பதிவுகள் முகப்பு

அஞ்சலி - தேவா: மண்ணையும் ,மக்களையும் தலையிலும், மனத்திலும் சுமந்த நாடோடி! - தில்லை -

விவரங்கள்
- தில்லை -
இலக்கியம்
27 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேவா! சற்றும் எதிர்பாராத மரணம் உன்னுடையது. நிகழ்ந்திருக்க கூடாத மரணம் என்று நினைவுகளின் சுவர்களில் தலையடித்து கதறுகிறது மனம். எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் தாய் மண்ணை அளவுக்கதிகமாகவே நேசித்தாய். அந்த மண்ணிலேயே நான் கலக்கப்பட வேண்டும் என விடப்பிடியாக நின்றாய். உனது இலட்சியமாகவே அது இருந்தது. இலட்சியத்தை நீ அடைந்தாய். உனது மக்களையும், உனது மண்ணையும் தலையிலும், மனத்திலும் சுமந்தபடி அலைந்த நாடோடி நீ. எந்தச் சொகுசுகளையும் உனக்காக விரும்பியவனில்லை. அப்படி வாழும் மக்களை ஆதரித்தவனுமில்லை.

மேலும் படிக்க ...

சிறுகதை: பெரணா - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
26 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.

அன்று, மூக்கைத் துவாலையால் கட்டிக்கொண்டு, ஜன்னல்வழியே உள்ளிறங்கி கதவின் தாழ்பாள் அகற்றப்பட்டதும் எழுந்த புளித்த பிணவாடை அங்கிருந்த எவரையும் முகம் சுளிக்கவைக்காமல் விடவில்லை. உள்ளே மொட்டை அக்காவிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த மரணித்த நெடியே அறைகூவியது. யாரும் உள்ளே நுழையும் முன்னமே ஆங்காங்கே தொடக்கிய ஒப்பாரிக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த நெடியின் சுளிப்பு.

பல நாட்களாய் மூடியிருந்த அவ்வீட்டிலிருந்து எழுந்த நாற்றம் முப்புறமெரித்த நெற்றிக்கண்ணாய் எவரையும் அணுகவிடாது தாண்டவமாடியது. உள்ளே என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் ஆர்வத்தையும், மொட்டை அக்காவின்மீதான அக்கறையையும் தகர்த்துக்கொண்டிருந்த அந்த நெடியைத்தாண்டி, மூக்கை மூடாமல், முகத்தில் சிறு சுளிப்புமின்றி, பதற்றத்துடன் முதலில் நுழைந்த குப்பியின் முகம்தான் இன்று காற்றுப்புகாத நெகிழியால் மூடப்பட்டிருந்தது.

அந்தப் பழைய இரட்டையறை வீட்டின் எட்டாத உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டையாலான மின்விளக்கின் பொத்தானை அழுத்துவதற்கு முன்பாகவே குப்பி மொட்டையை எட்டியிருந்தாள். அவளின் உடலை சூழ்ந்திருந்த ஈக்கள் கலைந்து ரீங்காரமிட, ஒன்றிரண்டு ஈக்கள் ஆழமாக இறங்கி மொய்த்திருந்த, புழுத்துப்போன அவளின் கண்களை தன் வலக்கரத்தால் மூடினாள். அடுப்படியில் அகன்று படுத்துக்கிடந்த அவளின் விலகிய ஆடையை சரிசெய்தாள். அவளைத் தாண்டிச்சென்று பின்கட்டு ஜன்னலைத் திறந்தாள். சடலத்தை தாண்டுவது மரபல்ல என்று அவளுக்கு நன்கு தெரியும். இருந்தும் நிலைப்பிற்கு மரபை மீறுவது தவறல்லவே. மொட்டையைவிட வயதில் மூத்திருந்தும் அவளைத் தாண்டியதற்காக அவளது காலில் விழுந்து வணங்கினாள். மரபு மீறல்கள் எல்லாமே மனம் ஒப்பினால் பிரயாசித்தத்திற்கு உட்பட்டதுதானே.

மேலும் படிக்க ...

கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள் கெளரவிப்பு! - படமும் தகவலும்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- படமும் தகவலும்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
26 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் தேவா மறைவு! - பதிவுகள்.காம் -

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
இலக்கியம்
25 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் தேவா சுவிஸ்ஸில் வசித்து வந்தவர். இலங்கையில் போர் முடிவுக்கு  வந்த பின்னர் இலங்கைக்குச் சென்றவர். தமிழ் இலக்கியத்துக்கு இவரது மொழி பெயர்ப்புகள் வளம் சேர்த்தன.  ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’ (உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்தில் எழுதிய நாவலின் தமிழ்  மொழிபெயர்ப்பு; வடலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது)   போன்றவை இவர் மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள். எழுத்தாளர் தேவா மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மறைவு பற்றி எழுத்தாளர் மன்னார் அமுதன் தனது முகநூற் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்:

"மன்னார் மாவட்டத்தின் மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட 'அனோனிமா' தேவா காலமானார். அம்பரய, என் பெயர் விக்டோரியா, அனொனிமா, குழந்தைப் போராளி முதலிய சிறந்த மொழி பெயர்ப்புகளைத் தந்த படைப்பாளி.  நாளை , மார்ச் 26 2023,  மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிவரை பூதவுடலை அவரின் தலைமன்னார் வீட்டில் பார்வையிடமுடியும். 3.00 மணிக்கு நல்லடக்கம் இடம்பெறும்."

எழுத்தாளர் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

மேலும் படிக்க ...

பண்ணையில் ஒரு மிருகம்! நோயல்.நடேசனின் நாவல் குறித்த பார்வை - - யசோதா.பத்மநாதன் -

விவரங்கள்
- யசோதா.பத்மநாதன் -
நூல் அறிமுகம்
25 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

84 - 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல்.

இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது.

காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம், முன்னுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 130 பக்கங்களில் 10 அத்தியாயங்களாக விரிகிறது கதை.

கதையை நான் சொல்வது தகாது. அது என் நோக்கமும் அல்ல. அது வாசகர்களின் முன்மொழிவுகள் இல்லாத பார்வைக்கும் ரசனைக்கும் அனுபவிப்புக்கும் உரியது. இருந்த போதும், கண்ணுக்குப் புலனாகாமல் உலவி வரும் ‘சமூகமிருகம்’ ஒன்று பற்றியது இந்த ’பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற இந் நாவல் என்று சொல்வது ஓர் அத்துமீறாத எல்லை. ஆனால் நான் இந்தக் கதைப்போக்குப் பற்றியும் அதனை அவர் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்றும் பேசுதல் தகும்.

மேலும் படிக்க ...

தங்கத் தாத்தா வழியில்... - பேராசிரியர்:ஸ்ரீ. பிரசாந்தன், தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம். -

விவரங்கள்
- பேராசிரியர்:ஸ்ரீ. பிரசாந்தன், தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம். -
கவிதை
25 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாதுயர்ப்படு முஸ்லிம்
மனம் போல ஒன்று,
மண்ணிழந்து தவிக்குதமிழ் மகன்போல ஒன்று,
சாதுமார் அரசியலைச் சார்வதனைக் கண்டு
சகியாது புலம்புபவன்
மனம் போல ஒன்று,
சூதுநிறை தொல்லியல்சார்
திணைக்களத்தின்
சூழ்ச்சிகளால் துயர்கொள்ளும்
மனம் போல ஒன்று,
ஆதனமாய் இராவணன்தான்
அன்றமைத்துக்கொண்ட
அருங்கன்னியாயிலுண் டெழுவெந்நீர்ச் சுனைகள்...

மேலும் படிக்க ...

வாய்ப்பாடு - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
25 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே.

இல்லை என்பீர்கள். நீங்கள்தான் என்றும் வகுப்பில் முதலாவதாக வந்தவராயிற்றே!

அது சரி, கேட்பவர் எல்லாம் 'நான் வகுப்பில் முதலாவது', 'நான் இரண்டாவது' என்கிறீர்களே தவிர 'நான் இருபத்திமூன்று,' என்று சொல்லதில்லையே. கடைசி வாங்கு மாணாக்கர்களுக்கு என்னதான் நடந்திருக்கும் என நான் எண்ணுவதுண்டு. எங்குதான் சென்று தொலைந்தனரோ? ஒரு வேளை வேற்று கிரகத்து மனிதர்கள் வந்து இவர்களை மூளைச் சலவை செய்ய தொலைதூர கிரகங்களுக்கு கடத்திச் சென்றுவிட்டனரோ?

