பதிவுகள் முகப்பு

 நனவிடைதோய்தற் குறிப்புகள்: கிழக்குப் பல்லைக்கழக வேந்தராகும் பேராசிரியர் சி. மௌனகுரு!  -  முருகபூபதி -

விவரங்கள்
-  முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நியமனமாகியிருக்கும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த பதிவை எழுதுகின்றேன். பேராசிரியர் சி.மௌனகுரு, கல்வி, கலை,இலக்கிய ஊடகத்துறையிலும் பங்காற்றி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்திருப்பவர். கடந்த காலங்களில் ஓய்வுநிலைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கும் சி. மௌனகுரு அவர்கள் தான்சார்ந்த கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலானவற்றில் சாதனைகள் புரிந்தவர்.

பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் பட்டதாரியான சி. மௌனகுரு, அவர்கள் தாம் கற்ற அதே பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தையும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தின் பாட நூல் எழுத்தாளராகவும், . பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றினார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் வளர்ச்சியில் உந்து சக்தியாகத்திகழ்ந்தார். பின்னாளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவராகவும், கலை,பண்பாட்டுகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பதவிகளை வகித்தார். , சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளராகவும், நூலகக் குழுத்தலைவராகவும் தமிழ்ச் சங்கத்தின் காப்பாளராகவும் இயங்கி வந்திருப்பவர்.

மௌனகுரு அவர்களை கடந்த 1972 ஆம் ஆண்டுமுதல் நன்கறிந்து இலக்கிய நட்புறவை வளர்த்துவந்திருப்பதனால், இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த நனவிடை தோய்தற்குறிப்புகளை எழுதுகின்றேன்.

மேலும் படிக்க ...

கனடா: ஸ்கார்பாரோவில் VIA Rail சேவை நிறுத்தப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பு! மாணவர்கள் பெரும் பாதிப்பு! - நுண்ணறிவு எந்திரன் -

விவரங்கள்
- நுண்ணறிவு எந்திரன் -
அரசியல்
26 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஸ்கார்பாரோ: வரும் அக்டோபர் 2026 முதல் கில்ட்வுட் இரயில் நிலைய நிறுத்தத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்போவதாக VIA Rail அறிவித்துள்ளது. இந்த முடிவால் ஸ்கார்பாரோவில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஒட்டாவா, மொன்ரியால், கிங்ஸ்டன்  ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில்  படிக்கும் மாணவர்கள், கிங்ஸ்டன், ஒட்டாவா, மொண்ட்ரியால் போன்ற இடங்களுக்குச் செல்ல கில்ட்வுட் நிலையத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். தற்போதைய முடிவின்படி, மாணவர்கள் கிழக்கு நோக்கிச் செல்லும் இரயிலைப் பிடிக்க, முதலில் மேற்கு நோக்கி டவுன்டவுன் யூனியன் ஸ்டேஷன் (Union Station) வரை செல்ல வேண்டும். இது மாணவர்களின் பயண நேரத்தை அதிகரிப்பதுடன், கூடுதல் பணச் செலவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். இதுபோல் பிற நகர்களிலிருந்து வந்து ஸ்கார்பரொபகுதியிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் படிக்கும்  மாணவர்களும் கில்ட்வூட் இரயில் நிலையத்தைப் பாவிக்கின்றனர்.  மேலும் இப்பகுதியில் , இதற்கு அண்மையான  பகுதிகளில் வசிக்கும்  மக்கள்  பலரும் கில்ட்வூட் இரயில் நிலையத்தை தொலைதூர நகரங்களுக்குச் செல்வதற்காகப் பாவிக்கின்றனர். இவர்கள் எல்லாரும் இம்மாற்றத்தினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர்.

மேலும் படிக்க ...

மார்க்சியச் சிந்தனை மையம்: *மார்க்சிய தத்துவத்தின் சாரம்: "புனிதக் குடும்பம் (The Holy Family), என்னை கவர்ந்த நூல்" - தோழர் சிவநேசனின் உரை! - ஏ.பகலவன் -

விவரங்கள்
- ஏ.பகலவன் -
நிகழ்ச்சி
25 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூட்டத்துக்கான Zoom இணைப்பு: https://us02web.zoom.us/j/83813168894?pwd=MlVCRjlObStkcCsyall0OE9mQ2JGQT09
Meeting ID: 838 1316 8894  | Passcode: 111222

மேலும் படிக்க ...

கனடாவில் தமிழ் முதியவர்கள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
25 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம்முயிரைப் போக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பிள்ளைகள் முதியவர்களின் ஓய்வூதியங்கள், சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கையாடல் செய்வதாக அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். முதியவர்கள் உழைத்து வாங்கிய வீடுகளிலிருந்து முதியவர்கள் இல்லங்களுக்கு வலிந்து அனுப்பப்படுவதாகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதியவர்கள் பலர் ஓய்வூதியம் பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருப்பதையும் அறிந்திருக்கின்றோம். முதியவர்களைக் குழந்தைகள் தம் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்யுமாறு வறுபுறுத்துவது பற்றியும் அறிந்திருக்கின்றோம். கனடிய அரசிடமிருந்து, டிரில்லியம் அறக்கட்டளையிலிருந்து இலட்சக்கணக்கில் நிதியுதவி பெறும் முதியவர்கள் நலன்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் இவ்விடயங்களிலும் கவனம் எடுத்து முதியவர்களுக்கு உதவியிருக்கின்றனவா?

