பதிவுகள் முகப்பு

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளியும், புகைப்படத் தொகுப்பும்! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
நிகழ்வுகள்
12 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியத் தோட்டம் (அறக்கட்டளைப் பதிவு இலக்கம்: 86107 1371 RR0001)

 

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளி - https://www.youtube.com/watch?v=3ulGohjdauo&t=2s      

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுப் புகைப்படத் தொகுப்பு  - https://tamilliterarygarden.com/gallery

தமிழ் இலக்கியத் தோட்டம் - https://tamilliterarygarden.com


மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார! முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும்,  அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே  எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன்  மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.

"நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?"  என நான்  யோசித்துக்கொண்டிருந்தபோது,  கொழும்பிலிருந்து  நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு,  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர்  ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார்  கமலி அக்கா கனடாவில்  மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான  செய்திகளே வந்துகொண்டிருந்தன.

கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது.  மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன். ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது.  என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு  கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சரியம் அடைந்தனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனின் “டாக்டரின் தொணதொணப்பு” - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு வைத்தியருடன் நோயாளர் கொண்டுள்ள அன்புறவு என்பது எல்லா வைத்தியர்களாலும் இலகுவில் பெறக்கூடியதல்ல. முதலில் டாக்டராக சந்திக்க வரும் நோயாளர் நீண்ட காலத்தின் பின்னும் உறவாக நினைத்து 'அந்த முகத்தை ஒருக்கா பாத்திட்டு போவம்' என்ற உணர்வுடன் சந்திக்க வருவதும், தமது நோய்நிலை மறந்து மகிழ்வதும், டாக்டர். எம். கே. முருகானந்தன் அவர்களின் மருத்துவ அனுபவங்களில் உன்னதமான ஒரு பகுதி. பெருமை கொள்ளலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பு மட்டுமே 'டாக்டரின் தொணதொணப்பு'. மற்றப்படி நோயாளரின் மனதில் அவர் பற்றிய நினைவுகள் அருமருந்து.

இவரது சிறப்பான மருத்துவ அம்சமாக , தன்னுடைய நோயாளரின் நோய்நிலைத் தகவல்களை 1999 ம் ஆண்டில் இருந்தே கணினி மயப்படுத்திப் பாதுகாப்பதைக் கூறலாம். நோயாளரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த நடைமுறையை இன்றும் இலங்கையில் சிலரே கைக்கொள்கின்றனர்.

புத்தகத்தின் ரசனைக் குறிப்பில் திரு.இ.து.குலசிங்கம் அவர்கள் கூறியிருப்பது போல 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக்காதல் நோயாளன் போல் ..' எனும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தினை ஒத்ததாக, இந்த டொக்டரின் மேல் காதல் கொண்ட நோயாளர் மிக அதிகம் என உணர்கிறேன். அதுவே அவரது இளமைக்கும் வெற்றிகளுக்கும் காரணமாகலாம். இவர் வைத்தியராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் இருப்பது மேலதிக சிறப்பு.

மேலும் படிக்க ...

தேடகம், காலம் & பதிவுகள்.காம் ஏற்பாட்டில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மாலை 3600 KIngston Road இல் அமைந்துள்ள ஸ்கார்பரோ கிராமச் சமூக நிலையத்தில் தேடகம், காலம் மற்றும் பதிவுகள்.காம் ஒன்றிணைந்து நடத்திய எழுத்தாளர்கள்  முருகபூபதி மற்றும் சாம்ராஜுடனான இலக்கியச் சந்திப்பு அமைதியாக ஆனால் காத்திரமானதாக நடந்து முடிந்தது. நிகழ்வினை எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையேற்றுச் சிறப்பாக  நெறிப்படுத்தினார்.

