பதிவுகள் முகப்பு

முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' மதிப்பீடு – நடேசன் -

விவரங்கள்
– நடேசன் -
நூல் அறிமுகம்
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமது அண்டை நாடான பாரத தேசத்தில்  பிறந்த மூவர் நமது  இலங்கையில் தங்களது சிந்தனைகள் ,  செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள்.    அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர்.  அவர் இலங்கைக்கு வந்தாரோ,   இல்லையோ,  அவரது உபதேசங்கள்  இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன்,  அவரது அரசியல் கருத்து  போராட்ட வழி முறைகள்  இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது. உண்ணாவிரதம்,   அகிம்சை  வழி,  கடையடைப்பு என  இங்கும் தமிழர்,  சிங்களவர் என  இரு இனத்தவரும்   அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால்,  இலங்கைக்கு வராதபோதிலும்  பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மற்றைய இருவரிலும்  பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.

மேலும் படிக்க ...

சிறுகதை : வேலை - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப்  போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று   நிற்பது போல  ,   ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும்  ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி  அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் .   அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! .

         கொஞ்சநாளுக்கு முதல் சுகன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அலைபேசியில் " வா , வா " என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் .   அது  ஞாபகம் வந்தது   .   அவ்விடத்திற்கு அயலில் கார் சென்ற போது " வீட்டிலா இருக்கிறாய் ? " என்று கேட்டான் . " வா " என்றான் . அலைச்சல் வேலையில் தினமும் ஒரு மூட் . எரிபொருள் விலை ஏறியதில் ...புலம் பெயர் நாடே வேறொரு மாதிரி தோற்றம் காட்டுகிறது . இந்த நாட்டுக்கு வெளிநாட்டுக் கொள்கை கிடையாது . அயலில் உள்ள பெரியவன் என்ன சொல்றானோ ?....பின்னாலே போறவன் . வாழ்க்கைச் செலவு கூடும் . பஞ்சத்தை எட்டிப் பார்க்கும் என்று தெரியும் . இன்றைய தலைவரின் அப்பருக்கு இருந்த தைரியம் ….கிடையாது . என்ன இருந்தாலும் பழசு வலிமையானது தான் . ஊரிலே ஏர் மேடை கட்டி இறைக்கும் முறை , சூத்திரக்கிணறுகள் ...எல்லாவற்றையும் மெருகூட்டி மீள கொண்டு வாருங்கள் . அதை வீழ்த்த இன்று கூட எதுவுமே இல்லை . காந்தி வயதானவராக இருக்கலாம் . அவரது கொள்கைகள் வயதானதில்லை .   இந்த தலைவர்களா இயற்கையைக் காப்பாற்றப் போறவர்கள் ? . வாயில் கஞ்சாவை வைத்துக் கொண்டு பேசுறவர்கள் . வெறித்தனமாக சண்டை பிடிக்க  ஆயுதங்களை அனுப்பிக் கொண்டு கிடக்கிற பலவீனமானவர்கள் . சரியான    மெண்டல்கள் . விடுங்கள் .

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 381 : எழுத்தாளர் நடேசனும், சிறுகதை பற்றிய அவரது எண்ணங்களும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - எழுத்தாளர் நடேசன் -

எழுத்தாளர் நடேசன் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் சிறுகதை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கினறார்:

" தற்போது இலங்கை பத்திரிகைகளில் சிறுகதைகள் பக்கத்துக்கேற்ப குறைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறது .  சிறு கதைகளில் பாத்திரம் , சம்பவம்  முழுமையாக வரவேண்டும். சம்பவங்கள் சுரியலில் வருவதுபோல் இலக்கியத்தில் தற்செயலாக நடக்கமுடியாது . அதேபோல் பாத்திரத்தின் செயலுக்கு  காரணம் தேவை . ஆனால் 800 வார்த்தைகளில் எழுதுவது அம்மாவின் சீலையில் பாவாடை தைப்பது போன்ற விடயமாகி விட்டது . கட்டுரை ,நாவல் வறண்டு போய் விட்ட நிலையில் சிறுகதைகளும் சிதைந்துவிடுமோ என்ற பயத்தில் எழுதுகிறேன்.' விக்கிபீடியாவின் சிறுகதை பற்றிய கருத்துகளையொட்டி அவர் கருத்துகளைக் கூறியுள்ளார்.

