பதிவுகள் முகப்பு

சிறுவர் நாடகம்: புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..! - பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன் -

விவரங்கள்
- பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன் -
சிறுவர் இலக்கியம்
14 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காட்சி – 1 (அப்பா, அம்மா, மகள், மகன்)

அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)

தங்கை: அண்ணா எழும்புங்கோ. இண்டைக்குத் தைப்பொங்கல் எல்லே.. எழும்புங்கோ அண்ணா…

அண்ணா: (குறட்டை ஒலி கிர்… கிர்…. என்று கேட்கவேண்டும்)

தங்கை: அண்ணா எழும்புங்கோ…!

அண்ணா: (மீண்டும் குறட்டை ஒலி)

தங்கை: அம்மா..! அண்ணா எழுபுறாரில்லை..!

(அம்மா உள்ளே வருதல்)

அம்மா : மகன் எழும்புங்கோ, இண்டைக்கு தைப்பொங்கல்எல்லே, எழும்பி குளிச்சிட்டு வாங்கோ

(மகன் எழும்பாது பிரண்டு படுத்தல்)

மேலும் படிக்க ...

அனைவருக்கும் 'பதிவுக'ளின் பொங்கல் நல்வாழ்த்துகள்!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
14 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலிக்குறிப்பு : ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் !  - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
14 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.

ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறு வேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றி பெற்றுவிடுகின்றன. “

இவ்வாறு அர்த்தம் பொதிந்த எழுத்தை எழுதிய எமது அருமை இலக்கிய நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் நேற்றைய தினம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அதிர்ந்துவிட்டேன்.

மேலும் படிக்க ...

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சமூகம்
14 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)

தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர். இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.

மேலும் படிக்க ...

கவிதை: தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர் !  -      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்,  மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
-      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்,  மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
 
தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம் 
பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
தையெனவே எண்ணி தான்மகிழ்ந்து நிற்போம் 
 
தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
தைப்பொங்கல் வாழ்வில் தனிதிருப்பம் அளிக்கும்
உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும் 
மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்' நூல் அறிமுகக் குறிப்பு!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்'நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு:

https://www.youtube.com/watch?v=ltXI-UfI83A

இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத்தடுப்பு முகாம் வாழ்வனுபவங்களை சிறு நாவலான 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல், 'குடிவரவாளன்' , சுமார் ஒரு வருட காலம் நியூயோர்க் மாநகரத்தில் இருப்புக்காக அலைந்து திரிந்த அவனது வாழ்வை விபரிக்கின்றது. 

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி - முனைவர் இர.ஜோதி மீனா , உதவிப் பேராசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641028. -

விவரங்கள்
– முனைவர் இர.ஜோதி மீனா , உதவிப் பேராசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641028. -
நூல் அறிமுகம்
12 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி – ஆசிரியர் டாக்டர் சிவ.விவேகானந்தன் , வெளியீடு காவ்யா, விலை – 300


நூலாய்வு
தேனடைகளைக் கொண்ட ஏராளமான ஆலமரங்களைக் கொண்ட ஊருக்குச் சிதரால் என்று பெயர். இப்பெயர் குறித்து கல்வெட்டுகளிலோ, கதைப் பாடல்களிலோ இல்லை என்பைதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். சிதரால் நடுவே அமைந்துள்ளது திருச்சாரணத்துமலை. மலை உச்சியில் சமணப்பள்ளி ஒன்றும் உள்ளது. திருச்சாரணத்து மலையில் வீற்றிருக்கும் படாரியான பத்மாவதி அம்மனுக்கு (இவர் இயக்கி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்) ஆறாட்டுக்காக, சமணப் பெண் துறவிகளால் வெட்டப்பட்ட நீர்ச்சுனை ஒன்று உள்ளது. சமணப்பள்ளி ஏறத்தாழ ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சமணப்பள்ளி சமண மடாலயம் என்று அழைக்கப்பட்டது.

சமண சமயத்து இளந்துறவிகளான சாரணர்கள் சிதரால் மலையில் தங்கியிருந்து சமணப் பணி செய்துள்ளனர். திருச்சாரணத்துமலை சமணப் பள்ளியைப் போல முற்காலத்தில் பல பள்ளிகள் அமைந்துள்ள திருச்சாரணத்து மலைக் கோவிலில் பாசுவநாதரும், பத்மாவதி இயக்கியும் கோவிலில் தெய்வமாக இருந்துள்ளனர். வியப்பு என்னவென்றால் சைவம் புகுந்த போது சமண சமயத்து இயக்கியான பத்மாவதி, சைவசமயத்து பகவதி அம்மனாக மாற்றம் பெற்றனர்.

தொடக்கத்தில் குகைப் பள்ளியாக இருந்த இக் குகை 8ஆம் நுற்றாண்டிலிருந்து குகைக் கோவிலாக மாற்றம் பெற்றது. வழிபாடுகளும் சமயப் போதனைகளும் இங்கு நடைபெற்றன. குகைக் கோவிலாக மாற்றம் பெற்ற நிலையில் இந்துக்கோவிலாக மாறி பகவதி அம்மனான உருமாற்றம் பெற்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை:  துலக்கம்    -  கன்பரா யோகன் -

விவரங்கள்
-  கன்பரா யோகன் -
சிறுகதை
12 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.

அது திண்ணையில் ஏற்றி வைக்குமளவுக்கு அப்படி ஒரு புது சைக்கிள் இல்லை. ஆனால் முற்றத்தில் நின்றால் அயலிலுள்ள நாய்கள் வந்து சில்லில் மூத்திரம் பெய்து விட்டுப் போகின்றன. அதனால் றிம்மில் பொருத்தியுள்ள கம்பிகள் கறல் பிடித்துப் போகின்றன.

தகர பேணிக்குள்ளிருந்த கொஞ்சத் தேங்காயெண்ணெய்க்குள் போத்தலிலிருந்த மண்ணெணெயில் கொஞ்சம் கலந்தான். மண்ணெணெயின் நாற்றம் மூக்கிலடித்தது. வெள்ளைத்துணியைப் பேணிக்குள் ஒற்றி மட்காட் வளைவுகளைத் துடைக்கத் தொடங்கியபோது பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி அழைப்பு நெஞ்சில் கிறு கிறு என்று கீச்சம் காட்டியது.

இடக்கையால் அதை எடுக்க தொலைபேசியில் கோமதி

" சின்னா ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போய் வாடா" அவள் இப்படிக் கெஞ்சுவதற்கு ஒரு ராகம் இழுத்தாள்.

“ஏன் உன்ரை புருஷன் எங்கை?"

“கொழும்புக்கு அவர் வான் கொண்டு போய் ஒரு கிழமையா இன்னும் வரேல்லை. அங்கயிருந்து வேற ஒரு ஹயர் வந்ததால கதிர்காம பக்கம் போக வேண்டி வந்திட்டுதாம்”.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் பேராசிரியர் கல்யாணராமன் தொகுத்த ‘ஜானகிராமம்’ கட்டுரைத்தொகுப்பு குறித்த விமர்சனக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்! 

விவரங்கள்
தகவல்: - பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் நேரம்: எழுபதுகளில் யாழ் நகரத் திரையரங்குகளும், ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்டு'களும்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுபதுகளில் யாழ் நகரத்து திரையரங்குகளும், கட் அவுட்டுகளும் பற்றிய காணொளி. காணொளியைப் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=tmkj1O8-foM 

மேலும் படிக்க ...

'வ.ந.கிரிதரனின் நேரம்' (யு டியூப் காணொளி): 'அமெரிக்கா' நாவல் பற்றிய அறிமுகம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
எனது ,வ.ந.கிரிதரனின், 'அமெரிக்கா' நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு.
மேலும் படிக்க ...

“இலக்கியவெளி” நடத்தும் “சாந்தன் எழுதிய 'சித்தன் சரிதம்' நாவல் குறித்த திறனாய்வுக் கூட்டம்”   -  தகவல்: அகில் -

விவரங்கள்
-  தகவல்: அகில் -
நிகழ்வுகள்
09 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

எதிர்வினை: 'மஹாகவியும் கட்டற்ற தேடலும்' என்ற தலைப்பில் 'பதிவுகள்' இணைய இதழில் ஜோதி குமார் எழுதிய நீள்கட்டுரைக்கான எதிர்வினை – - உடையப்பன் அன்பரசு லெனின் -

விவரங்கள்
- உடையப்பன் அன்பரசு லெனின் -
இலக்கியம்
08 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புவோருக்கான அறிவிப்பில் 'ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே! உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது.'என்று கூறியிருக்கின்றோம். அத்துடன் 'பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும்' என்றும் கூறியிருக்கின்றோம். பதிவுகளுக்குப் படைப்புகள், எதிர்வினைகள் அனுப்புவோர் அவற்றில் தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கொப்ப ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவி பற்றிய கட்டுரைக்கான உடையப்பன் அன்பரசு லெனினின் எதிர்வினையில் சில சொற்பதங்களைக்கொண்ட  சொற்றொடர்களைத்  தவிர்த்திருக்கின்றோம். ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்துகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -


பகுதி - 1
ஜோதிகுமார் எழுதிய கட்டுரையை 'ஆய்வு' என்று தலைப்பிட்டு, 'பதிவுகள்' வெளியிட்டதும் அதற்கு பதில் எழுதுவதும் நம் காலச் சூழலின் அவலங்கள். பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் 1984இல் எழுதிய அறிமுகக் குறிப்பிற்கு, மாக்சிம் கார்க்கியின் முழுத் தொகுப்பின்  8ஆம் ,9ஆம் பகுதிகளையும் , லெனின் கலை இலக்கியம் பற்றி எழுதிய நூலையும், Van Gogh, A.J.Abdul Kalam  ஆகியோர் எழுதிய நூல்களையும் இன்ன பிறவற்றையும் வாசித்து பதில் எழுத இவருக்கு 37 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அல்லது, பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தொகுத்த 'மஹாகவியியல்' தொகுப்பை வாசித்து, அருட்டுணர்வு கொண்டு, அங்கே கண்டடைந்த மு.பொ.வின் விமர்சனங்களை விளங்காமல் உருவி (மு.பொ. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய விமர்சனங்களைப் பிரசாந்தனின் தொகுப்பில் காணுமளவிற்கான வாசிப்புப் பலவீனத்துடன்), அதை முதலாய் வைத்து மஹாகவி பற்றித் தானும் பேசலாம் என்று இவர் காட்டியிருக்கும்  அறிவீனத்திலிருந்து இவரே மீள வேண்டும்.   தனது வாசிப்புப் பலவீனத்தையும் மு.பொ. கருத்தைத் தனது கருத்தாக்கி இன்னொரு முலாம் தடவிக் காட்டும் வித்தையையும் ஆங்கில நூல்களைப் பிழையாக அர்த்தம் கொள்ளும் தவறினையும் வெளிச்சமாக்கியுள்ளார்.

மேலும் படிக்க ...

அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) வெளிவந்துள்ளது.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது கட்டுரைகளின் தொகுதி , வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் (தொகுதி ஒன்று), தற்போது அமேசன்& கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது ஒரு பதிவுகள்.காம் வெளியீடு . இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

மேலும் படிக்க ...

(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (6) - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 6

அத்தியாயம் ஒன்பதில் பின்வரும் பகுதி காணப்படுகின்றது:

“அவர்களில் இரண்டு பேர் இலங்கையில் இருந்து வந்தவர்கள். ஒரு வயதான சீமாட்டி. அவள் பெயர் திருமதி கெல்வின். அவளுடைய மருமகன் திருவாளர் கெல்வின். நுவரெலியாவில் தோட்டங்களை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றார்” (பக்கம்-268)

சம்பாசனை நடக்கும் காலப்பகுதி நாவலின் பிரகாரம் 1878.

ஆனால் இலங்கையின் நுவரெலிய வரலாற்றை எடுத்து நோக்கினால் நுவரெலிய பிரதேசத்தில் முதல் தோட்டமான யெதர்செட் (Hethersett), 150 ஏக்கரில் சிங்கோனாவால் பயிரிடப்பட்டு,  W.Floverdew என்பவரால் ‘1881’ லேயே நிர்மானத்துக்குள்ளாகின்றது. மேற்படி முரணை பிரதானமாக கொள்ளாவிட்டாலும், மேற்படி இலங்கை தோட்டங்கள் தொடர்பிலான குறிப்பு, தவிர்கமுடியாதபடி, நாவலின் தலையாய கதாப்பாத்திரமான ஏய்டன் எனும் மனிதனையும் இதே ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கை தோட்டங்களுக்கு வந்து சேர்ந்த இன்னுமொரு இளைஞனான பிரிஸ்கேட்டிலையும், இருவேறு வரலாற்றுப் பாத்திரங்களாக, எம்மை ஒரு கணம், ஒப்பு நோக்க செய்து விடுகின்றது.

மேலும் படிக்க ...

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (8): குளக்கரை - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


அமைதியாக கிடந்தது குளம்.

பூம்பாறை செல்லும் வழியில், ஒரு சாலையோர தேநீர் கடைக்காரர் என்னை எச்சரித்திருந்தார், காடுகளின் ரம்மியங்கள் குறித்து பேசும் போது:

“நேரே மண்ணனூர் போயிருங்க சார்… காடு… அப்படி ஒரு காடு… ஆனா நீங்க யாராவது ஒரு ஃபாரஸ்ட் ஆப்பிசரோடத்தான் உள்ள போகனும்… ஏன்னா வனத்து தேவதைக வாசம் செய்ற காடு அது… அடிக்கிற காத்துலேயே வசியம் கலந்து இருக்கு… ஆள மயக்கி, புத்திய பேதலிக்க வச்சு அப்படியே சர்ருன்னு உள்ளுக்கு இழுத்துக்கும்…”

இலக்கியங்களும், மனிதர்களை காடுகள் எப்படி எப்படி ஆகர~pப்பதாய் இருக்கின்றன என்பதை நன்கு பதிவு செய்தே உள்ளன. இதுபோலவே இக்குளமும் சிற்சில மனிதர்களை தன்வசம் இழுத்து உள்ளே வைத்து கொள்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது என்னிடம் பெரிதாய் எழுந்தது.

இக்கேள்விகள் எல்லாவற்றிற்கும், காரணமே பெரியவர்தான்.

