எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார்!

Friday, 21 December 2018 08:56 - வ.ந.கி - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்'பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'நவீனத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவரான எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுச்செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். அண்மைக்காலமாக இவரது உடல்நிலை பற்றிய செய்திகளை முகநூல் மூலம் அறிந்து வந்திருக்கின்றேன். இவரது 'மானுடம் வெல்லும்', 'வானம் வசப்படும்' நாவல்கள் தமிழில் வெளியான சிறந்த படைப்புகள். 'வானம் வசப்படும்' நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதை, கட்டுரை, நாவல், நாடகமெனத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தமிழ் எழுத்தாளர்களின் புனைபெயர்களில் என்னை மிகவும் கவர்ந்த புனைபெயர்களில் ஒன்று இவரது புனைபெயரான 'பிரபஞ்சன்' என்னும் புனைபெயர்.

சென்னை மாநகரில் கழிந்த இவரது 'மேன்சன்' வாழ்க்கை பற்றிய கட்டுரைகளும் முக்கியமானவை.

இவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்பது மிகையான கூற்றல்ல.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்கலைஞ்சியமான விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

"பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்"

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 21 December 2018 23:33