பதிவுகள் முகப்பு

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் ஆறு கவிதைகள்

விவரங்கள்
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -
கவிதை
05 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1. தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை

நான் காலையில் கண்விழித்தேன் _
வழக்கமாகச் சென்னையில்,
கடந்த வாரம் திங்கட்கிழமை தில்லியில்.
கட்டாயம் காபி வேண்டும் எனக்கு
சென்னையாயிருந்தாலென்ன தில்லியாயிருந்தாலென்ன.
காலை பத்துமணிக்கெல்லாம் கடைகண்ணிக்குச் சென்றுவரக் கிளம்பினேன்.
கைக்குக் கிடைத்த பாசி மணி ஊசியெல்லாம் வாங்கிக்கொண்டேன்.
கவியரங்கக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களோடு கைகுலுக்கினேன்.
கைக்குட்டையைப் பையிலிருந்து எடுத்து
வியர்த்திருந்த கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.
கவிதை வாசிக்க வந்திருந்த அண்டை மாநிலக் கவிஞர்களோடு ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.
(அத்தனை பேரிலும் நானே அதிகப் பொலிவோடு இருந்ததாகச் சொன்னார்கள்)
பார்வையாளர்களாக வந்திருந்த ருஷ்ய, செக்கோஸ்லா வாக்கிய ஈரானிய ஜெர்மானிய நாட்டுக் கவிஞர்கள் என்னைப் பார்த்து அத்தனை பாசத்தோடு சிரித்தார்கள். நான் வாசிக்காத என் கவிதை உலகத்தரமானது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
கடைசி வரிசைக்குப் பின்னால் வைத்திருந்த மினரல் வாட்டர் புட்டிகளில் ஒன்றை எடுத்துக் குடித்தேன்.
கவிதைகளை நான் படித்தபோது கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று எழுதவிடாமல் என் தன்னடக்கம் தடுப்பதால் _
மண்ணைப் பிளந்தது என்று கூறி
(ம - மு விற்கிடையே உள்ள ஓசைநயத்திற்காகவும்)
முடித்துக்கொள்கிறேன்.
(பி.கு: கவிதை பற்றி எதுவுமே பேசவில்லையென்கிறீர் களே. உளறிக்கொட்டாதீர்கள். உங்களுக்கு என் மீது பொறாமையென்று புரிகிறது. உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.)

மேலும் படிக்க ...

ஆய்வு: கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதனும் இருப்பு பற்றிய அவரது பார்வையும்!.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -

'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையினைப் பேராசிரியர் நா.வானமாமலை தனது 'ஆராய்ச்சி' என்னும் காலாண்டுப் பத்திரிகையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள் பற்றியதாக எழுதியதற்குப் பதிலடியாக வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலிற்குப் பதில் விமர்சனமாக வெ.சா. 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்றொரு நீண்ட கட்டுரையினை , 'நடை' சஞ்சிகையில் தொடராக எழுதியிருந்தார். வெ.சா.வின் நீண்ட அக்கட்டுரைக்கு எதிரொலியாக நீண்டதொரு கட்டுரையொன்றினைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்  எழுதியிருந்தார். அது பின்னர் அவரது 'மார்க்சியத் திறனாய்வும், இலக்கியமும்' என்னும் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அதிலவர் வெ.சா. தனது 'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையில் 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று குறிப்பிட்டிருப்பார். அதனைத் தனது கட்டுரையில் நுஃமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"'நான் கருத்துமுதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று சாமிநாதன் கூறுவது எவ்வளவு பேதமை, தத்துவ சித்தாந்தங்கள் எல்லாம் சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற இரண்டு பிரிவுக்குள் ஏதோ ஒன்றுள் அடங்கும் என்பதும், சாமிநாதன் திட்டவட்டமாகக் கருத்துமுதல்வாதச் சிந்தனையாளன் என்பதும் தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மைகள்' ('மார்க்சியமும், இலக்கியத் திறனாய்வும்' பக்கம் 126)

மேலும் படிக்க ...

