பிரதிலிபியின் அடுத்த போட்டி - ஊர் சுற்றிப் புராணம்

Wednesday, 13 December 2017 18:42 - திலீபன். ப - நிகழ்வுகள்
Print

பிரதிலிபியின் அடுத்த போட்டி - ஊர் சுற்றிப் புராணம்பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை - அனுபவங்களை எழுத வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.

போட்டிக்கு கட்டுரைகள் மட்டுமே அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு - 1000, இரண்டாவது பரிசு - 500). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு - 1000, இரண்டாவது பரிசு - 500)

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஊர் சுற்றிப் புராணம்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

சொற்கோப்பில் (MS WORD-இல்) ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode font) மட்டுமே படைப்புகளை அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய (http://www.google.co.in/inputtools/windows/ எனும்) உள்ளீட்டுக் கருவி இணைப்பில் சென்று கூகுள் ஒலி பெயர்ப்பை (google transliteration-ஐ) உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலே தமிழில் காண்பிக்கும் (எ.கா ‘kavithai’ என தட்டச்சிட்டால் கவிதை எனக் கீழே காண்பிக்கும்). அல்லது இலதா போன்ற எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.

படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 27, 2017.

படைப்புகள் டிசம்பர் 31 ஆம் தேதி வாசகர் பார்வைக்கு வைக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் அன்றே தெரிவிக்கப்படும்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899.

போட்டி தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த சுட்டியில் இடம்பெறும் - http://tamil.pratilipi.com/event/oor-sutripuranam

நன்றி.

- நட்புடன்

திலீபன். ப (9206706899)

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 13 December 2017 18:46