பதிவுகள் முகப்பு

ஒட்டாத உறவுகள் ! -ஸ்ரீராம் விக்னேஷ்-

விவரங்கள்
-ஸ்ரீராம் விக்னேஷ்-
கவிதை
08 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லோரும் அழுகின்றார்....!
ஏனென்று பார்க்கின்றேன் !
என்னால் பேச முடியவில்லை...!
ஏனென்றால் நான் செத்துவிட்டேன்...!

உறவுகள் எல்லாம்கூடி,
ஒப்பாரி வைக்கின்றார்கள்....!
உருண்டுருண்டு ஒரு மகள்,
“ஓ”வென அலறுகிறாள் !

ஓடிவந்து பிடித்தவரை,
உதறிவிட்டு அடுத்த மகள்,
பாய்ந்தென்மேல் விழுந்தழுது,
பாசத்தைப் பூசுகிறாள் !

மேலும் படிக்க ...

சிறுகதை: சந்தியா அப்பு! - செ.டானியல் ஜீவா -

விவரங்கள்
- செ.டானியல் ஜீவா -
சிறுகதை
08 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Art Courtesy: Edvard_Munch

எனக்கு  பிடித்த மனிதர்கள் என்று என்னுடைய ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் சந்தியா அப்பு மிக முக்கியமானவர். வயது எண்பதை நெருங்கினாலும் சோர்வில்லாமல்  உழைத்த மனுஷன். வாளிப்பான தேகம், விறைப்பான முறுக்கு ஏறிய தோல் பட்டைகள். ஒரு  காலத்தில் பெயர் போன சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத் தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார். எங்களுடைய ஊர்  கோயிலில் இருக்கும் சிறிய அறை ஒன்றிலே நானும் என் தந்தையின் தகப்பனாரான  செபஸ்தி என்று ஊரவர் அழைக்கும் செபஸ்தியார் அப்புவும் வசித்துவந்தோம். அப்பு வசிப்பதற்காகவே  கோயில் நிர்வாகத்தினர் அந்த அறையை கொடுத்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் அப்பையாவை  அப்பு என்றுதான் அழைப்பது வழக்கம். அப்பு கோயிலில் சங்கிடத்தார் வேலை செய்கிறவர்.

நான்   பதினான்கு  வயது வரைக்கும் அங்கே இருந்து தான் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு மார்கழி மாதக்குளிரோடு அப்புவின் உயிரும் அடங்கிப்போனது. அப்பு இறந்த பின்னர் நான் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடல் தொழிலுக்குப் போகத் தொடங்கினேன். அப்புவோடு நான் இருந்த காலத்தில்,  ஒரு நாள் ஞாயிறு காலையில் அப்புவை தேடி ஒருவர் வந்தார். அவர்தான் சந்தியா.  தென்மோடிக்
 கூத்தில் போட்ட ஒப்பனை கலையாத முகத்துடன் அவர் அங்கு  வந்திருந்தார்.

“இவன்  என்ர பேரன் கொஞ்சம் முசுப்பாத்தியாக எப்பவும் கதைப்பான்”  என்று. சொல்லிக்கொண்டே  அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பு.  முதல்  நாள் இரவு நடந்த  கூத்தில் கோமாளி வேடமணிந்த சந்தியாவின்   நடிப்பை ஏற்கனவே  நான் எங்கட அப்புவுக்கு நடித்துக் காட்டியபோது அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு

"அவர்  நல்ல நடிகன், அதோட நல்ல மனுஷன். ஒருத்தரைப் பார்த்து வா போ என்றுகூடக் கதைக்க மாட்டார். மிகவும் மரியாதையாகப்  பழகுபவர். சிறு வயதில் இருந்தே நாங்கள் நல்ல  நண்பர்களாக இருக்கிறம். ஒருவகையில் அவரும்  நம்மட சொந்தக் காரர்...! " என்று அப்பு சொன்னார். அவரைப் பற்றி சொல்லும்  போது அப்புவின் கண்களில் ஏதோ ஒரு இனம் புரியாத கசிவும், இரக்கமும் கரைந்து இருந்ததை கூர்ந்து அவதானித்தேன். அப்பு தொடர்ந்து ஏதாவது அவரைப் பற்றி கதைப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அதற்குமேல்  எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஏதாவது சோகம் அவரது நெஞ்சை நிறைக்கும்போது,  எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது அவரது  வழக்கம். என்னுடைய ஆச்சியின் மரணம் அவரை நடைப்பிணமாக்கிவிட்டது.

