பதிவுகள் முகப்பு

என்னைக்கவர்ந்த எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமான நாவல் எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'. சி.ஏ.பாலனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் , இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதெமி வெளியிட்ட நாவல். எஸ்.கே.பொற்றேகாட்டிற்கு சாகித்திய, ஞானபீட விருதுகளைப் பெற்றுக்கொடுத்த நாவல்.

'ஒரு கிராமத்தின் கதை' நாயகனான சீதரனோ சமூக, பொருளியற் சூழல் காரணமாக நீங்கினான். வடக்கு இந்தியா தொடக்கம் ஐரோப்பா வரையில் அலைந்து திரிந்து முதியவனாக மீண்டும் தன் கிராமத்துக்கு வருகின்றான். அவன் மீண்டும் ஊர் திரும்பியபோது அவன் கண்ட அவனது கிராமமான 'அதிராணிப்பாடம்' முற்றிலும் மாறிப்போயிருந்தது. அவன் பால்யப் பருவத்து நினைவுகளைத் தாங்கி நின்ற பகுதிகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. அவ்வூரின் உயிர்த்துடிப்பாக விளங்கிய மனிதர்கள், அவன் வாழ்வின் பால்ய, பதின்மப் பருவத்தில் இடம் பெற்றிருந்த மனிதர்கள் பலரும் காணாமல் போயிருந்தார்கள். அவனது நினைவெல்லாம் நிறைந்திருந்த மண்ணைக் காண அவன் எத்துணை ஆர்வத்துடன் மீண்டும் திரும்பி வந்தான். வந்தபோதுதான் உணர்ந்தான் அவன் நினைவில் நிற்கும் அவனது அதிராணிப்பாடம் அங்கில்லை. அங்கிருந்தது உலகமயமாக்கலின் விளைவாக உருவான கால மாறுதல்களைத் தாங்கி நிற்கும் அவனுக்கு அந்நியமான அதிராணிப்பாடம்.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: அஜர்பைஜான் சில்க் பாதை! (2) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
15 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சீனாவுக்கும் ஐரோப்பா, எகிப்து போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வணிகப் பாதைகள் கிறிஸ்துவுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில், சீனாவின் ஹான் அரச வம்சத்தின் காலத்தில் விரிவடைந்தன. பிற்காலத்தில் **‘சில்க் பாதை’ (Silk Road) என்று அழைக்கப்பட்ட இந்த வணிக வலையமைப்பு, பல நூற்றாண்டுகளாக கிழக்கையும் மேற்கையும் இணைத்தது.

இது ஒரு தனியான நேர்கோட்டுப் பாதையல்ல. பல இடங்களில் தொடங்கி, ஒன்றோடு ஒன்று இணைந்து, மீண்டும் பல கிளைகளாகப் பிரிந்து சென்ற வணிகப் பாதைகளின் வலையமைப்பு. சீனர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் இந்தப் பாதைகளில் இணைந்து வணிகம் செய்தார்கள். குறிப்பாக காஷ்மீர் வழியாக இந்தியாவிலிருந்து சென்ற பாதைகள் மத்திய ஆசிய வணிகப் பாதைகளுடன் இணைந்தன.

இது சாதாரணமான ஒரு பயணப் பாதையுமல்ல. வியாபாரிகள் தங்கள் பயணத்தை முடிக்க மாதங்களோ, சில சமயங்களில் ஆண்டுகளோ எடுத்திருக்கலாம். ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளுடன் அவர்கள் குழுக்களாகப் பயணித்தார்கள். கொள்ளையர்களிடமிருந்து பொருட்களைப் பாதுகாக்க ஆயுதம் தாங்கிய காவலர்களும் உடன் சென்றார்கள்.

இந்த சில்க் பாதையால் வியாபாரம் மட்டும் நடைபெறவில்லை. மொழிகள், கலாசாரங்கள், அறிவு, தொழில் நுட்பம், கலைகள், மதங்கள் எனப் பலவும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பரவின. குறிப்பாக புத்த மதம் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் பரவுவதில் இந்த வணிகப் பாதைகள் முக்கிய பங்கு வகித்தன. அதேபோல் நோய்களும் இந்தப் பாதைகளின் வழியாகப் பரவின. ஐரோப்பாவையே உலுக்கிய பிளேக் எனும் கொள்ளை நோயின் பரவலுக்கும் மத்திய ஆசிய வணிகத் தொடர்புகள் ஒரு முக்கிய வழியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.

மேலும் படிக்க ...

ஈழக்கவியின் 3 மீமெய்யியல் கவிதைகள்: (மனிதனின் அன்றாட இருப்பு, மரணம், காலம் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்ட ஒரு 'மீமெய்யியல் படிமம்)! - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
கவிதை
13 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. பழைய நாட்குறிப்பு

அறையின் மூலையில்
ஒரு பழைய புத்தகம் கிடக்கிறது.
அது ஒரு நாட்குறிப்பு—
அல்லது நாட்குறிப்பாக இருந்த ஒரு பொருள்.
அதன் பக்கங்கள் மஞ்சளேறியிருக்கின்றன;
எழுத்துகள் சோர்ந்திருக்கின்றன,
ஆனாலும் அழியவில்லை.

நான் அதைத் திறக்கிறேன்.
முதல் பக்கம் ஒரு நாளின் தொடக்கமல்ல,
ஓர் உணர்வின் தொடக்கம்.
அங்கே காலம் எழுதப்பட்டிருக்கிறது,
ஆனால் அது நடந்தபடி இல்லை;
நினைத்தபடி இருக்கிறது.
வாக்கியங்கள் தெளிவற்று இருக்கின்றன—
அல்லது தெளிவடைய
விரும்பாதது போல அமைந்திருக்கின்றன.