அதனால் என்ன, இதை வாசிக்க நீங்கள் இருக்கிறீர்களே, அது போதும்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ?" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாங்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலாவுடன் வளர்ந்தவர்கள். அவர்களுக்குப் பின்னர்தான் எவரும். மார்ச் 24. அமரர் டி.எம்.செளந்தரராஜனின் நூறாவது பிறந்த தினம். எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரல் அவருடையது. அவரது நினைவாக ஒரு பாடல். 'ஆயிரத்தில் ஒருவ'னில் 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' பாடல். https://www.youtube.com/watch?v=T590PRV5hig

மேலும் படிக்க ...

நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்' பற்றி முகநூலில்... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில்  வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'  (2019) நூலில் இடம் பெற்றுள்ள எனது கவிதை 'நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'.  இக்கவிதை எது பற்றிப் பேசுகிறது, இக்கவிதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதைக் கூறினால் அது உங்களது சுதந்திரமான புரிதலுக்குத் தடையாக இருக்குமென்பதால் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கின்றேன்.  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்  கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன்.   தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் இறுதியிலுள்ளன.

கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!  - வ.ந.கிரிதரன் -

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவொளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.
எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று பின்
உனைப் புரிதல்தான்.

மேலும் படிக்க ...

யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பு - நூல்நயம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் –

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் –
ரஞ்ஜனி சுப்ரமணியம்
23 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.
யுத்தமும் இடம்பெயர்வுகளும் பேரழிவுகளும் உயிரிழப்புகளும் யாரும் விரும்பிப் பெற்றவை அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைந்தவையும் அல்ல. சர்வதேச அரசியல் சதிகளினாலும் மனச்சாட்சியற்ற உள்நாட்டு அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டே வடிவமைக்கப் பட்டவை. ஆனாலும் அப்பாவிப் பொதுமக்களுக்கு இவை எதிர்பாராதவை. விரும்பத் தகாதவை. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு, 'நெல்லியடி பரணி அச்சகத்தின்' வெளியீடாகும். தமிழ்ப் பாரம்பரியத்தின் உணர்வு பூர்வமான குறியீடாகவும் முக்கியமான சிறுகதையின் தலைப்புமான 'தாலி' அட்டைப் படத்தினை அலங்கரிக்கிறது.

இனப்பிரச்சனை சார்ந்த வன்முறைகளில், மிகக் குறைந்த அனுபவங்களையே கொண்டிருக்கும் பலரால், இவ்வாறான பயங்கரங்கள் உணரப்படுவதற்கு இலக்கியத்தின் மூலம் பங்களிப்பை நல்கும் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் பணி பெறுமதி மிக்கது.  யுத்த வன்முறைகள் இயல்பு வாழ்வினை பலிவாங்கிய கடந்த காலங்களில், மக்களின் வாழ்வியல் எவ்வாறு அதனை உள்வாங்கியது என்பதே இத்தொகுப்பின் முக்கிய பேசுபொருள். எளிமையான யதார்த்த நடை எழுத்தாளரின் அனுபவச் சிறப்பினை உணர வைக்கின்றது.  எனினும் ஆழ்ந்த கலாசார பாரம்பரிய சிந்தனைகளுக்கும், பெண்ணியம் சார்ந்த மனோதத்துவங்களுக்கும் இடம் கொடுக்கும் இரு முக்கிய கதைகளான 'தாலி`, 'மலை முகடுகள் சரிக்கப்படுகின்றன', ஒப்பீட்டுக்கு உரியவை. இக்கதைகள் பல கேள்விகளை மனதில் எழுப்பவும் தவறவில்லை.

மேலும் படிக்க ...

தமிழ்ச்சங்கம் தென்னாசிய நுண்கலை கற்கை மையம் அண்ணாமலை கனடா கருத்தரங்குத் தொடர் 2.

விவரங்கள்
- தகவல் - பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
23 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவுக்குப் படத்தை அழுத்திப் பார்க்கவும். -

மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
23 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - 'வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தக் காதல் மானுடரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது.   காதலை, குறிப்பாக ஒருதலைக் காதலை மையமாகக்கொண்டு எழுபதுகளில் வெளியான 'ஒரு தலை ராகம்'   அக்காலக் கல்லூரி மாணவர்களையெல்லாம்  உலுக்கி எடுத்த படம்.  இப்படம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. படைத்தை முடித்ததும் தயாரிப்பாளர்  E.M..இப்ராஹிம் அவர்களால் படத்தை விற்க முடியவில்லை.  விநியோகத்தர்கள் எவரும் வாங்க முன் வரவில்லை.  புதுமுகங்கள் நடிக்க, புதுமுகங்கள் எடுத்த படமென்பதால் தயங்கினார்கள் போலும். இப்ராஹிமே படத்தை விநியோகித்தார். ஆரம்பத்தில் படத்துக்கு வரவேற்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் விரைவிலேயே படத்துக்கான ஆதரவு அதிகரித்து பெரு வசூல் பெற்று வெற்றியடைந்தது. 360 நாட்களைக் கடந்து பல இடங்களில் ஓடியதாக அறியப்படுகின்றது.

