பதிவுகள் முகப்பு

காலத்தால் அழியாத கானம்: "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
21 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8

கவிஞர் புலமைப்பித்தனின் சிறந்த பாடல்களிலொன்று. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைஞானி, கமலஹாசன் , கே.பாலச்சந்தர் & ஜெமினி கணேசன் கூட்டணியில் உருவான சிறந்த கருத்துகளை உள்வாங்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 'உன்னால் முடியும் தம்பி'.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'உன்னால் முடியும் தம்பி', மற்றும் இந்தப்பாடல் இரண்டையும் கேட்கையில் உற்சாகத்தையும்,  மானுட வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கப் பாடுபட வேண்டும் என்னும் உணர்வினையும் , உத்வேகத்தினையும் எவரும் அடைவர்.

கமலஹாசன் தனித்துவம் மிக்க தன் நடிப்பின் மூலம் இப்பாடலை நினைவில் நிலைத்திடச் செய்திருக்கின்றார்.  எஸ்.பி.பியும் வரிகளின் உணர்வுகளை உள்வாங்கிச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். கேட்கையில் நாமும் வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அடைய வைக்கின்றது அவரது குரல்.

இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் அரசியலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தவறுகளையும் விமர்சித்துச் சிந்திக்க வைக்கும் வரிகள் கேட்பவரைச் சிந்திக்க வைப்பதுடன் பொங்கி எழவும் வைக்கின்றன.

மேலும் படிக்க ...

தாய்மொழித் திருநாள் விழா! - முனைவர் எ.பச்சையப்பன் , இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், பல்லாவரம், சென்னை - 600117. -

விவரங்கள்
- முனைவர் எ.பச்சையப்பன் , இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், பல்லாவரம், சென்னை - 600117. -
கவிதை
21 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிப்ரவரி 21, 2024 தாய்மொழித் திருநாள் 

தாய்மொழித் திருநாள் விழா!  
உலகில் விழாக்கள் பலவுண்டு
அவற்றுள் உள்ளம் மகிழும் நிலையுண்டு!

‘தான்’ என்று காட்ட எடுக்கும் விழா!
தரணி புகழ நடத்தும் விழா!
தன் இருப்பைக் காட்ட இயக்கும் விழா!
இமையோர் விரும்ப நடத்தும் விழா!
பசி தீர படைக்கும் விழா!
பசித்தும் உண்ணா நோன்புவிழா!
தன் நலம் காக்கச் செய்யும் விழா!
‘சமயத்திற்கு’ ஏற்ப பற்பல விழா!
எத்தனை விழாக்கள் இங்குண்டு
அத்தனையும் இதற்குச் சமமென்று
சொல்லத்தான் நினைக்குமோ மனமின்று!

மேலும் படிக்க ...

இரசனைக் குறிப்பு : விரும்பித் தொலையுமொரு காட்டில் விரும்பாது தொலைந்த ஜில் பிராட்லி! பிரமிளாவின் பெண் வார்ப்புகளில் ஒன்று! -ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
20 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப்  பெருமளவில் தீர்மானிக்கிறது.

படைப்பாளரது மொழியாடலானது, பெருங்காற்றில்  அள்ளுண்டு   போவது போலவும் நீர்ச்ச்சுழலொன்றில் சிக்கியது போலவும் சுனாமியின் பேரலையில் ஆழ்ந்து போவது போலவும்  பாத்திரப் படைப்பினுள்ளும் சம்பவக் கோர்வைகளுக்கு உள்ளும் வாசகரை ஈர்த்து மூழ்கடிக்கும் வல்லமை கொண்டதென நினைக்கும் கணங்களில் , முன்வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று  இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான  பிரமிளா பிரதீபன் அவர்களுடையது.

அவரது இலக்கியவெற்றி எழுத்துநடையால் அதிக பிரபலம் பெற்றது. தனித்துவமான மொழிப்பிரயோகம் சாதாரண கதைமாந்தரையும் வியந்து நோக்க வைக்கும் திறன் கொண்டது .மற்றுமோர் சிறப்பு  அகவுணர்வுகளை மிகநுட்பமாகவும் ரம்மியமாகவும் மனோலயத்துடனும் வெளிக்காட்டும்  , கதை மாந்தரினூடாகத் தன்னை வெளிப்படுத்துவது. பிரதியை வாசிக்கும் போதே ' அடடா , இது எனது உணர்வு ஆயிற்றே ' என வாசகரை நினைக்க வைப்பது அவரது எழுத்தின் வல்லமை.

மேலும் படிக்க ...

