பதிவுகள் முகப்பு

அஞ்சலி: ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண்ணாளுமை புஷ்பராணி நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார். அண்மைக்காலமாக அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார். எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார். தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது, அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும் நாம் கடந்துதான் செல்லவேண்டும்.

புஷ்பராணி அவர்களை 2019 இல் முதலில் பாரிஸில் நடந்த எனது சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுக அரங்கிலும், பின்னர் கடந்த 2023 இல் அவரது இல்லத்திலும் சந்தித்தேன். இறுதியாக நடந்த சந்திப்பிற்கு தோழர் ராயப்பு அழகிரி என்னை அழைத்துச்சென்றிருந்தார். தனது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும். இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2025 ) நாம் வாழ்கிறோம். தமிழ் ஈழ விடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்தான் புஷ்பராணி!

இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்விகண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
இலக்கியம்
18 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் புஸ்பராணி சிதம்பரியின் 'அகாலம்' நூல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதி, 21.08.2022 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியான  கட்டுரை. அவரது நினைவாக  மீள்பிரசுரமாகின்றது.


முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -    21 ஆகஸ்ட் 2022

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.

1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில், புனித பிரதேசம் என அழைக்கப்படும் கதிர்காமத்தில், அங்கு வாழ்ந்த அழகி மனம்பேரி பிரேமாவதி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அவலத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த நூலின் அறிமுக நிகழ்வு பாரிஸில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்தபோதுதான் முதல் முதலாக புஷ்பராணி அக்காவை சந்தித்தேன். அவரைக் கண்டதும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பொங்கி வந்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன். எனது வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பியிருந்த பெண் ஆளுமை அவர். 'அக்கா' என்று விளித்ததும், தன்னை அவ்வாறு அழைக்கவேண்டாம். 'புஷ்பராணி' என்றே அழைக்கலாம் என்று அவர் சொன்னதும் சற்று திகைத்துவிட்டேன்.

மேலும் படிக்க ...

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான 'தமிழ் மகளிர் பேரவை' புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத்  தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது.  தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர்.  அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல்.  அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.  

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.

மேலும் படிக்க ...

அறிந்திரன் சிறுவர் சஞ்சிகையின் வெளியீட்டாளரான எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவின் வேண்டுகோள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் சிறுவர் சஞ்சிகைக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது.  எதிர்காலத்தின் நாயக, நாயகியர்கள் குழந்தைகளே.  காலத்துக்காலம் பல சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் , அவை போதிய ஆதரவின்றி தொடராமல் நின்றுவிட்டன. இந்நிலையில் அண்மையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருந்த அறிந்திரன் சஞ்சிகையும் தொடராமல் நின்று போனது. இதனை எப்படியும் மீண்டும் வெளியிட வேண்டுமென்ற ஆர்வத்திலுள்ளார் இதன் வெளியீட்டாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தா. இது பற்றிய அவரது தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள்.காம் -

மேலும் படிக்க ...

பட்டினப்பாலையில் வணிகம்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
15 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.

ஒரு நாடு குறையாத விளைச்சல், நடுநிலைமையாளர், சோர்வற்ற வணிகர் என்று இருக்குமானால் அது வளமுடையதாகக் காட்சியளிக்கும் என்ற கருத்தமைந்த பாடலைக் குறள் புலப்படுத்துகிறது.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு (கு.எண்.731)

இதன் வழியாக வணிகரின் மேன்மையை அறிய முடிகிறது.

பெருங்குடி

வணிகர் மிகுதியாக இருந்த பூம்புகார், புகழாகிய சிறப்புக் கொண்ட அரசரின் மதிப்புக்கும், பெருமைக்கும் உரியதாய், இம்மக்களைக் கொண்டு பயன்பெற்று விளங்கியது. இதைப் 'பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" என்ற தொடர் வலியுறுத்துகிறது. வணிகர் தம் குடிக்கு ஏற்ற ஒழுகலாறைக் கைக்கொண்டு, அதிலிருந்து சிறிதும் பிறழாதவராய்த் திகழ்ந்தனர். இவர்கள் அறவழியில் சேர்த்த பொருளில்லாதவர்களுக்குத் தந்தனர். அதன் பயனாகப் போகப் பூமியில் மகிழ்ச்சியை அடைபவர் போல் தோன்றினர்.