மேலும் படிக்க ...

எழுநா | இதழ் 8 மார்ச் 2023

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
21 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
20 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று  எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப்  பெற்றுக் கொண்டு பேசும்போது  தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா 19/3/23 மதியம் 4 மணிமுதல் இரவு 7 மணி வரை மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை,  திருப்பூர் நடைபெற்றது

16 பேருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது விருது பெற்றோர் :

ஐ.கிருத்திகா,அகிலா கிருஷ்ணமூர்த்தி, செ.இராஜேஸ்வரி, ஜெயந்தி கார்த்திக்,கோ.லீலா,, ப.கற்பகவள்ளி, ஜெய்சக்தி,  சி ஆர் .மஞ்சுளா, ஆர். ராஜம்மாள்,அவ்வை நிர்மலா,, விஜி வெங்கட், பூமதி என். கருணாநிதி, சூலூர் ஆனந்தி,, சர்மிளா, தியானி, இறைவி

மேலும் படிக்க ...

மலையாள இளம் கவி அனிஷா அவருடன் ஒரு பேட்டி! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
20 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த  ஒரு உரையாடல் :

இன்றைய மலையாள கவிதை உலகு எப்படி இருக்கிறது?

இன்றைய மலையாள கவிதை உலகில் போலிகளும் ஜிமிக்கிகளும் அதிகமாக தான் இருக்கின்றன. நான் தற்சமயம் வாழும் துபாய் நகரத்தில் இப்படி போலிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதை அனுபவங்களை விட கவிஞர்கள் என்று சொல்வதில் பெருமை இருக்கிறது

உங்கள் பங்களிப்பு..

 என்னுடைய கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு கூட இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளிவர ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய மலையாள கவிஞர்கள்  எந்த வகையில் தீவிரமான செயல்பாட்டில் இருக்கிறார்கள்?

இன்றைய இளம் கவிஞர்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட சமூக ஊடங்களில் எழுதுவதை அதிகம் விரும்புகிறார்கள் நான் இரண்டிலும் எழுத விருப்பம் கொண்டிருக்கிறேன். உரைநடை கவிதை மட்டும் இல்லாமல் சந்தம் வைத்துக்கொண்டு எழுதுகிற கவிதைகளிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இந்த சந்தக் கவிதைகளை பாடி யூடுப்பில்  வெளியிட்டு இருக்கிறேன். பழைய கவிஞர்கள் கவிதைகளைப் பாடும் இயல்புகளைக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் சமூக ஊடங்களிலும் 'யூடுப்பு'களிலும் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக,  விளம்பரத்திற்காக கவிதைகளை பாடல்களாக பாடுகிறார்கள். கவிதை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

முற்றுப் பெறாத உரையாடல்கள்: இறைவன் உங்கள் தோற்றங்களை பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்! ஈஸ்ட்ஹாம் இல் நடைபெற்ற மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக ----- - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -

விவரங்கள்
- வாசன் (ஐக்கிய இராச்சியம்) -
இலக்கியம்
20 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre இல் மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு, விமர்சன நிகழ்வொன்று ஏற்பாடாகி இருந்தது. எனது வேலைப் பளு காரணமாக கடந்த பெருந்தொற்றுக்குப் பின்பான காலகட்டத்தில் நிகழ்ந்த நேரடி நிகழ்வொன்றிலும் நான் பங்கு பற்றியது கிடையாது. ஆனால் இப்போது இதுவரை காலமும் நான் பார்த்து வந்த வேலையை இழந்து ஒரு வேலையில்லாப் பரதேசியாக வாழ்கின்ற காரணத்தினால் எந்த வித அசைகரியமும் இன்றி இந்நிகழ்விற்கு போய் வர முடிந்திருந்தது.