ஒரு நாள் அங்கே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது,

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ரா.நித்தியானந்தனின் 'கடவாசல்' நாவலுக்குச் சாகித்திய இலக்கிய விருது!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்முறை நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது எழுத்தாளர் ரா.நித்தியானந்தனின் 'கடவாசல்' நாவலுக்குக் கிடைத்திருக்கின்றது. இதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

இந்த நாவலை இன்னும் நான் வாசிக்கவில்லை, ஆனால் எழுத்தாளர் உமா வரதராஜனின் இந்நாவல் பற்றிய குறிப்பின்படி இந்நாவலானது இலங்கையில் நடந்த முதலாவது இளைஞர் புரட்சியான ஜேவிபியினரின் 1971 புரட்சியினை மையமாகக் கொண்டது என்பதை அறிய முடிகின்றது. அவ்வகையில் தமிழில் வெளியான முதலாவது நாவல் என்றும் அறிய முடிகின்றது. இவ்வகையில் முக்கியத்துவம் மிக்க இந்நாவலை வாசிக்கும் ஆவலை உமா வரதராஜனின் குறிப்பு ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் உமா வரதராஜனின் குறிப்பின் சில பகுதிகள் வருமாறு:

"1971ல் இலங்கையில் நிகழ்ந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே,வி.பி)யினரின் கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. இலங்கையின் அரசியல் வரலாறு- அனுபவம்-நினைவுகள்-புனைவு என்பவற்றின் சரிவிகிதக் கலப்பு இந்த நாவலை ஆழப்படுத்தியிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் போராட்ட வரலாறை மாத்திரம் இந் நாவல் பேசாமல் இதில் வரும் பாத்திரங்கள் மூலம் சில கேள்விகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கிறது.அதுவே இந் நாவலைத் தனித்துவம் மிக்கதாகுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் ஆரம்பமாகும் போராட்ட சிந்தனை வளர்ச்சியடைந்து, 1971 ஏப்ரல் 5 தொடங்கி 1971 ஜுன் வரை உக்கிரமடைகின்றது. ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகின்றது. பொலிஸ் நிலையங்கள் தாக்கப் படுகின்றன. கிளர்ச்சியாளர்கள் பல வாரங்கள் தென், சப்ரகமுவ மாகாணங்களின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.நாடெங்கும் ஊரடங்கு நிலை பிரகடனப் படுத்தப் படுகின்றது. உள்நாட்டு அரச படையினரின் கடுமையான ஒடுக்கு முறைகளாலும், நட்பு நாடுகள் சிலவற்றின் உதவியாலும், இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களின் மனமாற்றங்களாலும் இப் போராட்டம் அதிகளவான உயிரிழப்புகளுடனும், கைதுகளுடனும்,சரணாகதிகளுடனும் இறுதியில் தோல்வியில் முடிகிறது.

மேலும் படிக்க ...

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும். இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள்.

உண்மையில் கலைஞர் தெலுங்கரா? கலைஞர் தமிழர். அவர் குடும்பத்தினர் தமிழர்கள். திருக்குவளையில் பிறந்தவர்கள். அய்யாத்துரை - தாத்தா. பெரிய நாயகத்தம்மாள் - பாட்டி. தாய் - அஞ்சுகம்,. தந்தையார் - முத்துவேலர். குழந்தைகள் அழகிரி, முத்து, செல்வி, தமிழரசு, கனிமொழி , ஸ்டாலின் ( ஸ்டாலின் மீதுள்ள பற்றினால் வைத்தது) .இவர்களில் ஸ்டாலின் தவிர அனைத்தும் தமிழ்ப்பெயர்கள். எந்தத்தெலுங்கராவது இவ்விதம் தமிழ்ப்பெயர்களை வைப்பார்களா? (உடனடியாக இந்தப்போலி ஆய்வாளர்கள் வந்து விடுவார்கள் - இவர்கள் தெலுங்கர்கள். திட்டமிட்டே தமிழ்ப்பெயர்களை வைத்தார்கள் என்று)

மேலும் படிக்க ...

வாழ்த்துகிறோம்: கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூலுக்கு இலங்கை அரசின் இலக்கிய விருது!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்ச்சி
09 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டடக்கலைஞரும், வரலாற்று ஆய்வாளருமான இ.மயூரநாதனின் ஆய்வு நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 -1948) நூலுக்கு 'சிறந்த சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுப்பிரிவுக்கான சாகித்திய விருது கிடைத்துள்ளது. இது எழுநா பதிப்பகத்தின் வெளியீடு. முக்கியமானதோர் வரலாற்று நூலுக்கு விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மிகுந்த ஆய்வினை உள்ளடக்கிய நூல். வாழ்த்துகிறோம்!

மேலும் படிக்க ...

இறப்பு கொண்டாடப்பட வேண்டியது அழகானது! மரணத்தை அச்சமாக அல்ல, வாழ்வின் நிறைவாகப் பார்க்கும் ஓர் உளவியல்–சமூகவியல்–தத்துவ ஆய்வு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
ஆய்வு
09 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் கொண்டாடுகிறோம். பிறப்பைக் கொண்டாடுகிறோம்; திருமணத்தைக் கொண்டாடுகிறோம்; குழந்தையின் முதல் நடை, கல்வி நிறைவு, வெற்றி, பதவி உயர்வு என வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திற்கும் விழாக்களை உருவாக்குகிறோம். ஆனால் அதே வாழ்க்கையின் தவிர்க்க முடியாத இறுதி நிகழ்வான இறப்பை மட்டும் துயரத்தின் அடையாளமாகக் கருதுகிறோம்.

