எழுத்தாளர் முருகபூபதி -Letchumanan Murugapoopathy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Jun. 18 at 1:23 a.m.

அப்பா நினைவாக......

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கட்கு வணக்கம். தந்தையர் தினத்தில் -- உங்கள் அப்பா நினைவாக நீங்கள் எழுதியிருந்த பதிவு சிறப்பானது. உங்கள் அப்பா ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்திருப்பது தெரிகிறது. பொதுவாக பல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தந்தைமாருக்கும் இடையே முரண்பாடுகள்தான் பெருகியிருந்துள்ளன!?

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜெயமோகன்... முதலான எழுத்தாளர்கள் தங்கள் தந்தைமாருடன் எங்கெங்கே முரண்பட்டார்கள் என்பதை எழுதியிருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் , மரணப்படுக்கையிலிருந்த தந்தையை புறக்கணித்துவிட்டு வந்தவர். இந்த எழுத்தாளர்களின் சுயவரலாறு தெரிந்தால் அதிர்ச்சியடைவோம். இந்நிலையில் உங்கள் தந்தையார் உங்களது நல்ல தோழராகவே விளங்கியிருப்பது தெரிகிறது.

வருடாந்தம் தந்தையர், அன்னையர் தினங்களில் எமது எழுத்தாளர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதி, அவர்களின் நினைவுகளைக் கொண்டாட முடியும். அதற்கு உங்கள் நினைவுப்பதிவு முன்னுதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையார் பற்றிய பல செய்திகளை அறிந்து அவர் மீது எமக்கும் மதிப்புண்டாகிறது. தந்தைமார் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது அபூர்வம்! உங்கள் நினைவுப் பதிவு எனது தந்தையார் பற்றி எழுதவும் என்னைத்தூண்டுகிறது.

நன்றி.

அன்புடன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா


வணக்கம் முருகபூபதி. உங்கள் கடிதத்துக்கு நன்றி. உங்கள் தந்தையார் பற்றிய நனவிடை தோய்தலைப் படிப்பதற்கு ஆர்வமாகவுள்ளேன். அன்புடன் - வ.ந.கி -