மாஜிதாவின் 'பர்தா' என்னும் இந்த நாவல் வெளி வந்து பல வாரங்கள். கடந்து விட்டுள்ளது. ஆயினும் அதன் பரபரப்பு இன்னும் அடங்கயிருக்கவில்லை என்பதும் அது அடங்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதும் நேற்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.. இங்கு எமக்கு அதன் பரபரப்போ அது ஏற்படுத்தும் சர்ச்சைகளோ முக்கியமில்லை. ஆனால் இந்நாவல் 'பர்தா' என்னும் ஒரு ஆடை மூலம் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு கொடிய அடக்குமுறையையும் அந்த அடக்குமுறையினைப் பிரயோகிப்பதற்காக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் நிர்ப்பந்தங்களையும் அழுத்தங்களையும் பேசி, அதற்கு எதிராக தனது வலிமையான குரலை எழுப்பி நிற்கின்றது எனபதும், இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக நெறிபடுத்தப் பட வேண்டிய உரையாடல்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக விளங்குகின்றது என்பதுவுமே எமக்கு முக்கியமான விடயநக்கலாகப் படுகின்றன.

மேலும் படிக்க ...

மணிமேகலை உணர்த்தும் பெளத்த அறச்சிந்தனைகள்! -முனைவர் அரங்கன்.மணிமாறன், முதுகலை தமிழாசிரியர், நகராட்சி மேனிலைப்பள்ளி, திருவண்ணாமலை -

விவரங்கள்
-முனைவர் அரங்கன்.மணிமாறன், முதுகலை தமிழாசிரியர், நகராட்சி மேனிலைப்பள்ளி, திருவண்ணாமலை-606601. -
ஆய்வு
19 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த காப்பியங்களாக விளங்குகின்றன.

மலைவளம் காணச்சென்ற சேரன் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சிலப்பதிகார கதையைச் சொல்லி முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே யருளுக என பணித்தவரும் தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனாரே ஆவார். சீத்தலைச் சாத்தனார் பௌத்த துறவி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கோவலன் கண்ணகியின் வரலாறான சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றை மணிமேகலை எனும் முதல் சமய மற்றும் புரட்சிக் காப்பியமாக விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகவென பாவை நோற்றக் காதை ஈறாக முப்பது காதைகளில் படைத்தார்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'கன்னியொருத்தி மடியில் காளையொருவன் மயங்கிக் கதை கதையாய்ச் சொல்ல வந்தான்'! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
19 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இனியதொரு காலத்தால் அழியாத கானம். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில், கவிஞர் வாலியின் எழுத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில், டி,.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் இனிய பாடல். 'அபூர்வ சகோதரர்கள்' பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருப்பார். 'நீரும் நெருப்பும்' பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் (விருந்தோ விருந்து பாடலில் மட்டும் அதில் இடம் பெறும் மலையாள, கன்னடம், தெலுங்கு மொழி வரிகளை அம்மொழிக் கவிஞர்கள் எழுதியிருப்பார்கள்).

'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் 'அபூர்வ சகோதரர்கள்'  திரைப்படத்தில் பானுமதி நடித்த வேடத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார். ஜெமினியின் 'அபூர்வ சகோதரர்க'ளில் எம்.கே.ராதா & பானுமதி நடித்திருப்பார்கள். பெரு வெற்றி கண்ட திரைப்படம். 'நீரும் நெருப்பும்'  பெரு வெற்றியடையாவிடினும், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் வெளியான முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்திருந்தது.

மேலும் படிக்க ...

உன் மறைவுக்கு வான் அழுது எம்கண்ணீரை மறைக்கிறது! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
19 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கவிதை. -
                                     

இந்திய வரலாற்றின் சூரியனே!
கல்வி கற்ப்பித்தலின் சந்திரனே!
திராவிட  சுடர்ஒளியே !
அரசியல் வரலாற்றின் மாமணியே!
சிந்தனையின் சுடரே!
பேராசிரிய பெருந்தகையே!
மாணவர்களின் பொற்சுடரே!
உன்  மறைவுக்கு வான் அழுது
எம்கண்ணீரை மறைக்கிறது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கவிதை: உன்னாலே அறிந்தேன் - க. அட்சயா ,தஞ்சாவூர் -

விவரங்கள்
- க. அட்சயா ,தஞ்சாவூர் -
கவிதை
19 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


