அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கவிதா மண்டலம்

Wednesday, 28 March 2018 07:58 - முருகபூபதி - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

அன்புள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வணக்கம். எமது சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்  08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை  6.00 மணி வரையில் கவிதா மண்டலம் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளோம். நடைபெறும் இடம் கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre   Library Meeting Room - 9-15, Cooke Street ,  Clayton, Victoria - 3168 ) . சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள்,  தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  தங்கள் கவிதையை 5 முதல் 7  நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம். தங்கள் வருகையை தாமதமின்றி உறுதிப்படுத்தவும். நன்றி. அன்புடன்
சங்கர சுப்பிரமணியன்
(தலைவர்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
தொடர்புகளுக்கு:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it     | தொலைபேசி: 0423 206 025

maniansankara@ gmail.com

Last Updated on Wednesday, 28 March 2018 07:59