மாறும் உலக ஒழுங்கும் மாறும் தமிழ் கேள்வியும்… - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது.  நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 

இதில் ஓரளவு உண்மை கசியவே செய்திருக்கலாம். ஆனால், இப்போது, ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும், சில விடயங்களை, நாம் நிதானமாய் மீட்டு பார்க்குமிடத்து, இப்படி ‘பெர்லின் சுவர்’ எழுப்பப்பட்டு வருவதுடன் மாத்திரமே, விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு போவதாக இல்லை என்ற உண்மையும் இன்று மேல்நோக்கி கிளம்புவதாகவே இருக்கின்றது.  அதாவது, பிரச்சினைகளின் அடி வேர் இன்னமும் ஆழமாக கிளைத்து பாய்வதாகவே உள்ளது. இது, உக்ரைன் யுத்தத்தை பொறுத்தும் சரி-அல்லது அல்லலுறும் அமெரிக்காவை பொறுத்தும் சரி-பிரச்சினையின் அடிவேர்கள் கிளைத்து பாய்வதாகவே இருக்கின்றன.

மேலும் படிக்க ...

ஆய்வு: வெங்கட் சாமிநாதனும் கலை மற்றும் மார்க்சியம் பற்றிய அவர்தம் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -

அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் என் வாழ்க்கையில் மறக்க  முடியாத ஆளுமைகளில் ஒருவர். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். இறுதி வரை 'பதிவுக'ளில் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது கலை  மற்றும் மார்க்சியம் பற்றிய எண்ணங்களை அவரது எழுத்துகளூடு  விபரிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்''; பக்கம் 36) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்பிடும் கலை, இலக்கிய விமர்சகர் அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள்  'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார்.

மேலும் படிக்க ...

அமரர் வாணி ஜெயராமின் குரலில் மூன்று பாடல்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
05 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாடகி வாணி ஜெயராமின் இழப்புச் செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். இந்தியத் திரைப்பட உலகின் சிறந்த பின்னணிப்பாடகிகளில் ஒருவர். ஆழ்ந்த இரங்கல். இவரது நினைவாக எனக்குப் பிடித்த ஒரு பாடலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடல் அவருக்கு அகில இந்திய சிறந்த பாடகி என்னும் விருதினைப் பெற்றுத்தந்த பாடலும் கூட.   மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின்  இசையில் ஒலிக்கும் இப்பாடலுக்கு அற்புதமாக நடித்திருப்பார் ஶ்ரீவித்தியா. பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்.  பாடல் இட,ம் பெற்றுள்ள படம்: கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்'.  https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0

மேலும் படிக்க ...

வாணி ஜெயராம் : ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி! - - பி.ஜி.எஸ். மணியன் -

விவரங்கள்
Administrator
கலை
04 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பிரபல பின்னணிப் பாடகி வாணி  ஜெயராம் மறைந்த செய்தியினை இணையச் செய்திகள் மூலம் அறிந்தோம். அவரது இழப்பு கலை, உலகிற்குப் பேரிழப்பு என்பது மிகையான கூற்றல்ல. ஆழ்ந்த இரங்கலைப் 'பதிவுகள்' தெரிவித்துக்கொள்கின்றது. அவரது நினைவாக அவரைப்பற்றி 'இந்துதமிழ்' இணையத் தளத்தில் முன்னர் வெளியான கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - வாணி ஜெயராம் - https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0

புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.

இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.

மேலும் படிக்க ...

கவிதை: 2023 பெப்ரவரி 4 - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
04 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இன்று
சூரியனும் உதிக்காது போயிற்று.
காலிமுகக் கரையில்
அலைகளும் எழவில்லை.
பறவைகளும்
சிறகை விரிக்கவில்லை.
மேக மெத்தைகளும் பறக்கவில்லை.
தேசத்தைப் பாட
நானும் கறுப்பை உடுத்திக்கொள்கிறேன்.