அர்த்தமும் அறிந்தேன்
ஆழமும் அறிந்தேன்
புரிதலும் அறிந்தேன்
பொருளும் அறிந்தேன்
குறிக்கோளும் அறிந்தேன்
நோக்கமும் அறிந்தேன்
இவை அனைத்திற்கும்
ஒரே பொருள் என்று
உன்னாலே அறிந்தேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிறுகதை; விவசாயி - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
18 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கோபி  பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை யார் பயன்படுத்துகிறார் ? . அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில்   நினைப்பான் . ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது . ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து  அவன் மூலமாக  பேட்டி எடுக்க  வேண்டும் . தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான் . அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார் . அதுவும் நினைப்பில் வந்தது . அம்மாட வலது கை சின்ன மாமா தான் . அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும் . அது தான் ... அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார் . அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார் . ஆனால் , அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது . இன்று இருப்பது போல இல்லை . அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள் . ஐயாவை , அம்மா முதலில் விரும்பவில்லை . அம்மம்மா தான்  , அயலுக்குள் இருந்த அவரை  " " எடியே , இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான்,  கட்டுவாயா ? " எனக் கேட்டார் . அம்மா " என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது " என்று விட்டுப் போய் விட்டார் .

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: கணினி தொழில் நுட்பத்தை புறக்கணித்து, கையால் எழுதிவரும் சிங்கப்பூர் படைப்பாளி இராம. கண்ணபிரான்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
17 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெரும்பாலான எழுத்தாளர்கள் நவீன கணினி தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆனால், அந்தப்பக்கமே செல்லாமல், மின்னஞ்சல் பாவனையும் இல்லாமல், தொடர்ந்தும் கையால் எழுதி, தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கும் எண்பது வயதை நெருங்கும் ஒரு படைப்பாளியை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளும் இல்லை. தமிழர்க்கென்று தனியாக ஒரு நாடும் இல்லையென தமிழ்த்தேசியவாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணமே, கல் தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முந்திய இனமே தமிழ் இனம் என்ற வாய்ப்பாடுதான்.

சமகாலத்தில் உலகெங்கும் மனிதர்கள் அகதிகளாக தங்களுக்கென ஒரு வாழ்விடம் தேடி ஓடிக்கொண்டிருக்கையில், தமிழர்களுக்காக மாத்திரம் ஒரு நாடு வேண்டுமா..? என்றும் யோசிக்கத் தூண்டுகிறது.

இந்தப்பதிவில் வரும் இராம. கண்ணபிரான் தனது பத்து வயது பராயத்தில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மார்க்கமாக சிங்கப்பூர் வந்தவர். அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்று, தமிழ் ஆசிரியராகி, சிங்கப்பூர் எழுத்தாளர் என்ற பெருமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க ...

வாழ்த்துகிறோம்: பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' நாவல் 'சர்வதேச புக்கர்' விருதுக்குப் பரிந்துரைப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' ,அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  'பூக்குழி' தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு  Hamish Hamilton Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகமானது பென்குவின் நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சேய் நிறுவனமாகும் என்பதும், குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க ...

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விவரங்கள்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -
கவிதை
15 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. கட்டடக்கலை வரலாறு

கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும்
ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…
இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும்
தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.
தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.
அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள்
அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.
தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம்
இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.
ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.
எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.
அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….
அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டடக்கலை வரலாறு.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி இரண்டு) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
  2. பல்கலைக் கலைஞர் 'மாஸ்டர்' சிவலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
  3. அ.ந.க.வின் மலையக இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
  4. நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
  5. சிறுகதை: குட்டிநாயும் அவனும்! - சு. கருணாநிதி -
  6. விடுதலைக்குள் விடுகதை! - தம்பா -
  7. பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் சங்கச் சுரங்கம்-3 நூலுக்கான அணிந்துரை! - பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் -
  8. வரலாற்றுச் சிறுகதை: சதியாலே சிதைந்த விதி! - (தமிழகத்து) நெல்லை - வீரவநல்லுர் ., ஸ்ரீராம் விக்னேஷ் -
  9. தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம் தமிழாய்வுத்துறை & E.S. கலை மற்றும் அறிவியற் கல்லூரி இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம்!
  10. சிந்தனைக் களம் - நாதஸ்வர இசைமரபு!
  11. நூல் அறிமுகம்: நினைத்ததை முடித்த எஸ்.ரி.ஆரின் 'எண்ணம் போல் வாழ்வு' - வ.ந.கிரிதரன் -
  12. படித்தோம் சொல்கின்றோம்: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு - பெண் எனும் நான் நூல்கள் சொல்லும் செய்திகள் ! - முருகபூபதி -
  13. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”
  14. தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 53 / 104
  • முதல்
  • முந்தைய
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • அடுத்த
  • கடைசி