பதிவுகள் முகப்பு

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது!

விவரங்கள்
- தகவல்: பேனா மனோகரன் -
நிகழ்வுகள்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தென்கிழக்காசியாவின் தமிழ்த் தொல்லியற் சான்றுகள்”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அகிம்சையால் பாரதத் தாய் அடைந்திட்டாள் சுதந்திரத்தை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்னுயிரைப் பலர்  ஈந்தார்
ஈன்ற மண்ணை மீட்பதற்கு
பல் கொடுமை அனுபவித்தார்.
பாரதத்தாய் துயர் களைய
காந்தியெனும் மகான் வந்தார்
கை பிடித்தார் அனைவரையும்
சாந்தி சாந்தி என்று
சத்தியத்தை தூக்கி நின்றார்.

கொள்ளை கொண்ட வெள்ளையர்
குமுறி  கனல் கொப்பளித்தார்.
வெள்ளமாய் குருதி மண்ணில்
பெருகுவிட வழி சமைத்தார்.
ஈரமின்றி உயிர் பறித்தார்.
இரக்கமதை மறந்து நின்றார்.
பாரத்தாய் துயர் அறியா
பாதகராய் மாறி நின்றார்.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: 'முருகபூபதியின் சினிமா -பார்த்ததும் கேட்டதும்'! 'தகவல்கள் நிறைந்த ஆவணம்'! - ஞா.டிலோசினி -

விவரங்கள்
- ஞா.டிலோசினி -
நூல் அறிமுகம்
13 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முருகபூபதி அவர்கள் இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். புலம்பெயர் சூழலில் இருந்து பல்துறை சார்ந்து எழுதி வருகின்றார். இவரது நூல்களின் வரிசையில் முப்பதாவது வரவாக சினிமா : பார்த்ததும் கேட்டதும் என்ற கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகபூபதி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதையும் பெற்றுள்ளார். அத்துடன் இம்மாதம் ( ஓகஸ்ட் 06 ஆம் திகதி ) பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலை ஜீவநதி தனது 274 ஆவது வெளியீடாக வரவாக்கியுள்ளது.

இந்நூல் சினிமாவைப் பற்றிய 16 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன், மனோரமா ஆச்சி, இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா, சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும் - தழுவலும் - திருட்டும் - எதிர் வினைகளும், பேசாப் பொருளைப் பேசத் துணிந்த திரைப்படம் President Supper Star ஆகிய தலைப்புகளில் 16 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. சினிமா தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது அனுபவங்களை இக்கட்டுரைகள் மூலம் முருகபூபதி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: பன்முகத்திறமை மிக்க கலைஞர் ரேலங்கி செல்வராஜா! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர் ஒ ரு சிறந்த ஊடகவியலாளராகவிருந்தவர். சிறந்த நடிகையாக ஒளிர்ந்தவர்; திறமை மிக்க நர்த்தகியாக மிளிர்ந்தவர். இவரதும், இவரது கணவரதும் நினைவு தினம்  ஆக்ஸ்ட் 12. இவர் நடித்த திரைப்படம் இலங்கையில் வெளியான முதலாவது சினிமாஸ்கோப் தமிழ்த்திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு' அதில் இவர் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்தார்.  நடிகர் ஏ.ரகுநாதனுடன் நடித்திருந்தார். இவரது இனிய குரல் இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக மின்ன வைத்தது.

அரசியலில் ஒருவர்மேல் ஒருவர்  சேற்றை வாரியிறைப்பார்கள். அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின்போது மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர்  படுகொலை செய்யப்பட்டார்கள். இது இலங்கைத்  தமிழர்களுக்கு மட்டும் உரியதொன்றல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயுதப்போராட்டங்களில் இவ்வகையான போக்கு நிலவியதைக் காண்கின்றோம்.  இவ்வகையான போக்கே பல நாடுகளில் ஆயுதப்போராட்டங்களின் தோல்விகளுக்கும் முக்கிய காரணங்களிலொன்றாகவிருந்தது.

