கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார்.கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்

உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.

பெண்கள்
உலகின் கண்கள் .

உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் -
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !

பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு -
அக்கினிப் பிழம்பாயிருக்கும்!

ஆமாம் கடல் கடந்து வாழும் சகோதரி பவளசங்கரி த. திருநாவுக்கரசு, இவர் இளங்கலை (குடும்பவியல்) , இந்தி - பிரவீண், (Hindi Prachar Sabha) மத்திய அரசின் இந்தி டிப்ளமா படிப்பு, (Dip.in central Hindi Directorate) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் Creative Writing in English (Dip.course) கல்வித் தகுதி பெற்றவர். தற்போது வல்லமை இணைய இதழ் நிர்வாக ஆசிரியர் - (WWW.vallamai.com) பணி புரிக்கினாறார். இலை மறை காயாக மறைந்து இருந்த பல கலை உள்ளங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை சகோதரி பவளசங்கரி த. திருநாவுக்கரசுஅவர்களுக்கு உண்டு. :
இவருடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது. தனது எழுத்துக்கள் வாயிலாக இளையோரை வழிநடத்தல் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல், நாட்டுப்பற்றும், தமிழ் பற்றும் தன உயிர் மூச்சு. எனக் கருதுபவர்

சகோதரி பவளசங்கரியின் சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள்,, தொடர் கட்டுரைகள் பல பிரபலமான பத்திரிக்கைகளிலும், நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.

இவரது வெளிவந்துள்ள நூல்களின் விவரம்

1. விடியலின் வேர்கள் - பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு
2. கனலில் பூத்த கவிதைகள் - சிறுகதைத் தொகுப்பு
3. கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு
4. நம்பிக்கை ஒளி, வெண்ணிலவில் ஒரு கருமுகில் - குறுநாவல்கள
5.யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு
6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா - தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு
7.கதை, கதையாம் காரணமாம் - குழந்தைகளுக்கான கதைகள்
8.இப்படிக்கு நான் - வாழ்க்கை வரலாறு
9. நயமிகு நங்கையர்
10. அன்பெனும் சிறைக்குள்

பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படைப்புகளைப் பெண்கள் எழுதுவதற்கும் ஆண்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.. பெண்கள் அப்பிரச்சனைகளின் வலிகளை உணர்கிறார்கள்;அவ்வுணர்வுகளை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். ஆணாதிக்கச் சூழலில் இவர் எழுத்து சிறப்பு மிக்கது. இந்திய பெண் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர். .அன்பான மனசும் , அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது எழுத்துகள் காத்திரமான கருத்தாழமிக்கவை. சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது எழுத்துக்களில் நிறைந்து காணப்படும். அவரது ஆற்றல் முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன். இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர், தடாகம் கலை இலக்கிய, கல்வி, கலாச்சார, சமூக, அபிவிருத்தி மற்றும் சர்வதேச அமைப்பு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.