கடல்கள் சூழ்ந்திருந்தும் என்ன!
மலைகள் நிமிர்ந்திருந்தும் என்ன!
மக்கள் மூச்சுத் திணறும் தேசத்தில்
சுடலைச் சாம்பலாகிய
சுதந்திரத்தை
எப்படிப் பாடுவேன்?

எழுதுவதற்கும்
என்னிடம் பல் துலக்கும்
கரித்துண்டுகளே உள்ளன.

பறவைகளைப் போலிருந்த மக்கள்
பாறாங்கல்லாய்
இறுகிக் கிடக்கும் நாளில்,
தானிய மணிகளாய்
என் சொற்களை
எவ்வாறு பரிமாறுவேன் அவர்களுக்கு...

மேலும் படிக்க ...

ஆய்வுக் கட்டுரை: சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
03 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                  எழுநா இதழில் வெளியான எனது 'சிங்கை நகர்  பற்றியதொரு நோக்கு' கட்டுரையிது.


சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன.  கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: "... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்..." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது?

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் 189ஆவது  இதழ் எழுத்தாளர் முருகபூபதி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் வெளியான வ.ந.கிரிதரனின் கட்டுரை. ஜீவநதி சஞ்சிகையினைப் பெற  விரும்புபவர்கள் அதன் ஆசிரியர் பரணீதரனுடன்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -


1. உருவக் கதைகளும் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகளும்'!

எழுத்தாளர் முருகபூபதியின்  மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்த 'பாட்டி சொன்ன கதைகள்' நூலைப்படித்தபோது இந்நூல் என் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. முருகபூபதி  ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க எழுத்தாளர். தன் ஊடகத்துறை அனுபவங்களைத் தவறாமல் தனது கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தி வருபவர். சிறுகதைகள், நேர்காணல்கள், பயண அனுபவங்கள், நூல் விமர்சனங்கள், உருவகக் கதைகள் என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.தொடர்ச்சியாகப்  பத்திரிகைகள், இணைய இதழ்களில் எழுதி வருபவர்.  இக்கட்டுரை அவரது 'பாட்டி சொன்ன கதைகள்' என்னும் உருவக்கதைகளின் தொகுப்பு பற்றிய  திறனாய்வுக் குறிப்புகள் எனலாம்.

உருவகக் கதைகள் என்றதும் நினைவுக்கு வருபவவை கலீல் கிப்ரானின் கதைகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள். தமிழகத்தில் உருவகக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஐ.சாமிநாதன்.  அறுபதுகள், எழுபதுகளில் இவரது உருவகக் கதைகள் பல தமிழக வெகுசன இதழ்களில் வெளியாகின.  இவர் கலைமகள் ஆசிரியராக விளங்கிய கி.வா.ஐகநாதனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் விந்தனும் உருவகக் கதைகள் எழுதியிருக்கின்றார்.  எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் உருவகக் கதைகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரைல் தமிழில் உருவக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் சு.வே என்றழைக்கப்படும் எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை.  அடுத்தவர் எழுத்தாளர் எஸ்.முத்துமீரான்.  எஸ்.பொ, செம்பியன் செல்வன், செங்கையாழியான் போன்றவர்களும் உருவக்கதையின் பக்கம் தம் கவனத்தைத் திருப்பியிருக்கின்றார்கள். 'நான்' (யாழ்ப்பாணம்) பதிப்பக வெளியீடாக செம்பியன் செல்வனின் 'குறுங்கதை நூறு' (!986)  தொகுதியில் சமூக, அரசியலைச் சாடும் சிறப்பான உருவகக் குறுங்கதைகள் சில உள்ளன.

மேலும் படிக்க ...