ஒருவர் பிறக்கும்போது வீடு மகிழ்ச்சியில் நிறைகிறது. ஒருவர் இறக்கும்போது அதே வீடு கண்ணீரில் மூழ்குகிறது. இதில் ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது: பிறப்பு வாழ்க்கையின் தொடக்கம் என்றால், இறப்பு அந்த வாழ்க்கையின் நிறைவு அல்லவா? தொடக்கத்தைக் கொண்டாடும் மனிதன், நிறைவையும் கொண்டாட முடியாதா? இங்கு "இறப்பைக் கொண்டாடுதல்" என்பது மரணத்தை மகிழ்ச்சியாகக் கருதி துயரத்தை மறுப்பதல்ல. மாறாக,ஒரு மனிதன் வாழ்ந்து முடித்த வாழ்க்கையை மதிப்பதும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளைப் போற்றுவதும், இயற்கையின் தவிர்க்க முடியாத சுழற்சியாக இறப்பை ஏற்றுக்கொள்வதும்ஆகும்.

உளவியலில் grief என்பது அன்புக்குரிய ஒருவரை இழந்த பின் ஏற்படும் ஆழமான துயரம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் எல்லா இழப்புகளும் ஒரே விதமான துயரத்தை ஏற்படுத்துவதில்லை; துக்கத்தை வெளிப்படுத்தும் முறையும் கலாசாரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே, "இறப்பு கொண்டாடப்பட வேண்டியது அழகானது" என்ற கருத்தைமரணத்தை மகிழ்ச்சியாக்கும் முயற்சியாக அல்ல; மரணத்தைப் புரிந்துகொள்ளும் புதிய மனிதநேயப் பார்வையாகஅணுக வேண்டும்.

மேலும் படிக்க ...

ஜேர்மன் , பிராங்பேர்ட் நகரில் நாடக விழா! - ப.தியான், துகள் -

விவரங்கள்
- ப.தியான், துகள் -
நிகழ்ச்சி
09 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஓர் அங்கீகரிக்கப்படாத தீர்க்கதரிசி - எம்.பௌசர், பாலசபேசன் தொகுத்தளித்த 'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
நூல் அறிமுகம்
09 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” – பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வேத வசனமானது, இயேசு கிறிஸ்து தனது சொந்த ஊரான நாசரேத்தில் அவரது ஊர்க்காரர்களால் நிராகரிக்கப்பட்டு, கடுமையாக நிந்திக்கப்பட்டபோது, வெறுப்போடும் விரக்தியோடும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு உலகத்தாரால் போற்றப்பட்டு புனிதமாக்கப்பட்ட ஒருவர், அவரது சொந்த ஊர்க்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்டு நிந்தனைக்கு ஆளாவது ஆரம்பத்தில் ஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும், பின்னர் இது உலகத்தில் நடைமுறையில் உள்ள ஒரு பொதுவான இயல்பான விடயமே என்ற உண்மை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அதிலும், ஈழ–புகலிட இலக்கியத் தளத்தில் ஒரு தீவிர வாசகனாக நான் உள் நுழைந்த போது இந்த உண்மை மீண்டும் மீண்டும் எனக்கு மெய்ப்பிக்கப்பட்டது.

ஈழ-புகலிட இலக்கியப்பரப்பில் எழுத்தாளராக, கவிஞராக, செயற்பாட்டாளர்களாக இயங்கி வரும் ஆளுமைகளில் பெரும்பாலோர் தூற்றப்படுவதும் தூசிக்கப்படுவதும் அவர்கள் மீது அவதூறுகள் அள்ளி வீசுப்படுவதும் பல்வேறு தசாப்தங்களாகத் தொடர்கின்ற நாம் அறிந்த ஒரு அவல நிலை. அவர்கள் உலகளாவிய ரீதியில் மற்றைய சமூகத்தினரால் ஆற்றல் மிக்க ஆளுமைகளாகக் கௌரவிக்கப் பட்டும் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கும் வேளையிலும் அவர்களை நக்கல் செய்வதும் நையாண்டி செய்வதும் எமது சமூகத்தவரின் தலையாய கடைமைகளாகக் கருதப்படுகின்றன.

மேலும் படிக்க ...

ஒண்டாரியொ மாகாணத்தில், இலாப நோக்கற்று இயங்கும் சமூக நிறுவனங்களின் கவனத்துக்கு!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
சமூகம்
08 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலாப நோக்கற்று இயங்கும் சமூக நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனம்தான் ஒண்டாரியோ ட்ரில்லியம் அறக்கட்டளை (Ontario Trillium Foundation). உங்கள் நிறுவன கணக்குகளை முறையாக நிர்வகித்தால், சமூகத்துக்காக நீங்கள் வருடந்தோறும் செயற்பட்டால் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றது ஒண்டாரியோ ட்ரில்லியம் அறக்கட்டளை. நீங்கள் நிதி உதவிகள் பெற விரும்பினால் , அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விபரங்கள் இந்நிறுவனத்தின் இணையத்தளப் பக்கத்திலுள்ளன. இதன் இணையத்தளப்பக்க முகவரி - https://otf.ca

இந்நிறுவனம் தன்னிடமிருந்து நிதி உதவி பெறும் விபரங்களைத் தனது இணையத்தளப் பக்கத்தில் வெளியிடுகின்றது. அதன்படி கடந்த சில வருடங்களில் இந்நிறுவனத்திடமிருந்து பெற்ற தமிழ் நிறுவனங்களின் விப்ரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நேர்காணல்
06 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார். எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார். நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

அண்மையில் நான் பார்த்த சிறநத , இலக்கியம் சார்ந்த காணொளிகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவேன். இதில் தமிழ்நதி தன் எழுத்துலக அனுபவங்களை, தன் குடும்ப வாழ்க்கை அனுபவங்களை எவ்வித பாசாங்குத்தனமுமற்று , வெளிப்படையாகப் புறவுலகுக்குத் திறந்து காட்டியிருக்கின்றார். தமிழ்நதி என்னும் ஆளுமையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவும் முக்கிய சான்றாக இக்காணொளியைக் கருதலாம். தமிழ்மொழியின் படைப்புகளை ஆய்வு செய்யும் திறனாய்வாளர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி.

