கனடாவில் 'மாவீரர் தினம்' - குரு அரவிந்தன் -
விடுதலைப்புலிகளின் மாவீரருக்கான அகவணக்க நிகழ்ச்சி கனடாவில் பல இடங்களிலும் சென்ற வாரம் இடம் பெற்றது. குறிப்பாக ‘மார்க்கம் பெயகிறவுண்ட்ஸ்’ திடலில் திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலைவரை ‘தமிழர் நினைவெவெழுச்சி நாள்’ . தமிழர்கள் பலர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினர் பலர் மிக ஆர்வத்தோடு இந்த நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொண்டது, எமது வரலாற்றை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து இளந்தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களுக்கு நடனமாடியதையும், அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடிச் சபையோரைக் கண்கலங்க வைத்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் சுயநலம் கருதாத இந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும், நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற மாவீரருக்கான அகவணக்க நிகழ்வு ஒன்றிக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். மாவீரருக்கான ஒரு பாடல் வெளியிடுவதாகவும், அந்தப்பாடலைக் கேட்டு அதைப் பற்றியும் எனது மதிப்புரையை வழங்கும்படியும் கேட்டிருந்தனர். எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன்.