மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் நூலுருப்பெறுகிறது!

Wednesday, 10 June 2020 09:23 - வ.ந.கி - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் நூலுருப்பெறுகிறது!

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - பாரதியார் -

அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக முனைவர் ஆர்.தாரணியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் விரைவில் நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. அவருக்கும் , பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

இம்மொழிபெயர்ப்பு நூல் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முனைவர் ஆர்.தாரணி அவர்களுக்கு மீண்டுமொருமுறை பாராட்டுகளைப் 'பதிவுகள்' சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதற்குப் 'பதிவுகள்' இணைய இதழ் களமாக அமைந்தது திருப்தியினைத் தருகின்றது.

Last Updated on Wednesday, 10 June 2020 09:34