பதிவுகள் முகப்பு

வ.ந.கிரிதரனின் அறிவியல் மின்னூல்: 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னுடைய அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' நூல் மின்னூலாக இணையக்  காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. மின்னூலை இணையக் காப்பகத்தில் அல்லது பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைப்பு 

இணையக் காப்பகம் (archive.org) எழுத்தாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாகப் பாவிக்க வேண்டிய ஆவணத்தளம். உங்கள் படைப்புகளின் பிடிஃப் கோப்புகளை அங்கு சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் இணையத்தில் உங்கள் படைப்புகள் நிலைத்து நிற்கப் போகின்றன. இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, உங்கள் படைப்புகளையும் சேகரித்து வையுங்கள்.
இத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை... இலங்கை அரசியல் ஓர் அலசல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.  ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை...

இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).

இந்தப் பின்னணியில்தான் அநுரகுமார திசாநாயக்க அவர்கள், இன்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாட்சி நீடிக்குமா அல்லது இழுபறிக்குள்ளாகுமா, அல்லது தோல்வியைத் தழுவுமா என்பனவெல்லாம் இனி நடக்கப்போகும் சங்கதிகளாகின்றன. இருந்தும், யதார்த்தங்களை மறக்கநினைக்கும் யாறொருவருக்கும் வரலாறு மிகக்கடுமையான தண்டனைகளையே வழங்கி வருவது சாசுவதமாகின்றது. (இதற்கான உதாரணம் எண்ணில் அடங்காதன என்பதும், அவை இலங்கை அரசியலில் இடம்பெறாமலும் இல்லை என்பதும் தெளிவு).

1970ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீமாவோ தலைமையில் இடதுசாரி கூட்டணி அமையப்பெற்றது. என்.எம்.பெரேரா-கொல்வின் ஆகியோரின் சமசமாஜ கட்சியும், பீட்டர் கெனமனின் கம்யூனிஸ கட்சியும் கூட்டணி அமைத்திருந்த காலமது. இருந்தும் இவ்வாட்சி, 1977ல் படுதோல்வியைக்கண்டு ஜே.ஆர். இன் 17வருட கேவலமான ஆட்சிக்கு வித்திட்டது (1977-1994). வித்தியாசம், இவை அனைத்தும் நடந்தபோது இருந்த இந்தியா, இன்று இருப்பதாகத் தெரியவில்லை. மாறியுள்ளது. அதாவது, விடயங்கள் மாறியுள்ளன.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: ஆறு. சிறீகாந்தனின் ஆய்வுத் தொகுப்பு - 'திரை இசை இலக்கியமும், வாழ்வியலும்'

விவரங்கள்
- தகவல்: பாலேந்திரா -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பு உறவுகளுக்கு, இந்த நூல் வெளியீட்டு விழாவில், கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் நிறைந்துள்ள, தொன்தமிழின்கலாச்சாரம், பண்பாடு; பெண்ணியம், காதல், வீரம் கூறும் இலக்கியம் என ஒர் ஆய்வு அரங்கேறுகிறது. ஆர்வலர்களுக்கு பகிருங்கள்.அரங்கத்தை மெருகேற்றுங்கள்,

நன்றி.
ஆறு. சிறீகாந்தன்.

நூல் வெளியீட்டு விழா: அகணி சுரேஷ் எழுதிய நான்கு நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- தகவல்:அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல் - “மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வ.ந..கிரிதரன் பாடல்கள்: சிந்திப்போம்!,விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்!, அன்பே வாழ்வின் அடிப்படை!,புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                      இசை &  குரல்: AI SUNO | ஓவியம்: AI

1. சிந்திப்போம்!

யு டியூப்பில் கேட்டுக் களிக்க

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

இருப்பு இருக்கும் அண்டம் பற்றி
விருப்புடன் சிந்திப்பேன் சலிப்பு அற்று.
சிந்திப்பது போலோர் இன்பம் உண்டோ!
செகத்தில் சிந்திப்பது தான் பேரின்பம்.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

சிந்திப்போம் இங்குநாம் உள்ள வரையில்.
சிந்திப்பதால் தெளிவு பிறக்கும் மேலும்
சிந்திப்பதால் அறிவு பெருகும் எனவே
சிந்திப்போம் இருக்கும் வரையில் நாமே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

மேலும் படிக்க ...

காரைக்கவி. கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு' துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை - கட்டுரைத் தொகுப்பு பற்றிய ரசனைக் குறிப்பு! பிரதேச வழக்கு நூலுக்குப் பிரதேச வழக்கில் ஒரு விமர்சனம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
03 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று  ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.

