தமிழ் நதி

Sunday, 25 August 2019 02:44 - - கவிஞர் பூராம் ( முனைவர் ம. இராமச்சந்திரன்) - - கவிதை
Print

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

காலங்களின் போராட்டச் சூழலில்
கழுத்தளவு தண்ணீரில்
எதிர் நீச்சல்
உதிக்கும் சூரியனும் வாய் பிளக்கும்
நட்சத்திரங்கள் வியந்து கண் சிமிட்டும்
பாலியின் மதத்தோடும்
வடமொழியின் வீரியத்தோடும்
போராடிய வீரத்தளும்பு
சற்று பயமுறுத்தத்தான் செய்தது
ஆங்கிலத்தின் அடிவயிற்றல்
என்றாலும்
ஓடிக்கொண்டே இருக்கிறது தமிழ் நதி
தொலைவில் ஒளி வீசும் பொய் முகத்தோடு ஹிந்தி
முகம் கிழிக்க வாளேந்தி சிவந்த கண்களுடன் தமிழ்.

காலம் சொல்லும் மெல்ல
தமிழினி வெல்லும்!


Email : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 25 August 2019 02:46