Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.



இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை எனது எட்டு வயது பேரனுக்கு உடனே சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய விடயத்தை சியாமளாவிடம் மறைத்தேன். ஐஸ்லாந்தில் எப்பொழுதும் எரிமலை பொங்கும் என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே சிறிய அளவில் எரிமலைகள் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.
அதைச் சொல்லி என்ன பயன்?
இதேபோல் எகிப்திற்கு நாங்கள் செல்லும் காலங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தன. நல்ல வேளையாக இரண்டு தேர்தல்களின் இடையில் எங்கள் பயணம் இருந்தது. அங்கு பயங்கரவாதம் இங்கு எரிமலை – இது சின்ன விடயம் அல்ல. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு (Öræfajökull) எரிமலை பொங்கியபோது விமானப் போக்குவரத்து முற்றாக பல கிழமைகள் தடைப்பட்டிருந்தன.
ஐஸ்லாந்து நாட்டின் கால்பகுதி எரிமலையாலானது - 130 மேலாக பொங்கும் எரிமலைகள் உள்ளன. விடிந்தும் விடியாத காலை நேரத்தில் ரீச்சவிக் விமான நிலையத்தில் இறங்கியதும், ஒரு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கார் சாரதி என்னை தனது காரில் ஏற்றினார்.

கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன்.
ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால் இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது தனுஷின் உடல் மொழியிலே வெளிப்படுகிறது.உடல் மொழி மூலம் நடிப்பது அவருக்கு கைவந்த கலை. சிவாஜி கணேசனின் உடல் மொழி நாடகத்துக்கானது; தனுஷின் உடல் மொழி சினிமாவுக்கானது.இதிலுள்ள ஒருமுக்கியமான யதார்த்தம் — தமிழ் நாட்டின் கிராமங்களில் பகை ஏற்பட்டால் வீடுகள் எரிப்பதுபோல, மாடு கன்றுகளை கொல்ல முயல்வதும் நிகழ்கிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தனுஷை தாக்க வரும்போது மாட்டுக்கன்றை கொலை செய்ய முயன்ற காட்சி, அந்தக் கிராமிய நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.கிராமத்தில் யாராவது இறந்ததும், அதே சமயத்தில் குழந்தை பிறந்தாலும் அல்லது மாடு, ஆடு கன்று போட்டாலும்,“இறந்தவர் திரும்பி வந்து விட்டார்” என்று நம்புவார்கள். இதே நம்பிக்கை இங்கு கன்றின் வழியாகப் படிமமாகிறது.இந்த நம்பிக்கையை நான் என் "பண்ணையில் ஒரு மிருகம்: நாவலில் “நீலன்” என்ற காளைக் கன்றாகப் பயன்படுத்தியிருந்தேன்.
நான் தமிழ்நாட்டு கிராமத்தில் சிலகாலம் வாழ்ந்தவன் மட்டும் அல்ல, அந்த கிராமத்தின் கதையை நாவலாக்கி தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றவன்.மகனாக, தந்தையின் கனவுகளில் வாழ மறுத்தாலும், தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் பல — கிராமத்து பஞ்சாயத்து நிகழ்வும், கடையில் எழுதிய“அகிம்சை” என்ற வசனமும் முக்கியமானவை.

மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.
வகுப்பறையில் இன்னுமொரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. சணண்முகசுந்தரம் மாஸ்டர்தான் எங்களுக்கு அரசறிவியல் பாடம் கற்பிக்க வந்தார். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யச் சொன்னார். ஒவ்வொருவரும் அவரது மேசைக்கு அருகே சென்று சகமாணவர்களைப் பார்த்து எங்களை அறிமுகம் செய்ய வேண்டும். முக்கியமாக எங்கள் பெயர், தந்தையின் பெயர், எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். நான் எனது பெயரையும் தந்தையின் பெயரையும், ஊரையும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
‘நின்று கொள்’ என்றார். என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘குருநாதபிள்ளை மாஸ்டரின் மகனா?’ என்று கேட்டார். ‘ஓம்’ என்று பதில் சொன்னேன்.
‘நான் நடேஸ்வராக்கல்லூரியில் அவரிட்டைப் படிச்சு நல்ல பெயர் எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதேபோல என்னட்டை படிக்கிற நீயும் நல்ல பெயர் வாங்கி அவரது பெயரைக் காப்பாற்ற வேண்டும், தெரியுதா?’ என்றார்.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
அறிமுகம்
ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.
திருப்புகழிலா முதல் பதிவு?
குகதொன்மைப் பதியாகிய ‘கதிர்காமம்’ எனும் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பலவிதமாக எழுதி வைத்துள்ளனர். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், “கதிர்காமம் என்ற தலப்பெயர் அருணகிரிநாதர் திருப்புகழிலேயே முதன்முதலில் இடம்பெறுகிறது” (2013:75) என்கிறார்.
வடமொழிக் கந்தபுராணத்து வீரமாமகேந்திர காண்டம், பதினெண் புராணங்களில் ஒன்றாகிய காந்தமகா புராணத்தில் வரும் தட்சிணகைலாச மான்மியம் முதலானவை இவ்விடயத்தில் முதலில் நமது கவனத்திற்குரியவை. அவற்றிற் பலவும் பேராசிரியர் குறித்த கருத்தைக் கூறும் காலத்துக்கு முன்னரேயே தமிழில் வெளியாகியவை.

ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant பற்றி (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) பிரசுரமான ஆய்வுக் கட்டுரையின் ('The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan') என்னும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்பைச் செய்திருப்பது செயற்கைத் தொழில் நுட்பமான கூகுள் நனோ பனானா (Google Nano Banana). மொழிபெயர்ப்பை இரண்டு நிமிடங்களுக்குள் அது செய்தது.
சுருக்கம்
வாழ்க்கையில் எந்தவொரு பயணமும் உலகெங்கிலும் உள்ள மனிதப் பயணிகளால் ஆனந்தமாகத் தேடப்படுகிறது. இருப்பினும், சில இனக்குழுக்களின் சில புலம்பெயர்வுகள், ஒரு விரும்பத்தகாத இயக்கத்தைத் தவிர, சில சமயங்களில் ஆபத்தான இயக்கங்களைத் தவிர, வேறு வழியில்லை. வசதியான இருப்புடன் எந்தவொரு மனிதனுக்கும் வாழ்க்கையும் பயணமும் கைகோர்த்து இனிமையாக செல்கின்றன. தாயகத்தில் வாழ்க்கை நிச்சயமற்றதாகி, ஒரு அன்னிய தேசத்திற்குள் நுழையும்போது மட்டுமே நெருக்கடி ஏற்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் அத்தகைய இனக்குழுக்களில் ஒருவர். தங்கள் நிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையால் இருத்தலியல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இலங்கையில் ஒரு தமிழ் குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதராகப் பிறந்தார். அவர் ஒரு எழுத்தாளராகவும், கட்டிடக்கலை பட்டதாரியாகவும், நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது மிகுந்த உணர்திறனுடன் வளர்ந்தார். இருப்பினும், அவரது நிலைமை அப்படியே இருக்கவில்லை, ஏனெனில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான இன மோதலின் குழப்பங்களும் கொடுமைகளும் இருந்தன. பிழைப்பதற்கான ஒரே வழி, கனத்த இதயத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறி, ஒரு புகலிடத்தை நோக்கிச் செல்வதுதான். இந்த பயணம் எந்தவொரு மனிதனின் வாழ்விலும் மிகவும் பரிதாபகரமான ஒன்றாகும். அவரது துன்பங்கள் 'குடிவரவாளன்' நாவலில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன, இதில் இளங்கோ என்ற கதாநாயகன் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் பிரதிபலிப்பாகவே வாழ்கிறார்.
இந்த ஆய்வுக் கட்டுரை 'குடிவரவாளன்' நாவலின் கதாநாயகனின் இருத்தலியல் இக்கட்டை ஆராய முற்படுகிறது, அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் உலகெங்கிலும் உள்ள அத்தகைய குடியேறிகளின் உடல், உளவியல், பன்முக கலாச்சார, இன, அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன.
முக்கிய சொற்கள்: கனேடிய-தமிழ் எழுத்தாளர், வ.ந. கிரிதரன், கட்டாய இடப்பெயர்வு, புலம்பெயர்வு, தமிழ் இனம், அகதிகள், விருப்பமில்லாத குடியேறி, அடையாள நெருக்கடி, அரசியல் புகலிடம்.