என்னைப்பொறுத்தவரையில் சிறுகதையொன்றுக்கு இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கூற முடியாது. ஒரு பிரதேசம் பற்றிய விபரிப்பு கூட  சிறுகதையாக இருக்க முடியும்.  ஒரு சம்பவம் தாக்கிய உணர்வைக் கூட சிறுகதையொன்று விபரிக்கலாம். இந்த வரைவிலக்கணத்தின்படி பார்த்தால் புதுமைபித்தனின் மிகச்சிறந்த சிறுகதைகளிலொன்றாகக் கருதப்படும் 'பொன்னகரம்' ஒரு சிறுகதையேயல்ல. அது ஓர் இருபக்கச் சிறுகதை.  மாநகரின் ஒரு பகுதி பற்றிய விவரணச் சித்திரம்.  அதில் பாத்திரங்கள் முழுமையாக வார்க்கப்படவில்லை.  ஆனால் அப்பகுதி பற்றி, வாழ்க்கை முறைகளைப்பற்றி கடுமையாக விமர்சிக்கின்றது. 800 சொற்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் சொற்களைக் கொண்ட சிறுகதை  'பொன்னகரம்'

மேலும் படிக்க ...

யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார்

விவரங்கள்
- ஜோதிகுமார்
ஜோதிகுமார்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022).  இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது.

இச்சுற்றி வலைப்பின் முக்கிய அம்சங்கள் இரண்டு: ஒன்று, தாய்வானைச்சுற்றி வளைத்து, தாய்வானுக்கு அதன் கையாலாகாத தனத்தை காட்டிக்கொடுப்பது. (அமெரிக்க ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் நிறையவே இருந்த போதிலும்). மற்றது, அமெரிக்காவின் கடற்படைத் தளமான குஹாம் தளத்திலிருந்து அமெரிக்க போர் கப்பல்களை (அல்லது விமானங்களை) நிறுத்தி வைத்து, “கடல் வழி பாதை சுதந்திரம்” (Navigation Right) என்ற வாய்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்கி, தாய்வானுடன் அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிடுவது.

இதுவும் சரி, அல்லது ஏற்கனவே கூறினால் போல் தாய்வானின் மேலாக, தாய்வானின் வான்பரப்பை ஊடறுத்து, தான் செலுத்திய ஏவுகணையின் விளைபயன்களும் சரி- கிஸிஞ்ஞரின் பயங்களை மேலும் மேலும் அதிகரிக்க செய்வதாகவே இருந்தன.

மேலும் படிக்க ...

மகாகவி பாரதியார் நூற்றாண்டையொட்டி எழுத்தாளர் முருகபூபதியின் 'பாரதி தரிசனம்' மின்னூல் வெளியீடு1

விவரங்கள்
- தகவல்; முருகபூபதி -
நிகழ்வுகள்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- இம்மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியார் மறைந்து 101  வருடங்களாகின்றன.  இதனை முன்னிட்டு எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும்  புதிய நூல்  "பாரதி தரிசனம்  "  இதன் வெளியீட்டு அரங்கு மெய்நிகரில் அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது. -
 

வாசகர் முற்றம் : தீவிர வாசகனாக வளர்ந்து, வானொலி ஊடகவியலாளனாகியிருக்கும் நியூசிலாந்து சிற்சபேசன்! ஈழத்து மு. தளையசிங்கமும் இந்திய ஆர்.கே. நாராயணனும் இவரது ஆதர்சங்கள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி,  ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும்  தேர்ந்த இலக்கிய வாசகர்  சிற்சபேசன் அவர்களை எமது  வாசகர் முற்றத்திற்கு  அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்,  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில்  தொடர்ந்தவர்.

யாழ்ப்பாணத்திலும்  தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக் கல்விவரையான காலகட்டத்திலே வாழ்ந்தமையைப்  பெரும் பாக்கியமாகவே கருதுகின்றார்.   “ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம்  “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றார்.  அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன். தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.   நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.