இவரது கணவர் இவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார். முன்னாட் போராளிகளிலொருவரான அவர் கொல்லப்பட்டபோது மனைவியுடன் சேர்ந்து 'பயண' வர்த்தக நிறுவனமொன்றினை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட இவர்கள்து பெண் குழந்தைக்கு வயது ஒன்று. இவர்தான் 'தெய்வம் தந்த வீடு' என்னும் இலங்கைத்தமிழ்த்திரைப்படத்தில் குமுதினி என்னும்  பெயரில் நடித்திருந்த ரேலங்கி செல்வராஜா. கொக்குவிலைச் சேர்ந்தவர்.  இவரது கணவரான சின்னத்துரை செல்வராஜா ஓமந்தையைச் சேர்ந்த முன்னாட் போராளி.

மேலும் படிக்க ...

பேராசிரியர் இரா முரளியின் 'சோக்கிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப்' காணொளிகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேனாட்டில் அறிவியல் அறிஞர்கள் சாதாரண வாசகர்களுக்காக மிகவும் சிக்கலான அறிவியல் விடயங்கள் பற்றியெல்லாம் மிகவும் எளிமை8யான மொழியில், அனைவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் நூல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார்கள். உதாரணத்துக்கு ஸ்டீபன் ஹார்கிங்கின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூலைப்பற்றிக்கூறலாம்.  இது போன்றதுதான் பேராசிரியர் இரா. முரளி தனது 'சோக்ககிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப் சானல்' மூலம் பகிர்ந்து வரும் காணொளிகள்.

மேலும் படிக்க ...

எகிப்தின் கற்சாசனம்! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
பயணங்கள்
09 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - ரோசற்ரே கற்சாசனம்' (Rosetta stone) -

பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனி மரியாதையும் தவிர்க்க முடியவில்லை. முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டமீறிய பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பொது ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி பொருட்கள் ஏலத்திற்கு விடும் பொருட்களைக் கண்காட்சியாக வைத்து பின் ஏலத்திலிடுவார்கள். அப்படியான இடத்திற்கு விஜயம் செய்த அனுபவம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானதோர் அனுபவத்தை லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது நான் எதிர்கொண்டேன். உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல வகையான தொல்பொருட்கள் அழகாக அங்கு அடுக்கிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. நகைச்சுவையல்ல: உண்மை! அனுமதி முற்றிலும் இலவசமே!

அருங்காட்சியககட்டடம் மிகவும் அழகானது. விஸ்தீரமானது. உள்ளே களைத்தவர்கள் இளைப்பாறவும் உணவருந்தவும் இடமுள்ளது. மற்றைய அருங்காட்சியகங்களைப்போல் 'புகைப்படமெடுக்க தடை' போன்ற அறிவிப்புகள் இருக்கவில்லை. உலகத்தில் இதுவரை பிறந்து , வளர்ந்து அழிந்துபோன மானிட சமூகம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு சிருஷ்டிக்கப்பட்ட புது உலகமாக இது எனக்குத் தோன்றியது. உலகத்தின் வரலாற்றை அறிவதற்குச் சிறந்த இடம் வேறு எதுவுமில்லை என உள் உணர்வு சொல்லியது. ஒரு ஆலோசனை: ஒரே நாளில் இவற்றையெல்லாம் பார்க்க முயலவேண்டாம்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: "குவலயம் ஆளும் குடிசார் பொறியியல் " - தகவல்: அகணி சுரேஷ் -

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
08 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் நினைவாக..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் வெளியான  'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்'  என்னும் தொகுப்பு  நூலில் இடம் பெற்றுள்ள எனது நினைவுக் குறிப்பினை அவரது நினைவு தினத்தையொட்டிப் பகிர்ந்துகொள்கின்றேன்.  அவரது நினைவு தினம் ஆகஸ்ட் 8. மேற்படி நூலினைத்தொகுத்திருப்பவர் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரன். -


இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களில் கலாநிதி க.கைலாசபதி, சிவப்பிரகாசம், எஸ்.டி.சிவநாயகம் ஆகியோர் வரிசையில் கலாசூரி சிவகுருநாதனையும் வைப்பார் பேராசிரியர் சோ.சந்திரசேகரன்.  லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 1956இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்து , செய்தி ஆசிரியராகவும் விளங்கியவர்.   பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரிய பீடத்திலிருந்து விலகியபோது அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு வந்தவர் சிவகுருநாதன் அவர்கள். 1961இலிருந்து  1995 வரை 34 வருடங்கள் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

யாழ் இந்துக் கல்லூரி, சாகிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. பின்னர் சட்டத்துறையிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாகவும் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவுமிருந்திருக்கின்றார்.

விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். கலை, இலக்கியத்தின் மீதான இவரது ஆர்வம் இவரது மாணவப்பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது.  சாகிராக் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்ச்சங்கச் செயலாளராக விளங்கியிருந்திருக்கின்றார். பேராதனைப் பல்கலைககழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழ்ச் சங்க வெளியீடான 'இளங்கதிர்' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்திருக்கின்றார், அதே சமயம் இந்து மாணவர் மன்றத்தின் 'இந்து தர்மம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார். இவை தவிர பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தலைவராகவும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் ( இரு தடவைகள்) இருந்திருக்கின்றார்.  

மேலும் படிக்க ...

குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
07 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று: அன்னலிங்கம் (அன்னர்) வாத்தியாரின் வருகை!

அனஂனர் ,மலையகத்தில்  படித்து ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய மலையகத்திற்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்களின் எழுத்தில் ஏற்பட்ட காதலில்  வடக்கு .கிழக்கிற்கு மாற்றம் கேட்டு வெளியிலும் செல்லாமே எனத் தோன்ற விண்ணப்பித்தார் . இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தது .  இலங்கை பஞஂசக் கோட்டுள் வீழ்ந்து கொண்டிருதது .மீள்வதற்கு சில​ நடவடிக்கைகளில் ஈடுபட்டது . மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தது . அராலி கிராமம் தொடர்ச்சியாக தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பச் சொல்லி பல‌ தடவைகள் கோரி வர  இங்கே பொட்டலமாக கட்டி அனுப்பி விட்டார்கள் . கொழும்பைப் போல கிராமங்களில் அறைகள் வாடகைக்கு இல்லை . வீடுகளில் சாப்பாட்டு ஒழுங்கு எல்லாம் பண்ண முடியாது  . யாழ்ப்பாணம் பழைய நகரம் . அவருடைய மனைவியின் தம்பி சேகர் ஏற்கனவே அங்கேயிருந்து  யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கணக்கியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான் . நகரத்து சிறுகடைகளுக்கு வரித் தேவைகளுக்கான .... கணக்குகளை எழுதியும் , டியூசனஂ கொடுதஂதும் சமாளிக்கிறானஂ.  இவருக்கு பஸ் செலவு தான் . வாழ்க்கை ஒரு போராட்டமே! " என்ற காண்டேகரின் வரி அவருக்கு நிறைய​ பிடிக்கும் . யாழ்ப்பாணம் வந்து விட்டார் . இனஂனமும் நிறைய​ ,   நிறைய​ பிடிக்க... வேண்டும்.

மேலும் படிக்க ...

நோர்வே பயணத்தொடர் (6) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
06 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள் -

பத்மநாதன் மாணவர்களுக்குத் தனிப்பட்ட ரியூசன் கொடுக்கும் அந்த அறையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. மகாஜனாக் கல்லூரியில் படிக்கும்போது அறிந்திருந்த டொக்டர் லிமல், கவிஞர் இளவாலை விஜேந்திரன் ஆகியோருடன், 9c Osloஒ  குறும்திரைப்பட இயக்குநர் மற்றும் அந்தப் படங்களில் நடித்திருந்த சிலரையும்,  முகநூல்  மூலம் அறிந்த சஞ்சயன் செல்வமாணிக்கத்தையும் அங்கு சந்தித்துப் பேசமுடிந்தது.  அவர்கள் எவருடனும் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதபோதிலும் பத்மநாதனுக்காக அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

