சிலுவை : சுப்ரபாரதிமணியன் நாவல் அறிமுகம் - சி. ஆர். ரவீந்திரன் -
300 ஆண்டுகால கொங்கு பகுதியின் சரித்திரமாகவும் நாவல் அனுபவமாகவும் இந்த நாவல் விளங்குகிறது. நெசவுத்தொழிலின் ஒரு குறியீட்டுக்களமாக அமைந்த சுப்ரபாரதிமணியன் புதிய நாவல் சிலுவை .
மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு , உடை, உறைவிடம் . இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாத படி இருக்கிறது. அதுதான் சமுதாயம் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. .உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள் .அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியை புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.
இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு இந்த நாவலில் கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாரதிமணியன் வடிவமைத்திருக்கிறார். அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்.