கவிஞர் மழயிசையின் கவிதைகள் இரண்டு!

Sunday, 21 April 2019 10:07 - கவிஞர் மழயிசை - கவிதை
Print

- கவிஞர் மழயிசை -

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக.....                              
நீர் உறைந்துவிட...         
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்....           
எரியும் மனமுல்லை.                          
எரியும் மனமதனில்...            
விரியும் பகற்கொள்ளை.

2. மாபெரும் மாற்றங்கள் எல்லாம் ஏமாற்றங்களின் உச்சத்தில் அளபெடுக்கிறது கண்ணீர்ப் பெருவெள்ளமாய்...

ஆற்றுப்படுத்துவோரில்லை
ஏனெனில்...
இது ஆளரவமில்லாத மனமென்னும் பெருங்காடு...

வழிப்போக்கர்களெல்லாம் வந்து போய்விட்டார்கள் ஆதாயத்தோடு..

கண்டோரெல்லாம்
காணாதது போல்
களமாடுகிறார்கள்...

மாமன்றத்தில் போலிகளுக்கு பஞ்சமில்லை...  

இரங்கல்களுக்கு
இரவுகள் இரவலில்லை...


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it