அஞ்சலி: இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
02 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

             -  இயக்குநர் கே.விஸ்வநாத் -

திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் எனப் பன்முக ஆளுமையாளரான இயக்குநர் கே.விஸ்வநாத் இன்று மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர். தனது திரையுலகப் பங்களிப்புக்காக ஐந்து தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகளையும், ஏழு தடவைகள் ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் , ஏனைய பல விருதுகளையும் பெற்றவர். வாழ்நாள் சாதனையாளர் விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதினையும் பெற்றவர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பதும் நினைவு கூரத்தக்கது.

மேலும் படிக்க ...

ஸ்ரீலஸ்ரீ மண் சிறப்புப் புராணம்: கண்டெடுக்கப்பெற்ற அங்கதப் பாடல்கள்! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
31 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


01.

ஆயிரம் பகீரதர்கள் அழைத்தும்
ஆகாய கங்கை
நிலத்துக்கு வராத காலத்தில்
அவர்களுக்கு
மறுக்கப்பட்டிருந்தது நீர்.

அவர்களின் 'கலக்கல் வைரவன்'
கலக்கி இறைத்த
அதே கிணற்று நீர்
மறுக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு.

உப்புத் தரைப் பாத்திகளில்
கால் புதையச் சென்ற அவர்களோ
அள்ளி ஊற்றுபவன் இன்றி
வெற்றுக் குடங்களுடன் திரும்பியபோது,
எங்கள் மண் சிறப்பின் மகாத்மியம்
குடி நீர் மறுப்புச் சருக்கத்தோடு ஆரம்பமாகியது.

அவர்கள் நீரைக் கேட்டதால்
செத்த பாம்பும் நாயும்
கிணற்றுள் தோன்றின.

குடிநீர்க் கிணறுகளை
அள்ளிச் சுருட்டி
சாதியக் கமண்டலத்துள் அடக்கிய
அகத் தீயனே!

நீ அறிவாயா?

சமையற் பானைகளில்
காற்று நிறைந்து கிடக்கிறது
ஒரு புயலுக்கான அடைகாப்போடு...

மேலும் படிக்க ...

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம்! சிறையிலிருந்த காந்தி சுத்திகரித்த கழிவறையும் சுத்தப்படுத்த முனைந்த தேசமும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவில்  குஜராத்  மாநிலத்தில்   போர்பந்தர்   என்னும்  ஊரில்    பிறந்த   குழந்தை   காந்தி   எப்படி மகாத்மாவானார்...?  எவ்வாறு    ஒரு    தேசத்தின்    பிதாவானார் ....? என்பதற்கெல்லாம்    வரலாறுகள் இருக்கின்றன.  தற்காலக்குழந்தைகளுக்கும்  இனிபிறக்கவிருக்கும்  குழந்தைகளுக்கும்  இப்படியும்  ஒரு மனிதர் இந்தியாவில்  பிறந்து   -  வாழ்ந்து   - மறைந்தார்    என்று சொல்லிக்காண்பிப்பதற்கு  காந்தி பற்றிய   திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய   மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய  சுதந்திரத்திற்காக அகிம்சை  வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன்  உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும்   நடத்தி நேற்று  வரையில்   இந்தப் போர்களை எதற்காகவும் தொடரலாம்   என்ற    முன்னுதாரணத்தையும்    விதைத்துவிட்டுச் சென்றிருப்பவருக்கு  02-10-2023 ஆம் திகதி    153   ஆவது  பிறந்த  தினம். 1869  ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி  பிறந்த  காந்தி எந்தத்தேசத்தின்  விடுதலைக்காக அறவழியில்  போராடினாரோ... அதே    தேசத்தின்   குடிமகன்   ஒருவனால் 1948 இல்  ஜனவரி  30 ஆம்  திகதி  சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈஸ்வர அல்லாஹ்   தேரே  நாம்...  எனப்பாடி    இந்து   -  முஸ்லிம் ஒற்றுமைக்காக    பாடுபட்டு    அந்த     ஒற்றுமைக்காகவே    தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக  ஒரு  இந்துவான  நாதுராம்  கோட்சேயினால்    சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்சேயின்    கழுத்தில்   தூக்குக்கயிறு    தொங்குவதற்கு     முன்னர் உனது   இறுதி விருப்பம்   என்ன ? - எனக்கேட்டபொழுது பாரதத்திலிருந்து   பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்  சிந்து  நதி   என்றைக்கு  மீண்டும் பாரதத்திற்குள்  திரும்பி  வருகிறதோ    அதற்குப்பின்னர்தான்   எனது அஸ்தி ( சாம்பல் )  கரைக்கப்படவேண்டும். அதுவே எனது  கடைசி விருப்பம்    எனச்சொல்லியிருக்கிறான். அதனால்,  அவனது  அஸ்தி  இன்னமும்  கரைக்கப்படவில்லை என்றும் தகவல்  உண்டு.