மேலும் படிக்க ...

விம்பம்* ஏற்பாட்டில், எதிர்வரும் சனி , இலண்டனில் 2 நூல்கள் அறிமுகமும், “இலங்கையின் பொருளாதரம்” நூல் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: பெளசர் -
நிகழ்வுகள்
01 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் (380) 'ரகரம்' பற்றித் தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் மகுடேசுவரன் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"தமிழ் இலக்கணப்படி, ‘ர’கர வரிசை எழுத்துகளில் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வராது. பிறமொழிச் சொற்களில்கூட ’ர’கர எழுத்து முதலாய் வந்தால் அதன் முன்னே உயிரெழுத்தை இட்டே எழுதுவோம். ரங்கன் – அரங்கன். ராமசாமி – இராமசாமி. "

ஆனால் பிறமொழிச் சொற்களில்  ர என்னும் எழுத்தை சொல்லுக்கு முதலில் வைத்து எழுதும் வழக்கம் ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது . இது பற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் தனது 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" நூலில் பின்வருமாறு கூறுவார்:

"இக்காலத்தில் ரகரமும்  பிறமொழிச் சொற்களில் மொழி முதல் எழுத்தாக வரலாம். தொன்று தொட்டு அரங்கநாதன், இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதால் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே எழுத வேண்டுமென்பதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம் என்று எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள்படும். ஆதலால், தொன்று தொட்டு  எழுதி வருவதற்கு மட்டும் அகரம், இகரம் பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அவ்வாறு செய்ய வேண்டுவதில்லை."

இதுபோல் ட என்னும் சொல்லையும் பிறமொழிச் சொற்களுக்குப் பாவிக்கலாம் என்பது அவர் எண்ணம்.  

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் (379) : 'ஜே.ஜே.சில குறிப்புகள்' பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.

இதற்கொப்ப மீண்டும் சு.ரா.வின் 'ஜே.ஜே சில குறிப்புகள்' நாவலை வாசிக்கத் தொடங்கியியிருக்கின்றேன். மலையாள 'எழுத்தாளன் ஜோசஃப் ஜேம்ஸ்' பற்றி, அவனது இலக்கிய ஆளுமை பற்றி அவனால் வசீகரிக்கப்பட்ட , ஒருவகையில் அவனது சீடனான  தமிழ் எழுத்தாளன் பாலு என்பவனின் சிந்தனைகளே 'ஜே.ஜே.சில குறிப்புகள்'.  இந்நாவல் வெளிவந்த காலம் தொடக்கம் இன்று வரை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நாவல். வழக்கமான நாவலொன்றுக்குள்ள அம்சங்களற்ற நாவல்.

நாவலை வாசிக்கையில் நான் இன்னுமொரு விதமாகவும் உணர்ந்தேன். உண்மையில் நாவலொன்றின் பாத்திரங்கள் அனைத்தையும்  படைப்பவர் அதனை உருவாக்கிய எழுத்தாளரே. அப்படைப்பாளி பாத்திரங்களில் உள்ளும் இருப்பார் , புறத்திலும் இருப்பார்.  அவ்வகையில் தான் எப்படியெல்லாமோ எழுத்தாளர் ஒருவர் இருக்க வேண்டுமென்று எண்ணினாரோ அத்தகைய ஆளுமையாக அவர் ஜே.ஜே என்னும் ஆளுமையை வடித்திருக்கின்றார். தேடல் மிக்க தன்னை பாலுவாக உருவாக்கியிருக்கின்றார். அவ்வகையில் இரு பாத்திரங்களிலுமே அவர் நிறைந்திருக்கின்றார்.

மேலும் படிக்க ...

யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! - ஜோதிகுமார்

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யுவான் வாங் (Yuwan Wang-5) கப்பலின் வருகையுடன், இலங்கையின் மும்முனை கயிற்றிழுப்பு போட்டியானது, புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தியது. இலங்கையின், டாலர் தேடல் ஏற்படுத்தியிருந்த, எண்ணெய்-எரிவாயுக்கான நீள் வரிசைகளும் (பல கிலோ மீற்றர் நீளங்களில்) மக்கள் அவ்வரிசைகளில் மணிக்கணக்கில் வாடி நின்று, சிலர் அங்கேயே களைத்து வீழ்ந்து இறந்த நிலையும் (18க்கு மேல்)-போக- இன்று இவை ஓரளவு தணிந்து போன நிலையில், மேற்படி கப்பலின் வரவு, இப்போது அதன் அரசியலை முன்நிலை நோக்கி நகர்த்தி, தற்போதைய செய்திகளில் முதலிடத்தை பிடிப்பதாய் இருந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்பாவே அமெரிகக்க-சீன தூதுவர்கள் நேரடியாக சந்தித்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்து குசலம் விசாரித்துக்கொண்ட செய்தியும் வெளிவந்திருந்தது.  கப்பலின் வருகையும், அதற்கு முன்னால் வந்த இந்த செய்தியும், ஓரளவு பேசும் பொருளாக சம்பந்தபட்ட வட்டாரங்களில் இருக்கவே செய்திருந்தது.

அமெரிக்கா, சீனத்தை பாவித்து, இலங்கையிலிருந்து, இந்தியாவை, அப்புறப்படுத்தப் பார்கின்றதா? அல்லது குறைந்த பட்சம் இந்திய நலனை இலங்கையில் ஒரு கட்டுக்குள் அடக்கி விட முயற்சிக்கின்றதா? அல்லது இந்தியாவிற்கான ஒரு அழுத்த புள்ளியை இலங்கையில் உருவாக்குவதோடு அதன் நோக்கம் முடிவடைந்து போகின்றதா- என்பது போன்ற பல்வேறு வினாக்கள், இக்கைகுலுக்களின் போது சர்வதேச மட்டத்தில் தோன்றி மறைந்தவைதாம்.

அதாவது, ஒரு பிரதேச கேள்வியானது, ஒரு சர்வதேச கேள்வியை விட முன்னிலை வகிக்கக் கூடுமா, அல்லது இரண்டுமே தொடர்ச்சியாய் தனித்தனி கேள்விகளாக ஜீவிக்க முற்படுமா என்பன போன்ற கேள்விகள் பூதகரமாய் தோற்றம் தர முற்பட்டிருந்த காலம் அக்காலம்.

மேலும் படிக்க ...

நினைவுகளின் தடத்தில் - (23 & 24) - வெங்கட் சாமிநாதன் -

விவரங்கள்
- வெங்கட் சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன் பக்கம்
26 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள்


பதிவுகள் ஜனவரி 2009 இதழ் 109

நினைவுகளின் தடத்தில் - 23

உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும் தான், என்னைப் புதியவனாகப் பார்க்காமல் வெகு அன்புடன் 'அண்ணா' என்று அழைக்க அதைக்கேட்க வெகு சுகமாக இருந்தது. பெரிய வீடு. நாட்டு ஓடு போட்ட வீடு. மண்தளத்தில் சாணிபோட்டு மெழுகிய கூடம், தாழ்வாரம். எட்டிப் பார்த்தால் கை நீட்டினால் தொட்டுவிடலாம் போல நீர் மேலெழுந்து நிரம்பியிருக்கும் கிணறு. உடையாளுரின் ஒரு திசையில் இரண்டு ·பர்லாங் நடந்தால் ஒரு ஆறு. அதற்கு நேர் திசையில் அரை மைல் தூரம் நடந்தால் இன்னொரு ஆறு. ஆற்றின் அக்கரையில் சந்திரசேகரபுரம் என்னும் ஒரு பெரிய கிராமம். நிலக்கோட்டையின் கோடைகால தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்த எனக்கு இதெல்லாம் மிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் பெரிய கொல்லை. தென்னையும் புளியமரங்களும் நிறைந்த கொல்லை.

உடையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில் தான் இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே மாட்டு வண்டி மேட்டில் ஏறித்தான் ஊருக்குள் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள் தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. 'ப' வடிவில் மூன்று தெருக்கள். 'ப'வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு. அந்த நடுத்தெருவில் தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில் பற்றி யாரும் பேசிக் கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வ மாகாளி அம்மன் கோவிலும் தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்தக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்த போது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து வந்து போயிருந்தன.