மேலும் படிக்க ...

மங்கலமாம் சித்திரை மனமகிழ வைக்கும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வசந்தம் மலர வருகின்ற சித்திரையே
சுகந்தம் பரப்பி சுகந்தருவாய் சித்திரையே
அகங்கள் நிறைய ஆனந்தம் அத்தனையும்
அள்ளியே நீவருவாய் அழகான சித்திரையே

பற்பல தத்துவங்கள் உள்ளடக்கி நிற்கின்றாய்
பண்பாடு கலாசாரம் தாங்கியே ஒளிர்கின்றாய்
இத்தரையில் எதிர்பார்க்கும் ஏற்றமுடை திருநாளாய்
சித்திரையே விளங்குகிறாய் சிறப்புடனே வந்திடுவாய்

இலங்கையில் சித்திரை இன்பத்தை அளித்துவிடும்
இருவினமும் சித்திரையை ஏந்திடுவார் மகிழ்வுடனே
செந்தமிழும் சிங்களமும் கொண்டாடும் திருநாளாய்
சித்திரைத் திருநாள் இலங்கையில் மலர்ந்திடுமே

மேலும் படிக்க ...

தமிழர் தகவல் விழா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில்  கடந்த 34 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழிதழ் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் தமிழர் தகவல் இதழின் வருடாந்த மலர் வெளியீடும்,  விருதுவிழாவும் ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர்களின் சபாபீடத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.. நேரம் தவறாமைக்கு ஒரு முன்னுதாரணமான தமிழர் தகவல் விழா வழமைபோலச் சரியாக மாலை மூன்று மணிக்குத் தொடங்கியிருந்தது. ‘இளமுகில் சுவடு ஆண்டு மலர் வெளியீடு’ என்ற முதலாவது பகுதியை இளையோரான பிறைட்னி ஆரம்பித்துவைக்க, மீதியை அக்க்ஷே தலைமைதாங்கி அழகு தமிழில் நடத்தினார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியமும் , ஆரம்ப காலத் தமிழ்ச் சஞ்சிகைகளும், 'நிழல்' சஞ்சிகையின் முக்கியத்துவமும் ... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.

நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக்  கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.

தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை  மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை   15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு  இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.  எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.  அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான கையெழுத்துச் சஞ்சிகை 'குரல்' .  செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம் ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான சஞ்சிகை  'குரல்'.

மேலும் படிக்க ...

கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், ,முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை ) கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை ) -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. நடந்துவிடாதா அந்நற்கூத்து.

உங்களிடம் இருக்கும்
அறியாமையைக் கொஞ்சம் தாருங்கள்.
அத்துடன்
அந்தக் கல்லாமையின் புன்முறுவல்.
உள்ளிருக்கும்
யாவையும்
துடைத்தெறிந்து
காம்பு சப்பும்
மடியிலிருந்து
தொடங்கலாமா.

மண்ணோடு கலந்துவிட்ட
தொப்புள் கொடி
உறவற்ற
துயரம் சொல்லிலடங்காது.

அலுப்பு கூட்டும்
அன்றாடத்தின்
மதிப்புகள் கூடிய
வாழ்வைவிட்டு
அக்காக்கள் தேடும்
தம்பியாக
ஆடு மாடுகளுக்குள்
ஒலிந்து ஓட
என்ன செய்ய வேண்டும்
இப்பொழுது
நான்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "தமிழ்மொழிக்குப் பங்களிப்புச் செய்த பிரெஞ்சு அறிஞர்கள்"

விவரங்கள்
-பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
பயணங்கள்
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நடு இரவில் தெரியும் சூரியன்!

ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளரும் பன்முக ஆளுமையாளருமான பவானி சற்குணசெல்வத்துடன் ஒரு நேர்காணல்! - முனைவர். பொ. திராவிடமணி -

விவரங்கள்
- முனைவர். பொ. திராவிடமணி -
நேர்காணல்
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இவர் தம்பிராசா மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வி.  பதுளையில் பிறந்தவர் தனது ஆரம்பக்கல்வியை பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் பெற்று பின் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கல்விகற்றவர். பின் யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டு. இலங்கைக் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தி்ல் விவசாய பீடத்தில் கலைமானிப்பட்டம் பெற்று அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். திருமணத்திற்கு பின்னர் நெதர்லாந்திற்கு புலம்பெயர்ந்து டச்சு மொழியை  திறம்பட கற்றார். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். இவர் நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியவர். பின் அகதிகளுக்கான உதவிக்காரியாலயத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும்
பணியாற்றி வருகிறார்.

தமிழில் மட்டுமன்றி டச்சு மொழியிலும் சிறப்பான திறமைகளை கொண்ட பவானி அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறுவர்களின் தமிழ் வளர்ச்சியில் அயராது பாடுபட்டவர்.  தமிழ் பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி மாணவர்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவர்.

தமிழ் மாணவர்களுக்கு நாடகம், நாட்டியம், இசை போன்றவற்றை பயிற்றுவித்து அவர்களை முன்னேற்றியவர். புலம்பெயர்ந்த மக்கள் தமிழையும் சமயத்தையும் இரு கண்களை போல  பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேரனின் கவிதைகளை மொழிபெயர்த்து  கடலின்கதை எனும் நூலை தமிழ் மற்றும் நெதர்லாந்து ஆகிய இருமொழிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டார். சேரனின் காதல் கவிதைகள் தொகுப்பு அன்பு திகட்டாது எனும் நூலானது நெதர்லாந்து மொழியில்.மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2018  நவம்பரில் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது. சிலகணங்கள் எனும் இளையோர்க்கான கவிதைத் தொகுப்பு 2020 இலங்கையில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் (13): ஹெக்- டெல்ஃவ்ற் -ரொட்டர்டாம்- கீத்தோன் - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
10 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

             - ICJ-international Court of Justice) -

அடுத்த நாள் எமது பயணம் ஹெக் (Hague), ரொட்டர்டாம் (Rotterdam), டெல்ஃவ்ற் (Delft) என்ற நெதர்லாந்தின் என்ற நகர்களுக்குள் ஊடாகச் செல்வதற்கு அம்ஸ்ரர்டாம் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உல்லாசப் பிரயாணிகளுக்கான இடத்தில் பதிவு செய்திருந்தோம் .

ஒல்லாந்து என்ற பெயரைப் பல இடத்தில் நான் தாறுமாறாக பாவித்த போதிலும் இரண்டு மாகாணங்கள் மட்டுமே வட , தென் ஒல்லாந்து ஆகும். அதைவிட பத்து மாகாணங்கள் சேர்ந்த நாடு நெதர்லாந்து. அம்ஸ்டர்டாம் இருப்பது வட ஓல்லாந்திலேயாகும். ஒல்லாந்து உண்மையில் இலங்கையிலும் சிறிய நாடு. சனத்தொகையும் அதேபோல் (18 மில்லியன்) குறைவானது. இதைவிட நான்கு கரிபியன் தீவுகள் இவர்களோடு இன்னும் காலனிகளாக உள்ளன.

நாங்கள் போக இருந்த ஹெக், ரொட்டடாம், டெல்ஃவ்ற் எல்லாம் தென் ஒல்லாந்தை சேர்ந்த நகரங்களாகும் அம்ஸ்ரர்டாம் நாட்டின் தலைநகரான போதும், அரசும் நாடாளுமன்றம் என்பன இருப்பது ஹெக் நகராகும். இப்படியான ஒரு அமைப்பு தென் ஆபிரிக்காவிலும் உள்ளது.

