முல்லை அமுதன்

1.
இரவு வாங்கி வந்த
சொற்களை
மேசை மீது
பரப்பிவைத்திருந்தேன்.
மாலை வந்து தேடிய போது
காணவில்லை..
மனைவி முழித்தாள்.
பேச முடியவில்லை..
தொடரூந்துப்
பயணத்தின் போதோ,
மிதிவண்டியில்
போகும் போது
நிறையவே தொலைந்தே
போயிருக்கின்றன.
மூலையில்
குழந்தைகள்
என்
சொற்களை வைத்து
விளையாடிக்கொண்டிருந்தனர். 2.
வள்ளுவர்
வந்து அறம் பற்றி
போதித்துப்போனார்.
பாரதி வந்து விருந்துண்டபடியே
வீரம் பற்றிச் சொன்னார்.
பிறகு
தாகூருடன்,
கண்ணதாசனும்
கைகுலுக்கியபடி
நடந்தனர்.
மாலையில்
கடற்கரைப்பொழுதுகளில்
குந்தியிருந்த கவிதைகளும்
வகுப்புகள் எடுத்தன.
இரவில் வந்து போன
வண்ணத்துப் பூச்சிகளும்
இசை பற்றியும்,
இசையுடன் கூடிய
வரிகள் பற்றியும் சொல்ல கூட இருந்த
குயில்களும் ஆமோதித்தன.
எனி என்ன செய்ய..?
தலை
வேறாக தொங்கிக்கொண்டிருக்க
மூளையை
கவிதைகள்
கீறிக்கொண்டிருந்தன..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.