1. சிற்பி Ron Mueck இன் 'பையன் (குந்தியிருக்கும் பையன்)'

உயிர்ச்சிற்பம்

எழுத்தாளர் ஆதவன் தன் முகநூற்  பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். சிறுவனொருவன் குந்திக்கொண்டிருக்கும் புகைப்படம். இதைப்பார்த்தபோது  யாரோ ஒருவரின் புகைப்படமென்று எண்ணிவிட்டேன் ஆதவன் இது பற்றி எழுதியதைப் படிக்கும் வரையில். இப்புகைப்படத்தைப் பகிர்ந்த ஆதவன் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"முன்பும் பதிந்திருந்தேன். 3 தொன் நிறையுள்ள சிலை இது. அவுஸ்ரேலியாவிலிருந்து பகுதி பகுதியாய் கொணர்ந்து டேனிஸ் கலையரங்கில் இருக்கிறது. ப்ப்பா.. என்னவொரு கலைப்படைப்பு."

உண்மைதான். உயிர்த்துடிப்புள்ள கலைப்படைப்பு என்பது இதனைத்தான். இதுவொரு சிற்பமென்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

சிற்பி Ron Mueck

சிற்பி Ron Mueck

இந்தச் சிற்பத்தை உருவாக்கியவர் சிற்பி Ron Mueck ! ஆஸ்திரேலியச் சிற்பி. ஜேர்மானியப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது பிறந்த தினம்: ஜனவரி 1.1958.  இவரது உயிர்த்துடிப்புள்ள மானுட அனுபவங்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் மிகுந்த புகழைப்பெற்றவை.

இவரது புகழ்பெற்ற மேலுமிரு சிற்பங்கள்:

2. பெண் குழந்தை

Ron Mueckகின் 'பெண் குழந்தை'


3. பெரிய மனிதன்!

பெரிய மனிதன்!

* சிற்பி Ron Mueck ற்கு முகநூற் பக்கமும் உள்ளது. அதற்கான இணைய முகவரி: https://www.facebook.com/Ron-Mueck-22193729909/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.