காணொளி எழுத்தாளர் தமிழ்நதியின் நான்கு முக்கிய காலகட்டங்களைப் பற்றிப் பேசுகின்றது. இலங்கையில் வசித்த காலப் பால்யம் பதின்மப் பருவக் காலகட்டம், கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின் 2004 வரையிலான அவரது இலக்கியச் செயற்பாடுகளைப் பற்றிய காலகட்டம் , 2004 - 2006 வரையிலான மீண்டும் இலங்கை திரும்பிய காலகட்டம், 2006 ஆண்டிலிருந்து இன்று வரையிலான காலகட்டம் என அவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
06 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை அரசால் வழங்கப்படும் அதியுயர் இலக்கிய விருது 'சாகித்திய ரத்னா' . இம்முறை அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான சோ.பத்மநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை எழுத்தாளர்களின், சர்வதேச எழுத்தாளர்களின கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். அதே சமயம் தமிழ்ப்படைப்புகளையும் ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றவர். பன்னாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கப் பங்காற்றுபவை இவ்வகையான மொழிபெயர்ப்புகளே.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
05 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்:  முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061


முன்னுரை

தகவல் தொடர்பியல் (Communication) என்பது செய்திகள், கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அல்லது ஒரு குழுவிற்குப் பரிமாறிக்கொள்ளும் முறையாகும். இது வாய்மொழி, எழுத்து, சைகை மற்றும் மின்னணு ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, இணையம்) வழியாக நடைபெறுகிறது. சமூக உறவுகள், மேலாண்மை மற்றும் சமூக மாற்றத்திற்குத் தகவல் தொடர்பு அடிப்படையாக அமைகிறது.

முன்பு மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பு தகவல்களைப் பரிமாற சைகையால் பேசினர். பின்பு ஒலி எழுப்பி தன் மனதில் இருந்த செய்திகளைத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்பே சொற்களைப் பயன்படுத்தி பேசத் தொடங்கினர். கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

கம்பராமாயணத்தில் தகவல் தொடர்பியல்

சைகையால் தகவல் கூறல், ஒற்றர், தூதர், தானே உணர்தல், முரசறைந்து தெரிவித்தல், திருமண செய்தியை முரசறைந்து தெரிவித்தல், சில சப்தத்தின் ஒலியால் அறிதல், இசை கருவிகளின் ஒலி மன்னர் வருகை, மங்கல ஆரவாரம், வில் நாண் ஒலி, அணிவகுத்து வருவதை உணர்த்தும் சத்தம், உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன், குரலால் தகவல் அறிதல், தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல், தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல், ஒலியும் வாசனையும் தகவல் அறிவித்தன, தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன், தானே செய்தியைக் கூறல், தகவல்களை அறிந்து வைத்திருத்தல், அரசனானதை அறிவித்தல், இராவணன் -அனுமன் அறிமுகம், அங்கதன் -கும்பகர்ணன் அறிமுகம், ஆரவார ஒலியால் தகவலை அறிதல், ஆரவார ஒலியால் ஆனந்தத்தை அறிவித்தல், தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல், அன்புடையோர் தந்த தகவல், பொருட்களைப் பார்த்து அவர்களுடையது தான் என்ற தகவலை அறிதல், வீடணன் கூற இராமன் தகவல் அறிதல், கண்களால் தூது -புன்னகையே தகவல், ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல், அயோமுகியின் அலறல்.

மேலும் படிக்க ...

அயலாரின் முகம் மற்றும் முதன்மை அறவியல்: இம்மானுவேல் லெவினாஸின் மெய்யியல்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
04 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மெய்யியல் (தத்துவ) வரலாற்றில், இம்மானுவேல் லெவினாஸ் (Emmanuel Levinas) நிகழ்த்திய சிந்தனைப் புரட்சி தனித்துவமானது. பிளேட்டோ முதல் மார்ட்டின் ஹைடெக்கர் வரையிலான மேற்கத்திய மெய்யியல் மரபானது ‘இருப்பியல்’ (Ontology) மற்றும் ‘அறிவுக்கோட்பாடு’ (Epistemology) ஆகியவற்றுக்கே முதலிடம் வழங்கியது. ஆனால், லெவினாஸ் இந்த மரபை முற்றாக நிராகரித்து, அறவியலை (Ethics) ஒட்டுமொத்த மெய்யியலின் “முதன்மைத் மெய்யியல்” (First Philosophy) ஆகப் பிரகடனப்படுத்தினார். சுயத்தின் (Self) மேலாதிக்கத்தை உடைத்து, ‘அயலான்’ (The Other) மற்றும் ‘எல்லையற்ற பொறுப்புணர்வை’ (Infinite Responsibility) மையமாகக் கொண்ட ஒரு புதிய மனிதநேயத்தை அவர் முன்வைத்தார். இக்கட்டுரை, லெவினாஸின் மெய்யியல் பின்னணி, அவரது முக்கியக் கருத்தாக்கங்கள் மற்றும் மேற்கத்திய தத்துவத்துடனான அவரது உரையாடலை ஆராய்கிறது.