இவர் கிராமத்துக் காட்சிகளை விவரிக்கிற அழகில அந்தக் கிராமமும் எளிமையான மனிசரும் , ஆடுமாடு நாய் பூனையளும் , அப்புவும் ஆச்சியும் , எழுதியவரும் அவர் வேலிப் பொட்டுக்கால  சில்மிசம் பண்ணுற  பக்கத்து வீட்டு பதின்மத்துக் காதலி மலரும்  கண்ணுக்கு முன்னால கலைப்படம்  மாதிரி வந்து வந்து போகினம். அப்பிடி ஒரு சரளமான இயல்பான எழுத்து. இந்த எழுத்தில மலர் மாதிரி கொஞ்சம் மயங்கிப் போகாத ஆக்கள் இருக்கேலாது.

வடக்கின்ரை பிரதேச வழக்கிலையே முழுப்புத்தகத்தையும் எழுதி, அந்த மொழிவழக்குக்கு ஆவணப் பெறுமதி சேர்த்த   உவருக்கு , உண்ணாண நாங்கள் எல்லாரும்  ஒருக்கா  நன்றி சொல்லத்தான் வேணும்.

மேலும் படிக்க ...

கவிதை: இளைஞர்களின் மூலதனம். - ரவி அல்லது -

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனவுகள்
யாவும்
மெய்ப்படப் போகிறதென்ற
மீய்ந்த
கொஞ்சம்
நம்பிக்கைகள்
கொடுத்திருப்பது தான்
இவ் வாய்ப்பு.

குழுமிக் கலைந்தோம்
கொள்கை இல்லையென்றென
வஞ்சித்த கூட்டத்தின் முகத்தில்
பூசிய
கரியெனக் கொள்ளலாம்
மனிதம்
துளிர்த்ததை.

மலையக துயரங்கள்
மாறுமென்று
இணுக்கிக்கொண்டே
இருக்கிறது
இலைகளை
எஞ்சிய வாழ்க்கையில்
ஏதாவது
நடக்குமென்று.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                    - எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி.நடராசன் -

எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப  எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு.உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.  

அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்  என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர்.  இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம்.  இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்.  மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, "மறுமலர்ச்சி" என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."

இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.

மேலும் படிக்க ...

‘ஆக்குவாய் காப்பாய்’ கனடியத் தமிழ்த் திரைப்படம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.

லூனார் மோஸன் பிக்சர்ஸ் மற்றும் ஆர். புரொடக்ஸன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம் கனடா எஸ். மதிவாசனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தமிழ்ப்படம் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி யோர்க் சினிமா திரையரங்கில் மதியம் ஒரு மணிக்குத் திரையிடப்பட இருக்கின்றது.

இதில் கதாபாத்திரங்களாக கிருந்துஜா ஸ்ரீகாந், ஜெயப்பிரகாஸ், டேனிஸ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி யோகநாதன், ஆஸ்லி சுரேஸ்குமார், ஆதியா தயாளன், தனிஸா, சுதர்ஸி இக்னேஸியஸ், ரிஸீத் தலீம், மார்க் டிபேக்கர், டாக்டர் கரு கந்தையா, டாக்டர் கதிர் துரைசிங்கம், டாக்டர் வரகுணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜீவன் ராம்ஜெயம் மற்றும் தீபன் ராஜலிங்கம் ஆகியோர் ஒளிப்திவு செய்திருக்கிறார்கள். ரியூ ஆர். கிருஸ்ணா இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கின்றார். மகாஜனா கல்லூரியின் பிரபல நாடக நடிகரும், வைத்திய கலாநிதியுமான கதிர் துரைசிங்கம் இந்தப் படத்தில் வைத்தியராகக் கௌரவப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றார்.

மேலும் படிக்க ...

கணேஷின் கவிதைகள்

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பு மகளுக்கு அப்பாவின் கீதை !

மகளே ,
வாழ்க்கை பல​ வண்ணங்கள்
நிறைந்தது ,அதனை ரசிக்கவும்
அதன் அர்த்தங்களைப் புரிந்து
கொள்ளவும் என்றும்
முயற்சித்துக் கொண்டே இரு !

விஞ்ஞானம் சொல்லாத
கோணங்களில் வாழ்வு பல​
பரிமாணங்களை கொண்டது
அவை காலத்தோடு புரிந்தும்
சில​ கடந்தும் போய் விடும் .