ஆரம்பத்தில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுத்தாளர் முருகபூபதி பற்றி நல்லதோர் அறிமுகத்தைச் செய்தார். ஆரம்பத்தில் மல்லிகையில் முருகபூபதியின் முதலாவது சிறுகதை வெளியானதையும், தொடர்ந்து வெளியான இரண்டாவது கதை தான் நடத்திய 'பூரணி'சஞ்சிகையில் வெளியானதையும் நினைவு கூர்ந்தார். முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கொழும்புக் கிளையில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்ட என்.கே.மகாலிங்கம் அவர்கள் ஆனால் முருகபூபதியின் கதைகளில் ஏனைய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளில் உள்ளதைப்போன்ற பிரச்சாரத்தொனி இருந்ததில்லை என்றும்  சுட்டிக்காட்டினார். கூடவே முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் ( 1976 இலும்  )  முதல் நாவல் பறவைகள் ( 2003 இலும்) சாகித்திய விருது பெற்றதையும்  நினைவு கூர்ந்தார். இவ்விதம் ஆரம்பத்தில் புனைவிலக்கியத்தில் கால் பதித்த முருகபூபதி பின்னர் ஊடகத்துறைக்குள் மூழ்கி அபுனைவிலக்கியத்தில் மூழ்கி விட்டார் என்னும் கருத்துப்படத் தன் உரையினையைத் தொடர்ந்தார்.

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (3) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.3.1 தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்

சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஏழுமலைப்பிள்ளை இதனை நான்கு காட்சிகளைக் கொண்ட ஒர் எழுத்துருவாகத் தந்துள்ளார். காக்கைவன்னியன் சங்கிலியின் தளபதியை வஞ்சமாகக் கொலை செய்துவிட்டு பறங்கியருடன் சேர்ந்து சங்கிலியனைக் காட்டிக்கொடுப்பதே இந்நாடகம் ஆகும்.

யாழ்ப்பாண இராட்சியத்தின்மீது வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கும்போது சங்கிலியன் போருக்கான ஆயத்தங்களைச் செய்கிறான். வீரமாணிக்கதேவர் என்ற தளபதியை வீரநாயகனுடன் சேர்ந்து சதி செய்து காக்கை வன்னியன் கொல்கிறான். வீரமாணிக்க தேவன் இறந்ததறிந்து சங்கிலியன் துயரப்பட்டிருந்தபோது பறங்கியர் சங்கிலியனை அரண்மனையில் முற்றுகையிடுகின்றனர். இக்காட்சிகளின் ஊடாக சங்கிலியன் நாடகத்தை நகர்த்தியுள்ளார் ஏழுமலைப் பிள்ளை.

மேலும் படிக்க ...

நூல்கள் கிடைக்கப்பெற்றோம்!

விவரங்கள்
Administrator
நூலகம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம் -

எமக்குக் கிடைக்கும் நூல்களை இங்கு ஆவணப்படுத்துவோம். அவ்வப்போது நூல்களுக்கான விமர்சனக் குறிப்புகள் எழுதப்படும்.  - பதிவுகள்.


காலப்புனல் - தே.செம்மனச்செல்வி, பொய்கை வெளியீடு

சினிமா: பார்த்ததும் கேட்டதும் - முருகபூபதி ஜீவநதி பதிப்பகம் (2023)

இலங்கையில் பாரதி - முருகபூபதி , முகுந்தன் பதிப்பகம், ஆஸ்திரேலியா (2019)

கதைத்தொகுப்பின் கதை (சிறுகதைகள்)  ,முருகபூபதி, ஜீவநதி ,இலங்கை (2021)

சதிவிரதன் (சிறுகதைகள்) - குரு அரவிந்தன் , மணிமேகலை  பிரசுரம் (2019)

யாதுமாகி நின்றவள் (சிறுகதைகள்),  குரு அரவிந்தன் , இனிய நந்தவனம் பதிப்பகம் (2022)

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து (கவிதைகள்), கவிஞர் புகாரி, யுனிவேர்ஸ் பப்ளீஷர்ஸ் (2019)

அன்புடன் நயாகரா (கவிதைகள்),கவிஞர் புகாரி, யுனிவேர்ஸ் பப்ளிஷர்ஸ் (2019)

எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை (கவிதைகள்)< ந.முரளிதரன், நாளை பதிப்பகம் (2020)

அஞ்சலி: எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்தார்!