மேலும் படிக்க ...

நோர்வே பயணத்தொடர் : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே (3) - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
08 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                          - Bryggen துறைமுகம் -

காலையுணவின் பின்னர், Bergenக்குச் செல்லும் 8 :30 மணி பஸ்ஸில் ஜீவாவும் விமலாவும் எங்களை ஏற்றிவிட்டனர். அந்த பஸ்ஸின் மேல் தட்டில் இடது பக்கமாக இருந்த முன் சீற்றில் இருந்து நோர்வேயின் இயற்கை அழகை ரசித்தபடி, வெவ்வேறு சுரங்க வழிகளினூடாகவும், பஸ்ஸுடன் சேர்ந்து இரண்டு தடவைகள் கப்பலிலும் நாங்கள் பயணித்தோம்.

நோர்வேக்கு வருகிறோம் என்றதும், “எங்கடை இடம் நல்ல வடிவான இடம், வாங்கோ, எங்கடை வீட்டிலையே தங்கலாம்” என கமலினி அன்புடன் வரவேற்றிருந்தா. நான்கு மணி நேரப் பயணத்தின் முடிவில், Bergenஇல் இறங்கியபோது கமலினி சொன்னதில் எவ்விதமான மிகைப்படுத்தலுமில்லை என்பது தெளிவாக, அந்த அழகில் நாங்கள் சொக்கிப்போனோம். மலைகளின் நடுவில் அங்கங்கே வீடுகள் செருகப்பட்டிருப்பது போன்ற அந்தக் காட்சி picture post card ஒன்றைப் பார்ப்பதுபோல இருந்தது. ‘என்னமோ ஏதோ’ என்ற கோ திரைப்படப் பாடல் இங்குதான் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bergen பஸ் நிலையத்துக்கு இளைய மகன் அஜனுடன் வந்த கமலினியுடன் அவரின் வீட்டைச் சென்றடைந்தோம். எதையெல்லாம் பார்ப்பதற்கு சங்கி விரும்புகிறா எனக் கேட்டபடி, சங்கிக்கு மிகப் பிடித்த உணவான பால் அப்பங்களைச் சுடச் சுட கமலினி பரிமாறினா. அவவுக்கு உதவியாகக் குசினியில் அஜனும் நின்றிருந்தது இன்றைய இளம் சமுதாயத்தில் நிகழும் மாற்றத்துக்கு ஒரு சாட்சியாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் இட்டலியும் கூடவே இருந்தது. விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதையறிந்த கமலினியின் சினேகிதி ஒருவரின் உபகாரம் அது என அறிந்தபோது, அந்தச் சினேகிதி அப்படிச் செய்யுமளவுக்குக் கமலினியும் அவவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறாரெனப் புரிந்தாலும், காலில் சில்லுப் பூட்டியதுபோல ஓடித்திரியும் நாங்கள் வாழும் ரொறன்ரோவில் இப்படியெல்லாம் நிகழுமாவென என்னை அது அதிசயிக்க வைத்தது.

மேலும் படிக்க ...

”புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு” - முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.

விவரங்கள்
- முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.
இலக்கியம்
07 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

”உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். அம்முயற்சியின் விளைவே இன்று, இணையப் பயன்பாட்டில் தமிழ், தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அது போன்று தமிழகத் தமிழர்களின் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், இணையத்தைப் பயன்படுத்தினார். இதில் தங்களை ஒன்றிணைக்கத் தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்” என்று இலங்கைத் தமிழர்களின் இணையப் பங்களிப்புக் குறித்துத் தமிழ் விகாஸ் பீடியா கூறுகின்றது. இது மிகச் சரியான கூற்றும், வரலாற்றுச் செய்தியும் ஆகும்.

இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்ற நாளிலிருந்து மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கிய முன்னேற்றம் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதும், பதிவு செய்யப்பட வேண்டியதுமான விடயமாகும். இப்பின்னணியில் தான் தமிழ், இணையத்தில் வளர்ந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். வேறு காரணிகள் இருப்பின் இக்காரணமே மிகுத்திருக்கும் எனலாம். அந்தளவிற்கு இலங்கைத் தமிழர்கள் இணையத்தின் மூலம் தமிழை மேம்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க ...