மேலும் படிக்க ...

'மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் நூற்றாண்டு விழா! - வி.ரி.இளங்கோவன் -

விவரங்கள்
- வி.ரி.இளங்கோவன் -
நிகழ்ச்சி
25 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு மாலை (20 - 09 - 2026) யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் டானியலின் நாவல்களில் பாத்திர வார்ப்பு செய்யப்பட்டிருக்கும் நிஜ மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களை நேரில் அழைத்து கௌரவித்தனர். அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் அந்தந்த நாவல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா: எழுத்தும் எண்ணங்களும்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்ச்சி
24 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எதிர்வரும் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு, லெ.முருகபூபதியின் "ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்" என்னும், பவளவிழா மலரும், நோயல் நடேசனின், "சாந்தா குரூஸ் தேவதை", "நாலுகால் சுவடுகள்", தாத்தாவின் வீடு" ஆகிய மூன்று நூல்களும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நடைபெறும் இடம்:
Glen Waverley Community Centre
700 Waverley Rd, Glen Waverley VIC 3150
அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலாப நோக்கற்று இயங்கும் தமிழ் அமைப்புகளுக்கான கனடிய அரசின் நிதி உதவித்தொகை!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
23 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2006 - 2026 வரையிலான காலகட்டத்தில் கனடாவின் ஒன்றிய அரசு இலாப் நோக்கற்று இயங்கும் தமிழ் அமைப்புகளுக்கு வழஙகிய நிதி உதவித் தொகை பற்றிய விபரங்களைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கான இணையத்தள முகவரி - https://search.open.canada.ca/grants/?sort=agreement_start_date+desc&search_text=tamil&page=31 {இந்த இணையத்தள முகவரியைப் பிரதி பண்ணி உங்கள் பிரவுசர் மூலம் பாருங்கள். முகநூல் மூலம் பார்த்தால் சில வேளைகளில் முகநூல் சரியான பக்கத்தைக் காட்டாது தடுத்து விடும்.]

விபரங்களை நீங்கள் சென்று பார்த்துக்கொள்ளுங்கள். கீழுள்ள தகவல் அவ்விபரங்களை ஓர் ஒழுங்கமைப்பில் சாட்ஜிபிடி தொகுத்துத் தந்த பட்டியல். தமிழ் மக்களாகிய நாம் இவை பற்றி அறிந்திருப்பது அவசியம்., அதற்காகத்தான் கனடிய அரசு தனது இணையத்தளத்தில் இவ்விபரங்களை வெளியிட்டுள்ளது.


# நிறுவனம் பதிவுகள் மொத்த உதவி

1 Tamil Eelam Society of Canada 18 $16,925,056
2 Durham Tamil Association 8 $912,430
3 Canadian Tamil Congress Ontario 27 $739,565
4 University of the Fraser Valley 1 $520,000
5 Dalhousie University International
Research and Development 1 $520,000
6 Abuse Never Becomes Us (A.N.B.U) 1 $486,097
7 Ottawa Tamil Seniors Association 17 $418,694
8 Vasantham – A Tamil Seniors Wellness Centre 10 $375,481
9 Senior Tamils Society of Peel 24 $335,814
10 Brampton Tamil Seniors Association 13 $278,481
11 Canadian Tamil Youth Development Centre 7 $157,969
12 Tamil Canadian Centre for Civic Action 6 $150,015
13 LITTLE, Matthew R 1 $150,000
14 DODD, Warren H 1 $150,000

மேலும் படிக்க ...

பாரதிராஜா – II - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாற்றம்:

“முதல் மரியாதை படப்பிடிப்பை மைசூரில் நிகழ்த்தினேன். மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடம்… அந்த சூழல்… செடி, மரம், கொடி, மண், ஆகாயம் - அனைத்தையுமே நான் மனம்விட்டு காதலித்தேன்…இது போலத்தான், நடிகர் திலகம் சிவாஜியும். இறுதி நாள்… நாங்கள் மூட்டை முடிச்சுடன் கிளம்பிக் கொண்டிருக்கின்றோம்… சிவாஜி கணேசன் அவர்கள் முன்னாடியே சென்று விடுவதாகவும்,இறுதி படப்பிடிப்பை நான் மற்றவர்களுடன் இருந்து, முடித்து, இரண்டொரு நாட்களில் பின்னாடி வந்து சேர்ந்து விடுவதாகவும் ஏற்பாடு… சிவாஜி கணேசன் இறுதியாக வெளியே வந்த போது…அவரது கண்கள் சிவந்து கலங்கி இருந்தன… அண்ணே… எதுக்கு… இது என்றேன்… தெரியல ராசா… இங்க உள்ள சூழல என்னால விட்டு பிரிய முடியாம இருக்கு… இங்குள்ள மரம்
செடி, கொடி, அத்தனையும் என்னோட பேசுற மாதிரி இருக்கு… அவரது நா தழுதழுத்தது… இவன் கலைஞன், மகத்தான கலைஞன் என தீர்மானித்துக் கொண்டேன்”.

