பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர்
From: subramaniam kuneswaran
To: Navaratnam Giritharan
Sent: Thursday, January 02, 2014 9:42 AM
Subject: புதிய கட்டுரை - க. ஆதவனின் "மண்மனம்"
அன்புடன் கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம், க. ஆதவனின் "மண்மனம்" பற்றிய புதிய கட்டுரையை அனுப்பி வைக்கிறேன். இந்த நாவலின் விடுபட்ட அத்தியாயங்களைப் பெறுவதற்கு 'பதிவுகள்' செய்த உதவியை மறக்கமுடியாது. அன்புடன் ,சு. குணேஸ்வரன்
From: Letchumanan Murugapoopathy
To: Navaratnam Giritharan
Sent: Saturday, December 21, 2013 8:24 PM
Subject: Fwd: Murugapoopathy Urgent
அன்புள்ள கிரிதரனுக்கு வணக்கம். எனது ஆக்கங்களை தங்கள் பதிவுகளில் பதிவுசெய்வதையிட்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி. நேற்று நண்பர் தெளிவத்தை ஜோசப்புடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் நேற்று ஊட்டியில் நின்றார். அவர் வசம் தற்பொழுது கணினி இல்லை. எனினும் பல நண்பர்கள் தங்கள் பதிவுகளை பார்த்துவிட்டு அவருக்குத்தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர் உங்களுக்கும் தனது நன்றியை தெரிவிக்கச்சொன்னார். இன்று கோவையில் விருது விழா நடைபெறுகிறது. நன்றி
அன்புடன், முருகபூபதி
From: Srinivasan Subramanian
To: Navaratnam Giritharan
Sent: Thursday, December 12, 2013 11:32 PM
Subject: nandri
பதிவுகள் இணைய நிறுவன ஆசிரியருக்கு வணக்கம் , தங்கள் இணைய இதழில் என்னுடடைய ஆய்வு கட்டுரையை வெளியிட்டதற்காக நன்றி. இப்படிக்கு, உண்மையுள்ள, சு .சீனிவாசன் . .
என்றும் அன்புடன்,
சீனிவாசன் சு.
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி-620024.
From: Kuru Aravinthan
To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, December 03, 2013 6:29 PM
Subject: RE: Thanks
மகாஜனாக் கல்லூரி பயிற்சிப் பட்டறை பற்றிய தகவலைப் பிரசுரித்மைக்கு நன்றி.
அன்புடன்
குரு அரவிந்தன்.
From: subramaniamneela neelakantan
To: pathivugal 01
Sent: Wednesday, November 20, 2013 11:23 PM
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பதிவுகள் இதழாசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள்... கோவை இலக்கிய சந்திப்பில் வருகிற 24 ஆம் தேதி ஆகஸ்ட் 15 - நாவல் அறிமுக நிகழ்வு கோவையில் நடைபெற இருக்கிறது.. இது தொடர்பான நிகழ்ச்சி நிரலினை இத்துடன் இணைத்துள்ளேன்.. இந்த நிகழ்ச்சி பற்றிய விபரத்தினை பதிவுகள் இதழினில் வெளியிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
நன்றியுடன்
மிக்க அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்
< Prev | Next > |
---|