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கலாசூரி சிவகுருநாதன் நினைவு நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
07 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க , பிரதம அதிதியாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நடராஜா காண்டீபன், ‘ஞானம்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சாகித்யரத்னா ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் படிக்க ...

யாழ் அராலி இந்துக்கல்லூரி நூற்றாண்டு விழா (1923 - 2023) - தகவல்: குகதாசன் குகநேசன் -

விவரங்கள்
- தகவல்: குகதாசன் குகநேசன் -
நிகழ்வுகள்
06 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' நூல் வெளியீடு! - தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
06 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படத்தைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.

மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
Administrator
குரு அரவிந்தன்
06 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 - 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான பெற்றோரும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமாகக் குடும்பமாக வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  கோவிட் - 19 காரணமாக ஒதுங்கி இருந்தவர்கள் பலரை மீண்டும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்களைச் சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது கனடாவில் இருக்கும் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்களில் மிகவும் மூத்தவரான இவரது 100வது பிறந்த தினத்தையும் கேக் வெட்டி, பாராட்டுக் கவிதைபாடிப் பழைய மாணவர்கள் கொண்டாடினார்கள். 1923 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை அளவெட்டி ஞானோதயா பாடசாலையிலும், அதைத் தொடர்ந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், உயர்கல்வியை பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார்.

மேலும் படிக்க ...

'அபத்தம்' மின்னிதழும் , விருதுகளும், சில கருத்துகளும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அபத்தம்' மின்னிதழின் ஆசிரியரான நண்பர் ஜோர்ஜ்.இ.குருஷேவ் ஆடி 'அபத்தம்' இதழில் எழுதிய  கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்.  ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"......... தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக்  கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை. கிடைக்காதது பற்றி அலட்டிக்கொள்வதுமில்லை. Black Tie Affair இல், முத்தரின் Coat Tail இல் தொங்கிக்கொண்டு ஈடேற நினைக்கும் அளவிலும் எனக்குத் தேவை இல்லை"

இங்கு அவர் ' தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக்  கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை'  என்று குறிப்பிடுவது தாயகத்தில் எழுதிய எழுத்தாளர்களை அவமானப்டுத்துவதுபோல் தென்பட்டதால் யார்  யார் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதின் ஒரு பிரிவில் விருது பெற்றவர்கள் என்று சிந்தித்துப்பார்த்தேன். எஸ்.பொவுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவருடனான பாரிஸ் இலக்கியச் சந்திப்பு பற்றித் தாயகத்தில் தொடரொன்று வந்துள்ளது. ஆனால் எஸ்.பொ தாயகத்தில் எழுதியுள்ளாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவர் எழுதவில்லையென்றே வைத்துக்கொள்வோம். இதுபோல் தான் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனும். அவரும் எழுதியது மாதிரியும் உள்ளது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவரும் தாயகத்தில் எழுதவில்லையென்று தற்போது வைத்துக்கொள்வோம். அவருக்கும் அபுனைவுக்காக அவரது கூலித்தமிழ் நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது கிடைத்துள்ளது. எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்திக்கும் புனைவுக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகத்தில் எழுதியிருக்கக்  கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடுவோம்.  எழுத்தாளர் மு.புஷ்பராஜனுக்கும் இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகம் சஞ்சிகையில் எழுதியிருக்கக் கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் தற்காலிகமாக எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடலாம்.

மேலும் படிக்க ...

குறளினிமை கேட்டிடுவோம் & சேவையைத் தொடர்ந்திட வேண்டும்! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
06 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. குறளினிமை கேட்டிடுவோம்

குறளினிமை கேட்டிடுவோமே.
கருத்ததுவும் அறிந்திடுவோமே.
பொருளினிமை உணர்ந்திடுவோமே.
பொய்யாமொழி படித்திடுவோமே.

அறத்துப் பாலதின்
அருமை தெரிந்திடுவோமே.
பொருட் பாலதின்
பெருமை கற்றிடுவோமே.

காமத்துப் பாலதின்
காதல் கண்டிடுவோமே.
பேரின்ப வாழ்வதின்
பேற்றை நுகர்ந்திடுவோமே.

மேலும் படிக்க ...