இப்படித்தான் - தான் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடையேயும், அவர்களின் பங்களிப்புகளை,சரியாக அடையாளம் கண்டுபிடித்து வரவேற்கும் மனிதர்களில் பாரதிராஜாவும் ஒருவரானார். ஒருவேளை சிவாஜி சம்பந்தமான இவரது கூற்று, ஓர் மிகை கூற்றாகக் கூட இருக்கலாம்… ஆனால் விடயம்… பொதுவில், தங்களின் வெற்றிகளை, இவ்வகை மனிதர்கள், தங்களில் அடையாளப்படுத்திக் கொள்வதை விட, பிற மனிதர்களில் அவற்றை ஏற்றி விடுவதை, தமது மைய புள்ளியாகக் கொண்டுள்ளார்கள். கார்க்கி கூறுவான்: “பாருங்கள் நண்பர்களே… எத்தனை மகா கவிகளை, ‘நான்’ என்ற இந்த பிலிஸ்டைன் உணர்வு சிதைத்தழித்து விட்டது” என. உண்மைத்தான். பெரிய மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வழியில் இந்த அதால பாதாளத்தை ஏதோ ஒரு வகையில் கடக்கவே செய்கின்றனர். வெற்றியும் கொள்கின்றனர். இது, அவர்களின் சுவாசத்தை போன்றது -அவர்கள் இந்த ஆகாசத்தை மனம் விட்டு காதலிப்பதை போன்றது.

பாரதிராஜாவை பொறுத்தவரை, தனது வெற்றியை, இப்படியாய் பிறரிடம் தந்து விடுவதில் மிகுந்த சமர்த்தகராக விளங்கினார் எனலாம். எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே பாக்கியராஜாவின் திரைப்பட வசனம்தான் என நா கூசாமல் சொல்லி விடுவார் மனிதர். “அவனைப் போல திரைகதை வசனம் எழுத யாருக்கு வரும்…” என்பார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் “எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே இளையராஜாவின் இசைத்தான்” “என் படங்களுக்கு, அவன் ஒரு புது மரியாதையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தினான்…” என்பார்.

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகள் என்று கொள்வதற்கில்லை. அவரது மனதில் இருந்து, மனதோடு ஊறி வெளிவரும் பண்பிது. இளையராஜாவின் வார்த்தைகளில் கூறுவோமென்றால்: “முதல் மரியாதை படம் எனக்கு மொத்தமாய் பிடித்ததாய் இருக்கவில்லை… அதை வெளிப்படையாக பாரதிராஜாவிடமே, நான் கூறி இருந்;தேன்…. இருந்தும் படத்திற்கு இசையமைத்தேன்… இறுதி காட்சி… நான் அமைத்திருந்த இசையை போட்டுப் பார்க்க அவனை அன்று அழைத்திருந்தேன்… பார்த்தான்… பின், ஒன்றுமே பேசாது என் கைகளை கட்டிப் பிடித்தவாறே கண்ணீர் உகுத்தான்… பிடிக்காமலேயே இப்படி இசை போட்டிருக்கியே என்று சொல்லி அழுதான் அவன்..”. நடித்து வேறு காட்டினார் மனிதர்.

மேலும் படிக்க ...

லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா! - நவஜோதி ஜோகரட்னம் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் -
நிகழ்ச்சி
23 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அகஸ்தியரின் 100ஆவது நூற்றாண்டு விழாவும் அவர்பற்றிய நினைவுகள் குறித்த ‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள் (1926-2026) என்ற நூல் வெளியீடும் லண்டன் சென் அன்ருஸ் கோயில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இலக்கிய ஆர்வலர்கள்;, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் மத்தியில், அகஸ்தியருக்குப்; பக்க துணையாகச் செயற்பட்ட அவரது மனைவி நவமணி அவர்களை அங்கு கௌரவித்தமை மிகுந்த கவனிப்புக்குரியதாகியது.

‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள்; அகஸ்தியர் நூற்றாண்டு நினைவுகள்’ நூலில் நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்), என்.செல்வராஜா(லண்டன்), மு. நித்தியானந்தன்(லண்டன்), எஸ்.எஸ்.குகநாதன்(இலங்கை), ரா.நித்தியானந்தன் (இலங்கை), அம்பலவாணர் சிவராசா(இலங்கை), இரா.அ.இராமன்(கண்டி), என்.கே.துரைசிங்கம்(பாரிஸ்), முல்லை அமுதன்(லண்டன்), இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்(லண்டன்), வி.சிவலிங்கம்(லண்டன்), மனோ சின்னத்துரை(பிரான்ஸ்), வ.ந.கிரிதரன்(கனடா), ஷோபாசக்தி (பாரிஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), ஐங்கரன் விக்னேஸ்வரா(அவுஸ்திரேலியா, வி.ரி.இளங்கோவன்(பிரான்ஸ்), மு.சி.கந்தையா (தமிழ்நாடு), ஹெக்கிராவ ஸ_லைஹா(இலங்கை), பேராசிரியர் துரை. மனோகரன்(இலங்கை), இக்பால்அலி(இலங்கை), திருமகள் சிறீபத்மநாதன் (பிரித்தானியா), எஸ்.கே.காசிலிங்கம்(பாரிஸ்), நடராசா சுசீந்திரன்(ஜேர்மனி), எஸ்.கே.ராஜன்(லண்டன்), ஜெயா பத்மநாதன்(பிரான்ஸ்), டாக்டர் ரி. விக்னேசன் (பிரான்ஸ்), லெ.முருகபூபதி(அவஸ்திரேலியா) ஆகிய இருபத்தியெட்டு பல்துறை ஆளுமைகளின் நினைவுக்குறிப்புகள் வரலாற்றுப் பதிவாகியுள்ளமை சிறப்புமிக்கது.

மேலும் படிக்க ...

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கிய 'ஆ.மாதவன் நினைவு இலக்கிய விருது' ஏற்புரை!  - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
22 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                                       [- எழுத்தாளர் ஆ.மாதவன்- ]

ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது

பின்னால் நான் எழுத ஆரம்பித்தபோது அவர் தொடர்ந்து என் கதைகளை பற்றிக் குறிப்பிட்டு எழுதினார். தீபம் இதழில் இருவரும் நிறைய எழுதினோம். எழுத்தாள நண்பர் ஆனார். தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி அவரை வாசித்துக் கொண்டிருந்தேன்.. திருவனந்தபுரம் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சாலை பஜாரில் உள்ள அவரின் செல்வி ஸ்டோரில் பாத்திரங்கள் மத்தியில் அவரையும் பார்ப்பேன். இலக்கியம் சார்ந்த பல நல்ல உரையாடல்களை கண்டு கொண்டிருக்கிறேன். வழக்கமாக ஊடவே நகுலன், நீலபத்மநாபன் ஆகியோரைச் சந்திப்பதும் வழக்கம்.

திருவனந்தபுரம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் என்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது கனவு இதழ் நாற்பது ஆண்டுகளாக வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.. அந்த கனவு இதழில் சில சிறுகதைகளை ஆ மாதவன் எழுதினார். முதல் 25 ஆண்டுகளில் வந்த கனவுப் படைப்புகளை காவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் அவரின் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது

பின்னால் அவர் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் நடத்தும் கேரள தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது பல சிறுகதைகளையும் நான் எழுதி இருக்கிறேன். அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் கேரளா தமிழ் இதழில் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கான அங்கீகாரம் வாசகப்பரப்பும் குறைவாகவே இருந்தது. அந்த காலத்தில் ஜெயமோகன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதை நிறுவிய போது முதல் விருதை ஆ.மாதவன் அவர்களுக்கு அளித்தார். .அதற்கு முன்னால் திருப்பூர் தமிழ்ச்சங்கம் அவருக்கு விருது அளித்த போது அவர் வரவில்லை . அவர் சார்பாக நான் விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன். பின்னால் திருப்பூர் வந்த திருவனந்தபுரம் பேராசிரியர் நயினார் அவர்கள் வசம் ஆமாதவன் அவர்களின் விருதுக் கேடயத்தை தந்தேன். பேச்சில் பேராசிரியர் நயினார் அவர்கள் ஆமாதவனுக்கு திருப்பூர் விருது தந்ததையும் இப்போது அவர் பெயரிலான விருது எனக்குத்தரப்படுவது பற்றியும் சொன்னார்.

மேலும் படிக்க ...

கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு: பலதரப்புவாதம், சர்வதேச சட்டம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பு! - தமிழில் - கூகுள் நனோ பனான செயற்கை நுண்ணறிவு -

விவரங்கள்
- தமிழில் - கூகுள் நனோ பனான செயற்கை நுண்ணறிவு -
அரசியல்
22 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு: பலதரப்புவாதம், சர்வதேச சட்டம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பு! - தமிழில் - கூகுள் நனோ பனான செயற்கை நுண்ணறிவு - [ செப்டம்பர் 21, 2026 நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்]


ஆரம்பகால இணை அனுசரணையாளர்கள்: ஆஸ்திரேலியா, பார்படாஸ், பிரேசில், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் கென்யா

"ஆழமான உலகளாவிய மாற்றத்தின் ஒரு காலகட்டத்தில் நாம் ஒன்றிணைகிறோம். உலகளாவிய மாற்றத்தின் தீவிரமடைந்து வரும் வேகமும் அளவும் நமது நிகழ்காலத்தை மறுவடிவமைத்து வருகின்றன, மேலும் அவை நமது கூட்டு எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். அதிகரித்து வரும் துருவமுனைப்பு, மோதல்களின் பரவல், சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் அதிகார அரசியல், பாதுகாப்புவாதம், வற்புறுத்தல் மற்றும் சக்தியைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஆகியவற்றிற்கு பெருகிவரும் ஆதரவு ஆகியவை குறித்து நாம் கவலை கொள்கிறோம். இந்த போக்குகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், முன்பை விடவும் உலகளாவிய ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் அதற்கு முட்டுக்கட்டையாகவும் அமைகின்றன.