கவிதை; இருப்பு - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
கவிதை
20 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று
மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன்.
இன்று
மனைவியுடன் நோயாளர் பகுதிக்குச் சென்றுவந்தேன்.
நாளை
உடற்கூறுகளை கணினியில் கணிக்கும்
மருத்துவக்கூடத்துச் செல்லும்படியாகும்.
சலிப்பேதுமின்றி கூடவே வந்தாள் மனைவி.

மேலும் படிக்க ...

பேராசிரியர் மா.சின்னத்தம்பியின் 'காலம் அறுபது' பற்றிச் சில குறிப்புகள்.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய  'காலம் அறுபது ' வாசித்தேன்.  மேலோட்டமாக வாசித்தபோது காலம் சஞ்சிகையின் வரலாறு பற்றிய தகவற் பிழைகளை அவதானிக்க முடிந்தது.   

கட்டுரையின் ஓரிடத்தில் "செல்வம் என்ற ஆசிரியர் கனடாவில் வாழ்கின்ற இளைஞர்களின் ஆர்வத்தால் சஞ்சிகை வெளி வருவதாக ஒற்றை வசனத்தில் ஆசிரிய தலையங்கத்தை பதிவு செய்திருந்தார்." என்றொரு குறிப்பு வருகிறது.  பொதுவாக இவ்விதம் கூறாமல் யார் அவர்கள் என்பதையும் கூறியிருந்திருக்கலாம். உண்மையில் செல்வம் காலம் சஞ்சிகையை  ஆரம்பித்தவர்கள் நான்கு  பேர் என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் செல்வம். அடுத்தவர் குமார் மூர்த்தி. மேலுமிருவர். அவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. அவ்விருவரும் ஒதுங்கிவிட செல்வமும், குமார்  மூர்த்தியும் தொடர்ந்து பத்தாண்டுகளாகக் காலம் இதழை நடத்தி வந்திருக்கின்றார்கள் என்னும் தகவலைக் 'காலம்' செல்வம்  நவம்பர் 2001 வெளியான குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழின் ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

மானிடர் ஆத்மாவை வாய்மொழிப் பாடல்களாக வழங்கிய கவிஞி அனார் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
ஆய்வு
19 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிழக்கிலங்கை சாய்ந்தமருதைச்சேர்ந்த இஸ்ஸத் ரீஹானா எம். அஸீம் அவர்கள், ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் நன்கு அறியப்பட்ட கவிஞி. ஆனால் , இவரை “அனார்” என அழைத்தால்தான் இலக்கிய உலகில் தெரியவரும்.

சிறுவயதிலேயே சாய்ந்தமருது கிராமத்தின் நாட்டார் பாடல்களை உள்வாங்கியவாறு, தனது மழலை மொழியில் பாடிய சிட்டுக்குருவி.
ஏன் அவருடைய பால்யகாலத்தை சிட்டுக்குருவியுடன் ஒப்பிடுகின்றேன் என்றால், அந்தப்பருவம் சுதந்திரமானது. சிட்டுக்குருவியும் சுதந்திரமான பறவை.

அனார், தமது குழந்தைப்பருவத்தை வளர்ந்து விட்ட பின்னரும், மறைக்காமல் மறக்காமல் குடும்பத்தலைவியாகிவிட்ட பிறகும் வெள்ளை உள்ளத்தோடு சொல்கிறார்.

மேலும் படிக்க ...

பெண்மொழியும் புனைவும் - முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
ஆய்வு
19 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

வரலாறு என்றவுடன் நினைவுக்கு வருவன போர்கள் தான் அதிகாரம் கொண்ட மனிதனான ஆணை எதிர்த்து போர்கள் மீண்டும் ஒரு அதிகாரத்தை நிறுவுவதற்காகவே நிகழ்கின்றன இத்தக அதிகாரம் அரசின் வழி மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களிலும் அதாவது குடும்பம் மதம் மொழி கலை பண்பாடு அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது எனலாம் அவ்வகையில் தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணின் நிலைப்பாடு குறித்த பெண்ணிய சிந்தனைக்கு தமிழ் சூழல் சார்ந்த பெண் பதிவுகளின் வரலாற்று தேவை இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது அவ்வகையில் தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனைகள் நிலை கொண்டதற்கானப் பெண் நிலை குறித்த சிந்தனைகள் எவை எவை என்பதை அவற்றின் இன்றையத் தேவையை குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பெண்ணியம்

தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனை தன் பயணத்தைத் தொடர மேலைநாட்டு நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற கொள்கைகளும் காரணம் எனலாம். பஞ்சகாலத்தில் முன் வைத்து கட்டவிழ்ப்புக் கொள்கையின் செல்வாக்கு பெண்ணே சிந்தனை தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனில் மிகையகாது. ஆரம்பத்தில் பெண்ணியம் பெண் உரிமை, பெண் விடுதலை (அரசியல், பொருளாதாரம்) என்ற ஒற்றை அடையாளத்தில் செயல்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு இன்றைய சூழலில் சாதி,மத இன மாறுபாடுகளைத் தாண்டிய சமூக மாற்றத்தை முன்வைக்கிறது. அவ்வகையில் இன்று “பெண்ணிய மொழியை” முதன்மைப்படுத்தி பெண் மரபினத்தின் (உயிரியல்) அடையாளத்தை முன் வைப்பதாக தன் இயங்கியலை அமைத்துக் கொண்டுள்ளது .