தமிழ்மொழி வாசித்தல் திறன் மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பத் தேவைகள் - முனைவர் சி. சிதம்பரம், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -

விவரங்கள்
- முனைவர் சி. சிதம்பரம், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -
ஆய்வு
04 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொழி கற்பித்தலின் முகம் இன்று உலக அளவில் பல்வேறு பரிமாணங்களை எட்டிவிட்டது. நம் மாணவர்களின் கற்றல், மனனம் செய்யும் திறமையை மட்டும் தேக்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இன்று இல்லை. கற்றலின் மூலம் மாணவர்களின் கேட்டல், படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் சூழல் அறிவு, வரலாற்று அறிவு, தேவைகளைத் திறன்பட அடையத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ளும் அறிவு போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் கல்விக்கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே இன்றைய உலகமயமாதல் சூழலில் மொழிக்காப்பு முயற்சிகள் முழுவெற்றி பெற முடியும். “பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். அவன் வாழ்ந்ததும், வாழப்போவதும் மொழியாலே தான். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியே. ஆறறிவு பெற்ற மனித சமுதாயத்தையும் ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும் வேறுபடுத்துவது மொழி. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.” 1  எனினும் தொடக்க காலத்தில் மனிதன் விலங்குகளிடமிருந்தே மொழியைக் கற்றுக்கொண்டான். விலங்குகள் காட்டும் சைகை, எழுப்பும் ஒலி ஆகியவற்றின் அடிப்படையில் மொழியைக் கற்கத் தொடங்கினான். மனிதனின் தோற்றம் குரங்கிலிருந்து வந்தது (பரிணாம வளர்ச்சி) என்று உறுதிப்படுத்தும் அறிவியல் ஆராய்ச்சியில், குரங்கு எழுப்பும் 31 வகை சைகைகளையும், 18 வகை முகபாவங்களையும், சில ஒலிகளையும் பயன்படுத்தி தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த முயற்சிப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு விலங்கிலிருந்து மொழியைக் கற்கத்தொடங்கிய மனிதன் படிப்படியாக எழுத்துகளையும், சொற்களையும், தொடர்களையும் ஏற்படுத்தத் தொடங்கினான். வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் எனப் பல்வேறு வளங்களைப் பெருக்கி இன்று உலக மொழிகளுள் முன்னோடி மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் தமிழ்மொழியை உயர்த்திய பெருமை ஒவ்வொரு தமிழனையும் சாறும். “ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்த மக்களே நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளனர்” 2 என்ற கருத்திற்கு தக்க சான்றுகளாகச் சிந்து சமவெளி, ஹரப்பா, மொகஞ்சதரா நாகரிகங்கள் அமைந்துள்ளன.

மேலும் படிக்க ...

எனது இசைப்பயணம்: இன்னிசைவேந்தர், சங்கீதபூஷணம், கலாநிதி பொன். சுந்தரலிங்கம்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
04 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 6151 5414 | Passcode: 531227

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி”

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
04 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
சிறுகதை
03 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- 2.7.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை. -


"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே"
 
                                           -  வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -

1.

இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பலகணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.

வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்!  வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை  மரங்களுமே.  வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் கட்குடியர் மெய்ப்பாடு - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
03 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                         - கம்பர் -

முன்னுரை

கள் குடிப்பதை சங்கால மக்கள் தவறாகக் கருதவில்லை. ஊர் வளத்தைப் பேசும்போதும், கள்ளின் மிகுதியையும் பேசியுள்ளனர்.நன்கு புளித்த கள் “தேள் கடுப்பன்ன” கடுமை உடையதாகும். உள் நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளிலிருந்தும் வருவித்துக் குடித்தனர். மன்னனின் சிறப்பைக் கூறும்போதும் கள் குடித்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. கள் உண்டு களிக்கும் விழா ’உண்டாட்டு விழா’ எனப்படும். வீரர்களுக்கு மன்னன், தன் கையால் கள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மதியை மயக்கும் மதுவை அருந்துதல் கூடாது. மது அருந்துவது என்பது தனிமனித ஒழுக்கக்கேடு. சமுதாயத் தீமை. மது உண்பதால் முதலில் உடம்பானது ஒரு விபரீத நிலையை மேற்கொள்கிறது. பின்னர் உண்டவனின் அறிவு மயங்குகிறது என்று வள்ளுவர் கூறுகின்றார். அத்தகைய கள் குறித்தும், கள் அருந்துவதால் தோன்றும் மெய்ப்பாடுகள் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஆராய்வோம்.