பொருளாதார ரீதியான பரஸ்பர சார்புநிலை என்பது, வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், முதலீடு மற்றும் அபிவிருத்தி நிதி ஆகியவற்றை சீர்குலைத்து, பெருகிய முறையில் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஓர் ஆதாரமாக மாற்றப்பட்டு வருவதை நாம் அங்கீகரிக்கிறோம். அதே நேரத்தில், காலநிலை அவசரநிலை, பல்லுயிர் இழப்பு மற்றும் மாசுபாடு ஆகிய முப்பரிமாண உலகளாவிய நெருக்கடிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி போன்ற பகிரப்பட்ட உலகளாவிய சவால்களுக்கு, வலுவான ஒத்துழைப்பும் உலகளாவிய பொது நலன்களின் மிகவும் பயனுள்ள விநியோகமும் தேவைப்படுகின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே! | வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5. AI. |ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி  -  https://www.youtube.com/watch?v=4i3owAvn5tk

என் 'குருமண்காட்டு நினைவுகள்' என்னும் நெடுங் கவிதை இப்பாடலாக உருவெடுத்துள்ளது. வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும்.


நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

மேலும் படிக்க ...

மின்னூல்: 'கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
21 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
மின்னூல்: 'கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)
 
'கடற்புள்ளே!' எனது முகநூல், யு டியூப் சானல்களுக்காக எழுதப்பட்ட என் பாடல்களின் மூன்றாவது தொகுப்பு. 45 பாடல்களை உள்ளடக்கியது. அண்மையில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியான இந்த மின்னூல் தற்போது நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நூலை வாசிக்க -
 
https://noolaham.net/project/1379/137801/137801.pdf
 
எனது, 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்' , யு டியூப் சானலில் , SUNO 5.5 செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இங்குள்ள பாடல்கள் அந்தச் 'சான'லுக்காக எழுதப்பட்டவை. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். பாவிக்கப்பட்ட ஓவியங்கள் கூகுள் நனோ பனானா , சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.
 
எனது யு டியூப் சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/@girinav1
மேலும் படிக்க ...

வடகிழக்கு மக்கள் சிந்திக்கச் சில கருத்துகள்..... சுயதொழில் செய்வீர்! பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
20 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடகிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று புகலிடத் தமிழர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையும், இன்னும் பொருள் மீதான அவர்களின் நாட்டம் மிக்க போக்கும்தான். அடுத்தது இதனால் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு மோகமும்தான்.

புகலிடத்தமிழர்கள் சொத்துச் சேகரிக்கும் ஆர்வம் இன்று அங்கு வாழும் மக்களின் இருப்புக்குப் பெரும் இடைஞ்சலாக உள்ளது. புகலிடத்தமிழர்களின் ஆதரவில் வாழும் அவர்களைச் சார்ந்த சொந்த உறவுகள் மத்தியில் புழங்கும் பணம் அவர்களை ஆடம்பரப்பிரியர்களாக மாற்றியமைத்துள்ளது.

தொழிற்சாலைகள் அங்கு திறந்தாலும், அவர்களால் தொழிற் கல்வி கற்று அவற்றில் வேலை செய்யும் ஆர்வம் அவர்களுக்கு இல்லை. இங்கிருந்து அங்கு சென்று தொழிற்சாலைகள் பல திறந்தவர்களின் அனுபவங்கள் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

முதலில் அங்குள்ள இளைஞர்களின் வெளிநாட்டு மோகத்தைக் குறைக்கும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வகையில் தொழிற்கல்வியினைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை வழிநடத்தப்பட வேண்டியது அவசியம், அதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதும் அவசியம்.

மேலும் படிக்க ...

பேரழிவின் நிலவியலும் மீளெழுச்சியின் அறவியலும் — சேரனின் ‘காஞ்சி’ தொகுப்பு குறித்த ஒரு கோட்பாட்டுப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
20 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

எரிந்து கரிந்த சுவர்கள் மீது
மழை நீர் பட்டு
மீண்டும் முளைக்கிறது கொடிமலர்...