மேலும் படிக்க ...

நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமார்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
18 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சில ஊர்கள் கலைகளுக்குப் புகழ்பெற்றவை.  அளவெட்டி இத்தகைய ஊர்களிலொன்று.  இன்னுமொரு ஊர் கரவெட்டி. கலைஞர்கள் பலரை, சமூக,அரசியற் செயற்பாட்டாளர்களை, எழுத்தாளர்களை  உருவாக்கிய ஊர் கரவெட்டி.  மார்கசியக்கருத்துகளை உள்வாங்கிய அரசியல் ஆளுமைகள் பலரைத் தந்த ஊர் அது. இந்நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமாரும் கரவெட்டிக்குப் புகழ் சேர்க்கும் கலைஞர்களில் ஒருவர்.

உண்மையில் இக்காணொளி மூலமே இவரைப்பற்றி அறிகின்றேன். இவருனான இந்நேர்காணல் முக்கியமானது.  இக்கலைஞரின் உணர்வு பூர்வமான, உளப்பூர்வமான நாடகக் கலையின் மீதுள்ள ஈடுபாட்டை இக்காணொளி வெளிப்படுத்துகின்றது.  கரவெட்டியில் 'கலைமதி' நாடக மன்றமொன்றினை நிறுவி , கலைப்பங்களிப்பைச் செய்து வரும் தகவலையும் இக்காணொளி மூலம் அறிந்துகொள்கின்றோம். மேலும் அரிச்சந்திரா, காத்தவராஜன் என்று கூத்துகள் பலவற்றில் நடித்திருக்கின், கலைஞர்கள் பலரை உருவாக்கியிருக்கின்ற தகவல்களையும் அறிந்துகொள்கின்றோம்.  இக்காணொளியில் அரிச்சந்திரா , காத்தவராயன் கூத்துகளிலிருந்து   சில பாடல்களை இவர் பாடும் காட்சிகளையும் காண்கின்றோம்.

மேலும் படிக்க ...

நாவல் அனுபவம் - சுப்ரபாதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
17 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- நாவல் அனுபவம் சுப்ரபாதிமணியனின் உரை ராசிபுரம் பாவை இலக்கிய விருதுகள் விழாவில்.   பாவை இலக்கிய விருதுகள் இவ்வாண்டு நாவலுக்காக இமயம் , சுப்ரபாரதிமணியன்., மொழிபெயர்ப்புக்காக குறிஞ்சிவேலன் ஆய்வுக்காக ஸ்டாலின் ராஜாங்கம்,  கவிதைக்காக இசை, இள்ம் பிறை சிறுவர் இலக்கியத்திற்காக உதய சங்க, ர் முருகேஷ் சிறுகதைக்காக வேணுகோபால் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகளை ஆர். பாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் நிகிலேஷ் கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர்.  -


இலக்கிய விமர்சகர்கள்,  நண்பர்கள் என் நாவல்களை பற்றி சொல்கிறபோது இரட்டை நகரங்களில் கதை சொல்லி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இரட்டை நகரங்கள் என்றால் நான் 8 ஆண்டுகள் வசித்த ஹைதராபாத் மற்றும் நான் தற்போது வசித்து வரும் திருப்பூர் ஆகிய நகரங்கள்.

 ஹைதராபாத் நகரத்தில் தமிழர்களின் கலாச்சார ரீதியான அந்நியமாதலும் மொழி சிறுபான்மையினர் என்ற வகையில் அவர்களுடைய அனுபவங்களும் மற்றும் மத கலவர சூழல் சாதாரண மக்களின் பலி கொண்டு அரசியல் அதிகாரம் ஆட்சி  புரிவதை என் மூன்று ஹைதராபாத்  நாவல்கள் மூலம் சொல்லி இருக்கிறேன்.

மேலும் படிக்க ...

வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாடலைக் கேட்டுக் களிப்புற - https://www.youtube.com/watch?v=MeH6OeIwhpI

கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு'  இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன்.  திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட  முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.

கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி. இக்காணொளியின் இன்னுமொரு சிறப்பு - இதன் ஒளிப்பதிவு. சொற்களுக்கு உயிரூட்டும் , இயற்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஒளிப்பதிவு. 

மேலும் படிக்க ...

'சிறுகதை மஞ்சரி' : 'வாசித்து வாசித்து வாழ்வை வளமாக்குவோம்'

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
16 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் மு.தயாளனை முதன்மை ஆசிரியராகவும், மைக்கல் கொலின், செல்வி த.சரண்யா, திருமதி சாரு தயாளன் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும்  கொண்டு , 'வாசித்து வாசித்து வாழ்வை வளமாக்குவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் மாதசஞ்சிகை 'சிறுகதை மஞ்சரி'.  இதன் பெப்ருவரி 2024 இதழ்  வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

குழந்தைகள் என்னும் கொத்தடிமைகள் - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
15 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல்.  காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.

’அடியாத மாடு படியாது’ என்றும், ’அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்றும் குழந்தையை அடிப்பதை பலவாறு விதவிதமாக நியாயப்படுத்தும் பெரியவர்களை என்ன சொல்ல?

சில நாட்களுக்கு முன் ஒரு குறுகிய சந்தில் போய்க் கொண்டிருந்தேன். அங்கிருந்த பள்ளியொன்றிலிருந்து ஸ்கேலில் பளீர் பளீரென்று அடி விழும் சப்தமும், ஒரு சிறுவன் வீறிட்டழும் சப்தமும் தெருவரை வந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தாங்கமுடியாமல் பள்ளிக்குள் சென்றேன்.

இருட்டான அறைகள். காற்று வசதியே கிடையாது. உள்ளறையொன்றில் பருமனான பெண்மணி ஒருவர் கையில் ஸ்கேலோடு நின்று கொண்டிருந்தார். அவருடைய வகுப்பறையிலும் சுற்றிலுமிருந்த வகுப்பறைகளிலும் குழந்தைகள் - ஐந்தாம் வகுப்புவரையான பள்ளி போலும் - பயம் மண்டிய கண்களோடு அமர்ந்திருந்தனர்.

குழந்தைகளை அடித்தல் சட்டப்படி தவறு என்று தெரியாதா - இப்படியா காட்டுத்தனமாக அடிப்பது என்று கேட்டதற்கு தலைமையாசிரியர் போலும் ஒரு பெண்மணி வந்து ”நாங்கள் அடிக்கவேயில்லையே”, என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகப் பொய்யுரைத்தார். இது குறித்து ஊடகங்களில் எழுதுவேன் என்று கூறி வெளியேறினேன். எங்கள் பகுதியில் வரும் பத்திரிகைக்கு எழுதிப் போட்டேன். பிரசுரமாகவில்லை.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: அவுஸ்திரேலியாவில் மலர்ந்துள்ள பூமராங் மின்னிதழ் ! - தாமரைச்செல்வி -

விவரங்கள்
- தாமரைச்செல்வி -
இலக்கியம்
15 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது.

ஆரம்ப காலங்களிலிருந்து அநேகமான சஞ்சிகைகள் எழுத்தாக்கங்களோடு மட்டுமின்றி ஓவியங்களுடனும் சேர்ந்தே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. அவற்றை நாம் ரசித்திருக்கிறோம். அப்படியான ஒரு ஜனரஞ்சக இதழாக பூமராங் மின் இதழையும் பார்க்க முடிகிறது. சம காலத்தில் அச்சில் வரும் இதழ்கள் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தடுமாறுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஒன்றிரண்டு சஞ்சிகைகள் தவிர மற்றவை சில இதழ்களுடன் நின்று விடுவதையும் பார்க்கிறோம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மின்னிதழ்கள் இலக்கிய உலகில் தமது வரவையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதையும் கவனிக்க முடிகிறது.

இலக்கியம் மீது கொண்ட ஆர்வமே இவர்களை முனைப்பாக செயல்பட வைக்கிறது. அந்த விதத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்ங்கத்தினரின் இலக்கியச்  செயற்பாட்டின் ஒரு அம்சமாக பூமராங் மின்னிதழின் வருகை நிகழ்ந்துள்ளது. ஒரு சஞ்சிகைக்குரிய அம்சங்களான சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறு குறிப்புகள், நிகழ்வுகளின் தொகுப்பு, பாராட்டுச் செய்தி என பல அம்சங்களையும் தாங்கி   ஐம்பத்தைந்து பக்கங்களில் வெளிவந்திருக்கிறது இம்மின்னிதழ்.

மேலும் படிக்க ...

ஆவணக்காணொளி ; கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை! & எழுத்தாளர் ஶ்ரீரங்கனின் கேள்வியொன்று பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக  மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி  கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது.  இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.