‘நடு’ கோமகன் மூலம் என்னைப் பற்றி அறிந்திருந்ததாகச் சஞ்சயன் குறிப்பிட்டார், சஞ்சயனின்  முகநூற் பதிவுகள் சுவாரஸ்யமானவையாக இருப்பதால் நானே அவரை என் முகநூல்  நண்பராகச் சேர்த்திருந்தேன். விஜித்தா என்பவரின் புற்றுநோய்க்கூடான வாழ்வு தொடர்பான அனுபவங்களை அவரது எழுத்துக்கூடாகச் சொல்லும் ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ என்ற நூலையும், தன் அம்மாவின் மறதி நோய் பற்றிக் கூறும் ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலையும் அவர் தந்திருந்தார். விஜித்தாவின் முன்னுரை மனதைக் கலங்கவைப்பதாக இருந்தது. அவவின் அனுபவங்களை இலகுவான தமிழில் சஞ்சயன் அழகாக எழுதியுள்ளார். முன்னுரிமை எதற்குக் கொடுப்பது என்ற புரிதல் இல்லாத, நோய் பற்றிய அடிப்படை விளக்கமற்றவர்களுக்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது என்பதை என் வாசிப்பு எனக்குப் புரியவைத்தது. (விஜித்தா ரதியின் உறவினராம் என அறிந்தபோது உலகம் சிறியதுதான் எனத் தோன்றியது). மறதிநோய் தொடர்பான யதார்த்தங்களை அம்மாவுடனான பாசத்துடன் கலந்து, ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலைச் சஞ்சயன் படைத்திருக்கிறார். இவை அவரின் முகநூலிலும் ஏற்கனவே பதியப்பட்டிருந்தன.

மேலும் படிக்க ...

மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை (பகுதி இரண்டு) ! - ஜோதிகுமார் -

விவரங்கள்
Administrator
ஜோதிகுமார்
04 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி 2

ஹைலன்ஸ் கல்லூரி தனது 131வது வருடாந்தத்தை, கடந்த மாத இறுதியில் கொண்டாடிய போது, அதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கலாநிதி சரவணகுமார், ‘ஹைலன்ஸ் மலையகத்தின் ஒரு முதுசம்’ என்ற அடைமொழியை அதற்கு சூட்டி ப10ரித்து நின்றார்.

உண்மையாக இருக்கலாம். கடந்த சில வருடங்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், பீடங்களுக்கும் அனுப்பி வைத்த பெருமையை அது போற்றி வருகின்றது. இருந்தும், சென்ற கட்டுரை தொடரில் மிக தெளிவுற சுட்டிக்காட்டப்பட்டதை போன்று, 29 குற்றச்சாட்டுக்களை தன்னகத்தே சுமந்த, மலையக பணிப்பாளர் ஒருவராலேயே, அக்கல்லூரி இன்று அடியோடு சிதைக்கப்பட்டதாய் உள்ளது. (தற்சமயம், கணபதி கனகராஜ் அவர்கள் எடுத்த பெரு முயற்சியின் பலனாய், மேல்நீதிமன்றம் இப்போது தந்துள்ள இடைக்கால உத்தரவின் மூலம், அன்னாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் பிறிதொரு விடயமாகும் - Writ/7/2023)

இருந்தும், கடந்த மாதத்தில் மாத்திரம் 500-600 ஆசிரியர்களை ஒரே தருணத்தில், இடமாற்றம் செய்து முடித்து, இன்னும் நான்கே நான்கு மாதங்களில் தமது இறுதி பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவ மணிகளை, விழிப்பிதுங்க பரிதவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ள பெருமை இவ் அதிகாரியையே சாரும் - (இன்னும் இப்பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கின்றது. ஹைலன்ஸ் அதிபர் நிலைமையை சீர்ப்படுத்த தன்னால் இயன்றதை முயன்று பார்த்தாலும் கூட).

மேலும் படிக்க ...

செல்வச்சந்நிதியும் சித்தர்களும் - ஒர் ஆரம்ப உசாவல் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
04 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  சமாதிகள் அமைந்திருக்கும் சூழல் -

அறிமுகம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தொன்மையும் அருட்பெருமையும் வாய்ந்தது. இவ் ஆலய வரலாற்றுடன் சித்தர்களும் இணைத்துப் பேசப்படுகின்றனர். செல்வச்சந்நிதிக்கு அருகில் தெற்குப் புறமாக கரும்பாவளியில் அமைந்துள்ள சித்தர்களின் சமாதிகள் இவற்றை உறுதி செய்கின்றன. செல்வச்சந்நிதி ஆலயத்தின் தொன்மை, அதன் வழிபாட்டு முறை, அங்கு வாழ்ந்த சித்தர்கள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் அருகே ஓடிய ஆறு ‘வல்லியாறு’ என அழைக்கப்பட்டது. இது சோழர் வரலாற்றுக்குப் பின்னரே ‘தொண்டைமானாறு’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. ‘படைக்கோயில்’ ஆகிய கதிர்காமத்துடன் தொடர்புபடுத்தி சந்நிதியும் நோக்கப்படுவதன் ஊடாக வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் முருக வழிபாடு இங்கு நிலவி வந்துள்ளமையை இப்பிரதேசத்தின் இயற்கைச் சூழமைவும் வெளிப்படுத்துகின்றது.

