யாதும் ஊரே !யாவரும் கேளிர்!

Monday, 18 May 2020 08:07 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

முள்ளிவாய்க்கால் நினைவாக...

முள்ளிவாய்க்காலின் துயரம்

மடிந்தவர்தம் துயரம்

மட்டுமன்று. இம்

மண்ணின் துயரம்!

மணிபல்லவத்தின் துயரம்.

மாநிலத்தின் துயரம்.

மானுடரின் துயரம்.

முள்வேலி மானுடர்தம்

முள் வேலிகள் நீங்கிட

தமையீந்த மானுடர்தம்

தியாகம் போற்றுவோம்.அவர்

தமை மனத்தில் இருத்துவோம்.

முள்ளிவாய்க்கால் முடிவிங்கு

முடிந்ததென மறையட்டும்.

மீண்டுமிங்கு முகிழ்க்க வேண்டாம்!

மானுடரே! மாநிலத்தீரே!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

Last Updated on Monday, 18 May 2020 08:14