மேலும் படிக்க ...

இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! (பகுதி 2) - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -
நேர்காணல்
30 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல்  ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால்  நடாத்தப்பட்டது. மொஹமெட்  இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர்.  தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  - பதிவுகள்.காம் -


கேள்வி: சென்றமுறை 1815இன், கண்டிய ஒப்பந்தம் பற்றி கதைக்க நேரிட்டது. நீங்கள் உங்கள் பாடலில் போற்றியுள்ள, கெப்பட்டிபொல மொனரவிலவும், மேற்படி கண்டிய ஒப்பந்தத்துக்கு, ஒரு பங்குதாரியாகி கையொப்பமிட்டிருந்தாலும், ஆங்கிலேயர் அவ் ஒப்பந்தத்தை மதியாது, தங்கள் நலனை மாத்திரம் முன்னகர்த்தி, இந்நாட்டு மக்களின் நலனை காட்டிக் கொடுத்த போது, கெப்படிபொல இந்நாட்டின் முதலாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கினார் என்றும், அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 மக்களை கொன்று குவித்தே, அச்சுதந்திர போராட்டத்தை ஆங்கிலேயர் இந்நாட்டில் அடக்கினர் எனவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆங்கிலேயர் இப்படி தாங்கள் செய்து கொண்ட கண்டிய ஒப்பந்தத்தை, தாங்களே மதிக்காததை இட்டு நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஏனெனில், முக்கியமாக, மேலோட்டமாக பார்க்குமிடத்து, ஆங்கிலேயர்கள்தாம் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அல்லது நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று பொதுவில் நம்பப்பட்டும் கூறப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. கூறப்படுகின்றது?

மேலும் படிக்க ...

ஓவியர் ரவி (சோ.ராஜ்குமார்) பற்றி.. - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
30 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   - ஓவியர் ரவி (சோ.ராஜ்குமார்) -

அண்மையில் எனது முகநூற் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய தர்சினி யோகி என்பவர் தன் சகோதரர் ஓவியர் ரவி பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.  ஓவியர் ரவி தற்போது மறைந்து விட்டார்.

இவர் சிரித்திரனிலும் சில ஓவியங்கள் வரைந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் இலங்கையில் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளுக்கு முன் வைப்பதற்காக ஓவியங்கள், 'கட் அவுட்'ட்டுகள் வரைந்திருப்பதாகவும் , அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தில் திரைப்படங்களுக்குக் 'கட் அவுட்'டுகள் வடிவமைத்ததில் புகழ்பெற்றிருந்த ஒவியர் மணியத்தைத் தன் குருவாகக் கருதியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவரது ஓவியங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருந்தார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவரைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அறிந்தவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகளும் & வ.ந.கிரிதரன் படைப்புகளும்

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகளும் & வ.ந.கிரிதரன் மின்னூல் படைப்புகளும்

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் ஆசிரியராகவிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியிடும் இணைய இதழ் 'பதிவுகள்'. பதிவுகள்' இணைய இதழை https://www.geotamil.com & https://www.pathivukal.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுக'ளுக்குப் படைப்புகள் மற்றும் கருத்துகளை அனுப்பப் பாவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆக்கங்களில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்ட படைப்புகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஏனைய படைப்புகளும் காலப்போக்கில் ஆவணப்படுத்தப்படும்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (20) - கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
28 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இருபது: கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை!

"கண்ணம்மா"

"என்ன கண்ணா?" என்றவாறு என்னைத் தன் ஓரக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தாள் மனோரஞ்சிதம்.

"இது நானுனக்குச் சமர்ப்பிக்கும் சொல் மாலை."

"என்ன கண்ணா இது. சொல் மாலையா? எனக்கா? ஏன்? ஏன் இப்போ?"

"கண்ணம்மா, இப்போ இல்லையென்றால் எப்போ? அதுதான் இப்போ."

"சரி,சரி கண்ணா. அதுதான் உன் விருப்பமென்றால் தாராளமாகச் சமர்ப்பி உன் சொல் மாலையை. மாலையை எங்கே சமர்ப்பிக்கப்போகிறாய்? இதுதான் மலர் மாலை அல்லவே கண்ணா. அது சரி ஒரு கேள்வி."

"கேள்வியா? என்ன கேள்வி கண்ணம்மா. கேள்வி இல்லாமல் இருப்பில் எதுவுமில்லை. கேளு கண்ணம்மா."

"கண்ணா, இவ்விதமான சமர்ப்பணத்துக்கு நான் அப்படியென்ன செய்து விட்டேன். "

"கண்ணம்மா, நீ செய்தவற்றைப் பட்டியலிடுவேன். கேள். "

"அப்படியா? சரி. சரி. பட்டியலிடு என் கண்ணா. பார்ப்போம் உன் பட்டியலை"

வழக்கம்போம் அவள் குரலில் தொனித்த குறும்பு கலந்த தொனியை அவதானித்தேன்.

நான் தொடர்ந்தேன்:

"முதன் முதலாக என் குடும்பத்தவர் அல்லாத ஒருவரிடம் நான் அன்பு கொண்டது உன்னிடம்தான். அதற்காக உனக்கு நிச்சயம் நன்றி கூற வேண்டும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான் கண்ணம்மா."

"ம்ம்ம்.. மேலே சொல்லு" கண்ணைச் சிமிட்டினாள் மனோரஞ்சிதம்.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல் விருதுகள்!

விவரங்கள்
- தகவல்: தமிழ் இலக்கியத் தோட்டம் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள்! சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்!

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
27 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு  இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இந்தத்  தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து,  பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில்  பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்

வேப்பமரமும் பவளம் ஆச்சியும்    ( சிறுகதை )
விவேகானந்தனூர் சதீஸ்  எழுதியது   - பரிசு -   ரூபா ஐம்பதினாயிரம்

கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )
சி. கருணாகரன் எழுதியது.  பரிசு ரூபா ஐம்பதினாயிரம்.

மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )
அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்   எழுதியது.
பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்.  

பரிசு பெற்றவர்களுக்கான  பரிசுத் தொகையும் சான்றிதழ்களும்,  2023  பெப்ரவரி  மாதத்தில்   குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு  அனுப்பி வைக்கப்படும் . பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா. (50,000/= ரூபா )

மேலும் படிக்க ...

மெல்பனில் ஆவூரானின் சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
27 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,  எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம்.  இவர் எழுதிய சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு,  ஜனவரி  28 ஆம் திகதி ( 28-01-2023 ) சனிக்கிழமை மாலை      3-00 மணிக்கு மெல்பனில்  பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும். முகவரி: 112, High Street, Berwick, Vic – 3806

மேலும் படிக்க ...

