பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

Thursday, 06 February 2020 10:44 - பனிப்பூக்கள் - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள் / அறிவித்தல்கள்

பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.

மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.

போட்டிக்கான விதிமுறைகள்

சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

கதைகள் 1500 முதல் 2௦௦௦ சொற்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.    உங்களது படைப்புகள் இதுவரை வேறெந்தப் பத்திரிக்கை / சஞ்சிகைகளில் (இணையத்தளம், அச்சிதழ், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள்) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு அடையாளமாகவும், படைப்பின் அசல்தன்மையை உறுதி செய்தும் இணைப்பில் காணப்படும் ஆவணத்தை நிரப்பி படைப்புடன் சமர்ப்பிக்கவும்.  படைப்பாளரின்  இயற்பெயர் (Real name), அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். கானம்பாடி பதிப்பகம் நியமிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.  தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் பனிப்பூக்கள் சஞ்சிகை அல்லது / மற்றும் கானம்பாடி பதிப்பத்தார் (Loon Media Group LLC) மூலம் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் காப்புரிமை கானம்பாடி பதிப்பகத்தைச் சேர்ந்தது.
கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளப்படமாட்டாது.  சிறுகதைப் போட்டிக்குத் தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச் 15, 2020.  வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் இரண்டாம் வாரம் அறிவிக்கப்படும்.

கதை குறித்த நிபந்தனைகள்:

கதைகள் தமிழர் வாழ்வியலைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உண்மைச் சம்பவங்களை அப்படியே சித்தரிப்பதைத் தவிர்க்கவும். கதைகள் குடும்பம், மர்மம், நகைச்சுவை, காதல் என்று எந்தப் பகுப்பைச் சார்ந்தும் இருக்கலாம்.

பரிசு விவரம்:
முதற்பரிசு: $150
இரண்டாம் பரிசு: $100
மூன்றாம் பரிசு : $75

மேலும் இதர பரிசுகளும் உண்டு

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 13 February 2020 12:42