- அமில்கார் கப்ரால் (Amilcar Cabral)
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?
அதிகாரம் மையப்படுத்தப்படுவது முக்கிய காரணங்களிலொன்று. ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அமைப்புகள், காலப்போக்கில் வளர்ச்சியடையும் போது , அவற்றின் அதிகாரம் அமைப்பின் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரின் கைகளிலேயே தங்கும் நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக மக்களின் அபிலாசைகள் கட்சியின் நலன்களுக்காகப் புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்பட வேண்டிய போராளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளாக மாறி விடுகின்றனர். இது அமைப்புகளின் ஆரம்ப நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் நிலை. இவ்வாறு அமைப்புகளின் அதிகார வேட்கை காரணமாக மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகும் நிலை உருவாகின்றது.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்
நான்:
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல்
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு!
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல்
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும்
எல்லையென்று ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப்
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?
கண்ணம்மா:
கண்ணா! ஒளியெல்லை தாண்டிச் செல்வது பற்றிக்
கூறினாய்.
ஒளி எல்லை தாண்டுமொரு வழி உண்டு தெரியுமா கண்ணா?
நான்:
ஒளியெல்லை தாண்டும் வழியுண்டா கண்ணம்மா?
களிப்பில் மூழ்குமென் நெஞ்சிற்கு உன் பதில்
காரணமாக இருக்கட்டுமடி கண்ணம்மா!
கூறு கண்ணம்மா!

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
இன்று, காசாவின் இருளில்
ஒளி ஒரு பிரார்த்தனை போலே சுழன்றது—
இல்லை, அது வெறும் சூரியன் அல்ல,
ஒரு மூச்சு…
தெய்வீக மென்மை கொண்ட ஒரு மீள்பிறப்பு.
நான் என் உள்ளத்தில் மண் களிமணியை
உணர்ந்தேன்—
அங்கே, குழந்தை ஓர் இறுக்கப்பட்ட ஓசை போல
மௌனத்தைக் கிழிக்க முயன்றது.
இறுதி வெற்றி: LA Dodgers - 5 Toronto Blue Jays 4

இன்று , நவம்பர் 1, 2025, மாலை எட்டு மணிக்கு பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).
இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.
பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ் & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball என்றழைக்கப்படுகின்றது.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
50 வருசத்திற்கு முந்தின கதையிது.மத்தியான வெயில் கொளுத்தி எரிக்கும்.மேனி பிசுபிசுக்கும்.சைக்கிளில் சென்று அலுவல்களை முடித்து வீடு திரும்புவதற்கிடையில் காற்றும் வீசவில்லையென்றால் ஒரே எரிச்சலாயிருக்கும். அப்படியிருந்தும்,ஊருக்குள்ளால யாழ்தேவி கிழிச்சிக்கொண்டு போற வேகத்தில யாழ்.இந்து மகளிர் கல்லூரிக்குப் பக்கத்தில இருக்கிற ரெயில்வே கேற்றோட நிற்கின்ற அரசமர இலைகளும் பறக்கும்,அந்தக்காத்து வந்து முகத்திலயும் அடிக்கும்.அப்போதுதான் இலேசா உடம்புக்குச் சுகமாயிருக்கும்.காற்றில் பறந்த மாசுபடாத புழுதியின் வாசமும் எம்மை ஒருகணம் வசப்படுத்திவிடும்.புகையிரத நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர்க்கடைகளுக்கு முன்னால் நிற்கின்ற பெரிசுகளிடம் கிடுகு வண்டில்காரர் வந்து,
"ரயில் கடவையைக் கடந்து யாழ்தேவி போயிற்றுதே?"என்று கேட்டு நேரத்தைக் குறிச்ச காலமது.யாழ்தேவியில் வருபவர்க்கென்றே ஒவ்வொரு கதையிருந்தது.