ஈழத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆகமமரபு சார்ந்தும் ஆகமமரபு சாராமலும் இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் நிலவி வந்துள்ளன. கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டூர் கந்தசாமி ஆகியவை ஆகம மரபு சாராத பூசை முறைகளைக் கொண்டமைந்தவை. செல்வச்சந்நிதியில் அந்தணர் மரபல்லாதவர்கள் பூசை செய்கின்றனர். கதிர்காமத்தில் சிங்கள வேடுவர் பரம்பரையினர் பூசை செய்கின்றனர். இவர்கள் ‘கப்புறாளைமார்’ என அழைக்கப்படுவர். “மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இன்னுமொரு முருகன் ஆலயம் சித்தாண்டிக் கந்தசுவாமி கோயிலாகும். இதுவும் ஒரு திருப்படைக் கோயிலாகும். இக்கோயிலை ஆரம்பத்தில் வேடுவரும், பின்னர் சித்தர் எனப்படும் ஆண்டியும் வழிபாடு செய்து வந்தமையினால் சித்தாண்டி எனப் பெயர் பெற்றதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது.” (1) இவ்வகையில் இம்மூன்று முருகன் கோயில்களிலும் ஆகமம் சாராத வழிபாட்டு மரபு நிலவி வருவதோடு அவை அந்தணர் அல்லாதவர்களால் பூசை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடற்பாலது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் கிரகணம் குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
03 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை    

வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

கிரகணம்

கிரகணம் என்பது வானியல் பொருள் ஒன்று, வேறொரு பொருளின் நிழலிலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்வதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும்போது சந்திர கிரகணத்தையோ விவரிக்கிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் மறைந்தார்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
03 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார்.

நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது உள்ளகக் கணக்காய்வுக்காக நான் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் இவர்களைச் சந்தித்திருக்கின்றேன். பல ஜோடிகளுக்கு மத்தியில் இவர்கள் மட்டும் விசேடமாக என் கண்ணில் பட்டதற்குக் காரணம், அப்போது காதலர்களாக இருந்த இருவரும் தமிழர்களாக இருந்ததே. அங்கு சந்தித்ததில் அவர்களுடன் நட்பாகப் பழகமுடிந்தது. விமலின் மனைவி யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் எனது மனைவியின் வீட்டின் அயலவர் என்பதால் எங்கள் நட்பு மேலும் தொடர்ந்தது.

மேலும் படிக்க ...

'திருக்கைலாய ஞான உலா'வில் செய்திப் பரிமாற்றப் புலப்பாடு - முனைவர். கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி -

விவரங்கள்
- முனைவர். கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி -
ஆய்வு
02 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சொற்கள் அற்ற தொடர் அமைப்பே தகவல்தொடர்பியல் கூறாக அமைகின்றது. இதில் தன்னுடைய கருத்துக்கள், எண்ணங்கள், மனநிலை, அறிவு, நடத்தை போன்றவற்றை மற்றவரிடம் தெரிவிக்க இச்செய்தி பரிமாற்ற புலப்பாட்டு முறைமைகளைக் கையாளுகின்றோம். மேலும் உடலலைசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரலொலி போன்றவற்றின் மூலம் நேரடியாகவோ, தனியாகவோ (அல்லது) கூட்டமாகவோ செய்திகள் பரிமாற்றப்படுகின்றன. இது குறியீட்டு அடிப்படையில் படமாகவோ, சொற்களாகவோ, உடலசைவாகவோ இடம்பெறும். அடுத்தவரின் மனதைப் பாதிக்கச் செய்யும் செயல்முறைகள் இங்கு மிகுதிபட அமைகின்றன. ஆதியில்மனிதன் சீழ்க்கை ஒலி எழுப்புதல், கூவியழைத்தல், புகை எழுப்புதல், பறையடித்தல், மணியடித்தல், தீயம்புகளை வானில் எறிதல் போன்றவற்றின் வாயிலாகத் தனது கருத்தை எடுத்தியம்பினான். காலமாற்றத்தால் தகவல் தொடர்பியல் வழி இணையத்தின் வழி செய்திகள் விரைவில் பரிமாற்றப்பட்டு வருகின்றது. ‘திருக்கைலாய ஞான உலாவில்’ இடம்பெறும் தலைவியின் மனநிலை செய்திப் பரிமாற்ற அடிப்படையில் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