மேலும் படிக்க ...

இணையவெளி உரை நிகழ்வும் கலந்துரையாடலும்: '22 சுருதிகளின் முக்கியத்துவம் -செய்முறை விளக்கங்களுடன்’

விவரங்கள்
_ தகவல்; பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
26 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தமிழ் வான் அவை இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு 29: பாலியல் வன்முறைக்கான காரணங்கள் ஆண்களா? பெண்களா? சமுதாயமா?

விவரங்கள்
- தகவல்: கெளரி சிவபாலன் -
நிகழ்வுகள்
26 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
மேலும் படிக்க ...

இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 – 2022) CSEF ஆண்டுப்பொதுக்கூட்டம்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ( 27-08-2022 ) சனிக்கிழமை மாலை  4-00 மணிக்கு மெல்பனில்,  வேர்மன் தெற்கு  சமூக  நிலையத்தில்  ( Vermont South Learning Centre - 1 Karobran Drive, Vermont South VIC 3133.) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.

இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்  குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம்  சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை  சமர்ப்பிப்பார். துணை நிதிச்செயலாளர்  திரு.  விமல் அரவிந்தன், நிதிய உறுப்பினர் திரு. ரவி – ரவீந்திரன் ஆகியோர்,  நிதியத்தின் ஊடாக  பயனடையும் மாணவர்களின்  நிதிக்கொடுப்பனவு மற்றும் அவை  சார்ந்த நிருவாக நடைமுறைகள்  குறித்த விளக்கங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பர்.

மேலும் படிக்க ...

ஆய்வு: மருதத்திணையில் இளிவரல் மெய்ப்பாடு! - கி.ச. புனிதவதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இம்மாகுலேட் மகளிர் கல்லூரி, கடலூர். -

விவரங்கள்
- கி.ச. புனிதவதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இம்மாகுலேட் மகளிர் கல்லூரி, கடலூர். -
ஆய்வு
24 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
தமிழின் தொன்மையினையும் சிறப்பினையும் உலகறியச் செய்பவை சங்க இலக்கியங்கள். அவ் இலக்கியத்தைப் படிக்கும் போது ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது மெய்ப்பாடாகும். அம் மெய்ப்பாட்டு உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்திருப்பது தொல்காப்பியம். இலக்கியத்தில் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வுகளை எண்வகையாகப் பகுத்து, அவை முப்பத்திரண்டு நிலைக்களன்கள் வழித் தோன்றும் என்றும், அத்துடன் பல உணர்ச்சிகளையும், தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையின் வழித் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வினையும் வகுத்துள்ளார். இங்கு சங்க அகஇலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றின் மருதத்திணையில் வெளிப்படும் இளிவரல் மெய்ப்பாட்டை இக்கட்டுரை ஆராய்கிறது.

தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு
தொல்காப்பியர் தம் நூலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.    (தொல்.பொருள்.மெய்.நூ.251)

அவ்வகையில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன தொல்காப்பியர் குறிக்கும் எட்டுவகை மெய்ப்பாடுகள் ஆகும்.

இளிவரல் மெய்ப்பாடு
மூன்றாவதாக இடம்பெறும் இளிவரல் என்னும் மெய்ப்பாடானது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு பொருண்மைகளை நிலைக்களன்களாகக் கொண்டு பிறக்கும்.

மேலும் படிக்க ...

தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெகுசனச் சஞ்சிகைகளில் முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் பலரின்  நல்ல நாவல்கள் பல வெளியாகியுள்ளன. உதாரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்௳:

1. ஜெயகாந்தன் - ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், நடிகை நாடகம் பார்க்கிறாள் மற்றும் குறுநாவல்களான 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'யாருக்காக அழுதான்', உன்னைப் போல் ஒருவன், அக்கினிப்  பிரவேசம் ( இவையெல்லாம் ஆனந்த விகடனில் வெளியானவை)

2. ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்< ரிஷி மூலம், ஜெயகாந்தனின் பல சிறந்த சிறுகதைகள்  (தினமணிக்கதி)

3. தி.ஜானகிராமனின் அ'ன்பே ஆரமுதே', விந்தனின் 'பாலும் பாவையும்', கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' - இவையெல்லாம் கல்கியில் தொடராக வெளியானவை.

இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம்.இவ்விதம் வெளியான தொடர்நாவல்களில் ஒன்றான தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' பற்றி முன்பு எழுதிய குறிப்பை , கிடைத்த ஓவியங்கள் சிலவற்றுடன் மீண்டும் பகிர்ந்துகொள்கின்றேன். கல்கியில் தொடராக வெளியான 'அன்பே ஆரமுதே' நாவலுக்கு ஓவியர் விஜயா வரைந்த ஓவியங்கள் இவை.


தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!'

தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது 'செம்பருத்தி', 'மோகமுள்', 'மலர் மஞ்சம்', மற்றும் 'அன்பே ஆரமுதே' ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. 'அன்பே ஆரமுதே' நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு.

மேலும் படிக்க ...

சிறுகதை: பொறி! - எஸ் அகஸ்தியர் -

விவரங்கள்
- எஸ் அகஸ்தியர் -
சிறுகதை
23 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அன்புடன் சகோதரருக்கு. வணக்கம்! எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். நன்றி .  - நவஜோதி -


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.

இவர்கள் தங்கள் படுப்பு வலைகளைக் கட்டுமரங்களில் சென்று பரவைக் கடலில்தான் விரிப்பார்கள்.

இனிமேல் படுப்பு வலைகளை நம்பிக் கட்டுமரங்களில் சென்று ‘சிறுதொழில்’ செய்ய முடியாதாகையால். ‘எத்தனை காலமாக வாய்வயிற்றைக் கட்டிப் பஞ்சம் பட்டினியோடு சீவிக்கிறது’ என்று தொழிலாளர்கள் வெகு நாட்களாகவே நச்சரிக்கத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இதிலிருந்து மீளவும் சரியான மார்க்கம் தெரியவில்லை.

ஒரே முழிசாட்டம்தான்.

தாங்களும் தம்பிமுத்துச் சம்மாட்டியைப்போல் இயந்திரப்படகு வாங்கிப் ‘பெருந்தொழிலி’ல் இறங்கவேணுமென்று தொழிலாளர்கள் ஒருநாள் கூடித் திட்டம் போட்டும், அந்தத் திட்டம் இன்றுவரை வெறும் வாய்ப் பேச்சில்தான் கிடக்கிறது.

தங்களின் இந்தக் கையாலாகாத் தனத்தையும் அவர்கள் உணர்ந்துதானிருந்தனர். ஆனால், ‘திட்டமிடுவதன்படி ஏன் இயங்க முடிவதில்லை?’ என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகவேயிருந்தது.

தற்போதைக்கு ஊர்கூடி ஒரு இயந்திரப் படகென்றாலும் வாங்கித் தங்கள் துறைமுகத்துக்குக் கொண்டு வந்துவிட்டால் தம்பிமுத்துச் சம்மாட்டியின் கொள்ளையையும், தனியாதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி அவனைச் ‘சமன்படுத்தி’ வைத்துவிடுவதோடு, பின் எந்த அலைகடலையும் எதிர்கொண்டு சமாளித்து ஆழ்கடல் சென்று தாங்கள் தொழில் புரியலாம் என்பது அவர்கள் எண்ணம்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணம் கூறும் வாழ்வியல்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -
ஆய்வு
23 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
வாழ்வியல் நெறி என்பது செம்மையான வாழ்க்கை முறை எனலாம். இல்வாழ்வானுக்குரிய பண்பாக வள்ளவர் அன்பு, அறம் ஆகியவற்றைக் கூறுகிறார். நற்பண்பு கொண்ட இச்சான்றோர் பண்பாக அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றை வள்ளுவர் காட்டுகிறார். பெண்களுக்குரிய வாழ்வியல் பண்பாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, விருந்தோம்பல், கணவனைத் தெய்வமாகக் கொண்டொழுகுதல் முதலிய பண்புகளைக் காட்டுவர். இத்தகு வாழ்வியல் நெறிகளைக் கருவிலே திருவுடைய கம்பர் தமது காப்பியமான கம்பராமாயணத்தில் இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறே போல் உயர்த்தி காட்டுகின்றார். இதனை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி - பெண்மை சிறக்க செய்வது
இல்லறம் இனிமை பெற, இல்லாள் அறிவும், பண்பும் பெற கல்வியே அடிப்படை ஆகும். கல்வி பெற்ற பெண்டிரே இல்லறப் பண்பை உணர்ந்த இனிது நடத்தி செல்ல முடியும். வறுமையால் வாடி வந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவினர். விருந்தினர் அருந்தி மகிழ உணவை அளித்தனர். கோலச நாட்டு குடும்பங்கள் இவ்வாறு குறைவின்றி வாழ்ந்தன என்று கோசல நாட்டைப் பற்றி கூறும் போது கம்பர் கூறுகிறார். இதனை,