கலைகளில் என்றும் ஈடுபாட்டை
வைத்துக் கொள் அவை உனக்கு
தெரியாமலே ஒரு தியான​ நிலையை
ஏற்படுத்திச் செல்லும் .

நல்ல​ ரசிககர்களே சிறந்த​
கலைஞர்கள் ஆக​ முடியும் என்பதை
புரிந்து கொள் .​

மேலும் படிக்க ...

கவிதை: சிந்தாதேவி - அஞ்சல் அட்டைக் குறிப்புகள் - செ.சுதர்சன் (இலங்கை) -

விவரங்கள்
- செ.சுதர்சன் (இலங்கை) -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



01. சிந்தாதேவி!

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
ஓலங்களும் ஒப்பாரிகளும்
கரைந்தொழுகும் வெளியில்;
ஏந்துவதற்கான கைகளும்
சொல்வதற்கான குரல்களும்
பிடுங்கி எறியப்பட்டிருந்தபோது...
எமக்கான பாத்திரம்
எதுவாக இருந்திருக்கும்?

அறிவாயா?

மேலும் படிக்க ...

மீள் பிரசுரம் : அநுர குமார திசாநாயக்க - இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் - ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -

விவரங்கள்
- ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -
அரசியல்
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்  'Leftist Star Rises Over Sri Lanka' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி Daily Mirror (Sri Lanaka) பத்திரிகையில் எழுதிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பற்றிய கட்டுரை ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு வீரகேசரியில் வெளியானது. அதனை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.- பதிவுகள்.காம் -


அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே . அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.

55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.

மேலும் படிக்க ...

இருபத்து நான்கு வயதில் பாரதி (4) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
29 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி IV

சுருக்கம் :

சென்ற கட்டுரைத் தொடரில், தன்னைச்சுற்றி எழக்கூடிய நான்கு விதமான அழுத்தங்களை ஆழ உணரும் பாரதி, இவற்றுக்கு மத்தியில், திலகரின் அரசியலைக் களமிறக்க வேண்டியதன் அவசியத்தினையும், ஆனால் ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த ஓர் சமூகத்தில் தான் பிறந்து வாழநேர்ந்துள்ள யதார்த்தத்தையும், இதற்கொப்ப, மக்களின் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தேவைப்பாட்டினையும், நன்கு உணர்ந்து, தன் வியாசத்திற்கு, பிரஞ்ஞையுடன் மதமூலாம் பூசமுனையும், ஓர் விதிவிலக்கான இளைஞனின் அணுகுமுறையை, எடுத்துரைக்க முனைந்திருந்தோம். இவனது செயற்பாடுகள் அல்லது புரிதல் இலகுவில் ஒருவருக்குக் கைவரக்கூடியதொன்றல்ல என்பது தெளிவு. பல்வேறு நூல்களைக் கற்று, ஆழ சிந்தித்து, தெளிந்து, அதேவேளை மக்களின்பால் அபரிவிதமான பரிவையும் தன்னுள் பெருமளவில் வளர்த்துக்கொள்ளும் ஓர் இளைஞனால் மாத்திரமே இத்தகைய முன்னெடுப்புகள் சாத்தியப்படக் கூடும்.

பாரதியின் அணுகுமுறை :

இந்திய மக்களிடை வளர்ந்துவரக்கூடிய தேசிய உணர்வை, திசைத்திருப்ப அல்லது அதனை இடம்பெயர்த்து, அங்கே, குறுகிய அரசியல் சித்தாந்தத்தை விதைத்துவிட, 1905களில் கர்ஸ்ஸன் பிரபு (வைஸ்ராய்) வங்காள மாகாணத் துண்டிப்பை அமுல்படுத்துகின்றான்:

கொழுந்துவிட்டெரியும். இந்தியத் தேசிய உணர்வினை இந்நடைமுறையானது, சிதைத்து, மத அடிப்படையில், மக்களைப் பிரிந்து நிற்கச்செய்துவிடும் என்பது அன்றைய ஆங்கில சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருந்தது.

முஸ்லீம்களாகவும், இந்துக்களாகவும் இந்தியர், கச்சைக்கட்டிக் கொள்வர் என்ற ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில், மேற்படி அரசியல் நகர்வானது, பல்வேறு சமாதானங்களுடன் அன்றைய ஆதிக்கச் சக்தியினரால் நகர்த்தப்பட்டது. உதாரணமாக, வங்காள மாகாணமானது, நிர்வாகக் கடினங்களை ஏற்படுத்தக்கூடிய, அளவில் மிகப்பெரிய மாகாணமாக இருப்பதால், இலகுவில் அதனை நிர்வகிக்கப்பட முடியாது என்பது இச்சமாதானங்களில் ஒன்றாக அமைந்தது.

மேலும் படிக்க ...

ஜேவிபி ஓர் இனவெறிக் கட்சியா? செயற்கை அறிவுடன் ஓர் உரையாடலும், கேள்விக்கான அதன் பதிலும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


"ஜேவிபிக் கட்சி இனவெறிக் கட்சியா?" இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில் நான் "Is the JVP party a racist party?" என்று செயற்கை அறிவான chatGPT இடம் கேட்டேன். அதற்கு அது தந்த விரிவான ஆங்கிலப் பதில் மூலம் அதன் வரலாற்று அறிவைக் கண்டு வியந்தேன். அது கூறியதன் முக்கிய சாராம்சம் வருமாறு:

"ஜனதா விமுக்தி பெரமுன (JVP) ஓர் இனவெறி கட்சியாக வரையறுக்கப்படவில்லை, ஆனால் அதன் வரலாறும் அரசியல் நடவடிக்கைகளும் இலங்கையில் இனப் பிரச்சினைகள் தொடர்பாகச் சிக்கலானவை. JVP மார்க்சிச - லெனினிசக் கட்சியாகத் தொடங்கியது, அது நாட்டில் வர்க்கப் போராட்டம் மற்றும் பொருளாதார வேறுபாடுகளைச் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இனப் பிரச்சினைகள் குறித்த அதன் நிலைப்பாடு காலப்போக்கில் பரிணாமம் அடைந்தது.

1980-களின் பிற்பகுதியில், JVP இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக இருந்தது, இது இந்தியத் தலையீட்டையும் இந்திய அமைதிப் பாதுகாப்புப் படையினரின் (IPKF) இருப்பையும் எதிர்த்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியது. அப்போது, JVP-யின் பேச்சுவார்த்தைகளில் தேசியவாதச் சூழல் காணப்பட்டது. விமர்சகர்கள் சிலர் அதைச்  சிங்களப் பேரினவாதத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறார்கள்,  அவர்கள் தமிழர் பிரிவினைவாதத்தையும் இந்தியத் தலையீட்டையும் எதிர்த்தனர்.

ஆனால், சமீப ஆண்டுகளில், JVP அனைத்து இனக் குழுக்களுக்கும் சமத்துவத்தை ஆதரிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தக் கட்சி இன அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு சமூக நியாயம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.. இது இலங்கையில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் முறையில் முன்னேறிய அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறது.

பொதுவாக, JVP-யின் வரலாற்றில் அதன் செயல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்த காலங்கள் இருந்தாலும், தற்போது அது இனவெறிக் கட்சியாக கருதப்படுவதில்லை. மற்றும் கூட்டு அரசியல் நோக்கில் முன்னேற முயற்சி செய்கின்றது."

மேலும் படிக்க ...

அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார் திசாநாயக்க பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியத்துவம் மிக்க கட்டுரையொன்றினை 'அநுரா குமார திசாநாயக்க; “இடதுசாரி” நட்சத்திரம் இலங்கையில் உதயம்' என்னும் தலைப்பில் டெய்லி மிரர் (இலங்கை) பத்திரிகையில் எழுதியுள்ளார். அதிலவர் அநுரா குமார திசாநாயக்கவின் வாசிப்பு மற்றும் நீச்சல் பழக்கம் பற்றியும் விபரித்துள்ளார். அவற்றின்  மூலம் அநுரா எவ்விதமான நூல்களை வாசிப்பார், எத்தகைய தேகப்பயிற்சி அவருக்குப் பிடித்தது போன்ற விடயங்களை அறிய முடிகின்றது.

அநுரா தனது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் தீவிர வாசிப்பாளராக இருந்தவர்.  அவர் தனக்கு மிகவும் நூல்கள் என லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', மார்க்சிம் கோர்க்கியின் 'தாய்' சிங்கள எழுத்தாளரான மகிந்த பிரசாத் மாசிம்புலாவின் ( Mahinda Prasad Masimbula ) 'செங்கொட்டான்', மோகன் ராஜ் மடவாலாவின் (Mohan Raj Madawala) 'ஆடரனீயா விக்டோரியா' ஆகிய நாவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறுகதைகள் பலவற்றையும் தனக்குப் பிடித்ததாகவும் குறிப்பிட்டதாக டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

கவிதை: ஆதுரமேகிய அகத்துணை - ரவி அல்லது -

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
26 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



கவனப் பிசகில்
எஞ்சியவை
இயலாமைத் துயரைத்தவிர
வேறில்லை
இந் நெடு நடையில்.

அக வாடல்
மிகையில்
பூரித்தணைக்கும்
உன் வாஞ்சையை
எதைக் கொண்டு
நிகர் செய்ய
வாலாட்டும் குழைவில்.

மேலும் படிக்க ...

கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
26 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. லோகன் கணபதி கலந்து கொண்டார்.

நிகழ்வின் தொடக்கத்தில், கனடாவின் மதிப்புக்குரிய தமிழ்ப் பிரமுகர்களான பாஸ்டர் ஜெயானந்தசோதி, எழுத்தாளர் குரு அரவிந்தன், இயக்குனர் திரு. மதிவாசன் சீனிவாசகம், திரு. ப. ஜெயச்செல்வன், திருமதி. சுந்தரேஸ்வரி யோகராஜா, திருமதி. செல்வா அருள்ராஜசிங்கம், திருமதி. சந்திரிகா சின்னத்துரை, திருமதி. வனிதா சிவானந்தலிங்கம், திருமதி. ஜெயநிதி சிவானந்தசிங்கம், திரு கந்தசாமி இளந்திரையன், திருமதி. சிவரஞ்சிதம் ரஞ்சித் அலோசியஸ் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசியப்பண், அகவணக்கம் ஆகியன இடம் பெற்றன. கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன செல்வி மாதங்கி திருஞானசம்பந்தன் அவர்களால் இசைக்கப்பெற்றன. இதை அடுத்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. தொடர்ந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் வரவேற்புரையும், அடுத்து பிரதம விருந்தினர் திரு. லோகன் கணபதி அவர்களின் உரையும் இடம் பெற்றது. அவர் தனது உரையில் ‘தாம் வாழும் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்களே இலக்கிய வாதிகளாகப் பிரகாசிக்கின்றார்கள். இப்படியானவர்;களின் பங்களிப்பு எமது சமூகத்திற்கு இன்று அவசியம் தேவைப்படுகின்றது’ என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பூபதி அண்ணா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
26 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரண்டு முறை சாகித்தியப் பரிசு, பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையினரின் இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தினரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என வேறுபட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார்.

1972 இல், மல்லிகையில் பிரசுரமான ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதையின் ஊடாக இலக்கிய உலகில் தடம்பதித்த அவர் அடுத்த மூன்று வருடத்துக்குள் குறித்த வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்தியப் பரிசைத் தனதாக்கிக் கொண்டார் என்பதே அவரின் எழுத்தின் சிறப்பைக் கூறுவதற்குப் போதுமானது. அந்தக் கெளரவத்தை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருந்த ‘சுமையின் பங்காளிகள்’ என்ற அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தின் எண்ணிம நூலகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஏழு சிறுகதைத் தொகுதிகள், பதினைந்து கட்டுரைத் தொகுதிகள், நாவல் மற்றும் சிறுவர் இலக்கியம், விமர்சனங்கள், நேர்காணல்கள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கும் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தான் மிளிர்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சக எழுத்தாளர்களைப் பற்றிப் பரவலாக எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் பரந்தமனப்பான்மையும், விரிவான வாசிப்பும், அபாரமான நினைவாற்றலும், மற்றவர்கள் பற்றிய கரிசனையும்தான் அதற்கு அடிப்படையெனலாம்.

மேலும் படிக்க ...

பெண் பேயாக அலையும் சிறை! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
26 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


எமது ஈழ மற்றும் தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. சிறைக்குச் சென்ற காரணம் அரசியலாகட்டும் அல்லது சங்கிலித் திருட்டாகட்டும். அனுபவம் ஒன்றே. அப்படியிருக்கும் சமூக வெளியில், அவுஸ்திரேலியாவில் அதுவும் பேர்த்திலுள்ள சிறையைப் பற்றி நான் எழுத என்ன அவசியம் உள்ளது ?

00

ஃபிரிமான்டில் சிறை, கொலை செய்யப்பட்ட பெண், பேயாக அலையும் சிறை என்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. என்னளவில் அதுவே இந்த சிறையின் முக்கியத்துவம். வீடுகளில், சுடுகாடுகளில் ஏன் தெருவில் ஆவியாக அலைவது எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதிலும் ஆவிகளில் பெண்கள் அதிகமென்பர்கள். காலங்காலமாக அநியாயமாகக் கொலை செய்யப்படுபவர்கள் அவர்களே!

மனிதர்களைபோல் அல்லாது சுதந்திரமாக இருக்க வேண்டிய ஆவி ஏன் சிறையில் அலையவேண்டும் ?

இப்படியான விடயத்தைக் கேள்விப்பட்டது இதுவே முதல் தடவை . அதுவே என்னை அங்கே செல்ல வைத்தது.

அந்தச் சிறைக்குள்ளே சென்றதும் சிறையின் இரும்பு வாசற் கதவு ' "பூம்" என்ற பெரிய ஓசையுடன் மூடப்பட்டது. அந்த வகையான சப்தத்தை நான் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டுத் திருபம்பினேன். ஆசுவாசப்படுத்தி சுற்றிப் பார்த்தபோது, என்னுடன் முப்பது பேர் அந்த அறையுள் நின்றோம். நான் சிலரோடு அங்கிருந்த மரப் பலகை பெஞ்சில் அமர்ந்தேன்.

மேலும் படிக்க ...

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
26 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக இவர் வரலாற்றில் இடம் பெறுகின்றார். இதற்கு முன் இப்பதவியில் இருந்தவர்கள்: ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க. ஹரிணி அமரசூரிய நன்கு தமிழில் உரையாற்றக் கூடியவர் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வாழ்த்துகள்.
 
அமரசூரிய 2020 முதல் 2024 வரை தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அதற்கு முன் அவர் இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழக சமூக ஆய்வுத்துறையின் மூத்த விரிவுரையாளராக இருந்தார். இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்ணியம், பாலின சமத்துவம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறைமையின் செயல்திறன் குறைபாடுகள் போன்ற விடயங்களில் ஆய்வுகள் செய்தவர். நெஸ்ட் (Nest) அமைப்பின் இயக்குனர்களில் ஒருவர்.
மேலும் படிக்க ...

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான  முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.

1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.

2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்-
வ.ந.கிரிதரன் பக்கம்
23 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்டுக் களிக்க: https://www.youtube.com/watch?v=ZtuQd3SVYjM    எனது, வ.ந.கிரிதரனின்,  பாடல்கள் , யு டியூப் சானலில் , செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பதிவேற்றப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள்.  வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர்  வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

மேலும் படிக்க ...

புதிய மாற்றத்தின் குறியீடு அநுரா குமார திசாநாயக்க! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
22 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது, இதுவரை இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிப்பொறுப்பை மார்க்சியச் சிந்தனைகள் மிக்க கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' வேட்பாளரான அனுரா குமார திசாநாயக்கவிடம் கையளித்திருக்கின்றார்கள் மக்கள். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் பெருமளவில்  கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஏனைய சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. புதிய இளந்தலைமுறையினர் இவ்வின மக்களின் அரசியலைக் கையெடுக்கும் வேளை ஏற்பட்டிருக்கின்றது.  அரசியல்வாதிகள் இன, மத, மொழி வாதங்கள் மூலம்  தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்ததே நாட்டின்  சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணம்.  தனது பிரச்சாரங்களில் மத வாதம், இனவாதம் போன்ற பிரிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அவர் அதனை நடைமுறைப் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். சவால் நிறைந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கின்றது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றியடையவார் என்று நம்புவோம். வாழ்த்துகிறோம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!

விவரங்கள்
- தகவல்: திவ்வியராஜன் -
நிகழ்வுகள்
21 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!

22-09-2024 ஞாயிறு பகல் 1:30 . Scarborough Civic Centre.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எழுத்தாளர் செம்மனச்செல்வி தேசிகன் மறைந்தார்!
  2. வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!
  3. LGBTQ - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
  4. வ.ந.கிரிதரன் பாடல்கள் நான்கு!
  5. இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு :
  6. திருப்பூர் சிறுகதைகள்! - சுப்ரபாரதிமணியன் -
  7. சிந்தனைக்களம்: 'வயலின் இசைமரபில் பரூர் பாணி’
  8. பாரதி தமிழன்னைச் சொத்தாகும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  9. கண்டுணராத கண்கள்! - ரவி அல்லது -
  10. தேடல்கள் மிக்க மகாகவி பாரதி! - வ.ந.கிரிதரன் -
  11. அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். - குரு அரவிந்தன் -
  12. யாழ்நகரில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!
  13. முத்து முத்துத் தேடல்! -பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம் -
  14. தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -
பக்கம் 16 / 104
  • முதல்
  • முந்தைய
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • அடுத்த
  • கடைசி