கொடி –கருத்துப் புலப்பாடு:

ஆரம்பக் காலத்தில் ஓவியங்கள், சைகைகள் மூலம் செய்தி ஒலிபரப்பப் பட்டன. நாளடைவில் கொடிகள், படங்கள் முதலியன கொண்டு செய்திகள் பரிமாற்றம் செய்தனர். மன்னன் தனது வெற்றிச் சின்னமாகக் கொடிகளைக் கோட்டையில் ஏற்றினான். பலவண்ண நிறங்களில் கொடிகள் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. காமக்கடவுகாளகிய மன்மதன் ஐந்து விதமான அம்புகளும், மலர்களும் மற்றும் கொடிப்படைகளும் கொண்டு இருப்பது வழக்கமாகும். அதாவது தனது முதுகில் இடப்புறத்தில் அம்புகளை ஏந்தி இடது கையில் கரும்புவில்லைப் பற்றி, சங்கு போன்ற முன்கைகளால் மலர்க்கணைகளை வீசிவரும் காட்சி திருக்கைலாய ஞான உலாவில் பதிவாகி உள்ளது. இதனை,

மேலும் படிக்க ...

ஒரு மொழிமாற்ற நூலும் மெருகேறிய மரபுகளினுடனான அந்நூல் வெளியீடும்! - அவதானி -

விவரங்கள்
- அவதானி -
நிகழ்வுகள்
02 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல்: “எனினும் நான் எழுகிறேன்” | ஆசிரியர்: திரு க.நவம்

மொழிமாற்றங்கள்  ஒன்றும் புதிதல்ல, நூல் வெளியீடுகளும் ஒன்றும் புதிதல்ல.  ஆனால் எவற்றை மொழிபெயர்க்கிறோம், அவற்றை எங்ஙனமாய் மொழி மாற்றங்கொள்ளும் மொழிக்குள் உள்வாங்குகிறோம்,  அவற்றை யார் மூலமாக யாரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்பவற்றை இந்நூலும் இந்நூல்சார்ந்த வெளியீடும் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் வாயிலாக,வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் இவ்வரைபின் முக்கிய நோக்கம்.

இந்நூலுக்கு முகவுரை எழுதியவன் என்ற வகையில் , நூலைப்பற்றியும், இந்நூல் வெளியீடு பற்றியும் என் மனதில் தோன்றியதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இக்குறிப்பின் இன்னொரு காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க ...

கனடா - சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
01 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது.

கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக இப்படியான நிகழ்வுகளுக்கு இளந்தலைமுறையினர் வருவதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இங்கே பல இளந்தலைமுறையினரைக் காணக்கூடியதாக இருந்தது. காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி ஆகியன பரிமாறப்பட்டன. ஓவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவது ஒரு உணவை வீட்டிலே தயாரித்துக் கொண்டு வந்திருந்தனர். உறவுகளையும், நண்பர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்ற வகையில் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசுகளும் கொடுக்கப்பட்டன.  

மேலும் படிக்க ...

ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
01 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சனிக்கிழமை 22-7-2023  அன்று கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும் படிக்க ...

கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சி - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து  நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட  தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில்  பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில்,  கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர்,    முன்னாள்  அதிபர்  திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க ...

ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
31 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்லின் வாசல்' படித்தேன்.  நிச்சயமாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக ஆஸ்திரேலியத்  தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகளில் ஒன்றாக இதனைக் கூறலாம்.  இந்த நாவலின் களங்கள் , நான் இதுவரை வாசித்த புகலிட நாவல்களில் வாசிக்காத களங்கள்.  எழுபதுகளின் இறுதியில்  , ஜே.ஆர்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அறிவித்து, பிரிகேடியர் வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக அனுப்பி, அவ்வருடத்தின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும்படி கட்டளையிட்டதிலிருந்து இலங்கைத்தமிழர்கள் மேல் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்பம், செல்வம் கொல்லப்பட்டதுடன் ஆரம்பமாகிய படுகொலைகள் தொடர் ஆரம்பித்தன.

அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் மேற்கு ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கத்தொடங்கினார்கள். பூங்காக்கள் சிலவற்றில் பியர் போத்தலுடன் காணப்பட்ட தமிழ் அகதிகளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் சில பிரசுரித்தன.நினைவுக்கு வருகின்றது. அக்காலகட்டத்தில் ருஷ்யாவின் 'ஏரோஃபுளெட்'டில் அகதிகள் கிழக்கு ஜேர்மனியூடாக மேற்கு ஜேர்மனிக்குச் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். இந்நாவல் கிழக்கு ஜேர்மனியூடு ஏன் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தார்கள் என்பதை விபரமாக விபரிக்கின்றது.  அக்காலத்தில் உலகில் நிலவிய குளிர்யுத்தச் (Cold War)சூழல் காரணமாகக்  கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்த  பேர்லின் நகர் இரண்டாகக் கிழக்கு பேர்லின், மேற்கு பேர்லின் என்று  பிளவுண்டிருந்த சூழல் எவ்விதம் இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் கூறுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மேற்கு நாடுகளுக்கும் , சோவியத் குடியரசுக்குமிடையில் உருவான 'பொட்ஸ்டம்'  (Potsdam) ஒப்பந்தம் எவ்விதம் இவ்விதச் சுழலை உருவாக்கியது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கின்றது.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (3) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
30 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தர்மசாலாவிலிருந்து எங்களது பயணம் அமிர்தசரஸ் நோக்கி திரும்பியது. பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தபோது, மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியதுடன் சுற்றியிருந்த வாவியில் அந்தக்காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது. அங்கு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா அல்லது பாதிரி எனத் தரகர்கள் எவருமில்லை என்பது முக்கிய விடயமாகும்.அத்துடன் அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள். என்னோடு வந்த சுவிஸ் மற்றும் ஆங்கிலய பெண்கள் இருவரும் இரு மணி நேரமாகச் சப்பாத்தி செய்ய உதவினார்கள். அதன்பின் அங்குள்ள உணவையே நாம் உண்டோம். சப்பாத்தி, பருப்பு, மற்றும் சர்க்கரை சோறு என மிகவும் எளிமையான உணவுதான். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து உணவூட்டிக்கொண்டே இருந்தார்கள்.

நடந்து செல்லும்போது, எனக்கு முன்பு தரையில் ஒரு இலை வந்து விழுந்தது. உடனே ஒரு சீக்கியப் பெண் அதை குனிந்து எடுத்தார். அப்படி ஒரு சுத்தம்! இந்தியாவில் சுத்தத்தை ஆராதிப்பவர்களாகச் சீக்கியர்கள் எனக்கு தோன்றினார்கள்.

மேலும் படிக்க ...

நோர்வே பயணத்தொடர் (5) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
30 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                - சக்கரம் போலிருக்கும் Wheel of Life

Gustav Vigeland என்ற சிற்பியின் கற்பனையிலும் கைவண்ணத்திலும் உருவான இருநூறுக்கும் அதிகமான சிற்பங்களினால் Vigeland Park நிறைந்து போயிருக்கிறது. Bronze, granite, cast iron என வெவ்வேறு வகையான உலோகங்களில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த அழகான சிற்பங்களை நிறுவுவதற்கு இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் எடுத்திருக்கின்றன. அப்படியாக இதனைக் கட்டியமைப்பதற்கு மிகுந்தளவில் காலமும், பணமும், மனித வலுவும், சிருஷ்டிப்புத் திறனும் தேவைப்பட்டிருந்திருந்தும்கூட, பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு Vigeland Park இலவச விருந்து படைப்பது அதிசயம்தான்.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சிற்பங்கள் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான குடும்பமயமான தருணங்களையும் ஆண்கள், பெண்கள் இடையிலான உறவுகளையும் சித்தரிக்கின்றன. பிள்ளைகளைத் தோளில் காவுதல், கையில் பிடித்துக் கூட்டிச்செல்லல், அவர்களை ஆற்றுபடுத்தல் போன்ற நாளாந்தக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்களுடன், பிள்ளையை முதுகில் சுமந்தவண்ணம் தவழுதல் போன்ற சில விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் இங்குள்ளன. அத்துடன் காலவரையற்றவையாக இந்தச் சிற்பங்கள் இருக்கவேண்டுமென்பதால் சிற்பங்கள் யாவும் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமானவையாக இருக்கின்றன. இங்கிருக்கும் சில தமிழர்கள் இதனை தூஷணப் பார்க் என அழைப்பார்களாம்.