பெரும் தடங்கண் பிறை நுதலார்க்கெலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும் அன்றி விளைவன யாவையே (36)

என்கிறார்.

மேலும் படிக்க ...

சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்!   - பத்மா இளங்கோவன் -

விவரங்கள்
- பத்மா இளங்கோவன் -
இலக்கியம்
23 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!

துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!

மேலும் படிக்க ...

ஆகஸ்ட் 23 தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவுதினம்! – இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -

விவரங்கள்
– இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -
இலக்கியம்
23 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுவர் இலக்கியச் சாதனையாளர் த. துரைசிங்கம்..! நடமாடும் கலைக் களஞ்சியமாக விளங்கிய தமிழறிஞர்..!! இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) காலமாகி ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (23 – 08 – 2021) அவர் கொழும்பில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். 1954 -ம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றமையைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கல்வித்துறை, எழுத்துத்துறை மட்டுமன்றி புங்குடுதீவின் வளர்ச்சிக்கும் சேவையாற்றியுள்ளார். புங்குடுதீவு அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

ஈழத்துப் பல்வேறு பத்திரிகைகளுக்கும், தமிழகத்தின் 'மணிமொழி' இதழுக்கும் நிருபராகச் செயற்பட்டவர். தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான'மணிமொழி' 1956 மார்கழி இதழில் இவர் குறித்துக் கட்டுரை பிரசுரித்துப் பாராட்டியுள்ளது. அருள்நெறி இயக்கத்தில் தொண்டாற்றியவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத்தில் (1957 – 1958) கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாச் சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டு காலம் கல்விப் புலத்தில் பணியாற்றியுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995 – 1997) இவரது பணிகள் குறிப்பிடத்தக்கன.

கலைத்துறையிலும் ஆர்வங்கொண்ட இவர், 1953 -ம் ஆண்டில் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய தோழர் வி. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம் நாவேந்தன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க ...

உயிர்த்தெமும் உயிரினம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
22 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராசிரியர் அன்றூ பாஸ்க் (Prof. Andrew Pask). -

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!

2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் ஏனய மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!

தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials) எனும் பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.

இவை ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்புபை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (9) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

9

“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.

“ஒரு எறும்புப் புற்று என்பது பல்லாயிரம் எறும்புகளின் தூல வடிவம். அவ்எறும்புகளின் ஊடாக, கோடானு கோடி வருடங்களாக இயற்கை உருவாக்கிய அமைப்பு அது. இலக்கியப் படைப்பும் அப்படித்தான்.” (அதே)

