சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

இவ்விதம் ஒவ்வொரு பண்டிகை நாளும்
இனிய நினைவால் நிறைவது போலவே
இன்றும் நெஞ்சில் இனிமை மலர்ந்ததே.
இன்பம் நிறைந்த மனத்தால் அனைவரும்
பெறுக நீவிர் நான் பெற்ற இன்பம்
வாழ்த்து கின்றேன் வாழ்க! வாழ்க!
சித்திரை இத்தரை எங்கும் இன்பம்
தரட்டும். இல்ல மெங்கும் மகிழ்சி
நிலவிட , இத்தரை எங்கும் களிப்பு
நிறைந்திட பெருகிட வாழ்த்து கின்றேனே.