ஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்". மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு

Friday, 17 October 2014 22:34 - ஹெச்.ஜி.ரசூல் அரசியல்
Print

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனபாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா - பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் "சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே" என்றார்.

 இந்த வருடம் நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 278 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்தப் பட்டியலில் அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன், போப் பிரான்சிஸ், பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்காக போராடி வரும் காங்கோ தலைவர் டெனில் முக்வேகே ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன என்பதும் இந்த ஆளுமைகளைத் தாண்டி நோபல் பரிசு மலாலா யூசுபுக்கு கிடைத்திருக்கிரது என்பது கவனத்திற்குரிய விஷயம்.

சமாதானத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ள வெறும் 17 வயதே ஆகும் மலாலா யூசுஃப் ஸயீ, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். அப்பிராந்தியத்தில் தாலிபான்களின் கரம் வலுப்பெற்று, பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவது தடைபட்டபோது, சிறுமிகளின் கல்வி உரிமைக்காக மலாலா குரல்கொடுத்துவந்தார். 2012 அக்டோபரில் தனது பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இவர் தலையில் சுடப்பட்டிருந்தார்.பாகிஸ்தானிய மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய அவருக்கு மேல் சிகிச்சை வழங்க பிரிட்டன் உதவியது. பர்மிங்ஹாம் நகரில் மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மலாலா, இளம்பிராயத்தினரின் கல்வி உரிமைக்கான ஒரு சர்வதேச சின்னமாக உருவெடுத்துள்ளார்.

யூசப்சை மலாலா தனது 16வது பிறந்த தினத்தில் ஐ.நாவில் உரையாற்றிய சிறப்பு உரையின் போது "ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்". எனக் கூறியிருந்தார்.ஐ.நாவினால் நவம்பர் 10ம் திகதி மலாலா தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் 50,000 பெண் சிறார்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும், கல்விக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவருமான பிராவுண் தெரிவித்துள்ளார்.

மலாலா தற்போது தனக்கு வழங்கப்படவுள்ள நோபல் பரிசு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் ஒன்றாக இணைந்து கலந்து கொள்ளவேண்டும். இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவு நீடிப்பதற்கான பிரதிபலிப்பாக இது இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

உலகளாவிய அளவில் ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளிக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்பதே எனது விருப்பம்.எதிர்காலத்தில் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அரசியல்வாதியாக வர வேண்டும் என விரும்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார். யூசப்சை மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதிகளில் பெண் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராடியவர். இதனால் 2012 அக்டோபரில், தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தருணம் ஒன்றில் தலிபான்களால் நேரடியாக சுடப்பட்டு உயிர் தப்பியவர். 2012 இல் டைம்ஸ் சஞ்சிகையால் நடத்தப்பட்ட இந்தவருடத்திற்கான நபர் யார் எனும் வாக்கெடுப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் உலகை அதிகம் ஈர்த்த 100 நபர்களில் ஒருவராக தெரிவானார். தற்போது தனது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். உலகில் மிக இளவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது நபரும் மலாலா தான். யூசப்சை மலாலாவுக்கும் அவரது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. "தன்னை ஒரு வேளை தலிபான்கள் சுடுவதற்கு வந்தால், அவர்களிடம் பேசும் சந்தர்ப்பமாக அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களது குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் சேர்த்தே தான் குரல் கொடுப்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்" எனக் கூறியவர் மலாலா. "எனக்கும் பாகிஸ்தானில் இருந்த போது ஜஸ்டின் பீபர் போன்றவர்களின் மேற்கத்தேய பாடல்கள் பிடிக்கும். ஆனால் எப்போது பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்தேனோ அன்றிலிருந்து, எனது பாரம்பரிய உள்ளூர் இசையின் மகிமையை நன்கு உணர்கிறேன். இப்போதெல்லாம் விரும்பிக் கேட்பது அந்த இசை தான். இது போல் தான் கல்வியும். கல்வி கற்பதற்கான உரிமையும், சந்தர்ப்பமும் இலகுவாக உங்களுக்கு கிடைத்துவிடும். இதனால் சிலவேளைகளில் உங்களுக்கு புத்தகப் பை சுமையாக இருக்கலாம். ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும், கற்றல் பாடங்களும் சுமையாக இருக்கலாம்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் படையெடுப்பின் முன்னர் எமக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் எப்போது கல்வி உரிமை பறிக்கப்படத் தொடங்கியதோ அன்று அதன் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினோம். ஒரு பாகிஸ்தானிய சிறுவன், சிறுமி இளவயதில் கல்வி கற்பது தலிபான்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என புரிந்து கொண்டோம். ஆம், கல்வியின் ஆற்றல் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள். அதுவும் பெண்கள் கல்வி கற்றால் எவ்வாறான ஆற்றல் பெறுவார்கள் என நினைத்து மிகவும் பயப்படுகிறார்கள். எனக்கு சிறுவயத்தில் மருத்துவராகவே விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவர் ஒரு சிறு சமூகத்திற்கோ நன்மை பயக்க முடியும். ஒரு அரசியல் வாதி ஒரு நாட்டுக்கே நன்மை பயக்க முடியும் என்பதை உணர்கிறேன். எனது கனவுகள் தற்போது மேலும் உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். பெருந்தொகை அரச நிதியை கல்விக்காக செலவிட வேண்டும். தலிபான்களால் எனது உடலை சுட்டுவீழ்த்த முடியும். எனது கனவுகளை சுட்டுவீழ்த்த முடியாது. நான் செல்லவேண்டிய தூரம் இன்னமும் நிறைய உண்டு. உலகின் எந்தவொரு சிறுவனும், சிறுமியும் கல்வி கற்கும் உரிமை கிடைக்கும் வரை இப்பயணம் தொடரும்" என ஒரு வருடத்திற்கு முன்னர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேரடிச் செவ்வி ஒன்றில் மலாலா கூறியிருப்பார்.

notification+ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 17 October 2014 22:51