முக்கொம்பன் , பூநகரியில் நூலகம் அமைக்கும் திரு.குகனுஜன்! நூலகத்துக்கு உலகெங்குமிருந்து நூல்களை அனுப்பி உதவிடுவோம்! - வ.ந.கி -

- -
அண்மையில் முக்கொம்பன், பூநகரியிலிருந்து என் முகநூல் நண்பர்களில் ஒருவரான குணரட்னம் குகனுஜன் ( Kunaradnam Kukanushan ) அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தான் வசிக்கும் பகுதியில் ஊரிலுள்ள பலரின் உதவியுடன் நூலகமொன்றினை அமைத்துள்ளது பற்றியும், அதற்கு பலரின் உதவியுடன் பாட நூல்கள் பலவற்றைக் கொள்வனவு செய்துள்ள விபரத்தையும் தெரியப்படுத்தியிருந்தார். மாணவர்கள் தம் நன்மைக்காக பலரின் உதவிகளுடன் நூலகம் அமைக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. சமுதாயப் பயன்மிக்க செயற்பாடு. அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப்பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் தம் நூல்களை அனுப்பி உதவலாம்.
தம்மிடமுள்ள நூல்களை இவர் உருவாக்கியுள்ள நூலகத்துக்கு அனுப்பி உதவ விரும்பினால் , இவருடன் மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள். இவருடைய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். தொலைபேசி இலக்கம்: +94770662917
இவர் அண்மையில் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.




உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.
குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.
30/4/23, காலை 10 மணி ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற பதினைந்தாவது குறும்பட விருது விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார். 
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில், ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்த நபர் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கையில் சில சிங்கள திரைப்படங்கள் முன்னர் வெளிவந்துள்ளன. ஹ◌ாரலக்ஷே ( நான்கு இலட்சம் ) தடயம ( வேட்டை ) உதுமானெனிய ( மேன்மைதங்கிய ) முதலானவை அவற்றில் முக்கியமானவை. இவற்றில் காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்கிரம, ரவீந்திர ரந்தெனிய, சுவர்ணா மல்லவராச்சி முதலான மிகச்சிறந்த சிங்கள நடிகர்கள் நடித்திருந்தனர். அந்த வரிசையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படுகாகஹே டொன் சுமதிபாலா எமது இலங்கை சமூகத்தில் அனுதாபத்திற்குரிய மனிதன்.

அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின் 43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.



இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது. 
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.






உழைத்துமே உயர்ந்திடு வோமே! 
அதிகாரம் என்ன செய்யும்?