நினைவுகளின் தடத்தில் - (27 & 28) - வெங்கட் சாமிநாதன் -

விவரங்கள்
- வெங்கட் சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன் பக்கம்
26 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


மே 2009 இதழ் 113 

நினைவுகளின் தடத்தில் - (27 )

எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.அப்படித்தான் என் மனதில் அது இறங்கியது. அத்தை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னைக் கேலி செய்து கொண்டும் இருந்தாள். அவள் கேலி பண்ணும்போது அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகச் சத்தமிட்டுச் சிரித்தனர். என் வெட்கப்பட்ட முகம் அவர்களை இன்னமும் சத்தமிட்டுக் கொண்டாட வைத்தது. ஏதோ புதிதாக ஏதோ ஊரிலிருந்து வந்த உறவினர்கள், நான் புதிதாகப் பார்த்து உறவையும் தெரிந்து கொள்ளும் உறவினர்கள் என்று தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

அந்த நாட்களில், 1947 ஆரம்ப மாதங்களில், அவருக்கு வயது 30-35 இருக்க வேண்டும். லாகூரில் இருந்தவர் என்றால் தேவங்குடியிலிருந்து நேராக லாகூரில் வேலை கிடைத்துச் சென்றவரில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்து, கடைசியாக லாகூர் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நல்ல சாஸ்திரோக்தமான, தெய்வ நம்பிக்கையுள்ள, தன் ஆசாரங்களை விட்டு விடாத மனிதர். லாகூர் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஊர். அதோடு இந்து முஸ்லீம் அரசியல் பகைமை தீவிரமாகிக்கொண்டு வந்த காலம். இனி உங்களைக் காப்பாற்ற முடியாது என்று அவரது முஸ்லீம் வீட்டுச் சொந்தக் காரர் கைவிரித்து விட்ட நிலைமை. அந்த காலத்தில் 25,000 ரூபாய் பாங்கிலிருந்து சேர்த்து வைத்ததை எடுக்கமுடியாது குடும்பத்தோடு ஓடி வந்தவர் என்றால், அது பெரிய பணம், பெரிய இழப்பு. அந்த அளவு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் அவருக்கு, எத்தனை வருடங்களாக அந்த வட இந்தியக் கோடியில் அவர் இருந்திருக்கிறார், ஆசாரம் மிகுந்த ஒரு தஞ்சை கிராமக் குடும்பம். அப்போது அவர் லாகூரில் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னதிலிருந்து அவரது லாகூர் நாட்கள் மிக சந்தோஷமாகத் தான் கழிந்திருக்கின்றன, கலவரங்கள் தீவிரமடைந்த கட்டம் வரை. லாகூர் அவருக்கு மிகப் பிடித்தமான இடமாகத் தான் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க ...

சிரித்திரன்: செல்வி ஆனந்தராணி இராசரத்தினத்துடன் (திருமதி ஆனந்தராணி பாலேந்திரா) ஒரு நேர்காணல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடகக் கலைஞரான ஆனந்தராணி பாலேந்திராவின் கலைத்துறைப்பங்களிப்பு , குறிப்பாக நவீனத் தமிழ்நாடகத்துறையில் முக்கியமானது. நாடக நடிகை, திரைப்பட நடிகை, நர்த்தகி எனத் தன் ஆளுமையை மேடை, திரை, வானொலி எனப் பல்வேறு களங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.  

இவருடனான நேர்காணலொன்று சிரித்திரன் சஞ்சிகையின் டிசம்பர் 1981 இதழில், 'தேன்பொழுது' என்னும் பகுதியில் வெளியாகியுள்ளது. இந்நேர்காணல் இவர் செல்வி ஆனந்தராணி இராசரத்தினமாக இருந்தபோது எடுக்கப்பட்ட நேர்காணல். நேர்காணலை எடுத்தவர்கள் பொன் பூலோகசிங்கம் & கனக.சுகுமார்.

