தமிழ் படைப்பாளிகளுக்கு வணக்கம்!

சிறுகதைப் போட்டி 2021

2020 ஆம் ஆண்டில், மனித குலம் பலவிதமான சவால்களைச் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வீடுகள் பள்ளிகளாக, அலுவலகங்களாக, மருத்துவமனைகளாக, திரையரங்குகளாக மாறியிருந்தன. அது வரையில் ஒவ்வொருவரும் ஓடி வந்த பரபரப்பான ஓட்டங்கள் தடைபட்டு மக்கள் இளைப்பாற, தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய அவகாசம் கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

குறிப்பாக வாசிக்கும் வழக்கம் அதிகரித்து, வீடுகள் இணைய நூலகமாக மாறியதையும எங்களால் உணர முடிந்தது. பனிப்பூக்கள் வாசகர் சுற்றம் அதிகரித்திருப்பதைக் கண்கூடாகக் கண்டோம். இந்த வாசிப்பு உந்துதலை, தொடர்ந்து முன்னெடுத்துப்  போகும் வகையில் மேலும் பல புதிய படைப்புகளை ஊக்குவித்து, உங்களுக்கு விருந்தளிக்க வேண்டுமெனும் நோக்கத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான எமது சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம்.

Panippookkal Tamil Cultural Magazine <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>