தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்! (பகுதி இரண்டு) - ஈழக்கவி -
“காதல் என்கிற மனமெய் உணர்வு எங்கேயும் எப்போதும் அழகானது. சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே. ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ, தத்துவ ரீதிகளில் அணுகப்படும் நாவல்களினால் பிழிந்தெடுத்து முன்வைக்கப்படுகிறபோது, மனம் வாசகப் பரவசம் கொண்டுவிடுகிறது.” பக். 15
‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும். ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே. பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது. அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.
“1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது. ஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன. அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்' பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக் கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை.” (பார்க்க, வ.ந.கிரிதரனின் பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) தேவகாந்தன் தன்னுடைய படைப்புகள் பற்றி (மனம் திறந்த) இவ்வாறான விமர்சன மதிப்பீடுகளைக் கொண்டிருப்பவர். எனவே ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலிலுள்ள நாவல்களைப் பற்றிய பத்திகளில் அவரே குறிப்பிடுவது போல, ‘நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு’ எழுதியிருக்கிறார்.
புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும் நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன
பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -
நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
வீட்டை அடைந்த பிறகு , தில்லை மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும் , பூமலருக்கும் ரிம் கொட்டனே போதுமாகவிருந்தது . 
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.


நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை. கார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம் காரணம் அல்ல. நாட்டியக்கலை தொடர்பாக அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர். இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில் புதிய அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர. இந்த ஆண்டு தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.
தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை. 'மாமனிதர்' சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். 