கட்டளைக் கலித்துறை
எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மொத்த எழுத்தெண்ணிக்கை 68. நிரையசையில் தொடங்குவதால் ஒவ்வொரு அடியிலும் ஒற்று நீங்கலாக 17 எழுத்துக்கள்.
அவனிவாழ் அவரும் இவரும்..
அவரா இவராய்? அவருமா இப்படி? என்றிடுவோர்
அவரும் இவரொடு வையகம் வாழ்பவர் என்றுணரார்வ்
அவரை அவராய் அறிந்து புரிந்தவர் நல்லுறவோர்
அவரை அறியாது அல்லவை கூறுவோர் புல்லராமே.

கேள்வி: வணக்கம் குரு அரவிந்தன் அவர்களே, கனடாவில் இம்மாதம் தமிழ் இலக்கிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது பெறும் உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாமா?
பதில்: வணக்கம், வாழும்போதே ஒருவரின் சிறந்த சேவைக்காகக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கனடாவில் கடந்த 32 வருடங்களாக இலக்கியச் சேவையாற்றிவரும் எழுத்தாளர் இணையத்தினர் கனடாவின் உயர் விருதாக இதை அறிவித்திருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிமுகம் என்றால் இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசந்துறையில் உள்ள மாவிட்டபுரம் எனது தந்தை அருனாசலம் குருநாதபிள்ளையின் ஊராகும். தாயார் இலக்சுமி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபை 2 ஆம் வட்டார பிரதிநிதியாகவும், பட்டினசபை முதல்வராகவும் பணியாற்றியவர். எனது கடந்தகால வாழ்விடங்கள் காங்கேசந்துறை, கொழும்பு, ரொறன்ரோ என்று சொல்லலாம்.
இலங்கையில் நடேஸ்வரக்கல்லூரி, மகாஜனக்கல்லூரி, பட்டயக்கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றினேன். போரச்சூழல் காரணமாக கனடா நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இங்கும் கணக்காளராகவும், பகுதிநேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச்சபையிலும் பணியாற்றுகின்றேன். எழுத்தாளரான மனைவி மாலினி அரவிந்தனும் கணக்காளராகவும், ஆசிரியராகவும் இங்கு பணியாற்றினார். இலங்கை வங்கியின் அதியுயர் முகாமையாளராக பணியாற்றிய திரு.கு. சிவகணநாதன் எனது மூத்த சகோதரர், மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி எனது மூத்த சகோதரியின் கணவர்,

கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே. இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை.
இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.

3.
.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..
பூவரசம்பூக்களின் நிறத்தை ரசிப்பது போலிருக்கும்.
கிணற்றடி வாழைக்குத் தண்ணீர் போகட்டும் என்று மண்வெட்டியால் மண்ணைவெட்டி திருப்பிவிடுவார்.வீதியால் போகும் இளசுகள் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
அறை ஜன்னலால் பார்க்கையில் அவரிடம் ஒரு வெட்கம் அதன் நிமித்தம் ஒரு நாகரீகம்,,,இங்கிதம்...உணரமுடிந்தது.மனிசனாக அவரை யாவரும் மதித்தாலே போதும்.துளசி இல்லையென்றானபின் வேறொரு மாலாவோ,சங்கரியோ கிடைக்கலாம்.ஒருத்திக்கு கணவன்..நாலு பேருக்கு ஒரு மனுசன்..மாமாவை விசரன்,,பைத்தியம் என்று சொல்லிவிடக்கூடாது...ஆனாலும் காரியக்காரன் என்று சொல்லிக்கொள்ளலாம்.அந்த நிகழ்விற்குப்பிறகு மாதம் ஒருக்கா சலூனுக்குப் போவார்..அடிக்கடி சேவ் பண்ணுவார். பெட்டியில் இருக்கும் சாரங்களை மாறி மாறி கட்டுவார். கிழிஞ்சதைக் கட்டியதை காணமுடியவில்லை.கள்ளன்..காமத்தை ஒழிச்சுவைச்சுக் கொண்டு...நான் மட்டும் என்னவாம்?....பயமும் கூடவே எழுந்தது... மாமா உளறிவிட்டால்..?
நினைவு அறுபட்டது..
மாலை ஆறுமணிக்கே தயாரானாள் சுகந்தி.அன்று ஞாயிற்றுக்கிழமை கடையில் கூட்டமில்லை.ஆதலினால் நேரத்திற்கே கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குப் போனார்கள்.


அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான 'நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?' என்னும் கட்டுரையினை வாசித்தேன். இது ஓர் அரசியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. மேலோட்டமான சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்தி எழுத்து. இதில் இலங்கை ஒப்பந்தம் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றார். இருந்தாலும் நாம் ஏன் தோற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்பதற்குரிய முக்கிய காரணங்களை இக்கட்டுரையில் காணவில்லை.
இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது?
முக்கிய காரணங்கள்:
1. சக அமைப்புகளுக்கிடையிலான மோதலக்ள்.
2. இயக்கங்களுக்கிடையில் நிகழ்ந்த உட்பகையும், மோதல்களும்.
3. அமைதிப்படையாக நுழைந்தபோது வரவேற்ற இந்தியப் படையினருடனான மோதல்கள். மோதல்களுக்கான அடிப்படைக்காரணங்கள் எவையாகவிருந்திருந்தாலும், அவை கண்டறியப்பட்டு , முளையிலெயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் அம்மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்றுவரை மாகாணசபை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.
4. ஜனதிபதி பிரேமதாசவுடன் இணைந்து, 'நாங்கள் அண்ணன் தம்பிகள். அன்னியருக்கு இங்கென்ன வேலை? எம் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்' என்று இயங்கியமை.
5. தேர்தலில் மீண்டும் இந்தியப்பிரதமராக ராஜிவ் காந்திவரவிருந்த நிலையில், இந்திய மக்களின் அமோக அவர் மீதான ஆதரவு உச்சத்திலிருந்த சமயத்தில் அவரைப் படுகொலை செய்தமை. இதற்குக் காரணங்கள் அக்கால உபகண்டச் சூழல், சர்வதேச சூழல், இவற்றின் விளைவாக சர்வதேச , உபகண்ட அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விடுதலைப்புலிகளைப் பாவித்ததானால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் புலிகளும் தம் நலன்களுக்காக இதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ? ராஜிவ் படுகொலை என்பது 2009இல் விடுதலைப்புலிகளை யுத்தத்தில் இலங்கை அரசு வெல்வதற்குரிய முக்கிய காரணமாக அமைந்து விட்டதை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்திய அரசின் இலங்கைத் தமிழர் மீதான அணுகுமுறை மாறியது. இந்தியாவின் கடற்படை புலிகளுக்கு வந்திறங்கும் ஆயுதக்கப்பல்களை இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் உதவியாகவிருந்தது.
Join Zoom Meeting: | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ.
தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.
கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு.
0
” அடுச்சாச்சா.. அடிக்கனுமா ”
”என்ன “
” கட்டிங் அடிச்சாச்சா . அடிக்கனுமா “
சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை உலுக்கி விட்டக் கேள்விதான்.

1. பாட்டும் நானே பாவமும் நானே
கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
ஒரு புருவம் மட்டும்ஏறியிறங்கியவாறிருக்க
அவ்வப்போது தலை யொரு ‘லெஃப்ட் ரைட் – லெஃப்ட் ரைட்
தாளகதிக்கதிக்கேற்ப இப்புறமும் அப்புறமும் திரும்பி
அரங்குளோரை விழிகள் துருவியவாறிருக்க
அழுந்த மூடிய உள்ளங்கைகள் இறுகிப் புடைத்திருக்க
அதியாபத்து அருகேகிக்கொண்டிருப்பதான பாவந்தாங்கிய
குரல் விட்டுவிட்டு சுதி உயர்ந்தும் தாழ்ந்துமோர் அபூர்வ தொனியில்
அதிரூபசுந்தரமென்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
அபத்தமென்று சொல்ல
அவருக்குத்தான் வாய் வருமா இவருக்குத்தான் மனசு வருமா
அல்லது எவருக்கும்தான் தைரியம் வருமா?
அட அப்படியே துணிச்சலாகச் சொல்பவரைப் பாராட்டலாமென்றால்
அவரோ முன்னவர் செய்ததையே வேறொரு வழியில்
ஆலாபித்துக்கொண்டிருக்கிறார்.
முடிவுறாக் கச்சேரி நடக்கும் அரங்கம் சில நேரம் நிரம்பியும்
சில நேரம் வெறுமையாகவும்.
அவ்வப்போது பாடகர்களும் பக்கவாத்தியக்காரர்களும்
ரசிகர்களும் மாறியவாறு.