இந்நேர்காணலில் ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் அளித்த பதில்கள் அவர் நவீன நாடகத்துறை, நாடகமயப்பட்ட நடனத்துறையில் எவ்வளவுதூரம் ஆழ்ந்த புரிதலைக்கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன.  ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் பிறேக்டின் 'அந்நியப்படுத்தப்பட்ட நடிப்பு' வகையிலேயே நடிப்பதாகக் கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

முகநூற் குறிப்பு: செங்குத்துக் காடு - Vertical Forestம் - பா.ரவீந்திரன் -

விவரங்கள்
- பா.ரவீந்திரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பாலமோகன், சுவிஸ் ரவி, பா.ரவி ஆகிய பெயர்களில் எழுதும் எழுத்தாளர் பா.ரவீந்திரனின் முகநூற் குறிப்பிது. - பதிவுகள்.காம் -


கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது.  செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

மாடிக் குடியிருப்புகளில் மனிதஜீவியை மட்டும் மையப்படுத்தும் வாழ்முறையைத் தவிர்த்து (அதாவது மனித மையநீக்கம் செய்து), சாத்தியப்பாடான அளவு இயற்கையுடனான கூட்டு உறவை மையப்படுத்துவதே இதன் கருத்தாக்கம் ஆகிறது. அதாவது மனிதர்கள், மரம் செடி கொடிகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களுடனான கூட்டு உறவை மையப்படுத்துகிற கருத்தாக்கம் கொண்ட கட்டடத் தொகுதியை நகர வாழ்வியலுக்குள் நிர்மாணிப்பதாகும். இதை மரங்களின் இருப்பிடத்தில் மனிதர்கள் வாழ்வதான கருத்தாக்கமாகவும் சிலர் குறிப்பிடுவர். அதாவது செங்குத்துக் காட்டில் மனிதர்கள் வாழ்வதான ஒரு பரிணாமத்தை இக் கருத்தாக்கம் தருகிறது.

மேலும் படிக்க ...

வளர்மதி 60இல் (1963 - 2023) உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்! - தகவல்: செல்வன் -

விவரங்கள்
- தகவல்: செல்வன் -
நிகழ்வுகள்
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மகளின் பார்வையில் நான்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எனது பிறந்தநாளையொட்டி (ஜனவரி 23) எனது இளைய  மகள் தீபிகா எனக்களித்த அன்பளிப்பு. நான் எனது நாவலான 'குடிவரவாள'னை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை அழகாக வரைந்திருக்கின்றாள். நன்றி மகளே.

ஆய்வு: இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
ஆய்வு
24 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக-புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் - தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கிறது எனலாம். மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நெஞ்சொடு கிளத்தல்

அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,

“நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”1

என்ற நூற்பா விளக்குகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல் - நோயல் நடேசன் -
  2. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 26: “மொழிபெயர்ப்பு இலக்கியமும் அதன் இயங்குநிலையும்”
  3. சிறுகதை: அவனும் அவளும் - முனைவா் சி. இரகு , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
  4. ஜெய்சங்கரின் வரவின் பின்னால் அந்தரிக்கும் சக்திகள் - ஜோதிகுமார் -
  5. ஸ்நேகா பதிப்பக நூல் வெளியீடு: 'தண்ணீர் - நீரலைகளும், நினைவலைகளும்' - தகவல்: பாலாஜி -
  6. நூல் அறிமுகம்: தாயிரங்கு பாடல்கள் - ஓர் அறிமுகம்! - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் -
  7. சிறுகதை: இருக்கிறன் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  8. கோல்டன் குளோப் விருதினைப் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல்! - ஊர்க்குருவி -
  9. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள்”
  10. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (19) - வ.ந.கிரிதரன் -
  11. ஜெய்சங்கரின் வரவும், தமிழ் கேள்வியும்! - ஜோதிகுமார் -
  12. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
  13. மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை எழுப்பும் கேள்வி! - சேசாத்திரி ஶ்ரீதரன் -
  14. வாசகர்களின் கவனத்துக்கு!
பக்கம் 67 / 115
  • முதல்
  • முந்தைய
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • அடுத்த
  • கடைசி