அவரது வார்த்தைகளில் கூறுவதானால், “எங்கோ பிறந்து, எங்கோ அலைந்து”, பின் போராடி, ஸ்தாபித்து, அலைகளால் எத்துண்டு வாழ்வால் அலைக்கழிக்கபட்டு போன ஒரு நாராய் இப்புல்வெளியில் வந்து சாய்ந்த அவரை, இக்குளமே அரவணைத்து ஆசுவாசப்படுத்தியிருக்க கூடும். பெருந்தன்மையும், வாழ்வில் தன் சக மனிதனை முடிந்தவரை உய்விக்க முயன்று அவனுக்காய் அனுதாபங்கள் கொண்டு விசனிக்க தலைப்பட்டவர் அவர். அவரின் அகத்திடை தோய்தலுக்கான ஓர் வெளியையும் இக்குளமே அவருக்கு ஏற்படுத்தி தந்திருக்கவும் கூடும். “மூளையில சிக்கினிச்சோ, அப்புறம்…” என்று சமயங்களில் மனிதர்களின் எச்சரிப்புகளுக்குள்ளாகும் இக்குளம் சிலரது வாழ்வில், பனிபடர் பர்வத சாரல்களின் குகை தவங்களா என்பதும் புரியவில்லை.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் கோவி மணிசேகரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றி நினைத்ததும்  பல நினைவுகள் படம் விரிக்கின்றன. என் பால்ய காலத்து வாசிப்பனுவத்தில் இவருக்கும் பங்குண்டு. கல்கியில் இவரது சிறுகதைகள் பலவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன். இவரது தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது. ராணிமுத்துப் பிரசுரமாகவும் இவரது வரலாற்று நாவலான 'சோழநிலா' வெளியாகியுள்ளது. 'ராஜசிம்மன் காதலி'யும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளிவந்த விடயத்தையும், அந்நாவல் பின்னர் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக 'ராஜசிம்ம பல்லவன்' என்னும் பெயரில் வெளியான தகவலையும் தமிழ் வரலாற்று நாவல்களை ஆவணப்படுத்தி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் அறியத்தந்திருந்தார். அத்துடன் 'ராஜசிம்ம பல்லவன்' நூலின் பிரதியினையும் அனுப்பி உதவினார். அவருக்கு என் நன்றி.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது! - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
03 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 12

அக்காள் காட்டிய வீடியோ காட்சி, என்னை அதிரவைத்த காரணம், அதிலே அவளின் மகன் தனது இரண்டு கக்கத்திலும் கைத்தடியை வைத்தபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.

மீண்டும் என்னைக் கிண்டல்,கேலி பண்ணும் நோக்காய் இருக்குமோ என்று ஒருகணம் தோன்றியபோதிலும், அந்தக் கைத்தடிகள் ஒறிஜினல் என்பதால் அங்கே விளையாடுவதற்கு சான்ஸ் இல்லை.

எத்தனை துடியாட்டம், எத்தனை சேட்டைகள், கூச்சல்,கும்மாளம்ண்ணு ஒருகணம்கூட சோர்ந்தே இருக்காத பையன், இலேசாகத் தலையைச் சாய்த்த நிலையில், ஊமைபோல வருவதைக் கண்டபோது, என் உள்ளம் உருகிப்போனது.

மீண்டும் அக்காளின் முகம். தொடர்ந்து பேசினாள்.

“பாத்துக்கிட்டியா…. சொல்லுப்பேச்சுக் கேக்காம சேக்காளி(friends)பசங்களோட சேந்து வாய்க்கால் தண்ணில “பல்டி”அடிச்சு பாய்ஞ்சிருக்கான்…. அந்த இடத்தில பாறையொண்ணு கெடந்ததுபத்தி கவனிக்கல…. வலக்காலில பலமான அடி…. இனி இந்த கைத்தடிய வெச்சுக்கிட்டு “பல்டி” அடீன்னு டாக்டர்மாரு சொல்லி அனுப்பியிருக்காங்க…. ”

“சம்பவம் நடந்து எத்தனை நாளாச்சு…..”

“அத தெரிஞ்சு என்னபண்ணப் போறே…. இந்த சமாச்சாரம் பத்தி உனக்கெல்லாம் போன்பண்ணி, தேவையில்லாமல் உன்னய “டிஸ்டாப்” ஆக்க வேண்டாம்ணு அத்தனை பேருக்கும் நான்தான் சொல்லித் தடுத்தேன்…. இருக்கிற புத்திய வெச்சு இனியாச்சும் கொரங்கா இருக்காம மனிசப் பயலா இருக்கசொல்லி நாலு அட்வைசு குடு….”

சொல்லியபடி மகனிடம் போனைக் குடுத்துவிட்டு, அப்பால் நகன்றாங்க அக்கா.

மேலும் படிக்க ...

