அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை.

கதாசிரியர் ஜெயபாலன் என்றுள்ளது. கதைக்களம் நெடுந்தீவென்பதால் ஜெயபாலன் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனாகவிருக்க வேண்டும். இச்சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட சிந்தனை: ஜெயபாலன் கவிதையில் செலுத்திய நாட்டத்தைப் புனைகதையிலும் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். மண் வாசனை தவழும் புனைவுகள் பல கிடைத்திருக்கும்.

ஒரு கேள்வி? இக்கதையில் வெல்லைக் கடற்கரை என்று வருவது அப்படித்தான் அழைக்கப்படுகின்றதா? அல்லது வெள்ளைக்கடற்கரை என்று அழைக்கப்படுகின்றதா? அறிந்தவர்கள் அறியத்தரவும்.

ஆகஸ்ட் 1971 'அஞ்சலி'க்கான இணைப்பு: http://noolaham.net/project/15/1500/1500.pdf


மேற்படி முகநூற் பதிவுக்கான எதிர்வினைகள்:

K S Sivakumaran VIS Jeyapalan is a versatile poet,actor and writer. Cheers to him

Giritharan Navaratnam Your article is also in the issue....
1
K S Sivakumaran Is it? Kindly send a photocopy of it to me dear friend VNG. I don't hava clipping.Thanks.

Thavarajah Arulkumaran நல்ல பதிவு.

Indran Rajendran உண்மைதான். ஆனால் இப்போதுகூட கெட்டுவிடவில்லை. ஜெயபாலன் கதையில் கவனம் செலுத்தலாம்.

Giritharan Navaratnam செக்குமாடு என்று குறுநாவலொன்று எழுதியிருக்கின்றார். எஸ்.பொ. & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பிலுள்ளது.

Indran Rajendran Giritharan Navaratnam வாசித்து ஜெயபாலனுடன் விவாதித்து இருக்கிறேன்.

Vicky Kiruba அண்ணா நான் சிறுவயதில் நெடுந்தீவில் சிறிய காலம் படித்தேன் நான் அறிந்த மட்டில் அதை வெல்லை என்று தான் அழைப்பார்கள் அந்த இடம் பூவரசம் காடாகவும் ஒரு வெளியாக இருக்கும் குதிரைகள் கூடுதலாக அங்குதான் இருக்கும் குதிரை ஆடு மாடு மேய்வதற்கான இடம்

Giritharan Navaratnam நன்றி கிருபா தகவலுக்கு.

Giritharan Navaratnam நெடுந்தீவில் இன்னுமொரு பகுதி வெள்ளை மணலைக்கொண்ட கடற்கரையென்று நினைக்கின்றேன். அது வேறு , இது வேறு என்று நினைக்கின்றேன்.சரியா?

Vicky Kiruba வெல்லை வெளி கடற்கரையும் இருக்கின்றது வெல்லை வெளியால் போனால் அது வரும் சிலவேளை அந்த கடற்கரையாக இருக்கலாம்

Suseendran Nadarajah Giritharan Navaratnam ஆம், நீங்கள் சொல்வது சரி. வெள்ளை மணல் கொண்ட கடற்கரை நெடுந்தீவின் பிரதேச சபைக் கட்டடத்திற்கும் அரசினர் பொது வைத்தியசாலைக்கும் இடையில் அவற்றின் பின்புறம் இருக்கும் கடற்கரைப் பிரதேசமே புகழ்பெற்ற வெள்ளை மணற் கடற்கரை. நெடுந்தீவின் தென்பகுதி நீளமும் விரிகின்றது வெல்லைக் கடற்கரை. அதுவும் வெள்ளை மணல்தான்...இன்றைய அவலம் எனனவென்றால், வெல்லையில் நடைபெறும் பாரிய மணல்-அகழ்வு. மணல்-கொள்ளை.

Giritharan Navaratnam Suseendran Nadarajah //அதுவும் வெள்ளை மணல்தான்...இன்றைய அவலம் எனனவென்றால், வெல்லையில் நடைபெறும் பாரிய மணல்-அகழ்வு. மணல்-கொள்ளை.//????

Jaya Palan நன்றி கிரிதரன். 1980 பதுகளில் இருந்தே என் எழுத்துகளில் நீங்கள் காட்டிவரும் ஆர்வத்துக்கு நன்றி. இந்த கதைகளை எல்லாம் மறந்தே போய்விட்டேன் இந்திரன் காலை உங்கள் பக்கம் பார்க்கச் சொன்னார். . இப்ப அது பெறுகிற வரவேற்ப்பு மீண்டும் எழுதும் உத்வேகத்தைக் கிளப்புகிறது.

