நெல்லை க.பேரன் குடும்பத்தினர்எழுத்தாளர் நெல்லை க.பேரனின் நினைவு தினம் ஜூலை 15. 1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 அன்று இராணுவம் வீசிய ஏவுகணைக்களிலொன்று இவரது வீட்டின்மேல் விழுந்ததில் இவரது குடும்பத்தினர் அனைவருடன் இவரும் கொல்லப்பட்டார். அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும், 'நூலகம்' தளத்திலுள்ள 'வளைவுகளும், கோடுகளும்' நாவலுக்கான இணைய இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து (https://ta.wikipedia.org/s/i8f) ...

நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 - ஜூலை 15, 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.

1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது

இவரது நூல்கள்

ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறான் (சிறுகதைகள், 1975)
விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்)
வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978)
சத்தியங்கள் (சிறுகதைகள், 1987)
பேரனின் கவிதைகள்
சந்திப்பு (நேர்காணல்கள், 1986)

நெல்லை க.பேரனின் நாவல் 'வளைவுகளும், நேர்கோடுகளும்'. வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல். இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/183/18300/18300.pdf

நெல்லை க.பேரனின் நாவல் 'வளைவுகளும், நேர்கோடுகளும்'. வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்.


முகநூல் நினைவுகள்

Jeya Sunda (திருமலை சுந்தா) : எனது சிறுகதை தொகுதியான 'வேள்வி' சிரித்திரன் பிரசுரமாக வெளிவர உதவியவர்.

Thiruchelvan Selvadurai : "மாற்றாத காசோலை " நினைவில் நிற்கிறது.

Pena Manoharan:  எழுபதுகளில் வீரகேசரியிலும் பிறவற்றிலும் நிறையச் சிறுகதைகள் வாசித்த ஞாபகம்.

Shadagopan Ramiah:  நான் வாசித்தது ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்....

Rajendram Thedchanamoorthy:  எனது உறவினர் , ஒத்த வயது , சக மாணவர். பாரிய இழப்பு. புரட்சிகர வணக்கங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.