கனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்!

Tuesday, 16 July 2019 08:41 -தகவல்: யாழ் இந்துக் கனடாச் சங்கம் - நிகழ்வுகள்
Print

கனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்!

அழைப்பிதழ்: வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா - படைப்புகள் வெளியீடு (27.07.2019)

வணக்கம்,  1940 முதல் 1966 வரையாக கால்நூற்றாண்டுக்காலம் தமிழ் சார்ந்த தனது எழுத்துக்களாலும், சொற்பொழிவுகள், குழந்தைப் பாடல்கள் போன்ற செயற்பாடுகளாலும், உரையாசிரியர், பத்திரையாசிரியர், இலங்கை அரசாங்கத்தின் புத்தக வெளியீட்டுச் சபையின் தமிழ்ப்பகுதி உறுப்பினர் என்கிற பல்வேறு பரிமாணங்களாலும் அரும்பணியாற்றிய வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைநிகழ்வுகளும் வேந்தனார் படைப்புகள் வெளியீடும் எதிர்வரும் ஜூலை 27, 2019 அன்று மாலை 5 மணிக்கு Middlefield and McNicoll சந்திப்பிற்கு அருகாமையில் உள்ள ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வேந்தனார் எழுதிய குழந்தைப் பாடல்கள் நூல்கள் மூன்றும், இசையமைக்கப்பட்ட குழந்தைப் பாடல்களின் இசைத்தட்டும், மாணவர் தமிழ் விருந்து, தமிழ் இலக்கியச் சோலை ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும், வேந்தனார் நூற்றாண்டு மலரான செந்தமிழ் வேந்தன் என்கிற தொகுப்பு நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடாவின் கலை மரபுரிமைக் கழகமும் பங்கேற்கின்றது.  தாங்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு ஆர்வமுடைய உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இந்நிகழ்வு குறித்து அறியத்தரும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.

வித்துவான் க. வேந்தனார் பற்றி அறிய:

1. நூலகம் இணையத்தளத்தின் ஆளுமைகள் பக்கம்
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88

2. விக்கிபீடியா
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D


3. நூலகம் தளத்தில் வேந்தனாரின் புத்தகங்களுக்கான இணைப்பு
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%95.

4. ஆவணகத்தின் க. வேந்தனார் சேகரம்
http://aavanaham.org/islandora/object/noolaham%3Aventhanar

5.  பதிவுகள் தளத்தில் வெளியான வேந்தனார் பற்றிய கட்டுரை
http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4756:2018-10-29-13-02-49&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

நிகழ்வு பற்றிய தொடர்புகளுக்கு
வேந்தனார் இளஞ்சேய் +44(0)7755558019

வேந்தனார் நூற்றாண்டு விழாக்குழு - கனடா

கஜன் ஆறுமுகம்         416 568 9197
அருண்மொழிவர்மன்  416 854 6768

Secretary kvaratha - JHCA Canada < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

Last Updated on Tuesday, 16 July 2019 08:49