அதாவது, மேற்படி கூற்றின் பிரகாரம் பார்ப்போமானால், எறும்பு புற்று கட்டுவதும், குரங்கு மாம்பழம் சாப்பிடுவதும், புதுமைபித்தன் கபாடபுரம் எழுதுவதும் - கோடானு கோடி வருடங்களின் சமாச்சாரங்கள் - அதாவது ஆழ்மன விளையாட்டுகள் என்றாகிறது. வெறும், எறும்புகளுக்கே, கோடானு கோடி வருடங்கள் என்றால், கபாடபுரம் எழுதிய, புதுமைபித்தனின் ஆழ்மனம் கூட,அதாவது அதை விட,கோடானு கோடி வருடங்களில் இருந்தே, அதாவது குரங்கு மனிதனாய் ஆன காலத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ,‘நம்மவர்களுக்கு, குரங்குகளில் முதல் குரங்கும் தமிழ் குரங்குதான் என்று கூறினாலே பிடிக்கும்’ என்று போகிற போக்கில் புதுமைபித்தன் குரங்குகளை இழுத்துக் கூறுவதும் இந்தக் குரங்கு சார்ந்த ‘ஆழ்மன’ விளையாட்டுகளின் கீற்றோ என்பதுவும் புரியவில்லை.

மொத்தத்தில், நாவலில் வரும் மரீனா – கிளிம் சார்ந்த ஆவி இறங்கல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எமது இலக்கியத்தில் வலுவாக முன்னெடுக்கப்படும் மரபுகள் - தொன்மங்கள் - ஆழ்மன சக்திகள் - நனவிலி மனம் - நனவிலி மொழி - இவற்றை எடுத்துக் கொண்டாலும் சரி - இவை ஆளாளுக்கு ஆங்காங்கே சற்று வித்தியாசப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே ஒலிக்கின்றது – அதிலும் 1916 இலிருந்து யுங்கின் மூலமாக, தெளிவாக.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு; விருந்து புறந்தருதல்! - முனைவர் சுப. வேல்முருகன், இளநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம், சென்னை – 100. -

விவரங்கள்
- முனைவர் சுப. வேல்முருகன், இளநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம், சென்னை – 100. -
ஆய்வு
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பண்பாடு
இலக்கணச் செறிவும் இலக்கியச் செம்மையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி இத்தமிழ்மொழிப் பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது, பண்பாடு உடையது. பண்பாடு உள்ளவர்களாலேதான் இப்பாரதம் வாழ்ந்து வருகிறதென பண்பாட்டின் பெருமைதனை,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்: 996)

என வள்ளுவம் பேசுகிறது.

தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் இயல்புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு எனப்படும். மனிதனை விலங்கினின்று வேறுபடுத்துவதும் நல்ல பண்பாடுதான். இப்பண்பாடு காலத்திற்குக் காலம்; நாட்டுக்கு நாடு; இனத்திற்கு இனம் வேறுபடும். கரடு முரடான நிலப்பகுதியை வேளாண்மைக்கு ஏற்ப, நிலமாக மாற்றுவது பயன்படுத்துதல் எனப்படும். இதைப் போன்று மனித உள்ளத்தையும் தீய எண்ணங்களில் இருந்து விலக்கி உயர்ந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மனதைப் பயன்படுத்துதல் பண்பாடு என்பர். இதனையே கலித்தொகை,

பண்பெனப் படுவது பாடறிந்து தொழுகுதல் (கலி, பா.133:8) என்கிறது.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவப்பகிர்வு எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல் 'பண்ணையில் ஒரு மிருகம்'!

விவரங்கள்
- தகவல்; முருகபூபதி -
நிகழ்வுகள்
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு! - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -
  2. கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (2)
  3. சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -
  4. தற்கால வாழ்வியலுக்கு வழிகாட்டும் சங்க இலக்கியங்கள்!
  5. இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்!
  6. பதிவுகள் இணைய இதழும் அதன் ஆரம்ப கால இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -
  7. கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (1)
  8. சிறுகதை : ஞானம் - முருகபூபதி -
  9. எழுத்தாளர் சீர்காழி தாஜ் பற்றிய நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -
  10. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: " நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும் (James Webb Space Telescope)" (அறிவியல் தொடர் - 8)
  11. ஆய்வு: முத்தொள்ளாயிரம் காட்டும் யானைமறம்! - முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -
  12. அஞ்சலி: 'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி!'
  13. கவிதை : குருமண்காட்டு நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -
  14. ஓவியர் மாயாவின் மாயாலோகம்!  - வானாநானாகீனா -
பக்கம் 67 / 104
  • முதல்
  • முந்தைய
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • அடுத்த
  • கடைசி