கவிஞர் சேரனின் 102 கவிதைகள் உள்ளடங்கிய “காஞ்சி” (2023, காலச்சுவடு வெளியீடு) தொகுப்பினை மையமிட்டு, ஒரு விரிவான விமர்சனப் பகுப்பாய்வை மேற்கொள்வதற்கான தத்துவார்த்தப் பின்னணியும், கவித்துவக் காத்திரமும் சேரனின் கவிதைகளில் செறிவாகக் காணப்படுகின்றன.

ஈழத்து இலக்கியப் பரப்பில் மஹாகவி, சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ. நுஃமான் ஆகியோரின் கவித்துவ மரபையும் அதன் வடிவ மாற்றத்தையும் உள்வாங்கி, அதேவேளை நவீன உலகளாவிய கவிதை மொழியைக் கையாளும் சேரனின் கவிதைகள், இத்தகையதொரு கோட்பாட்டு ஆய்வுக்கு மிகவும் தகுதியானவை.

இந்த பகுப்பாய்வை சர்வதேசக் கல்விப்புலத் தரத்தில் (Academic & Critical Standards) வடிவமைப்பதற்கான தத்துவார்த்தக் கட்டமைப்பு, அத்தியாயப் பிரிப்புகள் மற்றும் அணுகுமுறை சார்ந்த ஒரு முழுமையான வரைவடிவத்தினை (Conceptual Blueprint) பின்வருமாறு விரிவாக வரையறைச் செய்யலாம்.

மேலும் படிக்க ...

சோழ மன்னன் மூன்றாம் இராஜ ராஜன் 7- வது ஆட்சியாண்டு (பொ.ஆ.1223) கல்வெட்டு கண்டுபிடிப்பு! - முனைவர் ஆ. சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
19 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.


மாவட்டம் – திருப்பத்தூர்
வட்டம் - திருப்பத்தூர்
ஊர் - (காக்கங்கரை) ஆவல்நாயக்கன் பட்டி
எழுத்து - தமிழி
கல்வெட்டு கண்டறிந்த நாள் - 07.07. 2026
கல்வெட்டு அளவு – 4 அடி அகலம் 5 அடி உயரம்

திருப்பத்தூர் 07.07.2026 அன்று திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன், கல்வெட்டறிஞர் விழுப்புரம் சி.வீரராகவன், ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி ஆகியோர் மேற்கொண்ட களாய்வின்போது திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகில் உள்ள ஆவல் நாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் பிற்காலச் சோழ மன்னன் மூன்றாம் இராஜ ராஜனின் (பொ.ஆ.1223) 7-வது ஆட்சியாண்டு கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். இது தமிழ் ஆய்வில் புதிய வரவாகும். கல்வெட்டறிஞர் விழுப்புரம் சி.வீரராகவன் அவர்களால் படிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு கந்திலி தி.மு.க ஒன்றிய செயலாளர் திரு k.முருகேசன் மற்றும் வேலாயுதம், சந்திரன், ரகுநாத், செல்வம் முதலான ஊர்மக்கள் முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: எழுத்தாளர் சிவவதனி பிரபாகரனின் 'வாழ்வெனும் வரம்' பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் நூல்களின் சங்கமம் புத்தகக் கண்காட்சியில் என் மேசைக்கு அருகில் இருந்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் சிவவதனி பிரபாகரன். இருவரும் எம் நூல்கள் சிலவற்றைப் பரிமாறிக்கொண்டோம். அவர் தந்த நூல்களிலொன்று 'வாழ்வெனும் வரம்'.

சிவவதனி பிரபாகரன் தமிழ்த்தேசிய ஊடகவியலாளர்களில் ஒருவராக அறியப்படுபவர். அவரது நூலும் அவரது அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒன்றாகவிருக்கும் என்னும் எண்ணத்துடன் அதைப்பிரித்துப் பார்த்தேன். என் எண்ணம் பொய்த்துப்போனது. அது எண்ணங்களின் ஊற்றுவாயான உள்ளத்தைப்பற்றியது. மனத்தைப் பற்றியது.

தொகுப்பில் 28 கட்டுரைகள் உள்ளன. தெளிந்த நீரோடை போன்ற நடையில், வாசகரை உற்சாகப்படுத்தித் தட்டியெழுப்பும் வகையில் கட்டுரைகள் அமைந்திருப்பது ஆசிரியரின் குறிப்பாக நூலின் நோக்கத்துக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

மேலும் படிக்க ...

வாசிப்பும் யோசிப்பும்: கவிஞர் கந்தவனத்தின் 'ஹைக்கூக் கவிதைகள்' பற்றி... .

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் கந்தவனம் அவர்கள் 10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில் 'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். முனைவர் நிர்மலா சுரேஷ் முனைவர் பட்டத்திற்காக , சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 'ஹைக்கூக் கவிதைகள்' என்னும் பொருளில் அளித்த ஆய்வுக்கட்டுரையைத் தழுவி, கட்டுரையின் பெரும்பகுதி எழுதப்பட்டதாகக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றார் கவிஞர்.)

