எண்ணிம ஆவணகம் /நூலகம் (https://archive.org) இணையத்திலுள்ள இணையத்தளங்களையெல்லாம் ஆவணப்படுத்தி வருகின்றது. நீங்கள் பதிவு செய்யாவிட்டாலும் கூட காலப்போக்கில் அவை உங்கள் தளங்களைக் கண்டு பிடித்து
ஆவணப்படுத்திவிடும். நீங்கள் இத்தளத்துக்குச் சென்று உங்கள் தளத்தைத் தேடிப்பாருங்கள், காணக்கிடைக்காவிட்டால், அத்தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி உங்கள் இணையத்தளத்தினைப் பதிவு செய்துகொள்ளுங்கள். ஒருவேளை  நாளை உங்கள் தளம் இயங்காது போனால் கூட இவ்வெண்ணிம ஆவணகத்தில் அத் தளம் சேகரிக்கப்பட்டுக்கிடக்கும்.

மேலும் இங்கு கணக்கு உங்களுக்கு இருந்தால் உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்கி அங்கு சேகரித்துக்கொள்ளலாம். இது இலவசமாகத் தனது சேவையை வழங்கி வருகின்றது. உலகின் பல்வேறு மொழிகளிலுமுள்ள படைப்புகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.

இங்கு நீங்கள் உங்களது இணையத்தளம், வீடியோ, ஆடியோ, இமேஜ், ஷாவ்ட்ஃபெயர் என்பவற்றை ஆவணப்படுத்த முடியும். எண்ணிம ஆவணகத்தின் இணையத்தள முகவரி: https://archive.org/

எண்ணிம ஆவணகத்திலுள்ள பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியான மின்னூல்கள்:

வ.ந.கிரிதரனின் படைப்புகள்!

வ.ந.கிரிதரன் - 41 கவிதைகள் - https://archive.org/details/vng_poems_2019_ebook_41
வ.ந.கிரிதரன் - 59 கட்டுரைகள் - https://archive.org/details/vng_essays_PDF_59_NEW/mode/2up
வ.ந.கிரிதரன் - 25 சிறுகதைகள் - https://archive.org/details/vng-25-stories-pdf

அ.ந.கந்தசாமியின் படைப்புகள்
அ.ந.கந்தசாமி - நாவல் - மனக்கண் - https://archive.org/details/ank-novel-manakkan-pdf-new-1/mode/2up
அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) - கவிதைகள் - https://archive.org/details/ank-poems-pdf-new/mode/2up