பஞ்சமாபாதகங்கள்

கொலை, களவு, கள்ளுண்ணல், பொய் உரைத்தல், குரு நிந்தனை ஆகிய ஐந்தும் “பஞ்சமாபாதகங்கள்” என்பர். குடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதலில் தம் அறிவை இழக்கின்றனர். பின்னர் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் உடல் நலமும், உள்ள நலனும் கொடுகின்றனர்.

மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்

நமது மூளையின் ஆரோக்கியமும் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களைப் பொறுத்தது. சில உணவுப் பொருட்கள் நம் மூளைக்கு நல்லது. மற்றவை மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மதுபானம் அல்லது பானம் என்பது எத்தனால் கொண்ட ஒரு பானமாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மதுபானம் மனக் கிளர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தூண்டும். கவனம் செலுத்துவதில் சிரமம். நினைவாற்றல் இழக்கும். உணர்வு இழப்பு ஏற்படும். மங்கலான பார்வை, விபத்துக்கள், வாய்மொழி அல்லது உடல் ரீதியான தாக்குதல் போன்ற விரிவான விளைவுகளை ஏற்படுத்தும். சில செயல்கள் நடந்த பின்னர் வருத்தப்பட செய்யும். ஆல்கஹால் எத்தனால் ரசாயன சேர்மம் ஒரு நியூட்ரோக்சன் இருப்பதினால் மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. ஒருவரால் சரியாகப் பேச முடியாமல் போகும். உடலுக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கும். இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து விடுகிற அளவுக்கு அல்லது அழித்து விடுகிற அளவிற்கு சக்தி வாய்ந்தது.எனவே, தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமலும், தெளிவில்லாமலும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும் கள் குடித்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு நேர்காணல்: "கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். அதுவே என் எழுத்தின் வழி." - பாவண்ணன

விவரங்கள்
நேர்காணல் கண்டவர் எழுத்தாளரும், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரன்!
நேர்காணல்
01 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது.  சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  பெற்றவர். விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர். புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர். இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர். பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது.  -


வணக்கம் பாவண்ணன், முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும். உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம். பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்' வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம். முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களை, பிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம். அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம். உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. பதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர். விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன். பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன். என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள். வளவனூர் மிக அழகான கிராமம். மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டு. கோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும். அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம். ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும். ஆலமரங்கள், அரசமரங்கள், நாவல் மரங்கள், இலுப்பைமரங்கள், நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும். அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம். திசைக்கொரு கோவில், அழகான கிளை நூலகம், கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தன. அந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. இன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தேவகாந்தனின் மனைவி மறைவு!

விவரங்கள்
- வ.ந.கி -
மரண அறிவித்தல்கள்
01 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
Chapel Ridge Funeral Home &  Cremation centre,
8911 Woodbine Ave, Markham L3R 5G1,
Viewing July07 Fri 4 pm - 9PM | Service: July o8 Sat 8 am - 9.30 am

எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களின் மனைவி திருமதி மேரி தேவராணி தேவகாந்தன் அவர்கள் மறைந்த தகவலினை எழுத்தாளர் டானியல் ஜீவா சற்று முன் பகிர்ந்துகொண்டார். தன் துணையின் இழப்பால் ஆழ்ந்த துயரிலில் ஆழ்ந்திருக்கும் தேவகாந்தன் மற்றும் அவரது குடும்பத்தவர் துயரை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம்.  .
 

Chapel Ridge Funeral Home &  Cremation centre,
8911 Woodbine Ave, Markham L3R 5G1,
Viewing July07 Fri 4 pm - 9PM | Service: July o8 Sat 8 am - 9.30 am

 
மேலதிகத் தகவல்களுக்கு:

தேவகாந்தன் - 647 407 8216
டானியல் ஜீவா - 416 500 9016
 
மின்னஞ்சல் முகவரி:
 
தேவகாந்தன்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
டானியல் ஜீவா: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நோர்வேப் பயணத்தொடர் (2): சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
30 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வே -

நோர்வே பற்றிய எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்தபடி, அந்த நாடு தொடர்பான எங்களின் தனிப்பட்ட சரித்திரத்தை மீளவும் மீட்டிக்கொண்டு டென்மார்க் ஊடான எங்களின் நோர்வே பயணத்தை சங்கியும் நானும் ஆரம்பித்தோம்.  

