அஞ்சலி சஞ்சிகை - வத்தளைஇலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அஞ்சலி' சஞ்சிகையும் , அது வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களும் (மலையக, வடக்கு & கிழக்கு)!

'அஞ்சலி' என்னும் சிற்றிதழ் எழுபதுகளின் ஆரம்பத்தில் வத்தளையிலிருந்து வெளியாகியுள்ளது. ஏ.எம்.செல்வராசா இதன் நிர்வாக ஆசிரியர். காரியாலய முகவரி: முகவரி: 198 நீர்கொழும்பு வீதி, வத்தளை. இச்சஞ்சிகையின் பத்து இதழ்கள் 1971- 1972 வரை, எண்ணிம நூலகமான 'நூலகம்' இணையத்தளத்திலுள்ளன. கண்ணைக்கவரும் அட்டைப்பட ஓவியங்களுடன் வெளிவந்த அஞ்சலி இதழ்களில் வட கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் பல்வகைப்படைப்புகளையும் காணமுடிகின்றது. ஓவியர் வீகேயின் (வி.கனகலிங்கம்) கைவண்ணம் இதழ்களெங்கும் பரவிக்கிடக்கின்றது. கஸ்தூரி, சந்ரா போன்றோரின் ஓவியங்களையும் காண முடிகின்றது.

உதாரணத்துக்கு நாமெல்லாரும் நன்கறிந்த படைப்பாளிகள் தொடக்கம் , புதியவர்கள் வரை சிறுகதை, கட்டுரை, கவிதை, தொடர்கதைகள் ஆகியவை இலக்கியத்தின் வரலாறு, சமூகம், நாடோடி இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழிபெயர்ப்பு போன்ற பிரிவுகளில் இவ்விதழ்களிலுள்ளன. அருள் சுப்பிரமணியம், குப்பிழான் ஐ.சண்முகம், செ.யோகநாதன், தெளிவத்தை ஜோசப், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, கலாநிதி கா.இந்திரபாலா, கலாநிதி க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, முருகையன், காரை செ.சுந்தரம்பிள்ளை, ஜெயபாலன், ந.பாலேஸ்வரி, யாழ்நங்கை, மலரன்பன், செங்கை ஆழியான் , இரசிகமணி கனக செந்திநாதன், மு.கனகராசன், எம்.ஏ.நுஃமான், சபா. ஜெயராசா, அகஸ்தியர், மாத்தளை செல்வம், அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன், பஸீல் காரியப்பர், சி.மெளனகுரு, திக்கவயல் தர்மகுலசிங்கம், மருதூர்க்கொத்தன் , பரிபூரணன் , வ.அ.இராசரத்தினம்.. என்று பலரின் படைப்புகளையும் அஞ்சலி இதழ்களில் காண முடிகின்றது.

இவ்விதழ்களில் என்னைக்கவர்ந்தொரு விடயம்: அஞ்சலி வெளியிட்டுள்ள மூன்று சிறப்பிதழ்கள். மே 1971 இதழ் மலையகச்சிறப்பிதழாகவும், செப்டெம்பர் 1971 இதழ் வடக்குச் சிறப்புச் சிறப்பிதழாகவும் , டிசம்பர் 1971 இதழ் கிழக்குச் சிறப்பிதழாகவும் வெளியாகியுள்ளன. எழுபதுகளில் விகடன் வெளியிட்ட மாவட்டச் சிறப்பிதழ்களின் ஞாபகங்கள் நினைவிலெழுந்தன. அஞ்சலியின் இச்சிறப்பிதழ்கள் முக்கியத்துவம் மிக்கவை. அவற்றின் விபரங்கள் வருமாறு:

1. அஞ்சலி சஞ்சிகை - மே 1971 -மலையகச்சிறப்பிதழ் - http://noolaham.net/project/15/1499/1499.pdf

2. அஞ்சலி -செப்டெம்பர் 1971 - வடக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/334/33320/33320.pdf

3. அஞ்சலி - டிசம்பர் 1971 - கிழக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/16/1503/1503.pdf

அஞ்சலி - 10 இதழ்கள் (1917 -1972) - http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88)


சிறப்பு மலர்களில் வெளியான ஆக்கங்கள்:

1. அஞ்சலி சஞ்சிகை - மே 1971 -மலையகச்சிறப்பிதழ் - http://noolaham.org/…/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%…

தலையங்கம்: நமது முதலாண்டுச் சிறப்பிதழ்கள்

தொடர்கதை/சிறுகதை
மாறுதல்கள் தொடர்கதை (தெளிவத்தை யோசப்)
முற்றுகை (என்.எஸ்.எம்.ராமையா )
இவர்கள் பிரசவிக்கிறார்கள் (சி.பன்னீர்ச்செல்வம்)
முடியாத கதைகள் பல (பூரணி)
உறவுகள் (மலரன்பன்)
துணைக்கு ஒருத்தி (பெரியகுறியானை சலமன்ராஜ்)
நெடிதுயர்ந்த மலையில் (நயிமா.எ.பஷீர்)
முடிவற்ற தன்மை (த.ரஃபேல்)
வாழ்க்கையெனும் புதிர் (மாத்தனை செல்லம்)