விவரங்கள்
Administrator
இலக்கியம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்த செய்தியினை இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். அவரது மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கிக்கிடக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். கலைவாதி கலீல் பன்முகத்திறமை மிக்க இலக்கியவாதி. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மன்னாரிலிருந்துத் திடமாகக் கால்பதித்தவர். என் பால்ய பருவத்திலிருந்தே இவரது பெயரை ஏதாவதொரு சஞ்சிகை, அல்லது பத்திரிகையில் அவதானித்தே வந்துள்ளேன்  திக்குவல்லை, கமால், சாரணாகையூம், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார், எம்.ஏ.நுஃமான், பாலமுனை பாறுக், அன்பு ஜவகர்ஷா அடிக்கடி பல்வேறு அச்சூடகங்களில் தென்படும் பெயர்கள். எழுத்தாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர்  கலைவாதி கலீல் பற்றி நல்லதோர் அறிமுகக் கட்டுரையினை அவரது பவளவிழாவின்போது எழுதியிருக்கின்றார்.  17.10.2018 அன்று 'நியூஸ் பிளஸ்' இணையத்தளத்தில் வெளியான அக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இங்கு அஞ்சலிக் கட்டுரையாக மீள்பிரசுரம் செய்கின்றது. அத்துடன் எண்ணிம  நூலகமான 'நூலகம்'தளத்திலுள்ள அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு வெள்ளி ரூபாய்'க்கான இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றது. இணைப்பு - https://noolaham.net/project/06/544/544.pdf -


பவளவிழாவில்  கலைவாதி      - எம்.எஸ்.எம்.ஸாகிர் -

தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர்.  எள்ளளவும் கோபம் எடுக்காதவர்.இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல். மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.

மேலும் படிக்க ...

இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - தகவல்: ஜயகரன் -

விவரங்கள்
- தகவல்: ஜயகரன் -
நிகழ்வுகள்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியுடனொரு மாலைப்பொழுது!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று மாலை, கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியுடன்  5 Spice உணவகத்தில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோருடன் சந்தித்தோம்.  எழுத்தாளர் முருகபூபதி  குறிப்பாகப் போர்க்காலச்சுழலில்  தன் ஊடகத்துறை அனுபவங்களைவ் எதிர்கொண்ட பிரச்சினைகளையெல்லாம் எம்முடன் பகிர்ந்துகொண்டார். கதை, கட்டுரை, நாவல் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகள் என இவரது இலக்கியக் களம் பரந்தது. இவர் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. கடந்த 35 வருடங்களாக இவர் இலங்கை மாணவர் கல்வி  அமைப்பின் மூலம் இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களுக்கு ஆற்றும் சேவையினைப் பற்றியும் எமக்கு விளங்கப்படுத்தினார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது தலைமையில் இயங்கும் இலங்கை  மாணவர் கல்வி அமைப்பு மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பது உண்மையிலேயே  பிரமிக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

ஆச்சரியப்பட வைத்த வானொலி அறிவிப்பாளர் தர்சினி உதயராஜா! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
கலை
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.

இவர்களில் தர்சினி உதயராஜாவின் குரல் நேயர்களை மிகவும் கவர்ந்து விட்டதை அறிய முடிந்தது. பத்து வருடங்களுக்கு  முன்னர் இவர் நிகழ்ச்சியை கேட்டு விட்டு மீண்டும் பல வருடங்களின்  பின் கேட்டபோது அன்றிருந்த பல வாசகர்கள் மீண்டும் அவரது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ராஜவர்மன், அப்பன் என்று சில பெயர்கள் நினைவில் நிற்கும் வகையில் மீண்டும் மீண்டும் வானலையில் ஒலித்தன.இவர்களைப் போன்ற பல நேயர்கள் இவர் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்து பங்கு பற்றினார்கள் என்பதையும் அவர்களது கூற்றுக்களிலிருந்து அறிய முடிந்தது. இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நேயர்களை  அன்பொழுக அழைத்துச் செல்லும் அவரது குரல் என்பதை உணர முடிந்தது. நேயர்கள் இவரைச்  சகோதரியாக, சிநேகிதியாக, ஆசிரியையாக , சிறந்ததோர் ஊடகவியலாளராக, வானொலி அறிவிப்பாளராகப் பார்த்தார்கள் என்பதையும் உணர முடிந்தது.

மேலும் படிக்க ...

கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1. - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
08 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1

நானும் நண்பனும் ஒரு கதிரை வாங்கப் போனோம்.

விலை பேசி.. எல்லாம் முடித்தாயிற்று.

நண்பனுக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல் பற்றி எழுத விழைகிறேன்.

இதுவொரு முன்னோட்டம்.

ட்றெயிலர் என்று சொல்வார்களே அது.

தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம்.

லைக், சப்கிறிஸ்சன் தவிர்க்கப்படும்.

படித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க ...

'டொரோண்டோ'வில் எழுத்தாளர் சிவசங்கரி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.

இவரது எழுத்துகள் எழுபதுகளில், எண்பதுகளில் தமிழக வெகுடன இதழ்களை ஆக்கிரமித்திருந்தன. இவரது எழுத்து நடை அதுவரை எழுதி வந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்து நடையிலிருந்து சிறிது வேறுபட்டது. ஆண், பெண்ணுக்கிடையிலான  உறவினை, அன்பினை, அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் எழுத்து. 'இந்தும்மா' போன்ற அன்பொழுக இவரது நாயகர்கள் தம் இதயங்க கவர்ந்த காதலிகள், மனைவிகளை அதிகம் அழைப்பதை இவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அதன் பாதிப்பை இந்துமதி போன்ற எழுத்தாளர்களிடம் காணலாம். அதிகமாகத் தமிங்கிலிஸ் பிரயோகங்களை இவரது எழுத்தில் காணலாம்.

இவரது நாவல்கள் பல தமிழ்த்திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவரது நாவல்களை அதிகம் வாசிக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கின்றேன். 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை , நண்டு போன்ற இவரது கதைகளின் திரைப்பட வடிவங்களைப் பார்த்திருக்கின்றேன்.

என் பால்யப் பருவத்தில் விகடனில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான சிறு நாவல் 'எதற்காக?'

அந்நாவல் தொடராக வெளியானபோது வாசித்துள்ளேன். என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் அந்நாவலும் ஒன்று.  அதன் கரு   வாசிப்பவர் மனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அது என்னை ஏன் பாதித்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.  இந்த மானுட இருப்பு பற்றிய  தேடல் எனக்கு எப்போதுமுண்டு. ஏன் எதற்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் படைக்கப்பட்டுள்ளன?  எதற்காக எதிர்பாராத விளைவுகள் உயிர்களின் இருப்பில் ஏற்படுகின்றன? இவரது 'எதற்காக' என்னும் நாவலும் இப்பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளதால்தான் முதல் வாசிப்பிலிருந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. காதல் மிகுந்த , ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொட்டி வாழ்ந்து வரும் தம்பதிக்குக்  குழந்தை பிறக்கின்றது. இன்பத்தில் வளம் , நலத்துடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் அந்தப்பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில் மின்  ஒழுக்கினால் தீண்டப்பட்டு கருகி இறந்து விடுகின்றாள். எதற்காக இப்படி நடக்கின்றது என்று  கேட்கும் நாவலாசிரியை கடவுளிடமும் அதே கேள்வியைக் கேட்கின்றார் 'எதற்காக?'  வாசிக்கும் ஓவ்வொருவரும் கேட்கும் கேள்வி 'எதற்காக?'  

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (2) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்

சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.

3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: 54 சமகால ஆங்கிலக் கவிதைகளும் எழுத்தாளர் க.நவம் மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய 'எனினும் நான் எழுதுகிறேன்'

விவரங்கள்
- க.நவம் -
நிகழ்வுகள்
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “காலத்தைக் கடந்து நிற்கும் சிலப்பதிகாரம்”

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.

Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் கனடா, மிஸசாகாவில் இப்பொழுது நடைபெறும் கண்காட்சிச் சாலைக்குச் சென்றால் அங்கு பார்க்க முடியும். ((At Square One in Mississauga, located at 199 Rathburn Rd. W. Canada.) நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனஸோக்களை அவை எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு கற்பனையில் கணித்து ரோபோக்கள் வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கும் இப்படி ஒரு காட்சியைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏற்கனவே லண்டன், பாரிஸ், மட்ரிட், அமெரிக்காவில் டென்வர், ரெக்ஸாஸ், கொலராடோ, டலஸ் போன்ற இடங்களில் பல பார்வையாளர்கனைக் கவர்ந்த கண்காட்சியாக இது இருக்கின்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை: எங்கம்மா....! - ஸ்ரீராம் விக்னேஷ்-

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ்-
சிறுகதை
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கம்மா, திருநெல்வேலிக்கு வந்து, இந்த வீட்டை வாங்கிறப்போ எனக்கு பத்து வயசு. ஒத்தப்புள்ள நானு. அப்பா ஏவகூடவோ போயி ரெண்டு வருஷமாச்சு.

