அருளர்எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட.

அவர் எழுதிய 'லங்கா ராணி' நாவலானது எழுபதுகளின் இறுதியில் , இலங்கைத் தமிழர்கள் ஆயுதரீதியிலான போராட்டத்தினை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தம் போராட்டம் பற்றிய புரிதலை, அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக இரகசியமாக வாசித்த நாவல். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித்திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது 'லங்கா ராணி'. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.

'லங்கா ராணி' நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.
அருளர் அவர்களின் மகள் மாயா அருட்பிரகாசம் மேற்கு நாடுகளில் நன்கு புகழ்மிக்க பாடகியர்களில் ஒருத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது..
அருளரின் 'லங்கா ராணி'

'லங்கா ராணி' நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.

'நூலகம்' இணையத்தளத்தில் இந்நாவலை வாசிக்க முடியும். அதற்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/15/1492/1492.pdf