ரொறன்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே Copenhagen விமானநிலையத்தைச் சென்றடைந்தது. Stavangerக்கான எங்களின் விமானத்துக்கு ஐந்து மணி நேரக் காத்திருப்பு இருந்தமையால், ஏற்கனவே திட்டமிருந்தபடி, Copenhagen நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அந்தக் காலை நேரத்தைப் (அது ரொறன்ரோவின் நடு இரவாக இருந்தபோதும்) பயன்படுத்தினோம். விமானநிலையத்திலிருந்து நகருக்குச் ரெயினில் செல்ல 20 நிமிடங்களே தேவையாகவிருந்தன.  

நகரைச் சுற்றி நடந்தபோது, மேடும் பள்ளமுமாக இருந்த சமச்சீரற்ற நிலத்தில் மிகவும் இயல்பாக நிரைநிரையாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம்செய்தோரே எங்களின் கவனத்தை முதலில் ஈர்த்தனர்.  அதைப் பார்த்தபோது மிகுந்த வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கிருந்த கட்டடங்களும் பல்வேறு வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாயிருந்தன என்றால் சடைத்திருந்த பெருமரங்களும் அவற்றில் கீழ் நிறைந்திருந்த நிழலும் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த இதத்தைத் தந்தன. இப்படியாக இயற்கையையும் செயற்கையையும் ரசித்தபடி அங்கிருந்த உயர்ந்த மரங்களின் நிழலிருந்த வாங்குகளில் அமர்ந்து, அருகிலிருந்த bakery இல் வாங்கிய danish pastryகளைச் சாப்பிட்டோம். ரொறன்ரோவில் விற்கப்படும் danish pastryஐவிட,  அது அதிக ருசியாக இருக்கிறதென்றா சங்கி. எனக்கோ கறுவாத் தூள் வாசத்துடன் இருந்த அந்தப் pastry அமிர்தமாக இருந்தது.

மேலும் படிக்க ...

கவியரசன் கண்ணதாசன் காலமெலாம் வாழுகிறான் ! - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
30 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் ஜூன் 24!

கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்.
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே.
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்.
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்.

பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்.
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்.
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்.
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்.

சிறுகூடல் பட்டியிலே சிரித்து விளையாடியவன்.
சிந்தனைக்குக் கவிதைதரும் சிறப்பினையே பெற்றுவிட்டான்.
நோதலுக்கும் ஒத்தடமாய் நுட்பமாய்க் கவிதந்தான்.
போதிக்கும் அவன்கவிதை புதுக்கருத்தாய் மிளிர்ந்ததுவே.

மேலும் படிக்க ...

காற்றுவெளி மின்னிதழின் எழுத்தாளர் செம்பியன் செல்வன் சிறப்பிதழ்! படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்
30 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- படைப்புக்கள் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும். படைப்புகள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்:18/08/2023.  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் விரைவில் ஈழத்து எழுத்தாளர்.அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.எனவே, அவரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள்,அவரின் படைப்பாழுமை,அவரின் இதழியல் சார்ந்த கட்டுரைகளை படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க ...

அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை சுழற்சி -2, குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை சுழற்சி -2, குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
இலக்கியம்
28 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்த கால நிகழ்வுகளின் பதிவு வரலாறாகும். எட்டுத்தொகை நூலான அகநானூற்றின் வழி அக்கால மக்களின் வரலாற்றினையும் சமுதாய வாழ்வியலையும் நாகரிகப் பண்பினையும் அறிய முடிகிறது. மேலும்  மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மூவேந்தர்கள் பற்றிக் காணலாகும் செய்தியினை எடுத்துரைப்பதே  இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

மூவேந்தர் மரபு

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மூவேந்தர் ஆட்சி அமைப்பு நிலை பெற்றுவிட்டதை,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு  (தொல்.பொருள். 384)

 என்னும் கூற்றால் அறியலாம். மூவேந்தரைக் குறிப்பிடும் தொல்காப்பியர் சேர, சோழ, பாண்டியர் எனக் குறிப்பிடாமல் அவர் தம் மாலையினைப்

போந்தே வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும் (தொல்.பொருள்.63)

எனக் கூறுகின்றார்.