நாங்கள் அம்ஸ்ரர்டாமிலிருந்து தென் நோக்கி ஹெக் போகும் வழியில் பஸ்சை நிறுத்தியபோது, குழந்தைகளின் பூங்கா போல ஒரு இடம் இருந்தது. இறங்கியதும் மொத்த நெதர்லாந்தின் மாதிரி, ஆனால் சிறிய வடிவம் மடுரோடம் (Madurodam) என்ற பெயரில் அங்குள்ளது . நெதர்லாந்தில் உள்ள விமான நிலையம் , ரோட்டர்டாம் துறைமுகம், காற்றாலைகள் என எல்லாம் யதார்த்தமான சிறிய வடிவமாக அங்குள்ளது.

மேலும் படிக்க ...

கலைஞராய் அறிஞராய் துறவியாய் மிளிர்ந்த அடிகளார் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
10 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகிலை பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தாம் பலர். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம்,  வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு  விட்டு தாமாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு  முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

       மூன்றுவகையான சிந்தனை செயற்பாடு மிக்கவர்கள் சமூகத்தில் காணப்படும் வேளை இவர்களில் எந்த வகையினரை சமூகம் நினைத்து பார்க்கும் என எண்ணுகின்ற பொழுதுதான் மனித வாழ்வின் அர்த்தம் தெரியவரும். பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் கையாலாகாத நிலையில் இருப்போரையோ அல்லது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் நமக்கேன் என்று புறந்தள்ளி ஒதுங்கிப் போகின்றவர்களையோ யாரும் எக்காலத்தும் நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். சமூகத்தின் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறிந்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமூக உணர்வினை உள்ளத்துள் இருத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்தான் எல்லோராலும் எக்காலத்தும் நினைவு கூரும் நிலைக்கு நிற்பார்கள் என்பது மிகவும் முக்கிய கருத்தெனலாம். இந்த வகையில் பார்க்கும்வேளை ஈழத்தின் கிழக்கில் காரைதீவில் தோன்றிய சுவாமி விபுலானந்த அடிகளார் வந்து நிற்கிறார் எனலாம்.

        விபுலானந்த அடிகளார் அவர்கள் இப்பவுலகில் வாழ்ந்த காலம் ஐம்பத்து ஐந்து வருடங்கள் மட்டுமேயாகும். ஆனால் இக்கால கட்டத்துக்குள் அவரின் வாழ்வானது மூன்றுவித அனுபவங்களைக்   கொண்ட தாக அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். ஈழத்தில் பிறந்த அடிகளார் இந்தியாவில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தமிழ் நாடாகிய தென்னிந்தியாவிலும் தமிழ் பேசாத வட இந்தியாவிலும் இருக்கின்ற சூழலும் அடிகளாருக்கு ஏற்படுகிறது. இதனால் மூன்று விதமான சூழலும் அங்கு கிடைத்த அனுபவங்களும் அடிகளாரின் பணிகளில் சிந்தனைகளில் செயற்பாடுகளிலெல்லாம் பல தாக்கங்களுக்குக் காலாகவும் இருந்திருக்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

மேலும் படிக்க ...

வெளியீடும் அறிமுக உரைகளும் - பெனடிக்ற் பாலன் படைப்புகள்! - தகவல் - ஜயகரன் (தேடகம்) -

விவரங்கள்
- தகவல் - ஜயகரன் (தேடகம்) -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* - தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

நடேஸ்வரா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா,  நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 - 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கை நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், ஊடகவியலாளரான பி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து நடேஸ்வரக்கல்லூரிக் கீதம் ஆகியன யமுனா சிறீதரன், வாசுகி கோகுலன், சின்னராசா தாசன், கிருஸ்ணபிள்ளை நீலவண்ணன் ஆகியோரால் பாடப் பெற்றன. ஜெனீக்கா டேவிட்சனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் மார்கண்டு நிர்மலன் அவர்களின் உரை இடம் பெற்றது.