ஓவியம், கர்நாடக இசை, பழந்தமிழ் இலக்கியம் குறிப்பாகக் கம்ப ராமாயணம்,  மொழிபெயர்ப்பாற்றல், மேனாட்டு இலக்கியப் புலமை, ருஷ்ய இலக்கியம் மீதான ஆர்வமும், புலமை என கு.அழகிரிசாமியின் பன்முக ஆளுமையை இலக்கிய ஆளுமைகள் பலரின் கூற்றுகள் வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆவணம்.

முதன் முதலாக மாக்சிம் கார்க்கியின் படைப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கு.அழகிரிசாமியே என்பதை இக்காணொளி  மூலம் அறிந்துகொண்டேன்.  மேலும் காவடிச்சிந்தை இவர் பதிப்பித்துள்ளார் என்பதையும் அது அறிஞர்கள் பலரின் மதிப்பைப் பெற்றுள்ளது என்பதையும் அறிந்தேன். கம்பராமாயணம் பற்றிய இவரது விமர்சனத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன என்பதையும், அவற்றின் சிறப்பு பற்றிய எழுத்தாளர் பிரபஞ்சனின் பார்வையினையும் அறிந்துகொண்டேன். 'கவிச்சக்கரவர்த்தி', 'வஞ்சமகள்' போன்ற இவரது நாடகப் பங்களிப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

மேலும் படிக்க ...

காதலர் தினச் சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..? - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.
ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
சரியா பிழையா தெரியவில்லை. )

எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம்.

ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.

பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது  அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல  வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள்,  பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட  வேண்டும்.

எழுத்தாளர் டானியல் அன்ரனி சமர் காலாண்டிதழின் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர். சமர் வெளியீட்டகம் மூலம் தனது 'வலை' சிறுகதைத்தொகுதியினையும் ஜனவரி 1987இல் முதற்பதிப்பாக வெளியிட்டவர். ஆனால் எத்தனைபேருக்கு எழுபதுகளில்  இவர் 'முல்லை' என்னும் சஞ்சிகையினை ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர் என்பது தெரியும்? ஜனவரி 1987 வெளியான 'வலை' தொகுப்பின் பின்பக்க ஆசிரியர் பற்றிய குறிப்பில் கூட அச்சஞ்சிகை பற்றிய தகவலினைக் காண முடியவில்லை.

மேலும் படிக்க ...

மலையகப் படைப்பிலக்கியத்தின் ஊடாக அறப்போர் நிகழ்த்திய மல்லிகை சி. குமார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு 1973 ஆம் ஆண்டு அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், சமசமாஜிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தனர். இந்த அரசில் நியமன எம்.பி.க்களாக தெரிவாகியவர்கள்தான் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அசீஸும், செல்லையா குமாரசூரியரும். செல்லையா குமாரசூரியர் தபால் அமைச்சரானார். இவர்கள் இருவரையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் குறிப்பிட்ட மாநாட்டின் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது. தமிழ்நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பாலதண்டாயுதமும் வருகை தந்திருந்தார். கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப்பச்சை நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியாகியிருந்தது. அதன் வெளியீட்டு அரங்கும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது.

மேலும் படிக்க ...

ஜேவிபி, ரணில், தமிழ் அரசியல், இந்தியா - ஒரு பார்வை! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
11 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:

I.    இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டம்.

II .  மாலைத்தீவிலிருந்து இந்திய இராணுவத்தின் வெளியகற்றல்.

இலங்கையின் சுதந்திர தினமானது ஒரு கரிநாளாக வட-கிழக்கால் பிரகடனப்படுத்தப்பட்டது தெரிந்த ஒன்றே.

பொதுவில், மேற்படி கரிநாள் எதிர்ப்பில், மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ளாத நிலையில், முக்கியமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்றோர் மேற்படி எதிர்ப்பில் பங்குபற்றாத நிலையில், மக்கள் சாரிசாரியாக கலந்து கொள்வார் என எதிர்ப்பார்ப்பது அசட்டுத்தனம் மிக்கதுதான். ஆனால் அப்படியே இந்த தலைவர்கள் கலந்திருந்தாலும,; மக்கள் கலந்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது.

ஆனால் விடயத்தின் முக்கியத்துவமானது, மட்டக்களப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வேலன்சுவாமிகளுக்கும், சாணக்கியருக்கும் இடையே இடம்பெற்ற சண்டை பொருத்தே களைகட்டியது. வடக்கிலிருந்து, வேலன்சுவாமிகள் அவர்கள், கிழக்கில் களமிறக்கி விடப்பட்டது என்பது வெறும் ஆதரவு சம்பந்தப்பட்டது மாத்திரம் அல்ல, ஆனால் ஆழ்அரசியலை உணர்த்தக் கூடிய ஒன்றே.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: சகலகலா வித்தகர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி விடைபெற்றார் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
10 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.

மறுநாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது ஆய்வேடுகளை பரிசீலித்துக்கொண்டுதானிருந்தார். சில உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் அவர் உற்சாகமுடன் பேசிச்சிரித்து உரையாடி மகிழ்ந்தார். எனது குடும்பத்தின் நட்பு வட்டத்தில் நீண்டகாலம் இணைந்திருந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்ட துயரத்துடன் இந்த அஞ்சலியை பகிர்ந்துகொள்கின்றேன். கடந்த 10 ஆம் திகதியே இலங்கை நேரம் மாலையில் அன்னாரது இறுதி நிகழ்வும் நிறைவெய்திவிட்டது.

அவரது மூத்த புதல்வன் , ஜீவநதி ஆசிரியர் பரணீதரனை தொடர்புகொண்டு, எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தபோது, தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் ஒரு மனநிறைவான செய்தியையும் அறிந்தபின்னரே அவர் விடைபெற்றிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. கலாமணியின் கடைசிப்புதல்வர், பெற்றவர்களினதும் மூத்த அண்ணன்மாரினதும் செல்லம், மதனாகரன், பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர் பணியில் இணைந்துவிட்டார் என்பதே அந்த நற்செய்தி.

மதனாகரனுடனும் இதர இரண்டு புதல்வர்கள் மற்றும் அன்புத்துணவியாருடனும் கலாமணி அவுஸ்திரேலியா சிட்னியில் சிறிது காலம் தனது ஆய்வுப்பட்டத்திற்காக வாழ்ந்த காலப்பகுதியில் செல்வன் மதனாகரன் மழலைக்குரலில் பேசிக்கொண்டிருந்த குழந்தை. ஒரு நல்ல தந்தைக்கு, சிறந்த குடும்பத்தலைவனுக்கு தனது பிள்ளைகள் பற்றிய நற்செய்திகள்தான், இறுதிக்காலத்திலும் ஊக்கமாத்திரை. மருத்துவமனை தரும் மருந்து மாத்திரைகள் உடல் நலத்தை பேணிவந்தாலும், பிள்ளைகள் பேரக்குழந்தைகள் பற்றிய நற்செய்திகள்தான் உள நலத்திற்கு சிறந்த ஊக்க மாத்திரை.

மேலும் படிக்க ...

அஞ்சலி: அல்வாயின் அகள்விளக்கு கலாமணி!வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சம் ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
10 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடமராட்சியில் கடந்த 1987 'ஒப்பரேஷன் லிபரேஷன்’ போது நடந்தேறிய கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் முதலாவதாக ஆண்டு நினைவு கூர்வாகக் கொண்டு வெளியாகும் “கல்லறை மேலான காற்று”கவிதைத்தொகுதிக்கு முன்னுரை ஒன்று அவசியம்தானா என்பது இன்னமும் வினாவாகவே என்னிடம் உள்ளது என ஆசான் கலாமணியின் வார்த்தைகள் இன்னமும் என் மன நினைவுகளில் பதிந்துள்ளது.

இப்படித் தான் எங்கள் இலக்கிய நட்பு முகிழ்ந்தது. காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1988 போர்க் காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பே “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாகும்.

வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன் கொடூர நினைவுகளின் அழியாத, அனல் வீசும் கவிதை தொகுப்பு ஈரோசின் மாணவர் இளைஞர் பொது மன்றத்தால் (GUYS) 1988 இல் வெளியிடப்பட்டது.

இந்நூலின் முன்னுரையில் ‘விமர்சனமாக அமையக் கூடாதென்பதனால் கவிதைகள் பற்றி தனித்தனியாகவே கருத்துக்கூறுதல் பொருத்தமன்று எனினும் இக்கவிதைகள் யாவுமே, இராணுவக் கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டும் பொதுப்பண்பைத் தம்மகத்தே எனக்கூறுதல் சாலப் பொருந்தும். வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் இதற்கு ஓர் இடமுண்டு’ என எழுதியுள்ளார் ஆசான் கலாமணி.

வடமராட்சி “ஒப்பரேஷன் லிபரேஷன்” ஓராண்டு நினைவுக் கவிதைகளை படைத்த இளங் கவிஞர்களின் படைப்பான “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாக்கு ‘அல்வைக் கலா’ எனும் எங்கள் பேராசான் கலாநிதி த. கலாமணி 31-05-1988 இல் எழுதிய முன்னுரையாகும்.

மேலும் படிக்க ...