மெய்யியல் பின்னணியும் வரலாற்றுச் சூழலும்

லெவினாஸின் மெய்யியலை உள்வாங்குவதற்கு, அவரது வாழ்வியல் மற்றும் மெய்யியல் பயில்களப் பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

நிகழ்வுப்பதிவியல் (Phenomenology) உடனான தொடர்பு: ஜெர்மனியில் எட்மண்ட் ஹுஸர்ல் மற்றும் மார்ட்டின் ஹைடெக்கர் ஆகியோரின் கீழ் பயின்ற லெவினாஸ், பிரெஞ்சு மெய்யியல் சூழலுக்கு நிகழ்வுப்பதிவியலை அறிமுகப்படுத்திய முன்னோடியாவார். ஹுஸர்லின் ‘அகவயத்தன்மை’ (Intentionality) மற்றும் ஹைடெக்கரின் ‘இருப்பு’ (Dasein) ஆகிய கருத்தாக்கங்களை ஆழமாகக் கற்ற அவர், பின்னாளில் அதே கருத்தாக்கங்களின் போதாமைகளை விமர்சித்தே தனது தத்துவத்தைக் கட்டமைத்தார்.

மேலும் படிக்க ...

பொருநராற்றுப்படையில் பாணரின் வறுமை நிலை! - முனைவர் ப.சசிரேகா -

விவரங்கள்
-முனைவர் ப.சசிரேகா-
ஆய்வு
04 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் ப.சசிரேகா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குரு நானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -


முன்னுரை

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கலாக வறுமை உள்ளது. அத்தகைய வறுமையினைப் போக்குவதற்காக மன்னர்கள் கொடைத்திறன் உடையவர்களாக உள்ளனர். தன்னைப் பாடும் புலவர்களுக்கும், பொருநர்களுக்கும் பொன்னையும் பொருளையும் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். மன்னர்களின் கொடைத்திறன் சிறப்புடையது எனினும் கொடைபெறுவோரின் நிலை ஆராய்தற்குரியது. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் ஒன்றானப் பொருநராற்றுப்படையில் பொருநரின் துயர நிலையினையும், அத்துயர நிலையினைப் போக்குவதற்காக மன்னர்கள் அளித்த கொடைகள் குறித்த செய்திகளையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருநரின் நிலை

பொருநர் என்ற சொல் இரு பொருள் தரும். 1.போர் வீரர்களையும், 2.கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடியாடும் கலைஞர்களையும் குறிக்கும். பாடும் பொருநர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். நாடோடிகளாய் வாழ்க்கை நடத்தியவர்கள் பொருநர்கள். தம் சுற்றத்துடன் பல காடுகள், மலைகள், நீர் நிலைகளைக் கடந்து சென்று, அந்நாட்டு மன்னரின் புகழினைப் பாடுவர். அவ்வள்ளல் கொடுக்கும் விருந்தினை உண்டு, அவன் கொடுக்கும் புதிய பட்டாடைகளை உடுத்திக் கொண்டு மனநிறைவோடு வாழ்வர். தாம் பெற்ற இன்பத்தினை தன்னைப் போல் வறுமையில் உள்ள மற்றொரு பொருநன் சுற்றத்துடன் எதிரே காணும்போது, அவ்வறுமை நிலையினைப் போக்க அம்மன்னரிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துவது போன்றே பொருநர்களின் வாழ்வியல் நிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: அஜர்பைஜான் (1) — காற்றின் நகரமும் கம்பளிகளின் கதையும் - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
04 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஜர்பைஜான், ஆர்மேனியா, ஜோர்ஜியா ஆகிய மூன்று சிறிய நாடுகளும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் காக்கசஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ளன. வரலாற்றில் இவை அருகிலிருந்த பெரிய பேரரசுகளான பாரசீகம், ஒட்டோமான் துருக்கி, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. கடந்த நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தின் கீழும் இருந்தன. கிழக்கையும் மேற்கையும் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில்க் பாதையில் அமைந்திருந்ததால், இப்பகுதி எப்போதும் பெரிய பேரரசுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

1991-இல் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் இந்நாடுகள் சுதந்திரம் பெற்றன.

அஜர்பைஜான் பல நூற்றாண்டுகளாகத் துருக்கிய மற்றும் பாரசீகச் செல்வாக்குகளுக்கு உட்பட்டிருந்தது. பெரும்பான்மையான மக்கள் ஷியா இஸ்லாமியர்களாக இருந்தாலும், நாட்டு அரசு மதச்சார்பற்றது.

எங்கள் பயணம் அஜர்பைஜானின் தலைநகரான பாகுவிலிருந்து தொடங்கியது.

அஜர்பைஜானின் தலைநகர் பாகு (Baku), கஸ்பியன் கடலின் கரையில் அமைந்துள்ளது. மற்ற கடல்களைப் போலல்லாமல், கஸ்பியன் கடல், ரஷ்யா, ஈரான், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு உள்நாட்டுக் கடல். புவியியல் ரீதியாக இதை உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி என்றும் குறிப்பிடலாம்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் எழுத்தாளர் அரங்கம் 49 - எழுத்தாளர் தமிழ்நதி உரையாடுகின்றார்!

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்ச்சி
04 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மின்னெட் டி சில்வா (Minnette de Silva) இலங்கையின் முன்னோடிப் பெண் கட்டடக் கலைஞர்! - ஆங்கிலத்தில் டில்ஷன் மதுரங்க (Dilshan Madhuranga) | தமிழில் - chatGPT

விவரங்கள்
- ஆங்கிலத்தில் டில்ஷன் மதுரங்க (Dilshan Madhuranga) | தமிழில் - chatGPT
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
02 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளர் டில்ஷன் மதுரங்க (Dilshan Madhuranga) தனது முகநூற் பக்கத்தில் இலங்கையின் கலை, இலக்கிய & அரசியல் ஆளுமைகளைப் பற்றி எழுது வருகின்றார். அதில் அவர் இலங்கையின் பெண் கட்டடக்கலைஞர்களில் முன்னோடியான மின்னெட் டி சில்வா பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையிம் தமிழாக்கமிது. தமிழ் மொழிபெயர்ப்பு - chatGPT]


மின்னெட் டி சில்வா (Minnette de Silva) இலங்கையின் முன்னோடிப் பெண் கட்டடக்கலைஞர். அவரைப்பற்றிய பய்னுள்ள் விரிவான ஆங்கிலக் கட்டுரையினை Dilshan Madhuranga தனது முகநூற் பக்கத்தில் எழுதியிருக்கின்றார். இலங்கையின் கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகள் பற்றி இவர் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி, சாட்ஜிபிடியால் செய்யப்பட்ட இதன் தமிழாக்கம் இது. ]

மின்னெட் டி சில்வா, இலங்கை உருவாக்கிய மிகச் சிறந்த கட்டடக் கலைஞர்களில் ஒருவராவார். நிலைத்த கட்டடக்கலை (sustainable design) , காலநிலைக்கேற்ப வடிவமைப்பு, சமூகப் பங்கேற்பு, பிராந்திய அடையாளம் போன்ற கருத்துகள் பரவலாகப் பேசப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் தமது கட்டடங்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் இக்கருத்துகளை ஆராய்ந்து வந்தார்.

1918 பெப்ரவரி 1ஆம் தேதி, அப்போது பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சிலோனின் கண்டியில் மின்னெட் பிறந்தார். அரசியல், கலாசாரம், சமூகச் சீர்திருத்தம், சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றுடன் ஆழமாகத் தொடர்புடைய குடும்பச் சூழலில் அவர் வளர்ந்தார். அவரது தந்தையான ஜோர்ஜ் ஈ. டி சில்வா புகழ்பெற்ற வழக்கறிஞரும் அரசியல்வாதியுமாவார். அவர் சிலோன் தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பின்னர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது தாயார் ஆக்னஸ் டி சில்வா பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவருமாவார்.

மேலும் படிக்க ...

புறநானூற்றில் துணைவஞ்சி! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர் -
ஆய்வு
02 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் , திண்டுக்கல் , காந்தி கிராமம், இந்தியா -  |  நெறியாள்கை: முனைவர் சி.சிதம்பரம் -


முன்னுரை:

சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு பகுப்புகளை உடையது. இரண்டு பகுப்பிற்கும் அதற்கென திணை, துறைகள் இலக்கண நூலோரால் வகுக்கப்பட்டுள்ளன. அதனை முதன்மையாகக் கொண்டே எட்டுத்தொகை நூல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வஞ்சித்திணையின் கீழ் துணைவஞ்சி என்ற துறையின் பெயரில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆனால் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புற இலக்கண நூல்கள் எவற்றிலும் துணைவஞ்சி என்னும் இத்துறையானது சுட்டப்பெறவில்லை. இவ்வாய்வுக் கட்டுரை துணைவஞ்சி என்ற புறத்துறையின் விளக்கத்தினையும், எந்த அடிப்படையில் இத்துறை தோன்றியது என்பதையும் விளக்க முற்படுகின்றது.

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்: தமிழகக் கோயிற்சிற்பங்கள் புலப்படுத்திநிற்கும் கரணங்களும் அவற்றின் மீளுருவாக்கமும்’

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்ச்சி
02 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 840 3358 1685 | Passcode: 638 419

தமிழகக் கோயிற்சிற்பங்கள் புலப்படுத்திநிற்கும் கரணங்களும் அவற்றின் மீளுருவாக்கமும்’

Time: Sep 12, 2026 09:00 PM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting | Meeting ID: 840 3358 1685 | Passcode: 638 419

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிறுகதை: மார்த்தா - ஜெயா (மதுரை) -

விவரங்கள்
- ஜெயா (மதுரை) -
சிறுகதை
02 செப்டம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளர் குறிப்பு - எழுத்தாளர் புனைபெயர்: ஜெயா (இயற்பெயர் : வீரபத்திரன்), ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் ஆவணப்படத் தயாரிப்புத் துறையில் தடம் பதித்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வரும் வீரபத்திரன், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படங்களை உருவாக்கி, சமூகப் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள கலாச்சாரம், மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைத் தன் லென்ஸ் வழியாகக் காட்சிப்படுத்தி வருகிறார். கதைச் சுருக்கம்: பதின்ம பருவத்து உணர்ச்சிவேகத்தில் தன் விருப்பமே பெரிதென நினைக்கும் ஒரு சராசரி பள்ளி மாணவன், தந்தையின் உழைப்பையும் அவமானத்தையும் நேரில் காணும்போது அடையும் முதிர்ச்சியையும், சுயமரியாதையை உணரும் தருணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இச்சிறுகதை.]


மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன.

அறையின் ஒரு ஓரத்தில், பழைய மர முக்காலியில் அமர்ந்து பித்தளைத் தம்பாளத்தில் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. அருவாமனையின் 'கீச் கீச்' சத்தமும், நறுக்கிய காய்கள் தண்ணீரில் விழும் 'சொப் சொப்' சத்தமும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன.

திடீரென வாசல் கதவு படாடீரெனத் திறந்தது. முதுகில் கனமான பள்ளிப் பையைத் தொங்கவிட்டபடி, முகம் முழுக்கக் கடுப்புடன் உள்ளே நுழைந்தான் 16 வயது மார்த்தாண்டம் (எ) மார்த்தா. சாக்ஸை உருவி வீசிவிட்டு, ஒரு பெருமூச்சோடு பாட்டியின் அருகில் பொத்தெனத் தரையில் உட்கார்ந்தான்.

"ஹப்பா... இந்த வீட்ல யாருக்குமே என் கஷ்டம் புரியல பாட்டி! உங்க பையன் ஏன் எனக்கு எப்போதுமே 'ஃபேவரா'வே இருக்க மாட்டேங்குறாரு?" என்று ஆத்திரத்துடன் புலம்பினான்.

மேலும் படிக்க ...

வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா

விவரங்கள்
- சந்திரசேகரன் -
நிகழ்ச்சி
31 ஆகஸ்ட் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் (Vel Tech Ranga Sanku Arts College) 24-வது பட்டமளிப்பு விழா. ஆகஸ்ட் 22, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள வேல் டாக்டர் ஆர்.ஆர் மற்றும் டாக்டர் எஸ்.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் அ.வீ.க. சாந்தி வரவேற்புரை ஆற்றியதுடன், கல்லூரியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இவ்விழாவிற்குக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான கர்னல். பேராசிரியர் வேல். டாக்டர் ஆர். ரங்கராஜன் மற்றும் நிறுவனத் தலைவி மற்றும் துணைத் தலைவரான டாக்டர் திருமதி சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர் . கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திருமதி. ரங்கராஜன் மகாலட்சுமி கிசோர் மற்றும் கல்லூரியின் அறங்காவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வி எஸ்கந்தா கே. வேல், ஆகியோர் பட்டமளிப்பு விழாவை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க ...

காரைக்கவியின் 'காவோலை' - மனித வாழ்வின் வலிகளையும் மண்ணின் மணத்தையும் பதிவு செய்யும் சிறுகதைகளின் தொகுப்பு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
நூல் அறிமுகம்
31 ஆகஸ்ட் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து இலக்கிய உலகில் கிராமிய வாழ்வியலையும் புலம்பெயர் அனுபவங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் இயல்பான மொழியில் பதிவு செய்து வரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன். அவரது காவோலை சிறுகதைத் தொகுப்பு, வெறும் கதைகளைச் சொல்லும் படைப்பாக மட்டுமன்றி, சமூக மாற்றங்களின் தாக்கத்தால் சிதைந்து வரும் உறவுகள், முதுமையின் தனிமை, புலம்பெயர்வின் உளவியல், மற்றும் தமிழரின் கிராமிய வாழ்க்கையின் நுணுக்கங்களை ஆழமாகப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் வாழ்க்கையின் உண்மையான அனுபவங்களிலிருந்து உருவானவை என்ற உணர்வை வாசகருக்கு அளிக்கின்றன. கற்பனையை விட எதார்த்தம் மேலோங்கி நிற்கும் இக்கதைகள், வாசகனைச் சிந்திக்கவும், சில நேரங்களில் மனதை கனக்கவும் செய்கின்றன.

முதுமை

மறக்கப்பட்ட மனிதர்களின் மௌனக் குரல் இந்தத் தொகுப்பின் மையக் கருக்களில் முதன்மையானது முதுமை வாழ்வு. குறிப்பாக தலைப்புக் கதையான "காவோலை" (கனகம்மாவின் வாழ்க்கை) முதுமையின் தனிமையையும், பிள்ளைகளுக்காக வாழ்ந்த ஒரு தாயின் இறுதிக்கால வேதனையையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்க ...

திருக்குறளின் அமைப்புருவாக்கப் பின்புலம்! - முனைவா். இரா.மூர்த்தி -

விவரங்கள்
- முனைவா். இரா.மூர்த்தி -
ஆய்வு
30 ஆகஸ்ட் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: - முனைவா். இரா.மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -20 -


முன்னுரை

மனிதன் ஒழுங்குபட வாழ்வதற்கு ஒழுக்கம், கல்வி, அறிவு, கலையுணா்வு ஆகியவை அவசியமானதாகிறது. சமுதாயத்தில் இயல்பாக வாழ்வதற்கு மனிதன் இந்நெறிமுறைகளை வகுத்துக் கொள்கிறான். இதில் தொடங்குதல், முடிவெடுத்தல், அமைப்புருவாக்கம் செய்தல், திரம்பட நடத்துதல் போன்றவை மனிதனின் நவீன செயற்திட்ட நடைமுறையாகும். இந்நடைமுறையில் தொடா்ந்து பயணிக்கப்படும்போது சிக்கல் ஏற்பட்டு இறுதியில் பெருவாழ்வு கிடைக்கிறது. அல்லது நவீன மாற்றத்தை எதிா்கொள்ள முற்படுகிறான். அத்தகைய அமைப்பாக்கத்தின் பின்புலத்தை வள்ளுவா் அறம், பொருள் இன்பம் என்னும் மூன்று அதிகாரத்திற்குள் வைத்து தெளிவுபடுத்தியிருப்பது சாலச்சிறந்தது. அதனை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

பின் அமைப்பின் தொடக்கம்

வள்ளுவா் வகுத்த சமூக அமைப்பாக்கத்தில் மனிதனுக்கான வாழ்க்கைப் பங்கு மரபுமைக்கு உட்பட்டதாகத் தென்படினும் நவீனத்துவத்தில் அதன் தேவையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்மாதிாியாக இருக்கிறது. அதையே பின் நவீனத்துவத்தில் அதன் பின்புலத்தன்மை எவ்வாறு இருக்கிறது என்று ஆராயப்படுகிறது. இதனை, வள்ளுவா்,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் - 423)