தொடர்ந்து காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரி அதிபர் திரு. பி. பாலகுமார் அவர்களின் பதிவு செய்யப்பட்ட காணெளி உரை இடம் பெற்றது. அவர்தனது உரையில் அதிபாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட பாடசாலையின் முன்னேற்றம் பற்றியும், இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் மாணவர்கள் பற்றாக குறை பற்றியும் குறிப்பிட்டு, பாடசாலையைக் கல்வி சார்ந்து முன்னேற்றத் தேவையான அவசர தேவைகள் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மேலதிக விபரங்களை மகாலிங்கம் குமாரகுலதேவன் தனது உரையில் எடுத்துச் சொன்னார்.

மேலும் படிக்க ...

‘இவள்’ சிறுகதைத் தொகுப்பில் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள்! - -முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
-முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
ஆய்வு
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை:

புலம்பெயர் தமிழ்ப்பெண்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலும் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். தமிழருக்கான வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றினர். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இயற்கையைப் பருகினர். அதன் இன்பத்தை அனுபவித்தனர். சங்க கால மக்களது இயற்கையின் நேசிப்பை மணிமாலா மதியழகனின் கதைகளில் காணமுடிகிறது. இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த பறவைகளின் இயல்புகளையும் அதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும் இவள்..? சிறுகதைத் தொகுப்புச் சுட்டுகிறது. மனிதர்களின் சிறுமைத்தனமான எண்ணங்களையும் கதைகள் விளக்குகின்றன. தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் இச்சிறுகதைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

மணிமாலா மதியழகன்:

தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியேறியவர் மணிமாலா மதியழகன் அவர்கள். முகமூடிகள், தேத்தண்ணி, பெருந்தீ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளோடு இவள் சிறுகதைத் தொகுப்பும் இவரது படைப்புகளாகும். சிங்கையின் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். எளிமையான நடையோட்டத்தாலும் செம்மையான கருத்துகளாலும் தனது எழுத்துகளுக்கு வலுச்சேர்க்கிறார். இக்கட்டுரையில் மணிமாலா மதியழகன் அவர்களின் இவள் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள் பற்றிக்கூர்ந்து நோக்குவோம்.

மனிதமும் இயற்கையும்:

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு ஆதிகாலத்திலிருந்தே தமிழர்களிடம் குறிப்பாக பெண்களிடம் இருந்தது. மணிமாலா மதியழகனின் ‘ங்கா...’ சிறுகதை பெண்ணுக்கும் இயற்கைக்கும் இடையிலான நேசிப்பைச் சுமந்து நிற்கிறது. தேன்சிட்டு கூடு கட்டுவதில் ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதன் கூடு கட்டும் நேர்த்தி, சுறுசுறுப்பு, அதனால் ஏற்படும் மனித மனதின் உற்சாகம் மிகுந்து மிகுந்து மழையின் காரணமாக என பலவித காரணங்களால் கூடு களைவதில் வடிந்து போகிறது. தேன்சிட்டு கட்டிய கூட்டை,

“பிடிவாதத்தில் இருந்த பகல் ஊர்ந்து கடக்க, கட்டுக்கடங்கா ஆவலோடு கதவைத் திறந்து கட்டுமானப்பணியைப் பார்த்தவள் அசந்து போய்ட்டேன்! கட்டடக்கலையின் வித்தகர்கள் எனத் தேன்சிட்டுகளுக்குப் பட்டமே கொடுக்கலாமோ? கொடியில் காயவைத்த புடவையைப் போல நீளமாகத் தொங்கியது”(பக்.14)

என்று வர்ணிக்கிறார் மணிமாலா மதியழகன். இறுதியில் அதனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் குரூரமான புத்தியில் பறவையின் கூடு அழிந்து போகிறது என்பதோடு தற்கால வாழ்வியலில் இயற்கையை அழிப்பது மனிதன்தான் என்பதைப் பூடகமாக உரைக்கிறார்.