மாலைக்கு உரிமையுடைய சேர,சோழ, பாண்டியர் என உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அகநானூறும் சேர, சோழ, பாண்டியரை மூவர் எனப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. தமிழ் செழு மூவர் (அகம்.31:14) இதில் மூவர் என்று சேர, சோழ, பாண்டியரே குறிக்க வந்துள்ளது தெளிவாகின்றது.

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: ஜூன் 27 எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் பிறந்ததினம். - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு  ஈழத்தமிழ் இலக்கிய உலகில்  சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்குத் தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம்.  தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக் கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.

அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.  மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு,  அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: பண்டைய தமிழரின் தொல்வழிபாட்டு நீட்சியில் நடப்பியல் ஆதிக்கம் - முனைவா் இரா. மூா்த்தி, உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி, கோயம்புத்தூா் – 641020 -

விவரங்கள்
- முனைவா் இரா. மூா்த்தி, உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி, கோயம்புத்தூா் – 641020 -
ஆய்வு
27 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மனித சமூகம் தொல் நிலையிலிருந்து இன்றைய நாகரீக நிலை வரை படிப்படியாக வளர்ச்சி பெறவையாகும். இவ்வளா்ச்சி குறிப்பிட்ட பண்பாட்டு மாறுதல் அல்லது சமூக மாறுதலாகும். இதில் பல்வேறு வழிபாடுகள் தொல்மரபைக் கடைபிடித்தாலும் சமூக அசைவியக்கத்தில் சில மாற்றங்களையும் சந்திந்துள்ளது.

இருப்பினும் வழிபடு தெய்வம் அதே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் வடிவங்களில் மட்டும் மாற்றங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. இது ஒரு வகையான புறக்கிாியைக்கான தூண்டுதல் என்றும், சமூக அசைவியக்கதிற்கான அடையாள மென்றும், மக்களை ஈா்ப்பதற்கான உத்தியென்றும் கூறவேண்டியிருக்கிறது. அந்த வகையில் தொல் தமிழாின் வழிபாட்டு மரபுகளில் நெடுங்கல் வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவற்றில் இன்று பல்வேறு மாறுதல்கள் தென்பட்டுள்ளன. அது குறித்து சங்கப்பனுவல்களோடு ஒப்புமை படுத்தி இன்றைய நடப்பியல் தன்மையில் அதன் நீட்சி எத்தகைய மாற்றுத் தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

நடப்பியல்

நடப்பியல் என்பது கடந்த காலத்தைப் பற்றிய உள்ளீடுகளை விட நிகழ்காலச் சமூக வாழ்வும் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசுவதாகும். இது பனுவலுருவாக்கத்தில் எதார்த்தவியலாக இருப்பதுடன், ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது. தான் கண்டதைக் கண்டவாறு சொல்லுவதை விட விவரங்களை முறையாக அடுக்கி வெளித்தோற்றத்திற்கு தொியப்படுத்துகிறது. அதே நேரத்தில் செவ்வியல் கூறுகளையும் புனைவியல் கூறுகளையும் நிராகரிக்காமல் அதன் வழியாகவே பண்புகளை வெளிப்படுத்த முனைகிறது.

இத்தகைய நடப்பியல் இலக்கியப் பனுவல்களில் சமகால வாழ்வும் இயற்கையும் மிகச் சரியாகக் கூடுதல் குறைவின்றி, நுட்பமாகப் படைத்துக் காட்டுகிறது என்கிறாா் அ.இராமசாமி. கண்ணால் காண்பது அல்ல, அதனைத் தீர விசாரித்தறிய வேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்க நிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும். அதுவே நடப்பியலை நிவா்த்தி செய்யும். அவ்வாறு செய்வதன் மூலம் நடப்பியல் ஒரு முழுமை பெ்றறதாக மாறுகிறது.

மேலும் படிக்க ...

குணா கவியழகனின் 'நஞ்சுண்ட காடு' - ஒரு பார்வை - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
27 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக போருக்குள்ளே வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கைப்பாடுகளை ஈழத்துப் புனைகதைகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஒருபுறத்தில் போரால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிதைவுகளும் மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இருபுறத்தார் மீதான விமர்சனங்களும் ஈழ - புகலிடப் படைப்புக்களில் அதிகம் பதிவாகியுள்ளன. பொதுவாகவே மக்களின் பக்கமிருந்து பொது எதிரியை விளித்து எழுதப்பட்ட புனைகதைகளும் அதிகமதிகம் வெளிவந்தன. விலகல்கள் எனும்போது தமிழ்ப் போராட்டக் குழுக்களின் அரசியல் முரண்பாடுகள், அமைப்புக்களின் தன்னிச்சையான அதிகாரப்போக்கை எதிர்த்து எழுதப்பெற்ற படைப்புக்கள் 80களின் இறுதியில் இருந்து அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. புகலிடச் சூழலும் இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறத்தில் போராட்டத்தின் தேவை சார்ந்தும் அதன் அமைப்பு சார்ந்தும் உள்ளிருந்து எழுதப்பெற்ற படைப்புக்களும் வெளிவந்தன. அருளரின் லங்காராணி (1978), தா. பாலகணேசனின் விடிவுக்கு முந்திய மரணங்கள் (1986), மலரவனின் போருலா (1993) முதலான புனைவுகளை உதாரணமாகக் கூறலாம்.

   இந்த அடிப்படையில் குணா கவியழகன் தான் சார்ந்த அமைப்புக்குள் இருந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோரின் பார்வையில் இந்நாவலை எழுதியுள்ளார். ஒரு கொள்கைக்காகத்  தங்களைத் தியாகம் செய்வதில் எதிர்கொள்கின்ற இடர்ப்பாடுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதியீனங்கள் இவற்றைத் தாண்டித்தான் தம் வாழ்வைத் தியாகம் செய்கிறார்கள் என்பதை நாவல் காட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களது குடும்பங்கள் அக்காலங்களில் பட்ட வாழ்க்கைப் பாடுகளைக் கருவாகக் கொண்டமைந்ததே நஞ்சுண்ட காடு. இது இவரது முதல் நாவலாகும். இதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக வேறு நாவல்களை எழுதியுள்ளார்.

  ஓர் அமைப்பைச் சார்ந்தோர் அதன் உள்விவகாரங்களை எழுதிய காரணத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளானார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. இதற்கு நல்ல உதாரணமாகக் கோவிந்தனைக் (புதியதோர் உலகம்) குறிப்பிடலாம். ஆனால் இது வித்தியாசமானது. இந்நாவலில் பிற்பகுதியில் கூறப்படும் மக்களின் வாழ்வு அதிகமும் ஈழப்படைப்பாளிகளால் பதிவாக்கப்பட்டமை நாம் அறிந்ததே.

மேலும் படிக்க ...

வடமராட்சி அல்வாயில் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் வெளியீட்டு அரங்கு

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
26 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான  திரு. லெ. முருகபூபதியின்  நுல்களின் வரிசையில் 30 ஆவது வரவாக வெளிவந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி ( 02-07-2023 ) மாலை 4-00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி அல்வாய் கலைஅகத்தில் எழுத்தாளர் திரு. கொற்றை பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெறும்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி வழங்கல் நிகழ்வு - முருகபூபதி -
  2. டைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா? - குரு அரவிந்தன் -
  3. நோர்வே பயணத்தொடர் (1) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி --
  4. ஷோபாசக்தியின் மூன்று நூல்கள் வெளியீடு!
  5. பயனுள்ள மீள்பிரசுரம்: பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள் – ஶ்ரீதர் நாராயணன் –
  6. 'வயல் மாதா' நூல் பற்றிய எழுத்தாளர் மெலிஞ்சி முத்தனின் கேள்விகள் சில பற்றிய கேள்விகள்...
  7. பிரான்சில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' சிறுகதைத்தொகுப்பு எரிப்பு! - வ.ந.கி -
  8. எழுத்தாளர் பாவண்ணனின் இயல் விருது ஏற்புரையும் 'பதிவுக'ளில் வெளியான அவரது நெடுங்கதை 'போர்க்கள'மும்! - பாவண்ணன் -
  9. எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல் – நேர்காணல் கண்டவர்: வ.ந.கிரிதரன்
  10. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிகள் - முருகபூபதி -
  11. வாசிப்பும், யோசிப்பும்: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'அனுலா' - வ.ந.கி -
  12. ஒரு துளி உயிர்தரும் - யாழ் அராலி இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் குருதிக் கொடை!
  13. குறுந்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல் - முனைவர் ச. ஆதிநாராயணசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -
  14. ஜீவநதி வெளியீடாக 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' - வ.ந.கி -
பக்கம் 56 / 115
  • முதல்
  • முந்தைய
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • அடுத்த
  • கடைசி