பிரதிலிபியின் அடுத்த போட்டி - கவிதைத் திருவிழா

Monday, 18 September 2017 15:29 - திலீபன். ப - நிகழ்வுகள்
Print

பிரதிலிபியின் அடுத்த போட்டி - கவிதைத் திருவிழா

வணக்கம்,  தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம். ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம். கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம். போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும். மொத்தம் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மூன்றும் எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “கவிதைத் திருவிழா” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும். படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும். சொற்கோப்பில்(MS WORD-இல்) ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode font) மட்டுமே படைப்புகளை அனுப்பவும். படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.

படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் - செப்டம்பர் 26, 2017. படைப்புகள் செப்டம்பர் 30 முதல் வாசகர் பார்வைக்கு இருக்கும். போட்டி முடிவுகளின் தேதியும் அன்றே அறிவிக்கப்படும். படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899
போட்டி தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த சுட்டியில் இடம்பெறும் -
http://tamil.pratilipi.com/eve nt/kavidhai-thiruvizha

நன்றி.

திலீபன். ப (9206706899)
Pratilipi (Tamil) < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

 

Last Updated on Monday, 18 September 2017 15:34