மேலும் படிக்க ...

மு.நித்தியானந்தன் எழுதிய ‘இந்திய இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ நூல் குறித்து... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம்
நூல் அறிமுகம்
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

தேர்ந்தெடுத்த படைப்பாளர்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் நான் வாசிக்கத் தோன்றும்போதெல்லாம் அவை நேராகவே என்னுடன் பேசுவது போலவும், அவை நித்திய ஜீவியாக என்னுடன் இருப்பதுபோலவும் நான் உணர்வதுண்டு. அந்த வகையில் இந்நூலை வாசிக்கும்போது அது என்னைச் சிறைப்படுத்தியது.

    ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் கோலங்கள், தமிழ் இலக்கியத்தின் அச்சுப் பண்பாடு, ஓவியம், சாதியம், தமிழ் நிலத்தின் ஆவணச் சிற்பி, தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், நாவல், சிறுகதையென பல தகவல்களைத் தாங்கிய பத்துக் கட்டுரைகளை நூற்றி நாற்பத்திமூன்று பக்கங்களில், முதல் தைல வண்ண அட்டை ஓவியத்தோடும் இந்நூலைப் பார்க்க முடிகின்றது.

   இத்தொகுதியில் ‘பொதுநலவாய நாடுகளின் இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ என்ற கட்டுரை முதல்த்தடவையாக நான் அறிந்திருந்த விடயமாகப்பட்டது. அதாவது அந்தக்காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து க. கைலாசபதி அவர்கள் (1933- 1982) பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கிரேக்க மொழித்துறையில் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனி;ன் மேற்பார்வையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டிருந்ததாகவும், அதே பல்கலைக்கழகத்தில் மைசூர்ப் பல்கலைக்கழகத்திலிருந்து யு.ஆர். அனர்ந்தமூர்த்தியும் (1932 – 2014) ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்களாம். அவ்வேளையில் யு.ஆர்.அனந்தமூர்த்தியும், க.கைலாசபதியும் இணைந்து எழுதிய கடிதம் வுiஅநள டுவைநசயசல ளரிpடநஅநவெ செப்டம்பர் 24, 1964 இதழில் ஐனெயைn ஏநசயெஉரடயச றசவைநசள என்ற தலைப்பில் பிரசுரமாகியது. அதில் பலவகையான இலக்கிய விவாதங்களை இக்கட்டுரை மூலம் என்னால் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க ...

பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பன்முகம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்வுகள்
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய தமிழ் மொழிச் சாதனை விழாவில் நித்தி கனகரத்தினம் அவர்கள் கெளரவிக்கப்பட்டபோது அதன் தலைவர் கிறிஸ்டி நல்லரெத்தினத்திடமிருந்து சான்றிதழ் பெறும் காட்சி. -

ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வில்அவரை ஏன் நாங்கள் தெரிவு செய்தோம் என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும். இல்லையெனில், தெரிந்தவர், முகஸ்துதிக்காக அல்லது எம்மை முக்கியத்துவப்படுத்த, ஏன் சில வேளைகளில் அவரிடம் உதவிபெற என பல காரணங்களை சிலர் ஊகிக்கக்கூடும். நாம் ஒருவரைக் கொண்டாடும் போது அவரை நேரடியாக தெரியாத போதும், அவரது பணிகள் அல்லது படைப்புகள் எமக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும் . இதைத்தான் திருவள்ளுவர் 2000 வருடங்கள் முன்பு நமக்குச் சொல்லியது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இலகுவான குறள் – ஐந்தாம் வகுப்பில் படித்தது.

1968ல் நான் எட்டாம் வகுப்பு இந்துக் கல்லூரியில் படிக்கும்போது “சின்னமாமியே” மற்றும் “கள்ளுக்கடை பக்கம் போகாதே” ஆகிய பாடல் வரிகளை எங்கோ கேட்டேன். அதற்கப்பால் அவற்றின் ரிஷி மூலத்தை அறிந்து கொள்ளவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.