கவிதைகள்
எல்லாம் இதற்குத்தான் (கே.கணேஷ்)
தொழிலாளி வாழ்க்கையிலே (குறிஞ்சி தென்னவன்)
எடுப்போம் சபதம் (ஜெயம்)
பரத நர்த்தனம் (ஆங்கிலத்தில்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: சக்தீ பாலையா)
இளைய மலையகம் - இரா.சிவலிங்கம்

நம் நாட்டின் ஒரே வர்த்தகக்கட்டளை இதுதான் - பெரி.கந்தசாமி
சிவனொளியில் மின்னொளி - திருமதி எஸ்.ஏ.கனகமூர்த்தி
ஏடேறாத மலைநாட்டுப்பாடல்கள் - ஸி.எஸ்.காந்தி
வாய்மொழி இலக்கியம் - சாரல் நாடன்
பத்துவிகிதம் - எம்.வாமதேவன்
மலையகத்தில் தமிழ் நாடகம் - இராஜ் மலைச்செல்வன்


2. அஞ்சலி -செப்டெம்பர் 1971 - வடக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/334/33320/33320.pdf

தமிழ் மணக்கும் வடக்கு

குறுநாவல் (தொடர்): இருட்டும் வரை காத்திரு – செ. யோகநாதன்

வரலாற்றுத்தகவல்கள்:
வரலாற்றில் வடக்கு – 01 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 02 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 03 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 04 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 05 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 06 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 07 – க. கணபதிப்பிள்ளை

யாழ்ப்பாணம் பாரீர் 01 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 02 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 03 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 04 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 05 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 06 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 07 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 08 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 09 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 10 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 11 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 12 – கமலன்


கனவிலே வாழ்கின்றோம் - செங்கை ஆழியான்
ஒடிசருகு - இரசிகமணி கனகசெந்திநாதன்
முழிவியளம் - மு. கனகராசன்
அவனுக்கும் ஒரு மனைவி இருந்தாள் – தெணியான்

கவிதைகள்:
வடக்கு - முருகையன்
கற்பகதரு - காரை செ. சுந்தரம்பிள்ளை
உன்னைப் போலொருவன் - சபா ஜெயராசா
ஆற்றின் கரை தனிலே – தனபாலன்

தொடர் நாவல்: மாறுதல்கள் - தெளிவத்தை ஜோசப்

கட்டுரைகள்:

வடக்கில் ஒரு ஆலை மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை

வடபகுதியின் புராதனச் செல்வம் - கலாநிதி கா. இந்திரபாலாசிறுகதைகள்:
நாவலரும் இந்துமத மறுமலர்ச்சியும் - கலாநிதி க. கைலாசபதி
யாழும் பனையும்
ஈழத்து வடபகுதி காடோடிப் பாடல்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
யார் இந்த யாழ்ப்பாணத்தான் - கலாநிதி கா. சிவத்தம்பி


அஞ்சலி - டிசம்பர் 1971 - கிழக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/16/1503/1503.pdf

முதலாண்டுத் திட்டத்தின் இறுதிக் கட்டம்

இசைபிறந்த திருநாடு ஈன்றெடுத்த இசை ஞானி - "நீலாவாணன்"
புத்திசாலி - பாண்டியூரன்
இலைக்கறிக்காரி - எம்.ஏ.நுஃமான்
பிரெட்றிக் கோட்டை வாயில் - பாப்பா
எழில் விஞ்சு நாடு - திமிலைத்துமிலன்
சுடுமனம் - பஸில் காரியப்பர்
தெய்வம் பேசாது! - ந. பாலேஸ்வரி
இரட்னசிங்க பிள்ளையார் கோயில் - பாப்பா
திருகோணமலைத் துறைமுகம் - பாப்பா
காக்கா தீவு - பாப்பா

ஈழத்து கிழக்குப் பிரதேச இஸ்லாமியரின் ஏடுகாணாத இலக்கியம் - அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன்
பத்திரகாளி அம்மன் கோயில் - பாப்பா
கல் நண்டு - பாப்பா
சாந்தி ஓடிவிட்டாள் - க.அருள்சுப்பிரமணியம்
கடற்படைத்தள பிள்ளையார்
மட்டக்களப்பும் மலையாளமும் - ந.நடராஜா
றொபட் நொக்ஸ் புளிய மரம் - பாப்பா
சிங்களத் தமிழ்
இதோ! ஒரு கள்ளன் - மருதூர்க் கொத்தன்
மட்டக்களப்பு நாட்டுக்கூத்தின் தேக்கநிலை - சி. மெளனகுரு
புனித கோணேஸ்வர ஆலயம் - பாப்பா
காவியம் கண்ட மாவலித் தேவி - வ.அ.இராசரத்தினம்
நரகம் - எஸ்.ஜோன்ராஜன்
கொட்டீயாபுரம் - எம்.ஐ.எம்.மஷ்ஹுர்
களப்பு வரலாற்றில் எட்டு நூற்றாண்டுகள் - அருள் செல்வநாயகம்
கூர் ஒடிந்தது - திமிலைக் கண்ணன்

மாறுதல்கள் - தெளிவத்தை ஜோசப்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.