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மை தன்மை எது? என்பதை முடிவெடுத்து ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்கிறாா். நவீனத்துவத்தில் சமகாலத்தில் நாம் கையாளும் பல கலைச்சொற்களை மாற்றீடு செய்து அதன் உண்மைத் தன்மையை ஊா்சீதப்படுத்தி முடிவெடுப்பதை பின்அமைப்பியம் காட்டுகிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: எங்கு? - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
சிறுகதை
29 ஆகஸ்ட் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இருட்ட தொடங்கி விட்டது. டீ நகர் பஸ் ஸ்டான்டில், இறங்கி, மறைவாக, சற்று இருட்டில் ஓரமாய், நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி விசாரித்த போது, அது பாண்டி பஸார் செல்லாது என்று தெரிவித்தார்கள். பனகல் பார்க் வரை செல்லலாம். பெட்ரோல் பங்குடன் நீங்கள் இறங்கி நடக்கலாம் என்று அறிவுரையும் வழங்கினார்கள். மீண்டும் பஸ் ஸ்டேன்டை நோக்கி ஓடினேன். மூச்சு வாங்கியது. ஒரு பஸ் கிளம்பி சென்றது. இன்னுமொரு பஸ் நிறுத்தப்பட்டது. ட்ரைவரும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக இறங்கி கொண்டிருந்தனர். ‘உட்காரு’ என்று கூறிவிட்டு, எனது கேள்விக்கு பதிலளிக்காமல், எங்கேயோ சென்றனர். டீ குடிப்பதற்காக இருக்கும். மனிதர்களுக்கு களைப்புத்தான். பகல் முழுவதும் இந்த பயங்கர வெயிலில் ஓட்டியிருப்பார்கள். ஜன்னல் வழியாக, அமர்ந்தப்படி பார்வையை செலுத்தினேன். ஷேர் ஆட்டோ நிரம்பிக் கொண்டிருந்தது. சுற்றிவர ஒளிர்ந்து கொண்டிருந்த, நியான் விளக்குகள் இருளை பகலாக மாற்றிக் கொண்டிருந்தன. பாதை அங்கே நான்காக பிரிந்து கொண்டிருந்தது. சந்தி. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாய், நெருக்கி அடித்தபடி சென்றன. வேலை முடிந்து வருபவர்கள், கடைகளுக்கு சென்று வருபவர்கள் என பஸ் மெது மெதுவாக நிறைய தொடங்கியது. எனக்கு முன் சீட்டில், ஓர் பெண்ணும் பிள்ளைகளும். பக்கத்து சீட்டில், களைப்புடன் அமர்ந்திருக்கும், ஒரு கூலி வேலை செய்யும் பெண். மெலிந்த தோற்றம். பற்களில் காவி ஏறி இருந்தது. சேலையை ஏனோ தானோ என்று சுற்றி இருந்தாள். உஷ்ணத்தால் அவள் முகம் வியர்த்து, பிசு பிசுத்து, பளபளத்தது. எனது முகமும் அதே போன்று இருக்கக்கூடும். சற்று நேரத்தில், ஒரு சோளப் பொறி விற்பவன், நின்றிருந்தவர்களை தள்ளியபடி தண்ணீர் போத்தலுடன், கூவியபடி வந்தான். இவளும் தன் பையை திறந்து, ஒரு சிறிய போத்தலை வாங்கிக் கொண்டாள். தாகமாயிருக்கும். காலையில் இருந்து உழைத்த பணம் இப்படி பறிபோகிறதே - நான் வருத்தப்பட்டேன். இருந்தும் அவ்வளவு உஷ்ணம். இந்த மாலையிலும் இவ்வளவு. பகல் அடித்த வெயிலில், கிளம்பிய சூடு இன்னும் தணிந்த பாடில்லை. வியர்வையும் பிசுபிசுத்து, வழிகின்றது. மழை வந்தாலும் வரும் - அவ்வளவு புழுக்கம்.

இப்போது இவள் பக்கமாய், ஒரு இள நங்கை ஏறி அமர்ந்து கொண்டாள். இவளும், ஏழ்மையில் அடிபட்டவள்தான். மெலிந்த தோற்றம். ஒரு குழந்தை வேறு. குழந்தைக்கு மூன்று, நான்கு வயதிருக்கும். ஓர் இருபது வயதையே இவளுக்கு மதிப்பிடலாம். அல்லது பதின்வயதுக்காரி என்றாலும் பொருந்தக்கூடியதுதான். ஒரு சிறுமி எனலாம். அவ்வளவு சிறிய உடம்பு - கருத்தவள் - சின்னஞ்சிறு கூரிய முகம். இந்த இளவயதில் திருமணம் முடித்து, குழந்தையையும் பெற்றிருக்கின்றாள்?

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர் நாவல்: நகரத்து அணில்! (2) - வ.ந.கிரிதரன் -
  2. நோயல் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' - ஓர் இலக்கிய மதிப்பீடு ( ஆங்கிலம் - Melbourn Press Editor; தமிழில் - chatGPT)
  3. கவிதை: கி.பி. 3026 — குப்பையின் தொல்லியல்!   - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
  4. கம்பராமாயணத்தில் புது உத்தி(ருமை)! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  5. பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
  6. ஆஃப்டன் நதி (Afton water)! - ஆங்கிலம்: ஸ்காட்லாந்து கவிஞர் இராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns) |தமிழில் : ஜெ. கார்த்திக் -
  7. வாசிப்பும், யோசிப்பும் : தாமரைச்செல்வியின் 'சுமைகள்' - வ.ந.கிரிதரன் -
  8. வாசிப்பும் யோசிப்பும் - வ.ந.கிரிதரன் -
  9. தாமரைச்செல்வி எழுதிய "சுமைகள் " நாவல் ஒரு பார்வை! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து) -
  10. பாரதிதாசனின் புலப்பாட்டு நெறி! - முனைவா் பா.பொன்னி -
  11. (கனடா அரசியல்) பிரதமர் அலுவலக ஊடகத் தொடர்பு (PMO Media Relations) - கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை பிரதமர் கார்னி அறிவித்தார் - தமிழில் - செயற்கை நுண்ணறிவு-
  12. கனடாவில் 30 நிமிடத்தில் 3 நூல்கள் வெளியிட்டுச் சாதனை! - சுலோச்சனா அருண் -
  13. கவிதை: அழையா விருந்தாளி!  - முல்லை அமுதன் - 
  14. கே.டானியல் நூற்றாண்டு விழா! - தகவல்: வி.ரி.இளங்கோவன் -
பக்கம் 3 / 135
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி