பதிவுகள் முகப்பு

கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -

விவரங்கள்
மு. நித்தியானந்தன்
இலக்கியம்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து இலக்கியத்தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.

'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது. இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின்  'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய  Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக்  கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்!

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும்  பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.

இப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன்  மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

"வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா"

என்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை  மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை:

மேலும் படிக்க ...

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!

விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!

2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி!' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஷோபசக்திதற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.

இவர்களது படைப்புகளிலெல்லாம் பாத்திரங்கள் அடையும் அனுபவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டிருக்கும், பாத்திரங்கள் அடையும் வேதனை , வலி வாசிக்கும் வாசகர்களையும் நீண்ட நாட்கள் ஆட்கொண்டிருக்கும், அந்த வேதனை, வலியை நான் விரும்புவனல்லன். அதனால்தான் இவ்விதமான வலியினைத் தரும் படைப்புகள் சிறந்த படைப்புகளாகவிருந்தபோதும் நான் அவற்றின் உபாசகன் அல்லன். என் அபிமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பது போல் என்னால் இவ்வகையான , வலியினைத்தரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசித்தால் ஏற்படும் வலி நீங்க மேலும் பல நாட்கள் எடுக்கும் என்னும் அச்சமே அதற்கு முக்கிய காரணம். அண்மையில் ஷோபா சக்தியின் 'BOX கதைப்புத்தகம் வாசித்தபோது இதனை மீண்டுமுணர்ந்தேன். இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி வலி தருவது. ஆனால் அந்த மொழியே ஷோபாசக்தி என்னும் கதைசொல்லியின் பலம்.

மேலும் படிக்க ...

ஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும் - 'தாய்வீடு' திலீப்குமார் -

விவரங்கள்
'தாய்வீடு' திலீப்குமார் -
நிகழ்வுகள்
21 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின்  இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும்  - 'தாய்வீடு' திலீப்குமார் -

மேலும் படிக்க ...

சிறுகதை: ஆப்பு - மு தனஞ்செழியன்

விவரங்கள்
மு தனஞ்செழியன்
சிறுகதை
21 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதைஅமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.

வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் ! நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா? எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.

அமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.

சுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.

வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2006 - 6) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
20 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள்  ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.

அங்கிருந்து பார்த்தால் வவுனியா-கொழும்பு பிரதான வீதிக்கப்பால் புத்த வளாகத்தின் முன்பகுதியில் நிமிர்ந்து பிரமாண்டமாய் நின்ற புத்தர் சிலை தெரியும். பின்னால் சுற்று மதிலினுள்ளே  மூன்று புற விறாந்தையுள்ள சின்ன விகாரம். அதன் முற்றத்தில் செழிப்பாய் நெடிதுயர்ந்து  வளர்ந்துகொண்டிருந்த அரசமரம் நின்றிருந்தது. பின்னாலுள்ள மரக்கூடலுள் இருந்தது பன்சால எனப்படுகிற புத்த துறவிகளின் வாசஸ்தலம்.

மேலும் படிக்க ...

பதிவுகள் தளத்தில் சில மாற்றங்கள்

விவரங்கள்
- பதிவுகள் தள நிர்வாகி -
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும்  வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.

பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப..

பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள். ஏற்கனவே வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை பதிவுகளுக்கு அனுப்பிய படைப்புகளாக மட்டுமே கருதப்படும். முன்னர் அவற்றை வெளியிட்ட ஊடகங்களின்  பெயர்களைக் குறிப்பிட மாட்டோம். மேலும் ஏனையவர்கள் உங்களுக்கு அனுப்பிய படைப்புகளைப் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஏனையவர்கள் எழுதிய படைப்புகளையும் அனுப்பாதீர்கள். எழுதியவர்களே அவற்றைப் பதிவுகளுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க ...

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

மேலும் படிக்க ...

பத்திரிக்கைச் செய்தி: திருப்பூரில் புத்தகக் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
Administrator
சுப்ரபாரதிமணியன் பக்கம்
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட்  ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன்,  விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு  வந்துள்ள  புதிய  நூல் : பால் பேத வன்முறையும்,  பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65   - நியூ சென்சுரி புக் ஹவுஸ்,   ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்


நூலின் முன்னுரை -  ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -

நண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும்  முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க ...

ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி” - முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
ஆய்வு
15 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.

மேலும் படிக்க ...

கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்!

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க ...

பதிப்பாய்வுகள் - பேசுபவர்: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்

விவரங்கள்
- தகவல்: 'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

(நூல் அறிமுகம்) தொன்மத்தின் மீதான காமம் : தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள்! - இராகவன் -

விவரங்கள்
- இராகவன் -
நூல் அறிமுகம்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொன்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ ‘கதை இணக்குதல்’ ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -
ஆய்வு
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள்
இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
(புறம்.2.1-6)

என்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.

ஞாயிற்றின் வெம்மை

சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,

செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ

மேலும் படிக்க ...

சிறுகதை: அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.

அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.

மேலும் படிக்க ...

கவிதை: நூலகம் நோக்கி!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
12 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன்.

மேலும் படிக்க ...

திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-
இலக்கியம்
08 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் டொமினிக் ஜீவாஅண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.

அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஓராயம் அமைப்பு - - மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயச் செயற்பாடுகளுக்கான திட்டம்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
08 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஓராயம் அமைப்பு!

1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி  அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட,  இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள். அத்துடன் இவர்கள் புலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரித்து ,அவற்றின் அடிப்படையில் செயற்படவும் முடிவு செய்துள்ளார்கள்:

மேலும் படிக்க ...

ஒரு பொழுதும் இப்பொழுதும்

விவரங்கள்
- செ. சுதர்சன் -
கவிதை
06 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உனக்கும் எனக்குமான
ஒரு கீதத்தை இசைத்தேன்.

அலைநுரைப் பூக்கள் அர்ச்சித்தன.
மலைகள் கம்பீரத்தைப் பெருக்கின.
கங்கைகளும் கடல்களும் நீரமுதாயின.
ஒளி பெருக்கி நின்றது வானம்.
கொடிகளுக்காகவே காற்று வீசிற்று.
நிலமோ நிமிர்ந்தெழுந்தது.

மேலும் படிக்க ...

ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
இலக்கியம்
04 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவஜோதி யோகரட்னம்தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள்   நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள்,  கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!

‘ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் பேச உள்ளேன்.  யாழ்ப்பாண வரலாறு ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்பு கூத்து, காத்தவராயன் கூத்து, மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று பேசுவதை அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு அவர் சிறந்த பாடகர். தாள லயம் குன்றாது நாட்டுக் கூத்து மெட்டுக்களை பாடக்கூடியவர். அத்தோடு மிருதங்கக் கலையை முறைப்படி கற்றவர். அவரது மிருதங்கக் கச்சேரிகளையும் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது பாட்டனாரான சவரிமுத்துவும் கலையார்வம் கொண்டவர். அவர் உண்மையான குதிரையை மேடையில் ஏற்றி நடித்தவர் என்று எனது தயார் நவமணி கூறியதைக்கேட்டு வியந்திருக்கிறேன். அவர் நடித்தவற்றை நான் நேரில் பார்க்காவிட்டாலும் கூத்துப் பாடல்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தை எஸ் சிலுவைராஜாவும் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞன். ‘சங்கிலி மன்னன்,  ‘கண்டி அரசன்’ போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் அரசனாகி கொலுவில் உட்கார்ந்து அவர் கர்ஜித்ததை நான் மேடைகளில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அத்தோடு எனது மகன் அகஸ்ரி யோகரட்னம் லண்டனில் மிருதங்கக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டு, லண்டன் மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றான். இத்தகைய கலைச் சூழலின் பின்னணியிலிருந்து  வந்தவள் என்றவகையில் இங்கு பேசுவது பொருத்தமாகி மகிழ்விக்கின்றது.

மேலும் படிக்க ...

முருகபூபதியின் 25 ஆவது நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'

விவரங்கள்
- பூபாலரட்ணம் சீவகன் அணிந்துரை ( ஆசிரியர் - அரங்கம் செய்திகள் ) -
நூல் அறிமுகம்
04 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முருகபூபதியின் 25 ஆவது நூல்  'நடந்தாய் வாழி களனி கங்கை'கொழும்பு - பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லும் ஒரு மண். இலங்கையின் தலைநகர் என்பதற்கு அப்பால் இலங்கையின் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாநகரம். இலங்கை வாழ் தமிழரைப் பொறுத்தவரையிலும் கூட அவர்களின் தாயகம் வெவ்வேறு நகரங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் அவர்களின் கதையோடு இணைந்துவிட்ட ஒரு ஊர் அது.

தமிழர் சந்தித்த கலவரங்கள் பெரும்பாலும் மையம் கொண்ட இடமாக கொழும்பு இருந்துள்ளது. அவர்களது வாழ்விடமாக அது இருந்துள்ளது. அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வளம் கொடுத்த மண்ணாக அது இருந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் தலைநகர் வாழ்க்கையை நோக்கி ஓடிவருவோருக்கு கொழும்பு காண்பிக்கும் கோலங்கள் பல. ஆனால், எங்களைவிட, கொழும்புக்கு அண்மித்த நகரான நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அண்ணனுக்கு அது கொடுத்த காட்சிகள் வேறானவை. அனுபவங்கள் வேறானவை.

அவற்றைக் கொண்டு கொழும்பின், அதன் அடிநாதமான களனி கங்கையின் தீரத்தில் நடந்த நிகழ்வுகளை இங்கு காவியமாக வடிக்க அவர் முயற்சித்திருக்கிறார்.

வீரகேசரி பல எழுத்தாளர்களை விளைவித்த ஒரு களம். அங்கு உருவானவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் முருகபூபதி அண்ணர். அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் நான் அங்கு இல்லை.

ஆனால், அவரோடு அந்தக் காலங்களில் பணியாற்றிய பலர் பெரும் ஆளுமைகள். ஆனால், அவரது அனுபவம், கற்கை ஆகியன வெறுமனே வீரகேசரியை மாத்திரம் மையம் கொண்டவை அல்ல. அதனையும் கடந்து தான் பிறந்த மண்முதல் தான் இப்போது வாழும் ஆஸ்திரேலியா வரை உலகெங்கும் அவர் கண்ட அனுபவங்கள் அவரது எழுத்தில் தெரியும்.

மேலும் படிக்க ...

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று!

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய  புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.

மேலும் படிக்க ...

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)- மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

விவரங்கள்
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இலக்கியம்
01 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழில் இனப் பெருக்கம்

ஷேக்ஸ்பியர்

- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது.  1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது.  அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள்.  அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும்.  அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது.  ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை.  ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார்.  எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்..  ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை.  அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை : தோழர் - கடல்புத்திரன் -
  2. ஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
  3. மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும்! யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்! நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு! - முருகபூபதி -
  4. டொமினிக் ஜீவா!: இலக்கிய ஆலமரம்! தோப்பாகிய தனிமரம்! - வ.ந.கிரிதரன் -
  5. 'சின்னம்மாவின் 'அவர்' - - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  6. 'மெய்யியல் கற்றல் கற்பித்தல்!
பக்கம் 113 / 114
  • முதல்
  • முந்தைய
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • அடுத்த
  • கடைசி