நித்தியை அறிந்து பின்பே அவரது பாடல்களை அறிந்தால், அட நமக்குத் இங்கு அது நடக்கவில்லை. தெரிந்தவர், நண்பர் அல்லது பழகியவர் இவர் என்பது ஒரு விதத்தில் முகமன் பாராட்டுவது போன்றதாகும்.

பல காலங்கள் கடந்த பின் 1975இல் பொப் இசையைப் பற்றி நான் அறிந்தது பேராதனை பல்கலைக்கழகத்தில்தான். அக்காலத்தில் சிங்கள பாடகர்களுடன் ஏ.ஈ மனோகரன், நித்தி கனகரத்தினம் போன்றவர்களைப் பேரளவுக்கு அறிந்திருந்தேன்.

கடந்த ஒரு மாதம் வரையில் நான் நித்தியை பற்றி அறிந்து கொள்ள முயலவில்லை. அவரது பாட்டை விட அவரது செய்கையே இங்கு முக்கியம் என்பதை சொல்லியாக வேண்டும். எனது இந்துக் கல்லூரி நண்பன் டாக்டர் ரஞ்சித் சிங் ( சாம் ஜெயக்குமார்) சமீபத்தில் நித்திக்கு வரகு (Millet) வாங்கி அனுப்பும் படி பிரித்தானியாவிலிருந்து தொடர்பு கொண்டார்.

மேலும் படிக்க ...

சிறுபாணாற்றுப்படையில் தாவரங்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியமும் அறிவியலும் வெவ்வேறானவை; ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லது எதிரும் புதிருமானவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் அறிவியலைத் தேடுவதும், அறிவியலை இலக்கியமாக்குவதும் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளன. அவ்வகையில் ஆற்றுப்படை இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் அறிவியல் கூறுகளில் ஒன்றான தாவரங்களை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தாவரவியல்

தமிழர்கள் பழங்காலத்தொட்டே தாவரங்களுடன் தங்களின் வாழ்க்கை முறையைப் பிணைத்துக் கொண்டார்கள். 'தாவரவியலின் தந்தை' என்று குறிக்கப்பெறும் 'தியோபிராஸ்டஸ்' தாரவங்களை உயிர்ப்பொருள் அடிப்படையில் ஆராய்ந்தார். கி.மு.2000 ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியர் அவற்றை உயிர்ப்பொருளாகக் கொண்டு ஆராய்ந்தர் என்பதை,

‘புல்லும் மரனும் ஓரறி வினவே,
பிறவு உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல்.பொ. மர.28)

என்னும் தொல்காப்பிய நுாற்பாவால் அறியலாம்.

தொல்காப்பியத்தில் தாவரப் பாகுபாடு

தொல்காப்பியர் தாவரங்கள் அனைத்தையும் புல், மரம் என்னும் இரு பிரிவுகளில் அடக்கியுள்ளார். மேல்புறம் உறுதி உடையவை புல்லினம் எனப்படும். அவை தென்னை, பனை, பாக்கு, மூங்கில் முதலானவை ஆகும். உட்புறம் வயிரமுடையவை மர இனம். இவற்றை,

‘புறக்கா ழனவே புல்லென மொழிப,
அகக்கா ழனவே மரமெனப் படுமே' (தொ.பொ. மர.86)

எனும் தொல்காப்பிய நுாற்பா மூலம் அறியலாம்.

மேலும் படிக்க ...

குவிகம் நடத்தும் லலிதா ஈஸ்வரன் சிறுகதைப்போட்டி 2025!

விவரங்கள்
- குவிகம் -
நிகழ்வுகள்
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்!

எதிர்வினை: பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்! - ஆசி .கந்தராஜா -

விவரங்கள்
- ஆசி .கந்தராஜா -
இலக்கியம்
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர் நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையை வாசிக்க விரும்பின் இணைப்பை அழுத்தவும்

கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்

இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.

மேலும் படிக்க ...

மகிழ்ச்சியான ஒரு தீவு(3) - அருபா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
பயணங்கள்
02 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - Atlantis Submarines Aruba - நீர்மூழ்கிப் பயணம் -

பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.

வெக்கை மிகுந்த, மழை மிகக் குறைந்த, வேகமான காற்று வீசும் வரட்சியான இந்தக் காலநிலை Arubaஇன் தரைத்தோற்றத்தை மணல் மேடுகளாகவும், மண்ணரிப்பினால் உருவான தட்டையான மேட்டு நிலங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்ட தாவரங்களற்ற வெற்றுநிலமாகவும் மாற்றியுள்ளது. எனினும் இதன் தரைத்தோற்றத்துக்கு காலநிலை மட்டுமன்றி, குடியேற்றங்களை மேற்கொண்ட ஸ்பானியர் அங்கிருந்த காடுகளை அதிகளவில் அழித்தமையும், தீவின் வளங்களைச் சுரண்டியமையும்கூடக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வெய்யிலில் திரிந்தது போதும், ஒரு நாளைக்கு உள்ளகத்திலுள்ள விடயங்களைச் செய்வோமென முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த நாள் Atlantis Submarines Aruba என்ற அமைப்பினருடன் கடலுக்கு அடியிலுள்ள உயிரினங்களைப் பார்க்கும் பயணத்தை ஆரம்பித்தோம். கப்பல் ஒன்றில் ஆழக்கடல்வரை போய் நீர்மூழ்கிக் கப்பலொன்றில் ஏறினோம். Flamingo Beach அருகே கப்பல் சென்றபோது ஓரிரு Flamingoகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்தக் கடற்கரையின் இளம் சிவப்பு மணலைப் பார்க்கமுடியவில்லை. அந்த இளம்சிவப்பு மணலைப் பார்க்கவிருப்பமிருந்தாலும், Flamingoகளின் செட்டைகளை வெட்டிபோட்டு அங்கு அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்களாம் என்றபோது, அதைப் போய்ப்பார்ப்பதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நதியில் நகரும் பயணம் (13) - புருஜ் (Bruges, Belgium)) - நடேசன் -
  2. புதிய சமுதாயத்தில் மாற்றத்தைக் கோரும் 'கொழுகொம்பு' - சில அவதானிப்புகள் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  3. வி.சந்திரகுமாரின் (தம்பா) சிறுவர் நவீனம் 'கொரில்லா அரக்கன்' - வ.ந.கிரிதரன் -
  4. ஆண்டாளும் வைணவ சமய வழிபாடும்! - முனைவர்.ம.சியாமளா , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
  5. 1700 ரூபாய் வேதனம்? - ஜோதிகுமார் -
  6. தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு! - நந்திவர்மப் பல்லவன் -
  7. கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் குறித்த பதிவுகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061-
  8. வேடியப்பன் வாழ்வும் வரலாறும்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
  9. ரமழான் பெருநாள் வாழ்த்து (அறுசீர் விருத்தம்) - செ. சுதர்சன் -
  10. Adolescence – TV miniseries - ஶ்ரீரஞ்சனி -
  11. திரு. செல்லையா பொன்னுச்சாமியின் பிரிவு - குரு அரவிந்தன் -
  12. புடைமாற்று ஒப்புமைக் கோட்டிபாட்டில் வீரசோழியம் - - முனைவர் ரா.பிரேம்குமார் - உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),திருவானைக்கோவில், திருச்சி-5,
  13. பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா! மார்ச் 29 இல் சிட்னியில் பாராட்டு விழா! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர்! - முருகபூபதி -
  14. வன்னிச் சங்கம் கனடா: 'நிலக்கிளி' அ.பாலமனோகரனின் இரு நூல் அறிமுக விழா!
பக்கம் 20 / 122
  • முதல்
  • முந்தைய
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • அடுத்த
  • கடைசி