இப்போ வயசு நாப்பத்தைஞ்சு.... தொழில் கொத்தனார்.

எனக்கும் ஒத்தைப் பையன். ஒழுங்கா பத்தாம் கிளாசுகூட முடிக்கல. ஆத்தாக்காரி ஓவர் செல்லம். நான் வாயே தொறக்க முடியாது.

என்னை ஏசினாலும் பரவாயில்லை. ஆனால், அப்பப்போ எங்கம்மாவ வையிறதுதான் எனக்கு வருத்தம்.

. தனியா இருக்கிற நேரத்தில எங்கம்மா சொல்லும்....

“உங்கப்பன்கிட்ட .... நான் பட்ட கஷ்டத்த உன் பொண்டாட்டி படவேணாம்.... உன்னைய புடிச்சுப்போயிதான் ஓங்கிட்ட வந்தாளு..... அத எப்பவுமே நெனைப்பில வெச்சுக்க....”

எங்கம்மாவுக்கும் இப்போ எழுவது நெருங்கிகிட்டிருக்கு. இருந்தாலும், கண்ணாடி போடாமலே பேப்பர் படிக்கும்.... கையில கம்புவெச்சு அழுத்தாமலே வெறுசா நடக்கும்....

யாராச்சும் டூரிஸ்கைடுக வெளியூர் கோயிலுக்கெல்லாம் போறப்போ, என்னதான் பிரச்சினையிருந்தாலும், ஏங்கிட்ட வந்து, துட்டுக்குடுலேன்னு சண்டைபோட்டு புடுங்கிகிட்டு தானும் டூர் போயிடும்.

. பக்கத்து ஊர்ல, முதியோர் காப்பகம் ஒண்ணு இருக்கு. மேனேஜர் பொறுப்பில இருக்கிறவரு ஞாயித்துக் கெழமையில நான் வீட்டில இருக்கிறப்போ வந்து பேசீட்டுத்தான் போவாரு. நேர்மையாவும் பழகுவாரு.

“ஏல மேனேஜர் தம்பி.... உங்க காப்பகத்தில சேருறதிண்ணா, துட்டுக் குடுக்கணுமா.... இல்லே பிரீயா.....”

எங்கம்மா கேட்டிச்சு.

எனக்கு கொஞ்சம் கடுப்பாகிரிச்சு.

மேலும் படிக்க ...

ஆய்வு: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (1) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.1 அறிமுகம்

மனித வாழ்வு முழுவதும் ஏற்றமும் இறக்கமும் விரவிக் கிடக்கின்றன. அவ்வாழ்வில் ஏற்படும் சோதனைகளால் மனிதன் துவண்டு போகின்றான். செய்வதறியாது சோர்ந்து போகின்றான். அச்சோர்வை நீக்க ஆடலும் பாடலும் கேளிக்கையும் கூத்தும் தோற்றம் பெற்றன. “ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது” என்ற அழகான பாடல் வரிகள்கூட இவற்றையே மெய்ப்பிக்கின்றன. கிராமப்புற மக்கள் தமது ஓய்வு நேரத்தைக் கலைவாழ்வில் செலவழித்தனர். அவ்வேளைகளில் தமக்குத் தெரிந்த ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறுதான் கலைச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றன.

நாடகக் கலையும் இன்பமூட்டக்கூடிய ஒரு கலைதான். மக்களின் வாழ்க்கை முறையிலும் வழிபாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வாறு மண்ணின் வேர் பிணைந்திருக்கிறதோ அவ்வாறே நாடகக் கலையாலும் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடிந்திருக்கிறது.

கடவுள் வழிபாட்டில், காதலில், பிரிவில், வெற்றியில், தோல்வியில், மொழியில், இலக்கியத்தில் என இன்னோரன்ன அம்சங்களுடன் இந்தப்பண்பு இணைந்திருக்கின்றது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய வேண்டுமாயின் அவர்தம் கலைகளைச் சீர்தூக்கிப் பார்த்தாலே கண்டுகொள்ளலாம் என்று கூறுவர். ஆதிகால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பித்த இந்தப் பண்பு வரலாறு முழுவதும் நீண்டிருக்கிறது.