மீள்பிரசுரம்: கமல் முதல் கமல் வரை - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
இலக்கியம்
09 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் நான் மலையாளத்தில் முட்டத்து வர்க்கியில் தொடங்கி வைக்கம் முகமது பஷீரின் தீவிர வாசகன் ஆகியிருந்தேன். மலையாள இலக்கியமேதைகள் பலரை வாசித்துவிட்டிருந்தேன். (முதல் மலையாள நாவல் முட்டத்து வர்க்கியின் ஈந்தத் தணல்)

ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் நாவல்களை பள்ளி இறுதி நாட்களில் வாசிக்க தொடங்கி (முதல் ஆங்கில நாவல் Knock Knock! Who is there?) அலக்ஸாண்டர் டூமா வழியாக தாக்கரேயை வந்தடைந்தேன். டபிள்யூ டபிள்யூ ஜேக்கப்ஸ், ஜார்ஜ் எலியட் உட்பட எனக்குப் பிரியமான படைப்பாளிகளை கண்டடைந்துவிட்டிருந்தேன். தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நான் அவருடைய படைப்புகளில் வாசித்த முதல் நாவல். கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் ஆங்கில மொழியாக்க வடிவம். அதற்கு முன் வாசித்தது டி.எச்.லாரன்ஸின் Sons And Lovers.

ஆனால் தமிழில் அதிகபட்சமாக நான் அறிந்திருந்த இலக்கிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் இருவருமே. சுந்தர ராமசாமி, க.நா.சு உட்பட எவருமே அறிமுகமில்லை. அப்போது குங்குமம் இதழில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் ஒரு கதை (மனித இயந்திரம்) மறுபிரசுரம் செய்து கூடவே புதுமைப்பித்தன் யார் என்னும் குறிப்பையும் அளித்திருந்தார். அவ்வாறுதான் புதுமைப்பித்தன் எனக்கு அறிமுகமானார்.

தமிழ் நவீன இலக்கியத்தின் தலைமகனை, நாம் உலகுநோக்கி தயங்காமல் வைக்கத்தக்க மேதையை ஓர் இலக்கியவாசகன் பெயர்கூட தெரிந்துகொள்ள முடியாத சூழலே அன்று நிலவியது.

இன்று நாம் காணும் இலக்கியம் சார்ந்த பொதுச்சித்திரம் என்பது மூன்று முன்னகர்வுகளால் உருவானது.

ஒன்று, ஐராவதம் மகாதேவன் (தினமணி தமிழ் மணி) மாலன் (தமிழ் இந்தியா டுடே) வாஸந்தி (தமிழ் இந்தியா டுடே) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) ஆகிய ஆசிரியர்கள் உருவாக்கிய இடைநிலை இதழ்களும் அவற்றில் நிகழ்ந்த இலக்கிய அறிமுகமும்.

இரண்டு, 1999 முதல் தொடர்ச்சியாக இணைய ஊடகம் உருவாகி வந்ததும், அதன் வழியாக மலிவாக இலக்கியவாசகர்கள் தங்களை கண்டடைந்ததும், ஒருவரோடொருவர் உரையாடியதும். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களுக்கும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகளுக்கும் அதில் பெரும்பங்களிப்பு உண்டு.

மூன்று, புதிய இதழ் மற்றும் ஊடக வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவாதங்கள், கட்டுரைகள் வழியாக இலக்கிய அறிமுகம் நிகழ்த்திய என்னை போன்ற இலக்கியவாதிகள். இன்று திரும்பிப் பார்க்கையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகிய மூவருமே அதில் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறோம் என்று படுகிறது. முப்பதாண்டுக்காலம் சலிக்காமல் அதில் உழைத்துள்ளோம்.

மேலும் படிக்க ...

கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
09 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன.

மேலும் படிக்க ...

யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச் சங்கம்: சிறப்பு விருந்தினர் மற்றும் விருதுகளுக்குப் பரிந்துரையுங்கள்! - சுதர்சன் (அருண்மொழிவர்மன்), செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா -

விவரங்கள்
சுதர்சன் (அருண்மொழிவர்மன்), செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா
நிகழ்வுகள்
09 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,
​
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலில் வழங்கப்படும் விருதுகளுக்கும் சிறப்பு விருந்தினருக்குமான பரிந்துரைகளை நாம் கோருகின்றோம்.  இவ்வருடம் பின்வரும் பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
 
    ·         தொழில் முனைவருக்கான விருது (Award for Enterpreneurship)
    ·         விளையாட்டுத் துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Achievement in Sports)
    ·         கல்வித்துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Academic Achievement)
    ·         சமூகச் செயற்பாட்டாளருக்கான விருது (Award for Social Activism)

இவ்விருதுகளுக்காகவும் சிறப்பு விருந்தினருக்காகவும் பரிந்துரைக்கப்படுபவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவோ அல்லது தற்போதையை / முன்னாள் ஊழியராகவோ இருப்பதுடன் சமூக அக்கறை கொண்டவராகவும் பரிந்துரைக்கப்படும் துறையில் நீண்டகால பங்களித்திருப்பவராகவும் சமூக மதிப்புடையவராகவும் இருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவினால் இதற்குமுன்னர் விருதளிக்கப்படாதவராகவும் இருப்பது அவசியமாகும்.

மேலும் படிக்க ...

இணையத்தில் தமிழும், பதிவுகள், திண்ணை & தமிழ்மணம் ஆகியவற்றின் பங்களிப்பும் பற்றி.. - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
09 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் 'கமல் முதல் கமல் வரை' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன:

"இன்று நாம் காணும் இலக்கியம் சார்ந்த பொதுச்சித்திரம் என்பது மூன்று முன்னகர்வுகளால் உருவானது. ஒன்று, ஐராவதம் மகாதேவன் (தினமணி தமிழ் மணி) மாலன் (தமிழ் இந்தியா டுடே) வாஸந்தி (தமிழ் இந்தியா டுடே) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) ஆகிய ஆசிரியர்கள் உருவாக்கிய இடைநிலை இதழ்களும் அவற்றில் நிகழ்ந்த இலக்கிய அறிமுகமும்.

இரண்டு, 1999 முதல் தொடர்ச்சியாக இணைய ஊடகம் உருவாகி வந்ததும், அதன் வழியாக மலிவாக இலக்கியவாசகர்கள் தங்களை கண்டடைந்ததும், ஒருவரோடொருவர் உரையாடியதும். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களுக்கும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகளுக்கும் அதில் பெரும்பங்களிப்பு உண்டு.

மூன்று, புதிய இதழ் மற்றும் ஊடக வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவாதங்கள், கட்டுரைகள் வழியாக இலக்கிய அறிமுகம் நிகழ்த்திய என்னை போன்ற இலக்கியவாதிகள். இன்று திரும்பிப் பார்க்கையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகிய மூவருமே அதில் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறோம் என்று படுகிறது. முப்பதாண்டுக்காலம் சலிக்காமல் அதில் உழைத்துள்ளோம்."

இணையத்தில் தமிழை ஏற்றுவதற்குப் பதிவுகள் இணைய இதழும்  முக்கிய பங்காற்றியுள்ளதை அவர் ஏற்று பதிவு செய்துள்ளார். அதற்குப் பதிவுகள் சார்பில் நன்றி.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் பூச்சிகள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை – 600 061 -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை – 600 061 -
ஆய்வு
08 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.

குளவி

குளவியானது புழுக்களைப் பிடித்துக் கொட்டிக் கொட்டி தன் வடிவம் ஆக்குதல் போல, இராமன் தன் சரங்களால் அரக்கர்களை அழித்து, தேவர்கள் ஆக்கினான். இராமபாணம் பட்டோர் எல்லாம் தேவரானார்கள்..

"அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மை போல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தன்
. செஞ் சரத் தூய்மையால் தேவர் ஆக்கினான்"
(கரன் வதைப் படலம் 484)

இது கர-தூடணருடன் நிகழ்த்தியப் போரில் நடந்தது.

விளக்கு விட்டில் பூச்சி

விளக்கு எரியும்பொழுது தானாகச் சென்று அதன்மேல் விழுந்தழியும் விட்டில்பூச்சி, கம்பரில், ஒரு கதைமாந்தர்மேல் பிறர் செல்லும் விரைவுக்கும். அவ்வாறு சென்றபின் அவரோடு மோதியழிதலுக்கும் உவமையாகியுள்ளது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வெங்காய வாழ்வு! - செ.சுதர்சன்-
  2. தமிழ் ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலத்தை நிறைவுசெய்யும் தேவகௌரி சுரேன் ! - முருகபூபதி -
  3. எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?
  4. கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழி கலந்துரையாடல்: 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் '
  5. நமோ நமோ தாயே! - செ.சுதர்சன் -
  6. உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்போம்! - ஸ்ரீரஞ்சனி -
  7. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 35: “கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்”
  8. 'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -
  9. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -
  10. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS): தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் 2024! - தகவல்: முருகபூபதி -
  11. ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் ! - முருகபூபதி -
  12. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்! - தகவல்: முருகபூபதி -
  13. பொது வேட்பாளர் கோரிக்கையும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -
  14. பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"
பக்கம் 30 / 104
  • முதல்
  • முந்தைய
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • அடுத்த
  • கடைசி