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு' | வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி. பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=h6vNex0QpJE&feature=youtu.be


இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

ஓட்டுக் கூரையில் சட்டச்சட என்றே
ஒளிர்ந்து முழங்கப் பொழியும் மழை!
வயற்புறத் தவளைகளின் வாய்ப்பாட்டுக் கச்சேரியோ
விடிய விடிய நடக்கும் மகிழ்ந்திருப்பேன்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: 'யாழ்ப்பாணத்துக்கும் வேதாரணியத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்புகள்'

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்ச்சி
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

Join Zoom Meeting  | Meeting ID: 847 7725 7162  | Passcode: 554268

மேலும் படிக்க ...

2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 202 பத்திரிகையாளர் சந்திப்பு – செப்டம்பர் 17! மாநாட்டு ஆதரவு நிறுவனங்களுக்கு அன்பான அழைப்பு! - தொல்காப்பிய மன்றம், கனடா -

விவரங்கள்
- தொல்காப்பிய மன்றம், கனடா -
நிகழ்ச்சி
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 202 பத்திரிகையாளர் சந்திப்பு – செப்டம்பர் 17! மாநாட்டு ஆதரவு நிறுவனங்களுக்கு அன்பான அழைப்பு!

அன்புடையீர், வணக்கம்!

2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026 வெற்றிகரமாக நடைபெற பலரும் நிதியுதவி, விளம்பரம், ஊடகப் பரவலாக்கம், தன்னார்வப் பணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். அவர்கள்
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

பத்திரிகையாளர் சந்திப்பு – செப்டம்பர் 17

மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு (Press Meet)

வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2026,,மாலை 7:00 மணி,,Queen Palace Banquet Hall,1173 Brimley Rd, Scarborough, ON M1P 3G5 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

நமது Supporting Partners அனைவரையும் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு, மாநாடு குறித்த செய்தியைத் தங்களது அமைப்புகள், உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரங்களிடையே பரவலாக்கி, மாநாட்டின் வெற்றிக்கு மேலும்
வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் படிக்க ...

இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026

விவரங்கள்
- தொல்காப்பிய மன்றம், கனடா -
நிகழ்ச்சி
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாள்: 19, 20 செப்டம்பர், 2026 | இடம்: Bill Hogarth Secondary School, 100 Donald Sim Avenue, Markham, ON L6B 0R4

மாநாட்டிற்கான நோக்கம்

தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல். தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல். இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல். தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல். தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

மேலும் படிக்க ...

தமிழ் பாடல் கல்வெட்டுகள் வழி அறியப்படும் சமூக வரலாறு! - மு. பழனிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் -

விவரங்கள்
- மு. பழனிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் -
ஆய்வு
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: மு. பழனிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை–09.
நெறியாளர்: முனைவர் ரே. கோவிந்தராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை–09.


ஆய்வுச் சுருக்கம்

தமிழகத்தின் சமூக வரலாற்றை மீட்டுருவாக்குவதில் இலக்கியங்கள், தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவை முக்கிய முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன. அவற்றுள் பாடல் வடிவில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் தனித்துவமான இடத்தைப் பெறுகின்றன. பொதுவாக அரசாணைகள், கொடைகள், நிர்வாகச் செயல்பாடுகள், நிலதானங்கள் போன்றவை உரைநடையில் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்ட நிலையில் அவை, குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளையும் சமூகச் செயல்பாடுகளையும் சமய செய்திகளையும் கவிதை அல்லது செய்யுள் வடிவில் நிலைநிறுத்தும் மரபு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக காணப்படுகிறது. பாடல் கல்வெட்டுகள் மூலம், சமூக செயல்பாடுகளான நீர்ப்பாசனம், கோயில் பொருளாதாரம், அறச்செயல்கள், தானங்கள், உள்ளூர் நிர்வாகம், தொழில், சமயம், நடுகல்மரபு, பெண்களின் பங்களிப்பு, கொடையாளர்களின் சமூக நிலை மற்றும் தமிழ் இலக்கியப் பரிணாமம் போன்ற பல்வேறு கூறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க ...

இடிபாடுகளுக்குள் புதையாமல் காசாவின் வரலாற்றைக் காத்த இரு பலஸ்தீனர்கள் — யுனெஸ்கோவின் சர்வதேச விருது! — போரின் இடிபாடுகளிடையே உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்ட வீரமிக்க வரலாற்று மீட்புப் போராட்டம்! - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
அரசியல்
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 அறிமுகம்: அழிவின் மத்தியிலும் அழியாத வரலாறு