Indran Rajendran Jaya Palan ஒரு மகாகவிஞர் மீண்டும்கதை பக்கம் திரும்பப் போகிறார்.

Giritharan Navaratnam உங்கள் கவிதைகளில் அகவற் சீர்வைத்து மண் வாசனை தொனிக்க நீங்கள் பாவிக்கும் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் புனைகதைகளிலும் மண் வாசனைமிக்க எழுத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றீர்கள். மிகச்சிறந்த நாவலொன்றை உங்களது வாழ்க்கை அனுபவங்களை வைத்து உங்களால் எழுத முடியும். எழுதுங்கள். வாசிக்கக்காத்திருக்கின்றோம்.

Giritharan Navaratnam Indran Rajendran //ஒரு மகாகவிஞர் மீண்டும்கதை பக்கம் திரும்பப் போகிறார்.// "ஒரு வரலாறு ஆரம்பமாகப்போகிறது"

Elayathambi Thayanantha Jaya Palan எழுதுங்க நண்பா

Jaya Palan வெல்லை பற்றி நான் சொல்ல நிறைய வரலாற்றுக் கதைகள் உண்டு. 1970பதுகளில் வெல்லை வெள்ளை மணல் என்கிற சொல்லின் திரிபு எனத்தான் எண்ணினேன். என் பல்கலைகழகக் காலங்களில் போத்துக்கீச,  டச்சு ஆங்கில ஆவணங்களில் எங்கள் வரலாற்றை தேடியபோதுதான் வெல்லை எங்கள் மூதாதையரின் பருத்தித்தோட்டங்களாக இருந்த சேதியை அறிந்தேன். பருத்திக்கு ம் மந்தை வளர்ப்புக்கும் பேர்பெற்று பசுத்தீவு எனவும் பருத்தித்தீவுஎனவும் 1600 வரை அழைக்கபட்ட எங்கள்தீவுக்கு போத்துகீசரும் பசுத்தீவு என்றே (Ilha das Vacas ) பெயர் வைத்தனர். நெடுந்தீவு கல்லுப்பூமி. நெடுந்தீவின் தெற்க்கு தென் கிழக்கு பள்ளத்தாக்கு பகுதியை பகுதிகளை எங்கள் மூதாதையர் கற்களை அகற்றி பெரும் வெளியாக்கி பருத்தி பயிர் செய்தனர். இலங்கைக்கும் சோழமண்டலக்கரைகளுக்கும் பருத்தி ஏற்றுமதியாகி இருக்கு. போத்துகீசர் பருத்தி தோட்டங்களை அழித்து குதிரை வளர்க்க புல்வெளி உருவாக்க முனைந்தனர். குஞ்சாலி மரைக்கார் கடல் போராளிகளூகு நெடுந்தீவு ஆதரவாக இருந்ததால் போத்துகீசர் நெடுங்காலம் அண் பெரும் கிழற்சிகள் நடந்தது. குஞ்சாலி மரைக்காரின் வழித்தோன்றலாக (தொடரும்)

Ainkaran Periyathampy Jaya Palan அருமை

Balasingam Sugumar அஞ்சலி ஈழத்தில் வந்த ஒரு இலக்கிய சஞ்சிகை இந்திய தமிழ் சஞ்சிகைகளுக்கு பிரதியீடாக நம் தனித்துவத்தை பிரதிபலித்தமை குறிப்பிடத் தக்கது

Jaya Palan நெடுந்தீவின் வெல்லை பள்ளத்தாக்கின் பெயர் டச்சுப் பெயரான ’வெல்லாய்’ என்ற சொல்லில் இருந்து உருவானது. ’வெல்லாய்’ பள்ளத்தக்கு என கருத்துப்படும். நெடுந்தீவு பள்ளத்தாக்கு ‘வெல்லை’ வெளி, யாழ்பாண குடாநாட்டின் பள்ளத்தாக்கு வல்லை வெளி. பள்ளத்தாக்குக்கான போத்துக்கீச சொல்லும் கிட்டதல்ல டச்சு சொல்லை ஒத்ததுதான்.

Ainkaran Periyathampy இன்றும் அந்த இடத்தை வெல்லை என்றுதான் அழைக்கிறார்கள். கவிஞர் ஜெயபாலன் வாழ்க.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.