தொடர்நாவல்" கலிங்கு (2012: 2 - 6) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
03 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2009 -2

வவுனியா ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கிருந்த சுமார் பத்து கிமீ தூரத்தை ஓட்டோவில் கடந்துகொண்டிருந்த பொழுதில், கழிந்துசென்ற மூன்றாண்டுகளாய் தான் அனுபவித்திராத சுதந்திர வெளியின் பரவசத்தில் திளைத்திருந்தாள் சங்கவி. நிலத்தில் ஊர்வதுபோலன்றி, வானத்தில் அப்போது வட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த ஒற்றை வல்லூறாக, சிறகடித்து மிதப்பதாய் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் கண்கள் அவ்வப்போது மூடி, வேகமாக முகத்திலும் மார்பிலும் மோதிக்கொண்டிருந்த காற்றின் சுகிப்பை மிக நிதானமாகவும் ஆழமாகவும் அவள் செய்துகொண்டிருப்பதைக் காட்டின.

அதேபோதில், முன்பு தானறிந்திருந்த ஒரு தேசமே வரலாற்றில் அப்போது அழிந்துபோயிருந்த நிஜத்தையும் அவள் மிகக் கசப்பாக உணர்ந்தாள். எல்லாவற்றையும் எண்ணித் துக்கித்து, மனத்துக்குள்ளாகவே அழுது முடிந்துவிட்டது. எல்லாம் கனவுபோல் நடந்து இறுதிநிலை அடைந்திருந்ததை அவள் புனர்வாழ்வு முகாமிலேயே அறிந்திருந்தாள். ஆனாலும் அதன் பிரத்தியட்சம் கண்கூடாகக் கண்டபோது மனம் மறுபடி சிதிலமாகிப் போனாள்.

தாய் அவ்வப்போது அவளைத் திரிம்பிப்பார்த்தும் எதுவும் கேட்காததில் மகளின் மனநிலையை உணர்ந்தாள்போலத் தோன்றியது. தடுப்பு முகாமில் மூன்றாண்டு நெடிய காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வருபவளின் மனநிலையை, எவராலும்தான் புரிந்திருக்க முடியும். புரியாத கார்த்திகாதான் விறைத்தவளாய் உட்கார்ந்திருந்த தாயையும், கண்ணாடியில் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்த ஓட்டோ ட்ரைவரின் முகத்தையும் கண்டு சிரித்தபடி இருந்தாள்.

மேலும் படிக்க ...

பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!  - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கணையாழி சஞ்சிகையின் ஜனவரி 2022 பதிப்பில் எனது 'பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையினைக் கீழே தந்துள்ளேன். கணையாழி சஞ்சிகையின் டிஜிட்டல் பிரதியை மக்ஸ்டெர் தளத்தில் வாங்கலாம். அதற்கான முகவரி: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/     கணையாழி சஞ்சிகையின் இணையத்தளம்: https://kanaiyazhi.com/   தற்போது நிலவும் கோவிட் சூழலினால் கணையாழி மின்னிதழாக வெளிவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க முடிந்தது? செயற்பட முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட. இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல் வெளியீடு!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க
மேலும் படிக்க ...

நேர்காணல் பகுதி ஐந்து : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
02 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கேள்வி: அடுத்து…?
பதில்: அடுத்து, பல ஓவியர்கள் பொறுத்து நாம் கதைக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் கதைப்பதென்றால் இப்பேட்டி அதிகளவில் நீண்டு விடும்.

கேள்வி: அப்படியென்றால் ஒரு தலையாய ஓவியரை பற்றி கதைப்பதற்கு முன் உங்களுக்கு பிடித்தமான வேறு இரண்டொரு ஓவியர்களை பற்றி சுருக்கமாக கூறுவீர்களா?
பதில்: டேகாஸ், சிசிலி, பிசாரோ - இவர்களை பற்றி நான் கதைக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இவர்களை பற்றி நீளமாய் கதைக்காமல் நவின ஓவியர் என கருதப்படும் ஓவியர் பிக்காசோவை பற்றி கதைப்பது பயனுடையது என்று நினைக்கின்றேன்.

கேள்வி: பிக்காசோவை பற்றி கதைப்பதற்கு முன் மிக சுருக்கமாக, இரண்டொரு வரிகளில் டேகாசை பற்றி கூறுவீர்களா?
பதில்: டேகாஸ் பெலே நடன பெண்களை வரைவதில் பிரசித்தம் பெற்றவர். கிட்டத்தட்ட 1500 பெலே நடன பெண்களின் ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். ஆனால் அங்கே பெண்களின் உடலமைப்புகளை பற்றிய சித்திரத்தை விட கூடிய அளவில் தொனிப்பது அவர்கள் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டதின் ஆதிக்க முறைமையே. அவர் தீட்டியுள்ள ஓவியங்களில் பெண்களின் முகங்களிலும் மலர்ச்சி காணப்படவில்லை. அவர்கள் வெறுமனே ஆட்டுவிக்கப்படுவதாகத்தான் அவரது காட்சிப்படுத்தல்கள் காணக்கிட்டுகின்றன.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத புகைப்படங்களிலொன்று!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  செங்கையாழியானின் நாவல்கள்' பற்றிய 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க நிகழ்வில்.. -

மேலும் படிக்க ...

அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -


ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

அ.ந.க. வாசிப்பு அனுபவமும், எழுத்தனுபவமும் அதிகம் வாய்க்கப்பெற்றவர். இந்த நாவலை மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னிப் படைத்துள்ளார். மேற்படி முடிவுரையில் வரும் அவரது பின்வரும் கூற்று அ.ந.க.வின் நாவல் பற்றிய புரிந்துணர்வினையும், அப்புரிந்துணர்வின் விளைவாகவே அவர் இந்நாவலினைப் படைத்துள்ளார் என்பதையும்தான்:

மேலும் படிக்க ...

அமேசன் - கிண்டில் மின்நூலாக அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'!

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
நிகழ்வுகள்
01 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகத்துறை எனப் பன்முகப்பங்களிப்பு நல்கிய எழுத்தாளர் அ.ந.கந்தாமியின் கிடைக்கபெறும் ஒரேயொரு நாவல்: 'மனக்கண்; 1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த ஆதரவைப்பெற்ற நவீனம். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானொலி நாடகமாக எழுத்தாளர் சில்லையூர் செலவராசனால் ஒலிபரப்பப்பட்டது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - பதிவுகள்.காம் -
  2. 2021 ஒரு பார்வை!   - சக்தி சக்திதாசன், இலண்டன் -
  3. அஞ்சலி: எழுத்தாளர் அ. கணபதிப்பிள்ளை மறைவு!   -குரு அரவிந்தன் -
  4. வெற்றியின் இரகசியங்கள் (1): இன்பம் என்பது என்ன? - அ.ந.கந்தசாமி -
  5. சிறுகதை: கிழக்கும் வெளிக்கவில்லை! மேற்கும் வெளிக்கவில்லை!  - கடல்புத்திரன் -
  6. 2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்! - குரு அரவிந்தன் -
  7. இலக்கியவெளி இணைய வழிக் கலந்துரையாடல்: தமிழ்ப் படைப்புலகில் செ.கணேசலிங்கன். - தகவல்: அகில் -
  8. (பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (7) பெருமாள் மலை! - எல்.ஜோதிகுமார் -
  9. கனடாவுக்குக் குடிபெயர அரிய சந்தர்ப்பம்! - வ.ந.கி -
  10. எனக்குப் பிடித்த வரலாற்றுப் பாத்திரம்! - வ.ந.கிரிதரன் -
  11. எம்ஜிஆர் நினைவாக..
  12. (தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (4 & 5) - ஜோதிகுமார் -
  13. பொலனறுவை வானவன்மாதேவி ஈஸ்வர ஆலயச் சிற்பங்கள்! - வ.ந.கிரிதரன் -
  14. சக்கரங்கள் நிற்பதில்லை! மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு ! ஒரு பார்வை ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
பக்கம் 93 / 115
  • முதல்
  • முந்தைய
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • அடுத்த
  • கடைசி