போரின் கொடூரச் சத்தங்களும், கட்டடங்கள் இடிந்து விழும் புகைப் படலங்களும் சூழ்ந்த காசா நகரில், மனித உயிர்கள் மட்டுமல்லாது ஒரு தேசத்தின் வரலாற்று நினைவுகளும், பண்பாட்டுச் சுவடுகளும் தினமும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. வெடிகுண்டுகள் மனித உடல்களைப் பிளப்பது போல், வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகங்கள், பழமையான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிய முனைகின்றன. இத்தகைய கொடூரமான போர்க் களத்தில், எந்தவிதப் நவீனப் பாதுகாப்பு உடைகளோ சாதனங்களோ இன்றி, வெறுங்கைகளாலும் அளப்பரிய துணிவாலும் காசாவின் அரிய வரலாற்று ஆவணங்களை மீட்டெடுத்த இரு பலஸ்தீனர்களுக்கு உலகளாவிய உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான 'யுனெஸ்கோ/ஜிக்சி நினைவகம் சர்வதேச விருது' (UNESCO/Jikji Memory of the World Prize) பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பொறியாளர் ஹனீனின் அல்-ஓமாசி (Engineer Haneen Al-Omassi) மற்றும் வரலாற்று அறிஞர் டாக்டர் அப்தெல் லத்தீஃப் அபூ ஹாஷிம் (Dr. Abdel Latif Abu Hashem) ஆகிய இருவருக்குக் கூட்டாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச அங்கீகாரம்

2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யுனெஸ்கோ/ஜிக்சி நினைவகம் சர்வதேச விருது' வரலாற்றில், முதன்முறையாக இரு நபர்களுக்குக் கூட்டாக (Joint Award) இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். உலகெங்கிலும் உள்ள பண்பாட்டு மற்றும் ஆவணப் பாதுகாப்பு நிபுணர்களை உள்ளடக்கிய நடுவர் குழுவின் (Jury) முழுமையான ஒருமனதான முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

பதினெண்கீழ்க்கணக்கில் பாலை நில மரங்கள்! - முனைவர் ச.மீனாட்சி -

விவரங்கள்
- முனைவர் ச.மீனாட்சி -
ஆய்வு
17 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

ஆதாம் - ஏவாள் வாழ்வில் ஆப்பிள் கனி பெறுகின்ற முதன்மையைக் கொண்டே மனிதன் தாவரங்களோடு பின்னிப்பிணைந்துள்ள தன்மையினை அறிய முடிகின்றது. இந்நிலைப்பாடே மனித இனத்தின் தொன்மையான அறிவியலாக ‘தாவரவியல்’ போற்றப்படுகின்றது. தாவரமானது புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று பல்வேறான வளரியல்புகளைக் கொண்டது. பழந்தமிழர்கள் இயற்கையை அரணாகக் கொண்டவர்கள். இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்வியலை மேற்கொண்டவர்கள். இவர்களது வாழ்வில் தாவரங்கள் இன்றியமையா இடத்தினைப் பெறுகின்றன. இத்தாவரங்களை இலக்கியப் புலவர்கள் தங்களது படைப்புகளில் நயத்திற்காக ஆங்காங்கே பதிவு செய்துள்ளனர். இத்தகைய பதிவுகளே தாவரங்கள் சார்ந்த புலவர்களின் நுண்மாண் நுழைபுலத்திறனிற்கு சான்றாகின்றது. அறம் பொதிந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கில் ஆங்காங்கே புலவர்களின் தாவரச்சிந்தனைகளும் மிளிர்கின்றன என்பதனை இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாலை நில மரங்களைக் கொண்டு ஆய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. என்னைக்கவர்ந்த எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'! - வ.ந.கிரிதரன் -
  2. பயணத்தொடர்: அஜர்பைஜான் சில்க் பாதை! (2) - நடேசன் -
  3. ஈழக்கவியின் 3 மீமெய்யியல் கவிதைகள்: (மனிதனின் அன்றாட இருப்பு, மரணம், காலம் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்ட ஒரு 'மீமெய்யியல் படிமம்)! - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
  4. எழுத்தாளர் ரா.நித்தியானந்தனின் 'கடவாசல்' நாவலுக்குச் சாகித்திய இலக்கிய விருது!
  5. தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?
  6. வாழ்த்துகிறோம்: கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூலுக்கு இலங்கை அரசின் இலக்கிய விருது!
  7. இறப்பு கொண்டாடப்பட வேண்டியது அழகானது! மரணத்தை அச்சமாக அல்ல, வாழ்வின் நிறைவாகப் பார்க்கும் ஓர் உளவியல்–சமூகவியல்–தத்துவ ஆய்வு! - பவானி சற்குணசெல்வம் -
  8. ஜேர்மன் , பிராங்பேர்ட் நகரில் நாடக விழா! - ப.தியான், துகள் -
  9. ஓர் அங்கீகரிக்கப்படாத தீர்க்கதரிசி - எம்.பௌசர், பாலசபேசன் தொகுத்தளித்த 'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -
  10. ஒண்டாரியொ மாகாணத்தில், இலாப நோக்கற்று இயங்கும் சமூக நிறுவனங்களின் கவனத்துக்கு!
  11. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -
  12. எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது! - வ.ந.கி -
  13. கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  14. அயலாரின் முகம் மற்றும் முதன்மை அறவியல்: இம்மானுவேல் லெவினாஸின் மெய்யியல்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
பக்கம் 2 / 135
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி