பதிவுகள் முகப்பு

தொடர் நாவல்: பயிற்சி முகாம்! (4) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
17 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார்.  பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் நான்கு: தொடரும் பயிற்சி!

     நண்பகல் பயிற்சியின் போதும் சிவா ஆசிரியர் வந்து சேரவில்லை. செழியனும், பாரியுமே பயிற்சிகளைக் கவனித்தார்கள். மூன்றரை மணி போல தடைப் பயிற்சியின் போதே ஆசிரியர் வந்து சேர்ந்தார். இரவில் அரசியல் வகுப்பு நடைபெற வேண்டும் என்பதை ஏ.ஜி.ஏயுடன் கலந்தாலோசிக்கவே சென்றிருக்கிறார். " இன்னிரவு உங்களுக்கு அரசியல் வகுப்பு நடைபெறும் " எனக் கூறினார். தடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் . நிமிர்ந்து நிற்கிற பனை மரத்தில் 15 அடி உயரத்தில் ஒரு ஆள் சுயாதீனமாக நின்று சுற்றிவரப் பார்த்து நடமாடக் கூடியதாக 5 அடி நீளமும், 6 அடி அகலத்தில் பனையின் ஒரு பக்கத்தில் இரண்டடியாகவும், மறுபுறத்தில் நாலு அடியுமாக மரப்பீடம் வெளித்தள்ளலாக கயிறுகளால் வரிந்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அதில் சாரணர்களின் அனுபவம் தெரிந்தது. நிலத்திலிருந்து துலா போன்ற பனைக்குற்றி(கால்) பீடத்திற்கு ஏறக் கூடியதாக கயிற்றுக்கட்டுடன் கிடந்தது. வழக்கம் போல ரஜனி, தியாகுவும் சரிவான  கோலிலே கையால் பிடியாமலே , நிலத்தில் ஓடுறது மாதிரியே  ஓடி பீடத்தில் ஏறினார்கள். பிறகு மேலே இருந்து ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குதித்தார்கள். சாதாரணமாக எழும்பி வந்தவர்களை "கால் நோகவில்லையா ? " என ஜீவன் கேட்டான் . " இல்லை. நெடுகக் குதித்தால் நோகப் பார்க்கும் " என்று தியாகு பதிலளித்தான். ஆனைக்கோட்டைத் தோழர்கள் முதல் தடவைக் குதிக்கிறார்கள் போல இருக்கிறது. சரிவில் அரைவாசிக்கு ஓடி ஏறியவர்கள் மீதி தூரத்தைத் கையால் பிடித்து, பிடித்து விரைவாகத் தட்டிற்கு வந்தார்கள். குதிக்கிற போதும் சிறிது தடைப்பட்டு நின்று விட்டு குதித்து விட்டார்கள். இந்தப் பயிற்சிகள் குறைந்த பட்சம் இரண்டு நாள்களாவது நடை பெறும்.எனவே, சமையற்குழு பயிற்சி எடுக்கத் தவறி விடுவதில்லை.

மேலும் படிக்க ...

ஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்! முனைவர் கோ.சுனில்ஜோக -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
ஆய்வு
16 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.

மலையைக் குறிக்கப் படகர்கள் “கிரி”, “கோ”, “பெட்டு”, “மந்த”, “மந்து” போன்ற பல பெயர்களை வழங்குகின்றனர். அதனடிப்படையில்தான் “நீலகிரி”, “தொட்ட பெட்டா” போன்ற படகர்களின் சொல்வழக்குகள் விளங்கிவருகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் இன்றும் படகர்களிடம் வழக்கில் உள்ளவைகளாகும். நீலநிறமுடைய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை என்ற காரணத்தினால் இம்மலைக்கு “நீலகிரி” என்று பெயரிடப்பட்டதாகக் கருதினாலும் இம்மலையினைச் சூழ்ந்த நீலவானம் மற்றும் பனிப்பொழிவுக் காலத்து நீலநிறக் கதிர்களின் சிதறல் போன்றவையும் இம்மலைக்கான காரணப் பண்புப் பெயருக்கு ஆகிவந்தது எனலாம். குறிஞ்சி மலரைக்கொண்டு இம்மலைப் பெயரிடப்பட்டது என்பதைவிட வானத்து நீல நிறத்தாலும், நீலநிறக் கதிர்களின் ஊடுறுவலாலும் பெயரிடப்பட்டது என்பதே நிலவியல் அடிப்படையில் சரியாகப் பொருந்துகின்றது.

நீலகிரியைப் படகர்கள் தமக்குள் “நாக்குபெட்டா” என்று விளிக்கின்றனர். அதாவது நான்கு மலைகள் என்பது இதன் பொருள். நீலகிரியின் நிலவியல் அமைப்பும் இதனை ஒத்துள்ளது. இந்த நான்கு பெட்டாவிலும் கால்வழியின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற படகர்கள் அதற்குத் “தொதநாடு”, “பொரங்காடு”, “குந்தெ”, “மேக்குநாடு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நான்குப் பெயர்களுக்குப்பின்பு “சீமை” என்ற பின்னொட்டையும் இட்டு அழைப்பதுண்டு. “அட்டி”, “ஊரு”, “கேரி”, “சீமெ”, “நாடு”, “ஹட்டி” போன்றவைப் படகர்களின் நிலப் பொதுப்பெயர்களாகும். இதில் “நாடு” மற்றும் “சீமெ” என்பது பெரிய நிலப்பரப்பினைக் குறிப்பனவாகும்.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணத்தில் ஒலி-ஒளிப்பதிவுக் கலையின் முன்னோடியாக விளங்கிய நியூவிக்ரேர்ஸ் குணம்விடைபெற்றார்! - எஸ்.கே.ராஜென் -

விவரங்கள்
- எஸ்.கே.ராஜென் -
கலை
15 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் இயல்,இசை, நாடகம்  எனும் முத்தமிழ் கொலுவிருந்த ஓர் இனியகாலம். யாழ்.திறந்தவெளியரங்கம், வீரசிங்கம் மண்டபம் என்பன வாரம்தோறும் கலைநிகழ்ச்சிகளால் களை கட்டியிருந்த சிறப்பான காலகட்டம். யாழ் மண்ணின் ஏனைய பகுதிகளிலும் அப்பொழுது கலை நிகழ்ச்சிகள் நிறைவாகநடைபெற்று வந்தன. யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில்எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன. அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அன்றுடன் முடிந்துவிடும். நிழல் படங்கள் மட்டும் பார்வைக்கு இருக்கும். அவையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அமைந்துவிடுவதில்லை. 1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களைதம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுதுதான் ஒலிப்பதிவுகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டன. இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாகஇந்த நிறுவனம் அமைந்திருந்தது. அப்பொழுதெல்லாம் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலிஒன்றே வழியாக இருந்தது. வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும்அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாகஅமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.

தென்னிந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களின் பாடல்கள் 45RPM இசைத்தட்டுக்கள், LP இசைத்தட்டுக்கள் என்பவற்றில் வெளியாகும். அந்த இசைத்தட்டுக்களை யாழ்ப்பாண மக்கள் பார்க்கக்கூடியதாகவும், அதிலிருந்து பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து கொள்வதற்கும்வழி வகுத்த முன்னோடிகள். இசைப்பிரியர்களின் இசைத்தாகத்தைத் தீர்ப்பதில் பெரும்பணியாற்றியவர்கள். பாடல், பாடியவர்கள், இசையமைப்பாளர், திரைப்படம் ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய புத்தகம் ஒன்றையும் அச்சடித்து தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள் அதிலிருந்து பாடல்கள் தெரிவுசெய்து பதிவு செய்து கொள்வார்கள். ரி.டி.கே, மக்ஸெல், சொனி கசெற்றுக்களிலேயே பெருமளவான ஒலிப்பதிவுகள் நடைபெறும். ஒலியமைப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் ஸ்பூல் நாடாவில் பதிவு செய்து கொள்வார்கள். நகரத்தின் பல பகுதிகளிலும் ஒலியமைப்பாளர்களாகப் பணியாற்றிவந்தவர்கள் தங்கள் சேவையில் பரவசமூட்டும் பக்திப்பாடல்களையும் நாதஸ்வர தவில்கச்சேரிகளையும் புதிய பழைய திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்புவதற்கு சிறந்த தொழில் நுட்பத்தில் அவற்றைப்பதிவுசெய்து வழங்கியவர்களில் நியூவிக்ரேர்ஸ் தனியிடம் பெற்றவர்கள். நியூ விக்ரேர்ஸ் வழியில் காலப்போக்கில் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒலிப்பதிவுக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் படிக்க ...

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாகி, இன்று ஏப்ரில் 15 ஆம் திகதி தமது எண்பது வயது பிறந்த தினத்தை கொண்டாடும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.

இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார். ஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர். மெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார். இலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது. அவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது. அவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : பயிற்சிமுகாம்! (2 & 3) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் இரண்டு:பெரிய டேவிட்!

        ஜீவன் பொதுவாகவே 'எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?... என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும் சென்று வருவது அங்கிருந்து அறிந்தவற்றை  அராலித் தோழர்களும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான். அதாவது ஒரு தபால்காரனின் வேலை தான் என்னுடையது என்பதை உணர்ந்திருந்தான். ஏ.ஜி.ஏ பொறுப்பாளர் மாலித் தோழர் தான் அவனுடைய குருஜி.  காரைநகர்... முதலிய தீவுப்பகுதிகளில் எல்லாம் இவரின் கால் பதியாத இடமில்லை என்றுச் சொல்லுவார்கள்.

        ஜீவன் இயக்கத்திற்கு வர முதல், சங்கானை, வட்டுக்கோட்டை, தெற்கு அராலிக் கிராம வாசிகசாலைகளிற்கெல்லாம் சென்று பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவன். அச்சமயம் முறையான புத்தகங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை. சஞ்சிகைகளில் வரும் தொடர்களை விடாமல் வாசிக்கிறதுக்காக செல்ல வேண்டி இருந்தது. அப்படித் தான் எழுத்தாளர் பாலகுமாரனின் "தாயுமானவர் "தொடரை குமுதத்தில் வாசித்தான். சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை" தொடர், முகமத் அலியின் " ஜெயித்துக் கொண்டே இருப்பேன் " தொடரையும் மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். முழுதையுமே சஞ்சிகைகளிலே வாசித்தவன். ஆனால் நெடுகவல்லவா செல்கிறான். அத்தியாயம் வாசிச்சு முடிந்திருக்கும். பத்திரிகைகள் வாசிக்கிறது குறைவாகவே இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். தலையங்கத்தைத் தட்டுவான் என்று சொல்லலாம். ஆனால் சஞ்சிகைகளை மேய்வான். ஒரு கட்டத்தில் விளம்பரம் , நகைச்சுவைத் துணுக்குகள் என வாசிக்க ,மேய இல்லாது  ஏற்பட்டிருந்தது. அந்தக் குணம் மாலியோடு வடையும் ,தேனீரும் குடிக்கிற போது வடை சுற்றி வந்திருந்த பேப்பர் துண்டையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தான். " நீ எதையுமே வாசிக்கிற பிரகிருதி " என மாலி சொல்லிச் சிரித்தான்.

மேலும் படிக்க ...

('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சிறுவர் இலக்கியம்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத்  தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால்  சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம்  பெற்றிருக்கும்.

குழந்தைகளுக்காகக் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் அத்துறையில் சிறந்து விளங்காமலிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று குழந்தைகளுக்கான படைப்புகளை அவர்கள் பெரியவர்களாகிய அவர்களது பார்வையில் படைப்பதுதான். குழந்தைகளாக மாறிப்படைப்புகளைத் தருவதை அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அதனால் குழந்தைகள் பலரையும் அவர்களது படைப்புகள் கவராமல் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.

குழந்தைகளின்  உளவியலை நன்கு உள்வாங்கிக் கவிதை படைத்த கவிஞர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் குழந்தை அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வேந்தனார், சோமசுந்தரப்புலவர், சாரணாகையூம். இவர்கள்தம் குழந்தைக் கவிதைகளில் இவர்கள் குழந்தைகளாகவே மாறி விடுவார்கள். குழந்தைகளுக்குத்தேவை எளிமையான சொற்கள், மீண்டும் மனத்தில் பதியும் வகையிலான எளிமையான அதே சமயம் பாடுவதற்குரிய சந்தச்சிறப்பு மிக்க வரிகள். அவற்றை வாசிக்கையில் குழந்தைகளின் உள்ளங்களில் அவை விபரிக்கும் காட்சிகள் படம் விரிக்க வேண்டும். 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே (சோமசுந்தரப்புலவர்) ', 'காலைத்தூக்கிக் கண்ணிலொற்றி கட்டிக்கொள்ளும் அம்மா' (வேந்தனார்) போன்ற கவிதைகளைப் படிக்கையில் குழந்தைகளுக்கு அக்கவிதைகள் விபரிக்கும் காட்சிகள் மனக்கண்ணில் படமாக் விரிந்து மகிழ்வினைத் தருகின்றன. இவை போன்ற குழந்தைக்கவிதைகளை எழுதியவர் கவிஞர் சாரணாகையூம்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" -ஊர்க்குருவி -

விவரங்கள்
Administrator
கலை
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் கருத்துச்சிறப்பு மிக்க வரிகள், டி.எம்.எஸ்ஸின் குரல், எமஜிஆர்,ஜெயலலிதா மற்றும் சக நடிகர்களின் (சந்திரபாபு, சோ என)  நடிப்பு இப்பாடலை எனக்குப் பிடித்த பாடல்களிலொன்றாக்கி விட்டன. பாடலில் வாத்தியக் கலைஞர்களின் கைவண்ணம், கோரஸ் பாடும் குழுவினரின் திறமை இவற்றையெல்லாம் மிகவும் இரசித்தேன். பாடல் மிகவும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

ஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.

இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஐம்பதுக்கும் குறைவான  கதைகள் வரையில் எழுதியுள்ளதாக ஈழநாடு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர் இருபது சிறுகதைகளே எழுதியுள்ளதாகக் குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை எழுத்தாளர் செங்கை ஆழியான் சேகரிக்க , எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது மல்லிகைப்பந்தல் பிரசுரமாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்போக்காளரான டொமினிக் ஜீவா அவர்கள் ஆன்மிகப்போக்குள்ளவரான முனியப்பதாசனின் சிறுகதைகளைத்  தனது பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளதும் முக்கியமானது. இத்தொகுதியை நூலகம் எண்ணிம நூலகத்தில் வாசிக்கலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 4: “ஹைக்கூ பார்வையும் பதிவும்” - அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நாள்: 16 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 9:30 மணி (கனடா ரொறன்ரோ)

சிறப்பு பேச்சாளர்கள்:
'எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஜீவாவின் பங்கு'  - கலாநிதி  பார்வதி கந்தசாமி
'மல்லிகை பந்தல் வெளியீடுகள்' – கவிஞர் மேமன் கவி
'டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பயணத்தின் போக்கும் அதன் சமூகத் தாக்கமும்' – எம்.எஸ்.தேவகௌரி (ஊடகவியலாளர்> விரிவுரையாளர்)

மேலும் படிக்க ...

நெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் , மெல்பேண், ஆஸ்திரேலியா -
கவிதை
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சித்திரையே நீயும்  சிறப்புடனே வரவேண்டும்
இத்தரையில் யாவருமே இனியசுகம் பெறவேண்டும்
கொத்தாகப் பலியெடுத்த கோரமுடை கொடுநோயும்
திக்குத்திசை தெரியாமல் தெறித்தோடி மடியவேண்டும்  !

மனவுறுதி மக்களது மனமெல்லாம் எழவேண்டும்
வாழ்வழித்த பெருநோயும் மண்விட்  டகலவேண்டும்
இழந்தமுதல் தொழியெல்லாம் ஏற்றமாய் வரவேண்டும்
இதற்கெல்லாம் தீர்வுகொண்டு எழுந்துவா சித்திரையே  !

மேலும் படிக்க ...

பதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்

விவரங்கள்
- ஜீவன் கந்தையா (மொன்ரியால் மைக்கல்)-
'பதிவுகளில்' அன்று
11 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன்  மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -


1. வீரன் - ஜீவன் கந்தையா

பணிதல் என்பது எந்தக் கிளையிலிருந்து துளிர்த்துத் தொடர்கிறது என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து பணிந்துபோகும் பண்பு, குலவழியாகத் தொடர்ந்து நீளும் சாபமாக வரித்துப் போனதற்கு பிறப்பின் தாழ்ச்சி காரணமேயாகி ரோச நரம்பை அறுத்து எறிந்துவிட்டதா?. பண்புநிலைக்கும், பணிதல் நிலைக்கும் இடையேயான முதுபிரச்சாரத்துள் எங்கோ ஒளிந்திருக்கிறது அடக்குமுறையின் நுண்ணிய சவுக்கு. அது காற்றில் சுழன்று சுழன்று கூனிய முதுகில் ஏற்படுத்திய தொன்மக்காயத்தின் வடுக்கள் இன்று சவுக்கில்லாமலே அதிர்வுகளை உண்டுபண்ணும் மரபுத்துணிக்கையாய் என்னுளத்துளும் மறைந்தியங்குகிறது.

மாநகர வீதிகளில் சிக்னல் லைட் பச்சைக்கு மாறியபின் வீதியைக் கடக்கும் சட்டபூர்வமான இயக்கங்களில் சராலென ஊடறுத்துப் பாயும் சைரன் ஒலித்த பொலிஸ் வாகனங்களின் அருகாமை என் இதயத்தை வேகங்கூட்டுகிறது. நடுமுதுகின் வேர்வைத்துவாரங்களில் ஈரம் பிசுபிசுக்கிறது.

ஓவென்று விரிந்த அரசாங்கக்  கட்டடங்களுக்குள் காரணத்துடன் செல்லவேண்டிய பொழுதுகளில் வாசல்கதவைத் திறந்த மறுகணம் பின்னுக்கு இழுக்கிறது ஏதோவொரு வலிய கரம். மிக இயல்பாக நகர்ந்து திரியும் வெள்ளைக்கார  மனிதர்களுக்குள் என் தடுமாற்றமிக்க மனதுடன் காரியமாற்ற முனையும்போது பயம் தன் நீண்ட தூரிகைகொண்டு முகத்தில் கறுத்த மேகங்களை வரைந்துவிடுகிறது.

“சாக்கடையச் சுத்தம் செய்யடா மனிதா” என ரெஸ்ரோரண்ட முதலாளி கட்டளையிட, நான் அது எனது வேலை இல்லை என மறுத்திருக்கலாம். சோற்றுப்பருக்கைகள் போய் அடைத்து  நாறிய சக்கடையை வெம்பி வெதும்பிய மனத்துடன் வேர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்தேன். இன்றிலிருந்து இனிமேல் இந்த ரெஸ்ரோரண்டிற்கே வேலைக்கு வருவதில்லை என சங்கற்பம் பூண்டு கொண்டு வீடு வந்தேன்.

நாளைக்கு வேலை இல்லை என்பது இந்த வாரத்திலிருந்து சம்பளம் இல்லை என்னும் பேரிடி. இதை எப்படி மனைவிக்குச் சொல்வது? அவளது முகத்தைப் பார்க்கவே துணிவற்று வரவேற்பறையில் ஷோபாவின் மீது உடம்பைக் கிடத்தினேன். மனம் புழுங்கி அவிந்து, யோசனைகளும் அறுந்து, உறக்கம் கவ்வியது...

***

இரத்தம் செத்துப்போகவேண்டிய சாபம் ஒன்று தலைமுறை நு¡ல்வழியாக அவனது நடுஉச்சியில் இறங்கி விதியாக உறைந்திருக்க, வேலைக்கு சென்று வீடுதிரும்பிய உழைவு தேகத்தில் பரவி, செற்றியில் கால்நீட்டி படுத்திருந்த அவனை ஒரு கதவுத்தட்டல் உசுப்பியது.

மேலும் படிக்க ...

அறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
10 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
"ஓவியம் எனது ஜீவிதம்! ஓவியத்தினால் இவ்வுலகை எனதாக்குவேன்!" என்னும் தாரகமந்திரத்துடன் காட்சியளிக்கிறது ஓவியர் பிருந்தாயினி பிரபாகரனின் முகநூற் பக்கம். தாரக மந்திரம் ""ஓவியம் எனது ஜீவன்! ஓவியத்தினால் இவ்வுலகை எனதாக்குவேன்!" என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதென் கருத்து. உண்மையான கலைஞர்களுக்கு அவர்களது கலை அவர்கள்தம் ஜீவன். ஜீவிதத்துக்கு அது உதவுவதென்பது அடுத்தபடிதான். அண்மையில் என்னைக் கவர்ந்த இவரது ஓவியங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். வாழ்த்துகள்.
 
இவரை எமக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் 'நடு' இணைய இதழாசிரியர் கோமகன். அதற்காக அவருக்கும் பாராட்டுகள்.
மேலும் படிக்க ...

தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: சி.வி.வேலுப்பிள்ளை! - பெளசர் -

விவரங்கள்
- பெளசர்-
நிகழ்வுகள்
10 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம்! அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
இலக்கியம்
10 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.

மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய நாவலை பேராசிரியர் முகம்மது உவைஸ் தமிழுக்கு வரவாக்கியதையடுத்து, பின்னாளில் மடோல்தூவ நாவலை மடோல்த்தீவு என்ற பெயரில் சுந்தரம் சௌமியன் மொழிபெயர்த்தார். அத்துடன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் பற்றற்ற வாழ்க்கை நூலை சுந்தரம் சௌமியனும் சில சிறுகதைகளை பேராசிரியர் சபா. ஜெயராசாவும் தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர். ஏற்கனவே பல சிங்கள இலக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், பத்திரிகையாளரும், இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றவருமான இரா. சடகோபன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் அபே கம என்ற தன்வரலாறு சார்ந்த கிராமத்தைப்பற்றிய கதையை எங்கள் கிராமம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இதனை இலங்கை இராஜகிரிய சரச பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க ...

சிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -

விவரங்கள்
- இணுவை சக்திதாசன் டென்மார்க் -
சிறுகதை
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது.  நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .

"என்ன இந்த நேரத்தில என்று"  மணிக்கூட்டை பார்க்காமலே சகுந்தலா கேட்க , " என்னக்கா  !   இஞ்ச  இப்ப ஒன்பது மணியாப் போச்சுது  உங்க  இன்னமும்  விடியேல்லையோ ? "என்றாள்.

அப்பதான்  சகுந்தலா 'லைற்'றை போட்டு நேரத்தைப் பார்த்தாள்  அதிகாலை ஐந்து மணியை அது காட்டியது .

டென்மார்க்கில் கோடை காலங்களில்  இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவு போலவும் இருக்கும். கோடை காலங்களில் இரவு ஒன்பது பத்து மணிக்கே சூரியன் வானில்  தெரியும். பனி காலங்களில்  விடிந்தாலும்  இராவகத் தான்  இருக்கும் .  

அப்படி ஒரு பனிக்காலம் தான் டென்மாக்கில் இப்போ ....  

வேலை வெட்டிக்கு போகாததினால் இரவிரவா  நாடகத் தொடரும் ...  பேஸ்புக்கு மாக ...  மேஞ்சு போட்டு  படுக்க சமமாகிப்  போகும்.  பேந்து  விடிய விடிய படுத்துக் கிடப்பாள் சகுந்தலா . இப்ப அவள்  வேலை இல்லாமல் வீட்டோடு தான் . டென்மாக்கில் வீட்டோடு இருந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும்.  அவள் வந்து கொஞ்சக்காலமாக  வேலை செய்தவள். செய்து கொண்டிருக்கேக்க நாரியை பிடிச்சுப் போட்டுது என்று,  ஒரு நாள் வேலைத் தளத்தில  விழுந்தவள்  தான்  எழும்பவேயில்லை. மனைவியை அம்புலன்சில ...   ஹோல்பேக் வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக அறிவித்தல் வர துடிச்சுப் போன கணவன் சிவசாமி அலறியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு போனபோது, அரை மயக்கமாக கிடந்த  சகுந்தலா   கணவனின் குரல் கேட்டவுடன்  கடைக் கண்ணை திறந்து  கண்ணடித்தாள்.  அப்போதான் சிவசாமிக்கு நிம்மதியாக இருந்தது .

மேலும் படிக்க ...

ஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு! - முனைவர் செ. துரைமுருகன் -

விவரங்கள்
- முனைவர் செ. துரைமுருகன் , தமிழ் உதவிப் பேராசிரியர் , குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி . கொயம்புத்தூர் – 49 , தமிழ்நாடு. -
ஆய்வு
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பால் எனும் சொல் தமிழில் பிரிவு எனப் பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Gender என்பர். இத்தகைய பால் எனும் அடிப்படையில் பிரிவாகக் கொண்டு ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இத்தகைய பாகுபாடானது உலக மொழிகள் பலவற்றிலும் உள்ளது. ஆனால், உலக மொழிகளில் காணப்படும் பால் பகுப்பினை எடுத்து நோக்கின் “இயற்கைப் பால் பகுப்பு, இலக்கண பால் பகுப்பு என இரண்டு வகையாகப் பகுக்கலாம். இயற்கைப் பால் பகுப்பு என்பது உலகில் காணப்படும் மனிதர்களையும், விலங்கு, இடம், மரம், ஆறு போன்ற பிறவற்றையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். இலக்கணப் பால் பகுப்பு ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பானது. இலத்தீன் மொழியில் நட்சத்திரங்களைப் பெண் பாலாகப் பகுப்பர்” . அதுபோலவே இந்தி மொழியில் உயிரில் பொருட்களையும் ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இலக்கணப் பால் பகுப்புக்கு முக்கியக் காரணம் மொழியின் அமைப்பேயாகும்.

இதனடிப்படையில் தமிழில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப் பகுக்கின்றனர். “தமிழ் மொழியில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பகுப்பதற்கு காரணம் தமிழ் மொழியில் காணப்படும் பதிலீடு பெயர்களேயாகும். அவன், அவள், அவர் என்ற மூன்று பதிலீடு பெயர்களை உயர்திணை கொண்டிருப்பதால்தான் இது மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. உயர்திணையில் ஒருமையில் ஆண், பெண் வேறுபாடு உள்ளதேயன்றிப் பன்மையில் இவ்வேறுபாடு இல்லை. இதனால்தான் பலர்பால் எனப் பிரித்தனரேயன்றி ஆண்பால் பன்மை என்றோ, பெண்பால் பன்மை என்றோ பிரித்திலர் எனத் தமிழில் இலக்கணப் பகுப்பாக, உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்று பிரிக்கக் காரணம் அறியலாம்.

மேலும் படிக்க ...

கோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -

விவரங்கள்
- சு.கருணாநிதி -
நூல் அறிமுகம்
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீனகவிதைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் கவிஞர்.கோ.நாதனின் மூன்றாவது கவிதைத்தொகுப்பாக வெளிவந்திருக்கிறது 'அரவம் புணர்ந்த அடவி'. பிரான்சை வதிவிடமாகக்கொண்ட கவிஞரின் இத்தொகுப்பு கோமகன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு பாரிசிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் மாதாந்த கலைஇலக்கிய இணையசஞ்சிகையான நடு வின் வெளியீடு. இலங்கை, தமிழக, அய்ரோப்பிய இணைய அச்சு ஊடகங்களில் தீவிரமாக கவிதை, விமர்சனம் என எழுத்தியக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நாதனின் இத்தொகுப்பு நவீனகவிதை வரவுகளில் கவனிப்பிற்குட்படும் தொகுப்பாக அமைந்திருக்கின்றது.

மேலும் படிக்க ...

ஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம்! நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்! சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?

பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல் தமிழ் சினிமா இல்லை.

இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில் (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். அவர் சொல்கிறார்:

“ எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இயக்குநர்களுக்கு ஆழமான இலக்கியப்பரிச்சயம் தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி இயல்புகள் சாத்தியக்கூறுகள் - இவை பற்றிய ஒரு பிரக்ஞை வேண்டும். அதுமட்டுமல்ல திரையும் எழுத்தும் தத்தம் இயல்புகளில் மிகவும் வேறுபட்ட ஊடகங்கள் என்பதையும் உணர்ந்திருக்கவேண்டும். வங்காள - மலையாள சினிமாக்களில் இத்தகைய புரிதல் இருபுறமும் இருப்பதைக்காணலாம். அங்கிருந்து வரும் பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில் பெருவாரியானவை ஒரு இலக்கியப்படைப்பையே சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம். “

ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தில் கடலூரில் 1934 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ஆம் திகதி பிறந்து, இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவர். இந்திய சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, ராஜா ராஜசோழன் விருது உட்பட பல இலக்கியம் சார்ந்த விருதுகள் பெற்றவர். ஜெயகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரில் 08 ஆம் திகதி சென்னையில் மறைந்தார். இந்தப்பதிவு ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தொனிப்பொருளில் அமைகிறது.

மேலும் படிக்க ...

'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
-வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds)  என்னும் இணைய இதழின் வசந்தம் 2021 இதழில் எனது இரு கவிதைகளும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு:

1. கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம் - வ.ந.கிரிதரன் - (A WALK THROUGH CORONA-WRAPPED NIGHT) - ஆங்கில மொழிபெயர்ப்பு -முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் (Dr.K.S.Subramanian ).-
2. கவிதை: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - வ.ந.கிரிதரன் - (LIBERATED BIRD OF THE SECLUDED EMPIRE)- ஆங்கில மொழிபெயர்ப்பு - முனைவர் ஆர்.தாரணி (Dr.R.Dharani) -

மேலும் படிக்க ...

தொடர் : பயிற்சிமுகாம் (1) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
07 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் ஒன்று: பயிற்சி முகாமில்..

இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை மரங்களையே தூண்களாக்கி  தென்னோலைக்கிடுகினால் கூரையும்,கதவுகளும் ,தட்டிகைகளுமாக வாடி போல அமைக்கப்பட்ட நீளக்கொட்டில். இது தான் பயிற்சி எடுப்பவர்களின் தங்குமடம்.கூரையில் பச்சைப் பனை ஓலைகளும் பரப்பி இருக்கிறார்கள்.மேலே இருந்து பார்ப்பவர்கள் கண்டறிய முடியாமல் இருப்பதற்கான‌  மறைப்பு. இந்த முறை பயிற்சி எடுக்க வந்தவர்களில் பதினான்கு,பதினைந்து பேர்கள் , அராலி அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மிகுதியானவர்கள் ,பொன்னாலை, றாத்தலடி, சுளிபுரம், நிற்சாமம்,ஆனைக்கோட்டை ,சங்கானை...என பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். மொத்தம் நாற்பது பேர்களாவது இருப்பார்கள். பயிற்சி அளிக்கிற சிவா ஆசிரியர் அவர்களோடு  தங்கப் போகிறவர்.  பயிற்சிகளிற்கு  உதவியாக‌ சங்கானை அமைப்புப் தோழர்கள் வர இருக்கிறார்கள். ஆனால், அங்கே அவர்களோடு  தங்கப் போகிறவர்கள் இல்லை.

             " தோழர் சின்ன நேசன், உங்களுக்கு சிலதைச் சொல்லுவார்" என்று அவரைக் காட்டி விட்டு  ஆசிரியர் சிரித்தார். "ஹா! ஹா!" என்று சிரித்து விட்டு கொட்டிலின் கிழக்குக் கோடிக்கு பெடியளை அழைத்துச் சென்றார். அடுப்பங்கரை எனத் தெரிந்தது. "இதை முதலில் நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும்" என்றார். முதலில் பயிற்சி முடித்தவர்கள் கரிகளுடன் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். ஓர் ஈர்க்கில் விளக்குமாறையும், சிறிய‌ சாக்குத் துண்டை ஒன்றையும் கொடுத்தார். குப்பையை கூட்டி அள்ளுவதற்கு ஏதுவாக சவல் போன்ற சிறிய கைபிடியுடனான பிளாஸ்டிக் துண்டு. தோழர்கள் ஐந்து நிமிசத்தில் சுத்தப்படுத்தி விட அதை வெளியில் கொண்டு போய்க் கொட்ட கிட்டத்தில் இருந்த ஓலைத் தட்டியையும் தூக்கித் திறந்தார். "அடுப்பை சிலசமயம் இப்படி சுத்தப்படுத்தி விட்டு சமைக்க வேண்டும் " என்றார். தொடர்ந்து" இண்டைக்கு இரவு  உங்களுக்கு ஓசிச் சாப்பாடு வரும். நாளையிலிருந்து தான் நீங்கள் தான் சமைத்து சாப்பிடப் போறீர்கள். காலையிலே பாணும் சம்பலும் அடிக்கடி கொண்டு வருவோம். சிலவேளை பட்டினி கிடக்கவும் நேரிடலாம்"  என்று சிரித்தார்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "நான் காற்று வாங்கப் போனேன்! ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப்  பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.

முதன் முதலில் இப்பாடலைக் கேட்ட பால்யப் பருவத்தில் அடுத்து வரும் வரிகளை உணரும் பக்குவமில்லை. ஆனால் இவ்வரிகளைக் கேட்ட உடனேயே பிடித்து விட்டது. அத்துடன் வாத்தியாரின் வசீகரமும், டி.எம்.எஸ்ஸின் இளங்குரலின் இனிமையும் அத்தருணத்திலேயே நெஞ்சின் ஆழத்தில் சென்று குடியேறி விட்டன. இன்று வரையில் அவை நிலைத்து நிற்கின்றன.