நாடகக் கலையானது பாராம்பரியமும் பழமையும் மிக்கதொரு கலையாக இருக்கிறது. அது கூத்துக் கலையாக ஆரம்பித்து நாடகமாகி அரங்கியற் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. மக்களின் சிந்தனையைத் தூண்டவும், அவர்களை ஒரே கொள்கை நோக்கித் திரட்டவும் இதனால் முடிந்திருக்கிறது. இன்று ஒருவருக்குத் தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுக்கின்ற கற்கைத் துறையாகவும் உயர்ந்திருக்கிறது. இவ்வாறான கலைத்துறையில் தன்னை அர்ப்பணித்த வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகம் சார்ந்த பணிகளை மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

மேலும் படிக்க ...

நேற்று 'டொராண்டோ'வில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட நிகழ்வு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தால் 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட 'தமிழ் இலக்கியத் தோட்டம்' கனடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை. 9 இயக்குநர்களையும், இரு போசகர்களையும் உள்ளடக்கிய இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசனிருக்கின்றார். காரியதரிசியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும், பொருளாளராக எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும் இருக்கின்றனர்.

நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள் பலரையும் காண முடிந்தது. எழுத்தாளர் முருகபூபதி பதிவுகள் இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதுபவர், அவரை இப்பொழுதுதான் முதன் முறையாகச் சந்தித்தேன்.   எழுத்தாளர் பாவண்ணனுடன் சில நிமிடங்களே உரையாட  முடிந்தது. அவர் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கணையாழியில் எழுதிய 'குறி' சிறுகதை எனக்குப் பிடித்த சிறுகதைகளிலொன்று. அது பற்றி கணையாழிக்கு வாசகர் கடிதமொன்றும் எழுதியுள்ளேன். பதிவுகளிலும் பாவண்ணனின் 'போர்க்களம்'  என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் பாவண்ணன், என்.கே.மகாலிங்கம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தம்பதியர், ராஜாஜி ராஜகோபாலன் (மணற்காடர்), குரு அரவிந்தன், அகணி சுரேஷ், கவிஞர் புகாரி, நடராஜா முரளிதரன், 'உதயன்' லோகேந்திரலிங்கம்,  பா.அ.ஜயகரன், கனடா மூர்த்தி, சாம்ராஜ், காலம் செல்வம், தேவகாந்தன், ஶ்ரீரஞ்சனி, சுமதி ரூபன், டானியல் ஜீவா, சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான பாலச்சந்திரன் முத்தையா, 'வெண்மேரி ' அறக்கட்டளை அநுரா , கலை இலக்கிய ஆர்வலர் முருகதாஸ், 'அகரம்தமிழ்' ஸ்தாபகர் (பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை) ஆகியோரைச் சந்திக்க முடிந்தது.  நிகழ்வில் 'டொரோண்டோ'வின் வர்த்தக,கலை, இலக்கிய ஆளுமைகள் பலரைக் காண முடிந்தது.

மேலும் படிக்க ...

பதிவுகள்.காம் பதிப்புத்துறையில்......

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது.  52  கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் இயங்கும் பதிவுகள்.காம் அச்சுருவில் வெளியிடும் முதல் நூலிது. சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர். எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவர இது வழி சமைத்திருக்கின்றது.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்‌ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை. அதன் நிறுவனர் அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான  நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக வந்தது. அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.

2003 ஆம் ஆண்டு எமது மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களுக்கு சாகித்திய ரத்தினா விருது கிடைத்த சமயத்தில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வெள்ளவத்தையில் ஶ்ரீதரசிங் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்துடன் நடந்தது. அந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது,  பாக்கியம் அம்மாவை அழைத்து, அவரது கணவர் பூபாலசிங்கம் அவர்களின் படத்துக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டேன். அந்தப்படத்தையே நான் ராஜெனின் குறிப்பிலிருந்து பார்த்து, பாக்கியம் அம்மாவுக்கு மனதிற்குள் அஞ்சலி செலுத்தினேன்.

எமது தமிழ் சமூகத்தில் பொதுவாழ்க்கையில் அதிலும் இடதுசாரி முகாமிலிருந்து இயங்கும் எந்தவொரு ஆண்மகனுக்கும் வாய்க்கும் மனைவி சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிதானமும் மிக்கவராக இருக்கவேண்டும்.

வடபுலத்தில் நயினா தீவை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள் பூபாலசிங்கம் தம்பதியர். நயினை நாகபூஷணி அம்பாளை குலதெய்வமாக போற்றியவர்கள். இவர்களின் குடும்பம் அந்த ஆலயத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், குடும்பத்தலைவர் பூபாலசிங்கம்,  இடதுசாரி இயக்கத்திலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வந்திருப்பவர். தங்களுக்கெல்லாம் இலக்கிய நூல்களை இலவசமாகத் தந்து படிக்கவைத்து எழுத்தாளராக்கிவிட்டவர்தான் புத்தகக் கடை பூபாலசிங்கம் என்று மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லி வந்திருப்பதுடன் தனது வாழ்க்கை சரித நூலிலும் பதிவுசெய்துள்ளார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் என்.சரவணனின் 'யாழ் நூலக எரிப்பு' பற்றிய 'தாய் வீடு' கட்டுரை பற்றிய முகநூல் பதிவும் , அதற்கான அவரது எதிர்வினையும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி  ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில்  எழுதியுள்ளார்.  அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.

அப்போது யாழ் நூலகராகவிருந்த ரூபவதி நடராஜா தனது 'யாழ்பபாணப் பொது நூலகம் அன்றும் இன்றும் ' என்னும்  நூலில் தெளிவாக நூலகம் எரிக்கப்பட்டது ஜுன் 1 இரவு என்றே குறிப்பிட்டிருக்கின்றார். 20.6.1981 வெளியான ஈழநாடு பத்திரிகைச் செய்தியிலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் சிவஞானமும் அவ்விதமே கூறுகின்றார். பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் அவர்களும் அவ்விதமே குறிப்பிடுகின்றார்.  இந்நிலையில் சரவணன் அவர்கள் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 என்று கூறும்போது ஏன் மேற்படி தகவல்கள் எல்லாம் தவறானவை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன்?

மேலும் படிக்க ...

இலங்கைப் பயணக் கதையினை எழுதுவது எப்படி ? - அமரர் கல்கி, மணியன், சாரு நிவேதிதா, அராத்து, அ.மார்க்ஸ், சரவணன் மாணிக்கவாசகன் மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் எழுதிய இலங்கைப் பயணக் குறிப்புக்கள் தொடர்பாக --- - வாகீசன் -

விவரங்கள்
- வாகீசன் -
வாகீசன்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.

கல்கியின் 'இலங்கைப் பயணம்' 1938 இல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. மணியனின் 'இலங்கைப் பயணக் கட்டுரை'யும் ஆனந்த விகடனிலேயே தொடராக 1978 இல் வந்து, பின் 1979 இல் நூலாக வெளி வருகின்றது. இருவருமே பார்ப்பனிய எழுத்தாளர்கள். இருவரது எழுத்துக்களிலும் அவர்களது சாதியபிமானம் பல்வேறு சமயங்களிலும் தலை தூக்கும். மணியன் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அதனைப் பயணக் கட்டுரைகளாக எழுதியவர். முன்னரெல்லாம் ஒரு பயணக் கட்டுரையினை எப்படி எழுதக் கூடாது என்பதற்கு இவரை உதாரணமாகக் கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையில் இவர்களிடமே ஆலோசனை கேட்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். கல்கி பின்னர் 'இலங்கையில் ஒரு வாரம்' என்ற நூலையும் 1950 வாக்கில் எழுதியிருப்பதாக அறிய முடிகின்றது. ஆயினும் அது எனது பார்வைக்குக் கிட்டவில்லை.

கல்கிக்குத் தெரியும் அவரது வாசகர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதென்பது. ஆயினும் அவர் தனது பயணத்தினை பயமின்றி நேர்மையாகப் பதிவு செய்கிறார். இராவணன் ஒரு முட்டாள் என்பதாகக் கூறிக் கொண்டே தனது கட்டுரையினை ஆரம்பிக்கின்றார், இலங்கை அரசு அன்று இந்தியப் பயணிகள் மீது இந்தியர்கள் மிகவும் சுகாதாரக் குறைவானவர்கள் என்ற வகையில் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் சாடுகின்றார். யாழ்ப்பாணத்தின் கல்வி மேம்பாடு அவரை அசர வைக்கின்றது. யாழ்ப்பாணத்துச் சாதீயக் கொடுமைகள் குறித்து அவர் எதுவும் பேசவில்லையாயினும் இங்குள்ள சீதன முறைமை தமிழகத்தை விட மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2022ம் வருட விருதுகள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் வருடத்துக்கான இயல் விருது விழா ஜூன்  4, 2023 , ஞாயிறு அன்று 'ரொறன்ரோ - ஸ்கார்பரோவில் 430 Nugget Avenueவில் அமைந்துள்ள The Estate Banquet and Event Centre மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் பிரதம விருந்தினராக ஜப்பானியத் தமிழ் அறிஞரான Thomas Hitoshi Pruiksma கலந்துகொள்ளவுள்ளார். விழா இராப்போசன விருந்துடன் நிறைவு பெறும்.

