ என்று கூறிவிட்டு, எனது கேள்விக்கு பதிலளிக்காமல், எங்கேயோ சென்றனர். டீ குடிப்பதற்காக இருக்கும். மனிதர்களுக்கு களைப்புத்தான். பகல் முழுவதும் இந்த பயங்கர வெயிலில் ஓட்டியிருப்பார்கள். ஜன்னல் வழியாக, அமர்ந்தப்படி பார்வையை செலுத்தினேன். ஷேர் ஆட்டோ நிரம்பிக் கொண்டிருந்தது. சுற்றிவர ஒளிர்ந்து கொண்டிருந்த, நியான் விளக்குகள் இருளை பகலாக மாற்றிக் கொண்டிருந்தன. பாதை அங்கே நான்காக பிரிந்து கொண்டிருந்தது. சந்தி. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாய், நெருக்கி அடித்தபடி சென்றன. வேலை முடிந்து வருபவர்கள், கடைகளுக்கு சென்று வருபவர்கள் என பஸ் மெது மெதுவாக நிறைய தொடங்கியது. எனக்கு முன் சீட்டில், ஓர் பெண்ணும் பிள்ளைகளும். பக்கத்து சீட்டில், களைப்புடன் அமர்ந்திருக்கும், ஒரு கூலி வேலை செய்யும் பெண். மெலிந்த தோற்றம். பற்களில் காவி ஏறி இருந்தது. சேலையை ஏனோ தானோ என்று சுற்றி இருந்தாள். உஷ்ணத்தால் அவள் முகம் வியர்த்து, பிசு பிசுத்து, பளபளத்தது. எனது முகமும் அதே போன்று இருக்கக்கூடும். சற்று நேரத்தில், ஒரு சோளப் பொறி விற்பவன், நின்றிருந்தவர்களை தள்ளியபடி தண்ணீர் போத்தலுடன், கூவியபடி வந்தான். இவளும் தன் பையை திறந்து, ஒரு சிறிய போத்தலை வாங்கிக் கொண்டாள். தாகமாயிருக்கும். காலையில் இருந்து உழைத்த பணம் இப்படி பறிபோகிறதே - நான் வருத்தப்பட்டேன். இருந்தும் அவ்வளவு உஷ்ணம். இந்த மாலையிலும் இவ்வளவு. பகல் அடித்த வெயிலில், கிளம்பிய சூடு இன்னும் தணிந்த பாடில்லை. வியர்வையும் பிசுபிசுத்து, வழிகின்றது. மழை வந்தாலும் வரும் - அவ்வளவு புழுக்கம்.




இனிமையுள்ள ஆஃப்டன் நதியே, பசுமைநிறக் குன்றுகளுக்கு இடையே அமைதியாகப் பாய்ந்து செல்,
இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
எழுத்தாளர் நடேசன் தனது முகநூற் பக்கத்தில் தனது சந்தேகமொன்றினைத் தெரிவித்துள்ளார். அது: "சில காலங்கள் இயல் விருது சிறந்த சிலருக்கு சென்றிருக்கிறது. ... ஒரு சந்தேகம் ஓவியம் எப்பொழுது இலக்கியம் வடிவத்தில் வந்தது?"
[