பதின்ம வயதுகளில், உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குள்ளாகியிருந்த தருணங்களில் அடுத்து வரும் வரிகளில் பொதிந்து கிடந்த உணர்வுகளை விளங்கி, இரசிக்க முடிந்தது. மானுட வாழ்வின் வளர்ச்சிப்படிகளில் காதல் உணர்வுகள் முக்கியமானவை. மானுட வாழ்வின் வேறொரு பக்கத்தை அவை உணர்த்தி வைப்பவை. சங்கத்தமிழ் இலக்கியங்கள் இவ்விடயத்தில் முதலிடத்திலிருப்பவை. காதலர்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியப்படைப்புகள் அவை. அவனோ அவனது காதலுக்குரிவள் பற்றிய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றான். அவனால் அவளை மறக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"
எழுத்தாளர் க.பரணீதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ஜீவநதி சஞ்சிகையின் 150ஆவது இதழ் (மார்ச் 2021) 'ஈழத்து நாவல்  விமர்சனச் சிறப்பித'ழாக வெளியாகியுள்ளது. ஆசிரியர் க.பரணீதரனின் கடுமுழைப்பில் வெளியாகியுள்ள சிறப்பிதழ் சிறப்பாக வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். மேற்படி சிறப்பிதழில் எழுத்தாளர் முருகபூபதி எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனமும் வெளியாகியுள்ளது. கட்டுரையை முழுமையாக ஜீவநதியின் 150ஆவது இதழில் வாசிக்கலாம். ஜீவநதி 150 ஆவது இதழை வாங்க  'ஜீவநதி' ஆசிரியர்  க.பரணீதரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விவரங்கள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)
கவிதை
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் கதை, கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இதழியல்  என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களித்து வருபவர். அத்துடன் நூல்களைத் தனது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டும் வருபவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர், சமூகச் செயற்பாட்டாளரும் கூட.


‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

1. கவிதையின் விதிப்பயன்

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;
அதுவே இன்னொருவர் சொன்னால்
அதர்மம்.
மர்மமெனக்கோருணர்வென்றால்,
மனநிலையென்றால்
உங்களுக்கு அது கத்தி கபடா கொலை
துப்புத்துலக்கலாக
இருக்கக்கூடாதா என்ன?
உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய
மர்மமென்றால்
பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!
கவிதையின் சர்வமும் நானே என்று
எத்தனை தன்னடக்கத்தோடு
கர்வங்கொள்கிறீர்கள்!
அதைக் கண்டு மலைத்துயர்ந்த
என் இருபுருவங்களும்
இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்
திரும்பியபாடில்லை.
கர்மம் கர்மம் _

மேலும் படிக்க ...

கவிதை: தேர்தல்! தெரிதல்! தெளிதல்! - பூர்ணிமா கனகா -

விவரங்கள்
- பூர்ணிமா கனகா -
கவிதை
04 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிதை: தேர்தல்! தெரிதல்! தெளிதல்! - பூர்ணிமா கனகா -

தேசமே! நேசமே! மக்களின் சுவாசமே!

தேர்தல், மக்களின் தெரிதல்!
கண்ணெனப் போற்றுங்கள்
தேசத்தை!
கடமையெனக் காட்டுங்கள்
நேசத்தை!
தவறறிந்துக் களையெடுங்கள்
வேஷத்தை!
தேசமே தாயென வழங்குங்கள்
பாசத்தை!
தவற விடாதீர்கள் வாக்கு எனும்
பொக்கிஷத்தை!

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஆய்வு: இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் நகரம்! - வ.ந.கிரிதரன் -
  2. கவிதை: சகுனம் - அருணா நாராயணன் -
  3. சிறுகதை ஒன்றே வேறே - ஸ்ரீரஞ்சனி -
  4. கனடாக் கலைச் சபையில் (Canada Council for the Arts) இணையுங்கள்! பயன் பெறுங்கள்! - ஊர்க்குருவி -
  5. படைப்பிலக்கியம் - 1 அரசியல் - அழகியல்
  6. தொடர் நாவல்: கலிங்கு (2006 - 8) - தேவகாந்தன் -
  7. படித்தோம் சொல்கின்றோம்: மனோ சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகள் ! மற்றும் ஒரு பரிமாணத்தை நோக்கிச்செல்லும் படைப்பிலக்கியம் ! - முருகபூபதி -
  8. “ஆயுள் உள்ளவரை இந்தக்குயில் கூவிக்கொண்டே இருக்கும் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுபவர் இராஜேஸ்வரி சண்முகம்” - எஸ்.கே.ராஜென் -
  9. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - 02-04-2021
  10. ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் -
  11. கவிதை: ஒப்பிட்டுப் பாராமால் உளமகிழ்ந்து வாழ்ந்திடுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
  12. தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: மஹாகவி உருத்திரமூர்த்தி - பெளசர்-
  13. கவிதை: பச்சைமயில் அம்மானை -- தீவகம் வே.இராசலிங்கம் -
  14. கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்! - சந்திரா நல்லையா -
பக்கம் 109 / 114
  • முதல்
  • முந்தைய
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • அடுத்த
  • கடைசி