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
02 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.

மொத்தத்தில், அமெரிக்க-ஆங்கிலேய-ஜெர்மனிய ஆயுத வியாபாரிகளின் பைகள் நிரம்ப போகின்றன என அவர்கள் மகிழ்ந்து கொள்ளும் நடைமுறையில். காசடிக்கும் இயந்திரங்களும், வட்டி வீதங்களை உயர்த்தும் வங்கிகளும், இறைமுறிகளை விற்று தீர்க்கும் மும்முரமும், ரொம்பவே, நேரமற்று, செயலில் இறங்க போகிறது என்பது தெளிவு.

சுருக்கமாக கூறினால், இந்த வாக்கெடுப்பு ஒற்றுமை நிலையானது, இவ்விரு கட்சிகளின் அரசியலானது, அடிப்படையில் போலித்தன்மை கொண்டது-போலியானது என்பதனையும், அது வேறு ஏதேனும் அரசியல் நலனை பிரதிபலித்து நிற்பது என்பதும்–எந்த ஒரு அடித்தள மக்களின் அரசியலையும் இது ஒரு சிறிதும் பிரதிபலிப்பது அல்ல–என்ற எண்ணப்பாடும், மேற்படி நடவடிக்கைகளால் (வாக்களித்ததற்கூடு) இன்று வெகுஜனமய படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசியல்தான், மேற்கின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும், திறைசேரி அதிகாரிகளிலும் (Janet Yellen அம்மையார் உட்பட), மற்றும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலித்து நின்று–எப்படி ‘கோடிகளை’ திரட்டி தமக்கு பதவி தரும் ஆயுத வியாபார-கோடீஸ்வரர்களின் காலடியில் சமர்ப்பிப்பது என்பதற்கான, சதி திட்டத்தை உருவாக்கி கொள்கின்றன-இவற்றில் இருந்து வீசப்பட்டு, பொறுக்கி எடுக்கப்படும் எலும்பு துண்டுகளோடு, வாசம் நிகழ்த்துவது திருப்தி தருவதாகவே உள்ளது எனும் கூட்டமும் மகிழ்ந்திருக்க. ஆனால், இத்திட்டங்கள் அல்லது இவ் அரசியல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உகந்த சூழ்நிலை உலகில் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டி உள்ளது. இதன் ஒரு வெடிப்பே, உக்ரைன்-ரஷ்ய போர் என்பதையே இக்கட்டுரை தொடர் வாதிக்க முனைந்த விடயமானது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
  2. யாழ் நூலக எரிப்பு தின நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -
  3. கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
  4. லண்டனில் தமிழ் மக்களின் சதுரங்கச் சுற்றுப் போட்டி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  5. கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும்! - ஜோதிகுமார் -
  6. காலத்தால் அழியாத கானம்: 'எங்கே அந்த வெண்ணிலா' - ஊர்க்குருவி -
  7. சிறுகதை : அதிகாரம் - சுப்ரபாரதிமணியன் -
  8. இலக்கியவெளி இதழ்கள் அறிமுகமும், உரையாடலும்! - சு. குணேஸ்வரன் -
  9. எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -
  10. 'ரொக் இசையின் இராணி (Queen of Rock 'n' Roll) மறைவு! - ஊர்க்குருவி -
  11. காலத்தால் அழியாத கானம்: தேனாற்றங் கரையினிலே.. ஊர்க்குருவி -
  12. வண.பிதா. செ. அன்புராசா அடிகளாரின் 'அன்புள்ள ஆரியசிங்க' வாசிப்பு அனுபவம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  13. முதல் சந்திப்பு: மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942–2022) - முருகபூபதி -
  14. 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை...' - வ.ந.கிரிதரன் -
பக்கம் 69 / 126
  • முதல்
  • முந்தைய
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • அடுத்த
  • கடைசி