மேலும் படிக்க ...

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'The Socio Economic and Cultural Background of Batticaloa District'('மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும் கலாச்சாரப் பின்னணி') கட்டுரை!

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
அரசியல்
30 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் , சிறுகதையாசிரியர், சமூக, அரசியல் ஆய்வாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர் வ.ஐ.ச.ஜெயபாலன். அவர் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஆங்கிலக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். லங்கா கார்டியன், எகனமிம் ரிவியூ  சஞ்சிகைகளில் அவரது சமூக, அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எகனமிக் ரிவியூ (Economic Review) சஞ்சிகையின் ஏப்ரில் 1991 இதழில் இவ்வகையான ஆங்கிலக் கட்டுரையொன்று  'The Socio Economic and Cultural Background of Batticaloa District'('மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும் கலாச்சாரப் பின்னணி')  என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  இதழில் அபிவிருத்தி என்னும் பிரிவில்  'யாழ் பல்கலைக்கழக மாணவர் சபையின் முன்னாள் தலைவரான வ.ஐ.ச.ஜெயபாலன் இளந் தலைமுறையின் முன்னணித் தமிழ்க் கவிஞரும், சிறந்த தமிழ் அறிவு ஜீவியுமாவார்' என்னும் குறிப்புடன் வெளியானது. அதனைத் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) என்னும் இணையத்தளம் மீள்பிரசுரம் செய்துள்ளது.

மேலும் படிக்க ...

ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
29 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு எழுத்தாளனின் படைப்பை நினைவில் வைத்திருப்பார்களோ, அதே போல அந்தப் படைப்புக்கு உயிரூட்டிய ஓவியனையும் கட்டாயம் நினைவில் வைத்திருப்பார்கள்.

பிரபல இதழ்களுக்கு ஓவியம் வரைந்த மாருதியின் முதலாவது ஓவியம் குமுதம் இதழில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாணவப் பருவத்தில் தமிழக நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டதால், அதில் வரும் கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. நானே ஒரு கதை எழுதி அதற்கு ஓவியர் மாருதி, ஓவியர் ஜெயராஜ் போன்றவர்கள் படம் வரைந்தால் எப்படி இருக்கும் என்று சில சமயங்களில் கற்பனை செய்து கனவுகூடக் கண்டிருக்கின்றேன். ஆனால் எதிர்பாராமல் அந்தக் கனவு ஒருநாள் நினைவாகிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்!
  2. அஞ்சலி: தூரிகைகளின் வேந்தர் ஓவியர் மாருதி - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  3. ஜோர்ஜ் அழகையா: புதிய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேடவேண்டும் என்றவர் இன்;றில்லை (22.11.1955 – 24.7.2023) .நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  4. ஆசி கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' வரலாற்று நூல் வெளியீடு! - ஆசி கந்தராஜா -
  5. ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ): ஓர் ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது! - சக்தி சக்திதாசன், லண்டன் -
  6. இனவாதத்தேசியமும், இனவாதமற்ற தேசியமும்! - வ.ந.கி -
  7. மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே! - ம.ஆச்சின் -
  8. பாம்புப்பிடாரனும், படம் விரித்தெடுத்தாடிய பாம்பும்! (கறுப்பு ஜூலை நினைவாக..) - வ.ந.கிரிதரன் -
  9. பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (2) - நோயல் நடேசன் -
  10. மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை! - ஜோதிகுமார் -
  11. (பயனுள்ள மீள்பிரசுரம் ) மாமன்னன் - ஒரு பார்வை - விடுதலை இராசேந்திரன் -
  12. உயர்வு மனப்பான்மையும் , தாழ்வு மனப்பான்மையும் - வேந்தனார் இளஞ்சேய் -
  13. இலக்கியவெளி நடத்தும் ஆழியாள் கவிதைகள் உரையாடல்!
  14. நினைவு கூர்வோம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
பக்கம் 43 / 104
  • முதல்
  • முந்தைய
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • அடுத்த
  • கடைசி